படிவம் 41 பயனர் கையேடு
1. மேலோட்டப்பார்வை
இந்தியாவிலும் மற்றொரு நாட்டிலும் வரி ஒப்பந்தத்தின் கீழ் இருமுறை வரி விதிக்கப்படும் வருமானத்தைக் கொண்டுள்ள வரி செலுத்துவோருக்கு, இருமுறை வரி தவிர்ப்பு நிவாரணம் கிடைக்கிறது. இத்தகைய கோரிக்கைகளை வருமான வரித்துறை சரிபார்ப்பதற்கு ஏதுவாக, குடியுரிமை இல்லாத வரி செலுத்துவோர் சில கூடுதல் தகவல்களைச் சமர்ப்பிக்க வேண்டும்.
இந்த விவரங்களை வழங்குவதற்காகப் பரிந்துரைக்கப்பட்ட படிவம் 41 ஆகும். வருமானவரிச் சட்டத்தின் பிரிவு 159-இல் குறிப்பிட்டுள்ளபடி, வெளிநாடு வாழ் நபர் இரட்டை வரி விதிப்புத் தவிப்பு ஒப்பந்தத்தின் (DTAA) கீழ் வரி நிவாரணம் கோர விரும்பும் போது இப்படிவம் தாக்கல் செய்யப்பட வேண்டும். விதி 75-இன் கீழ் தேவைப்படும் துணைத் தகவல்கள் முறையாக வழங்கப்படுவதை படிவம் 41-ஐத் தாக்கல் செய்வது உறுதி செய்கிறது; இதன் மூலம் வரி நிவாரணக் கோரிக்கையைச் சரியாக மேற்கொள்ள முடியும்.
படிவம் 41 மின்னணு-தாக்கல் இணைய முகப்பில் கிடைக்கிறது மேலும் இதை ஆன்லைனில் மட்டுமே சமர்ப்பிக்க முடியும்.
2. இச்சேவையைப் பெறுவதற்கான முன்தேவைகள்
- நீங்கள் மின்னணு-தாக்கல் இணைய முகப்பில் செல்லுபடியாகும் பயனர் ID மற்றும் கடவுச்சொல்லைக் கொண்ட பதிவு செய்யப்பட்ட பயனராக இருக்க வேண்டும்.
- PAN எண் இல்லாத மற்றும் PAN பெற வேண்டிய கட்டாயமும் இல்லாத வெளிநாடு வாழ் நபர்கள் ("குடியுரிமை இல்லாத வரி செலுத்துபவர்கள்") இந்தப் படிவத்தை, இவ்வகை வரி செலுத்துபவர்களுக்காகச் சிறப்பாக உருவாக்கப்பட்ட தனி உள்நுழைவு வாயிலாகத் தாக்கல் செய்ய வேண்டும்.
- விண்ணப்பதாரர் வசிக்கும் நாடு அல்லது பிராந்தியத்தில் வழங்கப்பட்ட வரி அடையாள எண்
- பிரிவு 159(8)-இல் குறிப்பிடப்பட்டுள்ள சான்றிதழின் நகல்
- டிஜிட்டல் கையொப்பச் சான்றிதழ் (DSC) முறை மூலம் படிவத்தைச் சரிபார்க்க நீங்கள் தேர்வு செய்தால், உங்களிடம் செல்லுபடியாகும் DSC இருக்க வேண்டும்; மேலும் அது மின்னணு-தாக்கல் இணைய முகப்பில் பதிவு செய்யப்பட்டதாகவும், காலாவதி ஆகாததாகவும் இருக்க வேண்டும் (PAN மூலம் உள்நுழையும் பட்சத்தில்).
3. படிவம் குறித்து
3.1 நோக்கம்
வருமான வரி சட்டம், 2025ன் படி, ஒரே வருமானம் இந்தியாவிலும் மற்றொரு நாட்டிலும் வரி விதிக்கப்படும்போது, வரி ஒப்பந்தத்தின் கீழ் வெளிநாட்டு வாழ் வரிச்செலுத்துநர் வரிச்சலுகையை கோர அனுமதிக்கப்படுகிறது. அத்தகைய கோரிக்கையை ஆதரிக்க, மதிப்பீட்டாளர் குறிப்பிட்ட தகவல்கள், ஆவணங்கள் ஆகியவற்றை வரித்துறையுடன் பகிர வேண்டியது அவசியமாகும்.
இந்த விவரங்களை வழங்குவதற்காகப் பரிந்துரைக்கப்பட்ட படிவம் 41 ஆகும். வெளிநாடு வாழ் நபர் இரட்டை வரிவிதிப்புத் தவிர்ப்பு ஒப்பந்தத்தின் (DTAA) கீழ் கிடைக்கக்கூடிய வரியினச் சலுகையைக் கோருவதற்கு ஏதுவாக, பிரிவு 159 மற்றும் விதி 75-இன் கீழ் தேவைப்படும் விவரங்களைச் சமர்ப்பிக்க இப்படிவம் வழிவகை செய்கிறது.
3.2 இதை யார் பயன்படுத்தலாம்?
மின்னணு-தாக்கல் இணைய முகப்பில் பதிவுசெய்துள்ள அனைத்து வெளிநாடு பயனர்களும், வருமானவரிச் சட்டம் 2025-இன் பிரிவு 159(8)-இன் கீழ் கட்டாயமாக்கப்பட்டுள்ள தகவல்களை வழங்குவதற்காக, படிவம் 41-இல் தேவையான விவரங்களைச் சமர்ப்பிக்கலாம்.
3.3 படிவம் - ஒரு பார்வை
படிவம் 41-இல் மூன்று பலகைகள் உள்ளன:
1. பகுதி A: விண்ணப்பதாரரின் விவரங்கள்
2. பகுதி B: வசிப்பிட விவரங்கள்
3. உறுதிமொழி மற்றும் சரிபார்ப்பு
4. படிப்படியான வழிகாட்டுதல்
படிநிலை 1: உங்களது பயனர் ID மற்றும் கடவுச்சொல்லைப் பயன்படுத்தி மின்னணு-தாக்கல் இணைய முகப்பில் உள்நுழையவும்.
படிநிலை 2: பயனர் ID-யை உள்ளிடவும் (PAN – வைத்திருக்கும் குடியுரிமையற்றவர்களுக்கு NR ID – PAN இல்லாத குடியுரிமையற்றவர்களாகப் பதிவு செய்த பயனர்களுக்கு) மற்றும் கடவுச்சொல்லை உள்ளிடவும்.
படிநிலை 3: மின்னணு-தாக்கல் > வருமான வரிப் படிவங்கள் > வருமான வரிப் படிவங்களைத் தாக்கல் செய்க என்பதற்குச் செல்லவும்.
படிநிலை 4: வருமான வரிச் சட்டம் 2025-இன்படி படிவங்கள் என்ற தாவலைத் தேர்ந்தெடுத்து, படிவம் 41-ஐத் தேடி, இப்போது தாக்கல் செய்க பட்டனைக் கிளிக் செய்யவும்.
படிநிலை 5: பொருந்தக்கூடிய வரி ஆண்டை (T.Y) தேர்ந்தெடுத்து, தொடரவும் பட்டனைக் கிளிக் செய்யவும்.
படிநிலை 6: தொடங்கவும்' என்பதைக் கிளிக் செய்யவும்.
படிநிலை 7: தொடரவும்' பட்டனைக் கிளிக் செய்த பிறகு, பயனர் பலகை திரைக்கு வழிநடத்தப்படுவார். அங்கு முதல் பலகையான "பகுதி A: விண்ணப்பதாரரின் விவரங்கள்" என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
Step 8: விவரங்களை உறுதிசெய்துவிட்டு சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.
குறிப்பு: எனது சுயவிவரம் பிரிவின் கீழ் முகவரி உள்ளிட்ட அனைத்துக் கட்டாய விவரங்களும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளனவா என்பதை உறுதிசெய்யவும். "எனது சுயவிவரம்" என்ற ஹைப்பர்லிங்கைக் கிளிக் செய்வதன் மூலம் உங்கள் தொடர்பு மற்றும் முகவரி விவரங்களைப் புதுப்பிக்கலாம்.
படிநிலை 9: முதல் பலகையைச் சேமித்த பிறகு, அந்த பலகையின் நிலை முடிந்தது எனக் காண்பிக்கப்படும். அதன் பின்னர், இரண்டாவது பலகையான "பகுதி B: குடியிருப்பு தொடர்பான தகவல்கள்" என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
படிநிலை 10: 2-ஆவது பலகையில் தேவையான விவரங்களை நிரப்பிவிட்டு சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.
படிநிலை 11: இரண்டாவது பலகையைச் சேமித்த பிறகு, அந்த பலகையின் நிலை நிறைவுப்பெற்றது எனத் தோன்றும். அதன் பின்னர், மூன்றாவது பலகையான "உறுதிமொழி மற்றும் சரிபார்ப்பு" என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
படிநிலை 12: மூன்றாவது பலகையில் தேவையான விவரங்களைப் பூர்த்தி செய்து, சேமி பட்டனைக் கிளிக் செய்யவும்.
படிநிலை 13: மூன்றாவது பலகையைச் சேமித்த பிறகு, அந்த பலகையின் நிலை நிறைவுபெற்றது எனக் காண்பிக்கப்படும். அதன் பின்னர், முன்னோட்டம் என்பதைக் கிளிக் செய்யவும்.
படிநிலை 14: முன்னோட்டம் பக்கத்தில், விவரங்களைச் சரிபார்த்து, மின்னணு-சரிபார்ப்புக்குச் செல்லவும் என்பதைக் கிளிக் செய்யவும்.
படிநிலை 15: மின்னணு-சரிபார்ப்புக்குத் தொடரவும்' பட்டனைக் கிளிக் செய்த பிறகு, நீங்கள் மின்னணு-சரிபார்ப்புக்குத் தொடர விரும்புகிறீர்களா என்பதைக் காட்டும் ஒரு உறுதிப்படுத்தல் பாப்-அப் திரை தோன்றும். அதில் ஆம் என்பதைக் கிளிக் செய்யவும்.
படிநிலை 16: ஆம்'என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், நீங்கள் மின்னணு-சரிபார்ப்புக்கு பக்கத்திற்கு அழைத்துச் செல்லப்படுவீர்கள். அங்கு உங்களது உள்நுழைவு வகையின் அடிப்படையில் படிவம் 41-ஐச் சரிபார்க்கலாம்:
1. PAN உள்நுழைவு: EVC அல்லது DSC (பொருந்தக்கூடியவாறு) பயன்படுத்திச் சரிபார்க்கவும்
2. NR ID உள்நுழைவு: உங்களது மின்னஞ்சல் மற்றும் அலைபேசி எண்ணிற்கு அனுப்பப்பட்ட OTP-ஐப் பயன்படுத்திச் சரிபார்க்கவும்.
குறிப்பு: மேலும் அறிய, மின்னணு-சரிபார்ப்பு செய்வது எப்படி என்ற பயனர் கையேட்டைப் பார்க்கவும்.
மின்னணு-சரிபார்ப்பு வெற்றிகரமாக முடிந்ததும், பரிவர்த்தனை ID மற்றும் ஒப்புகை ரசீது எண்ணுடன் வெற்றிச் செய்தி காட்டப்படும். எதிர்காலக் குறிப்புக்காக, பரிவர்த்தனை ID மற்றும் ஒப்புகை ரசீது எண்ணைக் குறித்து வைத்துக்கொள்ளவும். மின்னணு-தாக்கல் இணைய முகப்பில் பதிவுசெய்யப்பட்டுள்ள மின்னஞ்சல் ID(கள்) மற்றும் அலைபேசி எண்களுக்கும் உறுதிப்படுத்தல் செய்தி அனுப்பப்படும்.
5. தொடர்புடைய தலைப்புகள்
- உள்நுழையவும்
- முகப்புப் பலகை மற்றும் பணிப்பட்டியல் (வரி செலுத்துபவர்)
- EVC ஐ உருவாக்கவும்
- அங்கீகரிக்கவும் / பிரதிநிதியாகப் பதிவு செய்யவும்
6. சொற்களஞ்சியம்
| சுருக்கப்பெயர் / சுருக்கச்சொல் | விளக்கம் / சுருக்கவிளக்கம் |
| DSC | மின்னணு கையொப்பச் சான்றிதழ் |
| EVC | மின்னணு சரிபார்ப்புச் சான்றிதழ் |
| ARN | ஒப்புகை ரசீது எண் |
| FY | நிதியாண்டு |