Do not have an account?
Already have an account?

மதிப்பீட்டு ஆண்டு 2025-26க்கான உள்நாட்டு வியாபார நிறுவனத்திற்கு பொருந்தும் வருமானவரி அறிக்கைகள் மற்றும் படிவங்கள்

 

பொறுப்புத்துறப்பு: இந்தப் பக்கத்தில் உள்ள உள்ளடக்கம் ஒரு மேலோட்டமான விளக்கத்தை / பொதுவான வழிகாட்டுதலை அளிப்பதற்கு மட்டுமே மேலும் இது முழுமையானதல்ல. முழுமையான விவரங்கள் மற்றும் வழிகாட்டுதல்களுக்கு, வருமான வரிச் சட்டம், விதிகள் மற்றும் அறிவிப்புகளைப் பார்க்கவும்.

 

உள்நாட்டு வியாபார நிறுவனம்:

பிரிவு 2(22A) இன் படி, உள்நாட்டு நிறுவனம் என்பது ஒரு இந்திய நிறுவனம் அல்லது இந்த சட்டத்தின் கீழ் வரி செலுத்த வேண்டிய அதன் வருமானத்தைப் பொறுத்தவரை, அத்தகைய வருமானத்திலிருந்து செலுத்த வேண்டிய ஈவுத்தொகைகளை (முன்னுரிமை பங்குகள் மீதான ஈவுத்தொகை உட்பட) இந்தியாவுக்குள் அறிவிப்பதற்கும் செலுத்துவதற்கும் பரிந்துரைக்கப்பட்ட ஏற்பாடுகளைச் செய்த வேறு எந்த நிறுவனத்தையும் குறிக்கிறது.

1. ITR-6

பிரிவு 11 இன் கீழ் விலக்கு கோரும் நிறுவனங்கள் தவிர மற்ற நிறுவனங்களுக்கு பொருந்தும்.

நிறுவனம் பின்வருவனவற்றை உள்ளடக்கியது:

இந்திய வியாபார நிறுவனம்

இந்தியா அல்லது வேற்று நாட்டின் சட்டங்களால் அல்லது வேற்று நாட்டில் நிறுவப்பட்ட பெருநிறுவனம்

எந்தவொரு நிறுவனம், சங்கம் அல்லது அமைப்பு ஒருங்கிணைக்கப்பட்டாலும் இல்லாவிட்டாலும் மற்றும் ஒரு வாரியத்தின் பொது அல்லது சிறப்பு உத்தரவு ஆகியவற்றின் மூலம் இந்திய வியாபார நிறுவனமாகவோ அல்லது வெளிநாட்டு வியாபார நிறுவனமாகவோ {அல்லது மேலும் சில} என அறிவிக்கப்பட்டிருக்க வேண்டும்

 

2. ITR-7

பிரிவு 139 (4A) அல்லது பிரிவு 139 (4B) அல்லது பிரிவு 139 (4C) அல்லது பிரிவு 139 (4D) இன் கீழ் வருமானத்தை சமர்ப்பிக்க வேண்டிய நிறுவனங்கள் உள்ளிட்ட நபர்களுக்கு பொருந்தும்.

139(4A) –
அறக்கட்டளையின் கீழ் முழுமையாக / பகுதியாக தொண்டு அல்லது மத நோக்கங்களுக்காக வைத்திருக்கும் சொத்துக்களிலிருந்து பெறப்பட்ட வருமானம்

139(4B) –
ஒவ்வொரு அரசியல் கட்சியின் தலைமை நிர்வாக அதிகாரி

139(4C) –
பிரிவு 10-ல் குறிப்பிடப்பட்டுள்ள ஆராய்ச்சி கூட்டமைப்பு, செய்தி நிறுவனம் முதலிய பல்வேறு நிறுவனங்கள்

139(4D) – பிரிவு 35 இல் குறிப்பிடப்பட்டுள்ள பல்கலைக்கழகம், கல்லூரி அல்லது பிற நிறுவனங்கள்

 

பொருந்தக்கூடிய படிவங்கள்

1.

படிவம் 26 AS

AIS (ஆண்டு தகவல் அறிக்கை)

வழங்கியவர்:

வருமான வரித் துறை (இது மின்னணு-தாக்கல் இணைய முகப்பில் கிடைக்கிறது:

உள்நுழையவும் > மின்னணு தாக்கல் > வருமானவரி அறிக்கை > படிவம் 26AS ஐ காண்க)

படிவத்தில் வழங்கப்படும் விவரங்கள்:

மூலத்தில் பிடித்தம் செய்யப்பட்ட / வசூலிக்கப்பட்ட வரி.

வழங்கியவர்:

வருமான வரித் துறை (வருமான வரி மின்னணு-தாக்கல் இணைய முகப்பில் உள்நுழைந்த பிறகு இதை அணுகலாம்)

மின்னணு-தாக்கல் இணைய முகப்பு > உள்நுழைவு > AISக்கு செல்லவும்

படிவத்தில் வழங்கப்படும் விவரங்கள்:

  • மூலத்தில் பிடித்தம் செய்யப்பட்ட / வசூலிக்கப்பட்ட வரி
  • SFT தகவல்
  • வரி செலுத்துதல்
  • கோரிக்கை / திருப்பிச் செலுத்திய தொகை

பிற தகவல்கள் (நிலுவையிலுள்ள/முடிவுற்ற நடவடிக்கைகள், GST பற்றிய தகவல், வெளிநாட்டு அரசாங்கத்திடமிருந்து பெறப்பட்ட தகவல்கள் போன்றவை)

குறிப்பு: இதற்கு முன்பு 26AS இல் கிடைத்த (முன்கூட்டிய வரி/SAT, பணத்தைத் திரும்பப் பெறுவதற்கான விவரங்கள், SFT பரிவர்த்தனை, பிரிவு 194 IA,194 IB,194M இன் கீழ் TDS, TDS செலுத்த தவறியவைகள்) தொடர்பான தகவல்கள் இப்போது AIS இல் கிடைக்கின்றன.

 

2. படிவம் 3CA-3CD

வழங்குபவர்

படிவத்தில் வழங்கப்படுகின்ற விவரங்கள்

வரி செலுத்துவோர் வேறு ஏதேனும் சட்டத்தின் கீழ் கட்டாய தணிக்கை செய்ய வேண்டும் மற்றும் பிரிவு 44AB இன் கீழ் ஒரு கணக்காளரால் தங்கள் கணக்குகளை தணிக்கை செய்ய வேண்டும். பிரிவு 139 இன் உட்பிரிவு (1) இன் கீழ் வருமானவரி அறிக்கையை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதிக்கு ஒரு மாதத்திற்கு முன்பே சமர்ப்பிக்க வேண்டும்.

வருமான வரிச் சட்டம், 1961 இன் பிரிவு 44AB இன் கீழ் சமர்ப்பிக்கப்பட வேண்டிய கணக்குகளின் தணிக்கை அறிக்கை மற்றும் விவரங்களின் அறிக்கை

 

3. படிவம் 3CEB

சமர்ப்பிக்க வேண்டியவர்

படிவத்தில் வழங்கப்படுகின்ற விவரங்கள்

சர்வதேச பரிவர்த்தனை அல்லது குறிப்பிட்ட உள்நாட்டு பரிவர்த்தனையில் ஈடுபடும் வரி செலுத்துபவர் பிரிவு 92E இன் கீழ் ஒரு பட்டய கணக்காளரிடமிருந்து ஒரு அறிக்கையைப் பெற வேண்டும். பிரிவு 139 இன் உட்பிரிவு (1) இன் கீழ் வருமானவரி அறிக்கையை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதிக்கு ஒரு மாதத்திற்கு முன்பே சமர்ப்பிக்க வேண்டும்.

அனைத்து பன்னாட்டு பரிவர்த்தனை(கள்) அல்லது குறிப்பிட்ட உள்நாட்டு பரிவர்த்தனை(கள்) பற்றிய விவரங்கள் அடங்கிய பட்டயக் கணக்காளரிடமிருந்து பெறப்பட்ட அறிக்கை

 

4. படிவம் 16A – வருமான வரிச் சட்டம், 1961 இன் பிரிவு 203 இன் கீழ் ஊதியம் அல்லாத பிற வருமானத்தின் மீதான TDS சான்றிதழ்

வழங்குபவர்

படிவத்தில் வழங்கப்படுகின்ற விவரங்கள்

வரி பிடித்தம் செய்தவர் வரி செலுத்தியவருக்கு வழங்குவது

படிவம் 16A என்பது காலாண்டுக்கு ஒரு முறை வழங்கப்படும் மூலத்தில் வரி பிடித்த (TDS) சான்றிதழாகும், இது TDS, கொடுப்பனவுகளின் தன்மை மற்றும் வருமானவரித் துறையில் வைப்பு செய்யப்பட்ட TDS ஆகியவற்றை அளிக்கிறது.

 

 

5. படிவம் 29B

சமர்ப்பிக்க வேண்டியவர்

படிவத்தில் வழங்கப்படுகின்ற விவரங்கள்

வருமான வரிச் சட்டம்,1961 இன் பிரிவு 115JB இன் கீழ் கணக்காளரிடமிருந்து அறிக்கை பெற வேண்டிய வரி செலுத்துவோர். பிரிவு 139 இன் உட்பிரிவு (1) இன் கீழ் வருமானவரி அறிக்கையை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதிக்கு ஒரு மாதத்திற்கு முன்னர் வழங்கப்பட வேண்டும்.

பிரிவு 115JB இன் ஏற்பாடுகளுக்கு இணங்க புத்தக இலாபம் கணக்கிடப்பட்டுள்ளது என்பதை சான்றளிக்கும் பிரிவு 115JB பொருந்தும் நிறுவனத்தின் வழக்கில் அறிக்கை

 

6. படிவம் 67- வெளிநாட்டு வரி வரவு மற்றும் இந்தியாவிற்கு வெளியே உள்ள நாடு அல்லது குறிப்பிட்ட பிரதேசத்திலிருந்து பெறப்பட்ட வருமானம் பற்றிய அறிக்கை

சமர்ப்பிக்க வேண்டியவர்

படிவத்தில் வழங்கப்படுகின்ற விவரங்கள்

section139(1) இன் கீழ் ITRகளை சமர்ப்பிப்பதற்கு குறிப்பிடப்பட்டுள்ள கடைசி தேதியில் அல்லது அதற்கு முன்னர் வரி செலுத்துவோர்

இந்தியாவுக்கு வெளியே உள்ள ஒரு நாடு அல்லது குறிப்பிட்ட பிரதேசத்திலிருந்து பெறுபட்ட வருமானம் மற்றும் கோரப்பட்ட வெளிநாட்டு வரி வரவு

 

7. படிவம் 10-IC

சமர்ப்பிக்க வேண்டியவர்

படிவத்தில் வழங்கப்படுகின்ற விவரங்கள்

ITR தாக்கல் செய்வதற்கான கடைசி தேதியில் அல்லது அதற்கு முன் வரி செலுத்துபவர்

பிரிவு 115BAA இன் கீழ் 22% என்ற விகிதத்தில் வரிவிதிப்பைத் தேர்வு செய்ய விரும்பும் உள்நாட்டு நிறுவனங்கள், படிவம் 10- IC தாக்கல் செய்வதன் மூலம் விருப்பத்தைப் பயன்படுத்த வேண்டும்.

 

8. படிவம் 10-ID

சமர்ப்பிக்க வேண்டியவர்

படிவத்தில் வழங்கப்படுகின்ற விவரங்கள்

வரி செலுத்துபவர்

1 அக்டோபர் 2019க்குப் பிறகு புதிதாக நிறுவப்பட்ட உள்நாட்டு உற்பத்தி நிறுவனங்கள், பிரிவு 115BAB படி 15% முன்னுரிமை வரி விகிதத்தைப் பெற விரும்பினால், படிவம் 10-ID ஐ சமர்ப்பிக்க வேண்டும்.

 

9. படிவம் 10-CCB

சமர்ப்பிக்க வேண்டியவர்

படிவத்தில் வழங்கப்படுகின்ற விவரங்கள்

பிரிவு 80-I(7) / 80- IA / 80-IB / 80-IC / 80-IE இன் கீழ் பிடித்தத்திற்கு தகுதி பெற வரி செலுத்துபவர் ஒரு கணக்காளரிடமிருந்து ஒரு அறிக்கையைப் பெற வேண்டும்.

வரிச் சட்டம், 1961.

படிவம் 10-CCB இல் தணிக்கை அறிக்கை பிரிவு 80-I (7) / 80- IA / 80-IB / 80-IC / 80-IE இன் கீழ் விலக்கு கோர கட்டாயத் தேவையாகும். பிரிவு 139(1) இன் கீழ் ITR தாக்கல் செய்வதற்கான கெடு தேதிக்கு ஒரு மாதத்திற்கு முன்பு இது தாக்கல் செய்யப்பட வேண்டும்.

 

10. படிவம் 10-CCBBA

சமர்ப்பிக்க வேண்டியவர்

படிவத்தில் வழங்கப்படுகின்ற விவரங்கள்

அறிக்கையைப் பெற வேண்டிய வரி செலுத்துபவர்

கணக்காளரிடமிருந்து பிடித்தங்களைக் கோருவதற்கு

வருமானவரி சட்டம், 1961 இன் பிரிவு 80-ID(3)(iv)

படிவம் 10-CCB இல் தணிக்கை அறிக்கை பிரிவு 80-ID(3)(iv) இன் கீழ் பிடித்தம் கோருவது கட்டாயமாகும். பிரிவு 139(1) இன் கீழ் ITR தாக்கல் செய்வதற்கான கடைசி தேதிக்கு ஒரு மாதத்திற்கு முன்பு தாக்கல் செய்ய வேண்டும்.

 

11. படிவம் 10-CCBC

சமர்ப்பிக்க வேண்டியவர்

படிவத்தில் வழங்கப்படுகின்ற விவரங்கள்

வருமானவரிச் சட்டம்,1961 இன் பிரிவு 80-IB (11B) இல் குறிப்பிடப்பட்டுள்ள பிடித்தங்களுக்கு தகுதி பெற ஒரு வரி செலுத்துபவர் ஒரு கணக்காளரிடமிருந்து ஒரு அறிக்கையைப் பெற வேண்டும்

படிவம் 10-CCBC இல் தணிக்கை அறிக்கை என்பது பிரிவு 80-IB(11B) இன் கீழ் பிடித்தம் கோருவதற்கு கட்டாய தேவையாகும். பிரிவு 139(1) இன் கீழ் ITR தாக்கல் செய்வதற்கான கடைசி தேதிக்கு ஒரு மாதத்திற்கு முன்பு தாக்கல் செய்ய வேண்டும்.

 

மதிப்பீட்டு ஆண்டு 2025-26க்கான உள்நாட்டு வியாபார நிறுவனத்திற்கான வரி அடுக்குகள்

நிபந்தனை

வருமான வரி விகிதம் (உபரி வரி மற்றும் அபராதம் சேர்க்கப்படாமல்)

முந்தைய 2024-25 ஆம் ஆண்டில் மொத்த வருவாய் அல்லது மொத்த வரவுகள் ₹ 400 கோடிக்கு மிகாமல் இருக்க வேண்டும்

25%

பிரிவு 115BA தேர்வு செய்யப்பட்டால்

25%

பிரிவு 115BAA தேர்வு செய்யப்பட்டால்

22%

பிரிவு 115BAB தேர்வு செய்யப்பட்டால்

15%

வேறு எந்த உள்நாட்டு வியாபாரக் குழுமமும்

30%

 

உபரி வரி, விளிம்புநிலை நிவாரணம் மற்றும் சுகாதாரம் மற்றும் கல்வி செஸ்

உபரி வரி என்றால் என்ன?

உபரி வரி என்பது குறிப்பிட்ட வரம்புகளுக்கு மேல் வருமானம் ஈட்டும் நபர்களுக்கு விதிக்கப்படும் கட்டணமாகும், இது பொருந்தக்கூடிய விகிதங்களின்படி கணக்கிடப்பட்ட வருமான வரித் தொகையில் வசூலிக்கப்படுகிறது.

  • 7% - ₹ 1 கோடிக்கு மேல் வரி விதிக்கக்கூடிய வருமானம் - ₹ 10 கோடி வரை
  • 12% - வரி விதிப்பிற்குரிய வருமானம் ₹ 10 கோடிக்கு மேல்
  • 10% - நிறுவனம் பிரிவு 115BAA அல்லது பிரிவு 115BAB இன் கீழ் வரி விதிப்பைத் தேர்வு செய்தால்

விளிம்புநிலை நிவாரணம் என்றால் என்ன?

விளிம்புநிலை நிவாரணம் என்பது மிகைக் கட்டணம் செலுத்தும் சமயத்தில் கிட்டும் நிவாரணம் ஆகும், மிகைக்கட்டணம் செலுத்த வேண்டிய அளவு கூடுதல் வருமானம் ஈட்டும் நபரை அந்தக் மிகைக்கட்டணத்திற்கு பொறுப்பாக்கும் சந்தர்ப்பங்களில் வழங்கப்படுகிறது. உபரி வரித்தொகையானது முறையே ₹1 கோடி மற்றும் ₹10 கோடிக்கு மேற்பட்ட வருமானத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்

சுகாதாரம் மற்றும் கல்வி செஸ் என்றால் என்ன?

வருமான வரி மற்றும் கூடுதல் கட்டணம் (ஏதேனும் இருந்தால்) தொகைக்கு சுகாதாரம் மற்றும் கல்வி வரி @ 4% செலுத்தப்படும்.

குறிப்பு:

  • ஒரு நிறுவனத்தின் வழக்கமான வரி பொறுப்பு அதன் புத்தக இலாபத்தில் 15%க்கும் குறைவாக இருக்கும்போது, பொருந்தக்கூடிய எந்தவொரு கூடுதல் கட்டணம் மற்றும் சுகாதார மற்றும் கல்வி செஸ் ஆகியவற்றுடன் குறைந்தபட்ச மாற்று வரியை (MAT) அதன் புத்தக இலாபத்தில் 15% என்ற விகிதத்தில் செலுத்த வேண்டும்.
  • ஒரு நிறுவனம், ஒரு சர்வதேச நிதிச் சேவைகள் மையத்தின் ஒரு அலகாக இருப்பதால், அதன் வருமானத்தை மாற்றக்கூடிய அந்நியச் செலாவணியில் மட்டுமே பெறுகிறது, குறைந்தபட்ச மாற்று வரியை (MAT) 9% (பொருந்தும் செஸ் மற்றும் கூடுதல் கட்டணம்) செலுத்தப்பட வேண்டும்.
  • பிரிவு 115BAA மற்றும் 115BAB ஆகியவற்றின் கீழ் சிறப்பு விகித வரிவிதிப்பைத் தேர்ந்தெடுக்கும் ஒரு நிறுவனம் குறைந்தபட்ச மாற்று வரி (MAT) செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.
  • பிரிவு 115BAA அல்லது 115BAB வழங்கிய முன்னுரிமை வரி விகிதங்களைத் தேர்ந்தெடுக்கும் நிறுவனங்கள் பிரிவுகள் 80IA, 80IAB, 80IAC, 80IB மற்றும் இதே போன்ற விதிகளில் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ள குறிப்பிட்ட விலக்குகளுக்கு தகுதியற்றவை. இருப்பினும், அவர்கள் பிரிவு 80JJAA மற்றும் 80M இன் கீழ் பிடித்தங்களுக்கு உரிமையுடையவர்கள்.

 

நான் வரி நன்மைகளைப் பெறக் கூடிய முதலீடுகள் / பணப் பரிவர்த்தனைகள் / வருமானங்கள்

வருமானவரிச் சட்டத்தின் அத்தியாயம் VI-A இன் கீழ் குறிப்பிடப்பட்டுள்ள வரி பிடித்தங்கள்

பிரிவு 80G

பரிந்துரைக்கப்பட்ட நிதி, தொண்டு நிறுவனங்கள் போன்றவற்றிற்கு வழங்கப்பட்ட நன்கொடைகளுக்கான பிடித்தம்.

வழங்கப்பட்ட நன்கொடைகள், கீழ்க்கண்ட வகைகளிலான பிடித்தத்திற்கு தகுதியுடையது:

தகுதி வரம்புக்கு உட்பட்டது

 

100% விலக்கு

50% விலக்கு

எந்த வரம்பும் இல்லாமல்

 

100% விலக்கு

50% விலக்கு

 

 

 

 

 

குறிப்பு: ₹ 2000/- க்கு மேல் ரொக்கமாக வழங்கப்படும் நன்கொடைக்கு இந்தப் பிரிவின் கீழ் எந்த பிடித்தம் அனுமதிக்கப்படாது.

 

பிரிவு 80GGA

அறிவியல் ஆராய்ச்சி அல்லது ஊரக வளர்ச்சிக்காக வழங்கப்படும் நன்கொடைகளுக்கான பிடித்தம்.

வழங்கப்பட்ட நன்கொடைகள், கீழ்க்கண்ட வகைகளிலான பிடித்தத்திற்கு தகுதியுடையது:

பின்வரும் நோக்கத்துக்கான ஆராய்ச்சிக் கூட்டமைப்பு அல்லது பல்கலைக்கழகம், கல்லூரி அல்லது கூட்டமைப்பு

  • அறிவியல் ஆராய்ச்சி
  • சமூக அறிவியல் அல்லது புள்ளிவிவர ஆராய்ச்சி

பின்வரும் நோக்கத்திற்காக செயல்படும் கூட்டமைப்பு அல்லது அமைப்பு

  • கிராமப்புற வளர்ச்சி
  • இயற்கை வளங்களைப் பாதுகாத்தல் அல்லது காடு வளர்ப்பு

பொதுத்துறை நிறுவனம் (PSU) அல்லது உள்ளூர் நிர்வாகம் அல்லது தகுதிவாய்ந்த கருத்திட்டமொன்றை நிறைவேற்றுவதற்காக தேசிய குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட சங்கம் அல்லது நிறுவனம்

பின்வருவபவற்றுக்காக மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட நிதி:

  • காடு வளர்ப்பு
  • கிராமப்புற வளர்ச்சி

மத்திய அரசால் அமைக்கப்பட்டு அறிவிக்கப்பட்டபடி தேசிய நகர்ப்புற வறுமை ஒழிப்பு நிதி

 

குறிப்பு: ₹ 2000க்கு மேல் ரொக்கமாக வழங்கப்படும் நன்கொடை அல்லது நிகர மொத்த வருமானத்தில் லாபம் / வணிகம் / தொழிலில் இருந்து கிடைக்கும் லாபம் ஆகியவை அடங்கும் என்றால் இந்தப் பிரிவின் கீழ் எந்த பிடித்தமும் அனுமதிக்கப்படாது.

 

பிரிவு 80GGB

அரசியல் கட்சி அல்லது தேர்தல் அறக்கட்டளைக்கு வழங்கப்பட்ட தொகைக்கான பிடித்தம் (சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு)

 

ரொக்கம் தவிர வேறு எந்த பயன்முறையிலும் செலுத்தப்பட்ட தொகை முழுவதற்கும் பிடித்தம்

 

பிரிவு 80IA

 

எந்தவொரு உள்கட்டமைப்பு வசதியையும் (இந்திய நிறுவனம் மட்டும்), தொழில் பூங்காக்கள் (எந்தவொரு நிறுவனமும்), எந்தவொரு மின் நிறுவனம், புனரமைப்பு அல்லது மின் உற்பத்தி நிலையங்களின் மறுமலர்ச்சி (இந்திய நிறுவனம்) ஆகியவற்றை உருவாக்குதல், பராமரித்தல் மற்றும் இயக்குவதில் ஈடுபட்டுள்ள நிறுவனம் விலக்கு கோர தகுதியுடையது.

(சில நிபந்தனைகளுக்கு உட்பட்டது)

 

மதிப்பீட்டாளர் உள்கட்டமைப்பு வசதியை உருவாக்கி / இயக்க மற்றும் பராமரிக்கத் தொடங்கும் மதிப்பீட்டு ஆண்டிலிருந்து முதல் 15 மதிப்பீட்டு ஆண்டு வரையிலான காலத்திற்குள் வரும் 10 தொடர்ச்சியான மதிப்பீட்டு ஆண்டுகளுக்கு 100% லாபம்

(குறிப்பிட்ட வணிகத்தின் வளர்ச்சி, செயல்பாடு போன்றவை, குறிப்பிட்ட தேதிக்குப் பிறகு தொடங்கப்பட்டது என்றால் எந்தவொரு பிடித்தமும் அனுமதிக்கப்படாது]

 
 

 

பிரிவு 80IAB

 

சிறப்பு பொருளாதார மைய அபிவிருத்தியில் ஈடுபட்டுள்ள ஒரு நிறுவனம் அல்லது நிறுவனமொன்றின் இலாபங்கள் மற்றும் ஆதாயங்களுக்கான பிடித்தம்.

(சில நிபந்தனைகளுக்கு உட்பட்டது)

மத்திய அரசால் சிறப்புப் பொருளாதார மண்டலம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட ஆண்டிலிருந்து தொடங்கி 15 10 மதிப்பீட்டு ஆண்டுகளில் ஈட்டப்பட்ட 100% லாபம்

சிறப்புப் பொருளாதார மண்டலத்தை உருவாக்குவது 1 ஏப்ரல் 2017 அன்று அல்லது அதற்குப் பிறகு தொடங்கினால், வரி செலுத்துபவருக்கு எந்த பிடித்தமும் இல்லை

 
 

 

பிரிவு 80IAC

நியமிக்கப்பட்ட வணிக நடவடிக்கைகள் மூலம் தகுதிவாய்ந்த தொடக்க நிறுவனத்தால் பெறப்பட்ட வருமானம் மற்றும் வருவாய்

 

தகுதிவாய்ந்த ஸ்டார்ட்-அப் இணைக்கப்பட்ட ஆண்டிலிருந்து தொடங்கி 10 ஆண்டுகளில் 3 தொடர்ச்சியான மதிப்பீட்டு ஆண்டுகளுக்கு100% லாபம்

 

பிரிவு 80IB

உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிறுவனங்களைத் தவிர்த்து, குறிப்பிட்ட தொழில் நிறுவனங்களிலிருந்து இலாபங்கள் மற்றும் ஆதாயங்களுக்கான பிடித்தம், - 31 மார்ச் 2000க்குப் பிறகு, ஆனால் 1 ஏப்ரல் 2007க்கு முன்னர் ஒப்புதல் வழங்கப்பட்டால், நியமிக்கப்பட்ட அதிகாரியிடமிருந்து ஒப்புதல் பெறும் மதிப்பீட்டு ஆண்டிலிருந்து தொடங்கி 10 ஆண்டு காலத்திற்கு இலாபத்தை 100% பிடித்தம் செய்ய அனுமதிக்கிறது

இந்த பிரிவின் கீழ் பிடித்தம் ஒரு மதிப்பீட்டாளருக்கு கிடைக்கிறது, அதன் ஒட்டு மொத்த வருமானம் வணிகத்திலிருந்து பெறப்பட்ட இலாபங்கள் மற்றும் ஆதாயங்களை உள்ளடக்கியது:

ஜம்மு மற்றும் காஷ்மீரில் தொடங்கப்பட்ட தொழில் நிறுவனம், SSI உட்பட

வணிக ரீதியாக கனிமவள எண்ணெயை உற்பத்தி செய்தல் மற்றும் சுத்திகரித்தல்

பழங்கள் அல்லது காய்கறிகள், இறைச்சி மற்றும் இறைச்சி பொருட்கள் அல்லது வளர்ப்புப்பறவைகள் அல்லது கடல் அல்லது பால் பொருட்கள் ஏனையவைகளை பதப்படுத்துதல், பாதுகாத்தல் மற்றும் பேக்கேஜிங் செய்தல்; உணவு தானியங்களின் கையாளுதல், கிடங்கில் சேமித்தல் மற்றும் போக்குவரத்து ஆகியவற்றின் ஒருங்கிணைந்த வணிகம்

(சில நிபந்தனைகளுக்கு உட்பட்டது)

பல்வேறு வகையான நிறுவனங்களுக்கு குறிப்பிட்ட நிபந்தனைகளின்படி, 5 / 10 / 7 வருட காலத்திற்கு 100% / 25% லாபம்.

 

பிரிவு 80IBA

வீட்டு வசதித் திட்டங்களை உருவாக்குதல் மற்றும் கட்டுவதில் இருந்து பெறப்பட்ட லாபம் மற்றும் ஆதாயங்கள்

 

குறிப்பிடப்பட்ட பல்வேறு நிபந்தனைகளுக்கு உட்பட்டு 100% இலாபம்

 

பிரிவு 80IC

இமாச்சலப் பிரதேசம், சிக்கிம், உத்தராகண்ட் மற்றும் வடக்கு-கிழக்கு மாநிலங்களில் சில நிறுவனங்கள் தொடர்பான பிடித்தம்

(சில நிபந்தனைகளுக்கு உட்பட்டது)

 

குறிப்பிட்ட பொருள் அல்லது பொருளை உற்பத்தி செய்ய முதல் 5 மதிப்பீட்டு ஆண்டுகளுக்கு 100% லாபமும், அடுத்த 5 மதிப்பீட்டு ஆண்டுகளுக்கு 25% (ஒரு நிறுவனத்திற்கு 30%) லாபமும்.

 

பிரிவு 80IE

வடகிழக்கு மாநிலங்களில் அமைக்கப்பட்ட குறிப்பிட்ட சில நிறுவனங்களுக்கான பிடித்தம்

(சில நிபந்தனைகளுக்கு உட்பட்டது)

 

குறிப்பிடப்பட்டுள்ள பல்வேறு நிபந்தனைகளுக்கு உட்பட்டு 10 மதிப்பீட்டு ஆண்டிற்கான லாபத்தில்100%

 

 

பிரிவு 80JJA

மக்கக்கூடிய கழிவுகளை சேகரித்தல் மற்றும் செயலாக்குதல் தொழிலிலிருந்து கிடைக்கும் லாபங்கள் மற்றும் ஆதாயங்களுக்கான பிடித்தம்

(சில நிபந்தனைகளுக்கு உட்பட்டது)

 

தொடர்ச்சியாக 5 மதிப்பீட்டு ஆண்டுகளுக்கு மக்கும் கழிவுகளை சேகரித்தல், பதப்படுத்துதல் மற்றும் சுத்திகரித்தல் ஆகியவற்றின் மூலம் 100% லாபம்

 

பிரிவு 80JJAA

பிரிவு 44AB பொருந்தும் மதிப்பீட்டாளருக்குப் பொருந்தும், புதிய தொழிலாளர்கள்/ஊழியர்களின் வேலைவாய்ப்பு தொடர்பான பிடித்தம்

(சில நிபந்தனைகளுக்கு உட்பட்டது)

 

சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு, 3 திப்பீட்டு ஆண்டிற்கான கூடுதல் பணியாளர் செலவில்30%

 

பிரிவு 80LA

வெளிநாட்டு வங்கிக் கிளைகள் மற்றும் சர்வதேச நிதிச் சேவை மையத்தின் வருமானத்திற்கான பிடித்தம்

(சில நிபந்தனைகளுக்கு உட்பட்டது)

குறிப்பிடப்பட்ட நிபந்தனைகளின்படி 5 / 10 மதிப்பீட்டு ஆண்டிற்கான குறிப்பிட்ட வருமானத்தில் 100% / 50%

 

பிரிவு 80M

ஈவுத்தொகை பெறும் குழுமம், அந்த ஈவுத்தொகையைப் பங்குதாரர்களுக்குப் பிரித்து வழங்குமானால், குழுமங்களுக்கு இடையிலான ஈவுத்தொகையை, குழுமத்தின் மொத்த வருமானத்திலிருந்து குறைத்துக் கொள்ளப்படுவது அனுமதிக்கப்படும்

முந்தைய ஆண்டில் உள்நாட்டு நிறுவனத்தின் மொத்த வருமானத்தில் வேறு ஏதேனும் உள்நாட்டு நிறுவனம் அல்லது வெளிநாட்டு நிறுவனம் அல்லது ஒரு வணிக அறக்கட்டளையிலிருந்து ஈவுத்தொகை மூலம் கிடைக்கும் வருமானம் உள்ளடங்கியிருந்தால், இந்தப் பிரிவின் விதிகளின்படி மற்றும் அதற்கு உட்பட்டு, அத்தகைய உள்நாட்டு நிறுவனத்தின் மொத்த வருமானத்தைக் கணக்கிடும்போது, ​​மற்றொரு உள்நாட்டு நிறுவனத்திலிருந்து பெறப்பட்ட ஈவுத்தொகை மூலம் கிடைக்கும் வருமானத்தின் அளவுக்குச் சமமான தொகையை பிடித்தம் செய்ய அனுமதிக்கப்படும், இது வருமானவரி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டிய தேதிக்கு ஒரு மாதத்திற்கு முன்பு பங்குதாரருக்கு விநியோகிக்கப்படும் ஈவுத்தொகையின் அளவை விட அதிகமாக இருக்காது.

 

 

 

80PA

தன் உறுப்பினர்களின் வேளாண் சார்ந்த உற்பத்திப் பொருளை சந்தைப்படுத்துதல், கொள்முதல் செய்தல், செயல்முறைப்படுத்துதல் ஆகிய தகுதி பெற்ற தொழிலில் ஈடுபப்பட்டுள்ள உற்பத்தியாளர் வியாபார நிறுவனம்

 

நிறுவனத்தின் மொத்த வருவாய் நிதியாண்டில் ₹ 100 கோடிக்குக் குறைவாக இருக்க வேண்டும் என்ற நிபந்தனைக்கு உட்பட்டு மதிப்பீட்டு ஆண்டு 2019-20 முதல் மதிப்பீட்டு ஆண்டு 2025-26 வரையிலான 100% லாபம்

 

கடைசியாக மதிப்பாய்வு செய்யப்பட்ட பக்கம் அல்லது புதுப்பிக்கப்பட்டது: