1. மேலோட்டப்பார்வை
EVC உருவாக்க மின்னணு-தாக்கல் முகப்புப் பக்கத்தில் தனிப்பட்ட பதிவுசெய்யப்பட்ட பயனர்களுக்கு மட்டுமே மின்னணு சரிபார்ப்புக் குறியீட்டை உருவாக்கவும் [EVC] சேவை இருக்கிறது. கீழ்கண்டவற்றிற்கு இச்சேவை உங்களை அனுமதிக்கும்:
- ஒரு தகவலை மின்னணு-சரிபார்ப்பு செய்ய (சட்டப் படிவங்கள், வருமானவரி அறிக்கைகள், பணத்தைத் திரும்பப்பெறுதல் மறு வழங்குதல் கோரிக்கை மற்றும் எந்த அறிவிப்புக்கும் எதிரான பதில்)
- மின்னணு-தாக்கல் முகப்புப் பக்கத்தில் உள்நுழையுங்கள்
- கடவுச்சொல்லை மாற்றியமைத்தல்
2. இந்தச் சேவையைப் பெறுவதற்கான முன்தேவைகள்
- செல்லுபடியாகும் பயனர் ID மற்றும் கடவுச்சொல் கொண்ட மின்னணு-தாக்கல் இணைய முகப்பில் பதிவு செய்யப்பட்ட தனி நபர் பயனர்
- மின்னணு-தாக்கல் இணைய முகப்பில் சரிபார்க்கப்பட்ட மற்றும் EVC செயல்படுத்தப்பட்ட வங்கிக் கணக்கு (வங்கிக் கணக்கு விருப்பத்திற்கு)
- மின்னணு-தாக்கல் இணைய முகப்பில் சரிபார்க்கப்பட்ட மற்றும் EVC செயல்படுத்தப்பட்ட டீமேட் கணக்கு (டீமேட் கணக்கு விருப்பத்திற்கு)
- வங்கி கணக்குடன் இணைக்கப்பட்ட PAN (வங்கி இணையப் பரிமாற்ற விருப்பத்திற்காக)
- செல்லுபடியாகும் வங்கிப் பற்று அட்டை (debit card) ( வங்கி ஏ.டி.எம் விருப்பத்திற்கு)
- குறிப்பிட்ட வங்கிக் கணக்கு PAN உடன் இணைக்கப்பட்டிருக்க வேண்டும் மற்றும் அந்த PAN மின்னணு-தாக்கலுக்குப் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும் [வங்கி ATM விருப்பத்திற்கு]
3. படிப்படியான வழிகாட்டி
படி1: உங்கள் பயனர் ID மற்றும் கடவுச்சொல்லைப் பயன்படுத்தி மின்னணு-தாக்கல் இணைய முகப்பில் உள்நுழையவும்.
படி 2: உங்கள் முகப்புப்பலகையில், சேவைகள் > EVC ஐ உருவாக்கவும் என்பதைக் கிளிக் செய்யவும்.
படி 3: EVC உருவாக்கவும் பக்கத்தில், PAN / TAN தேர்ந்தெடுத்து தொடரவும் என்பதைக் கிளிக் செய்யவும்.
படி 4: EVC உருவாக்கவும் பக்கத்தில், உங்கள் மின்னணு-சரிபார்ப்புக் குறியீட்டை (EVC) எப்படி உருவாக்க விரும்புகிறீர்கள்? என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
பின்வரும் முறைகளைப் பயன்படுத்தி நீங்கள் மின்னணு சரிபார்ப்புக் குறியீட்டை உருவாக்க முடியும்:
| இணைய வங்கி சேவை | பிரிவு 4.1ஐ பார்க்கவும் |
| வங்கிக் கணக்கு | பிரிவு 4.2ஐ பார்க்கவும் |
| டீமேட் கணக்கு | பிரிவு 4.3ஐ பார்க்கவும் |
| 24 மணி நேர பணம் எடுக்கும் வங்கி மையம் (ATM) | பிரிவு 4.4 பார்க்கவும் |
4.1 இணைய வங்கி மூலம் EVC உருவாக்கவும்
படி 1: EVC உருவாக்கவும் பக்கத்தில், இணைய வங்கி மூலம் என்பதைத் தேர்ந்தெடுத்து தொடரவும் என்பதைக் கிளிக் செய்யவும்.
படி 2: இணைய வங்கி மூலம் மின்னணு-தாக்கல் உள்நுழைதல் பக்கம் மூலம், வங்கியின் பெயரைத் தேர்ந்தெடுக்கவும்.
குறிப்பு: உங்கள் வங்கியின் இணைய வங்கி உள்நுழைதல் பக்கம் தெரிந்தவுடன் நீங்கள் மின்னணு-தாக்கல் முகப்புப் பக்கத்தில் இருந்து வெளியேறிவிடுவீர்கள்.
படி 3: உங்கள் வங்கியின் இணைய வங்கிப் பரிமாற்ற உள்நுழைவுப் பக்கத்தில், உங்கள் வங்கி வழங்கியுள்ள பயனர் பெயர் மற்றும் கடவுச்சொல்லை உள்ளிடவும்.
படி 4: உங்கள் இணைய வங்கி வலைத்தளத்தில், மின்னணு-தாக்கல் முகப்புப் பக்கத்தில் உள்நுழையும் இணைப்பைக் கிளிக் செய்யவும்.
குறிப்பு: மின்னணு-தாக்கல் இணைய முகப்பின் இணைப்பைக் கிளிக் செய்யும்போது உங்கள் இணைய வங்கிப் பரிமாற்றத்தின்போது வலைத்தளத்தில் இருந்து வெளியேறி, உங்கள் மின்னணு-தாக்கல் கணக்கில் உள்நுழைவீர்கள்.
படி 5: உங்கள் முகப்புப்பலகையில், சேவைகள் > EVC ஐ உருவாக்கவும் என்பதைக் கிளிக் செய்யவும்.
மின்னணு-தாக்கல் முகப்புப் பக்கத்தில் பதிவு செய்யப்பட்ட உங்கள் அலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் IDக்கு உருவாக்கப்பட்ட EVC ஐப் பெறுவீர்கள் மற்றும் வெற்றிச் செய்தி காண்பிக்கப்படும்.
4.2 வங்கி கணக்கு மூலம் EVC உருவாக்குதல்
படி 1: EVC உருவாக்குதல் பக்கத்தில், வங்கிக் கணக்கு மூலம் என்பதைத் தேர்ந்தெடுத்து தொடரவும் என்பதைக் கிளிக் செய்யவும்.
ஒரு வெற்றிச் செய்தி கிடைக்கும் மற்றும் வங்கி சரிபார்த்த அலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் IDக்கு EVC பெறுவீர்கள்.
குறிப்பு:
- வங்கிக் கணக்கு சரிபார்க்கப்பட்டு EVC செயல்படுத்தப்பட்டால் மட்டுமே வங்கிக் கணக்கு மூலம் EVC உருவாக்கப்பட முடியும்.
- வங்கி சரிபார்த்திருந்தால் மட்டுமே உங்கள் அலைபேசி எண் அல்லது மின்னஞ்சல் IDக்கு EVC பெறுவீர்கள்.
4.3 டீமேட் கணக்கு மூலம் EVC உருவாக்குதல்
படி 1: EVC உருவாக்குதல்பக்கத்தில், டீமேட் கணக்கு மூலம் என்பதைக் கிளிக் செய்து தொடரவும் என்பதைக் கிளிக் செய்யவும்.
ஒரு வெற்றிச்செய்தி காண்பிக்கப்படும், மேலும் NSDL / CSDL சரிபார்த்த உங்கள் அலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் IDக்கு நீங்கள் EVC பெறுவீர்கள்.
குறிப்பு:
- உங்கள் வங்கி கணக்கு விவரங்கள் மற்றும் EVC செயல்படுத்தப்பட்டு சரியாக இருந்தால் மட்டுமே டீமேட் வங்கி கணக்கு மூலம் EVC ஐ உருவாக்கும் விருப்பத்தைப் பயன்படுத்த முடியும்
- NSDL/CSDL மூலம் உங்கள் அலைபேசி எண் அல்லது மின்னஞ்சல் ID சரிபார்க்கப்பட்டிருந்தால் மட்டுமே நீங்கள் EVC பெறுவீர்கள்.
4.4. வங்கி ATM விருப்பம் மூலம் EVC உருவாக்குதல் [ஆஃப்லைன் முறை]
படி 1: உங்கள் அருகிலுள்ள வங்கி ATMக்கு செல்லவும் மற்றும் உங்கள் வங்கிப் டெபிட் கார்டை ஸ்வைப் செய்யவும்/தேய்க்கவும்.
படி 2: PIN உள்ளிடுங்கள்.
படி 3: வருமான வரி தாக்கலுக்கு EVC உருவாக்கவும் என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
EVC மின்னணு-தாக்கல் இணைய முகப்பில் பதிவு செய்யப்பட்ட உங்கள் அலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் IDக்கு அனுப்பப்படும்.
குறிப்பு:
- உங்கள் வங்கிக் கணக்குடன் நீங்கள் PAN இணைந்திருக்க வேண்டும் மற்றும் PAN மின்னணு-தாக்கல் முகப்புப் பக்கத்தில் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும்.
- வங்கி ATM விருப்பம் மூலம் நீங்கள் EVC உருவாக்கக்கூடிய வங்கிகளின் பட்டியல் - ஆக்சிஸ் வங்கி, கனரா வங்கி, சென்ட்ரல் பாங்க் ஆஃப் இந்தியா, ICICI வங்கி, IDBI வங்கி, கோடக் மஹிந்திரா வங்கி மற்றும் ஸ்டேட்பேங்க் ஆஃப் இந்தியா.