மதிப்பீட்டு ஆண்டு AY 2026-27-க்கான வணிகம் / தொழில் வருமானம் கொண்ட தனிநபர்களுக்குப் பொருந்தக்கூடிய வருமான வரிக் கணக்குகள்
பொறுப்புத் துறப்பு: இப்பக்கத்தில் உள்ள தகவல்கள் ஒரு மேலோட்டமான மற்றும் பொதுவான வழிகாட்டுதலை மட்டுமே வழங்குகின்றன, இவை முழுமையானவை அல்ல. முழுமையான விவரங்கள் மற்றும் வழிகாட்டுதல்களுக்கு, வருமான வரிச் சட்டம், 1961-ன் விதிகள் மற்றும் அறிவிப்புகளைப் பார்க்கவும்.
| 1. ITR-3 -தனிநபர்களுக்குப் பொருந்தும் & HUF | |
| இந்த வருமான அறிக்கை தனிநபர்களுக்குப் பொருந்தும்; பிரிக்கப்படாத இந்து குடும்பம்(HUF): | |
| ஊதியம்/ஓய்வூதியம், வீட்டுச் சொத்து, தொழில் அல்லது வணிகத்தின் லாபம் அல்லது ஆதாயங்கள், மூலதன ஆதாயங்கள் அல்லது பிற மூலங்களிலிருந்து வரும் வருமானம் ஆகிய தலைப்புகளின் கீழ் வருமானம் இருத்தல். | ITR-1, ITR-2 அல்லது ITR-4 தாக்கல் செய்யத் தகுதியற்றவர்கள் யார்? |
| 2. ITR-4 (சுகம்) –தனிநபர்களுக்குப் பொருந்தும், HUF &அமைப்பு(LLP-ஐத் தவிர) | ||||||
|
இந்த வருமானவரி அறிக்கை, தனிநபர் அல்லது இந்துக் கூட்டுக் குடும்பம் (HUF) ஆகியோருக்குப் பொருந்தும். அவர்கள் இந்தியாவில் வசிப்பவர்களாக இருந்து,சாதாரண குடியிருப்பாளர் அல்லாத குடியிருப்பாளர் ஆக இல்லாதவர்களாக இருக்க வேண்டும். அல்லது LLP அல்லாத குடியிருப்பு நிறுவனம் ஆக இருக்கலாம். மேலும், அவர்களின் நிகர மொத்த வருமானம் ₹50 லட்சம் வரை இருக்க வேண்டும். வருமானவரி சட்டம், 1961 -இன் பிரிவு 44AD / 44ADA / 44AE-ன் கீழ் ஊக அடிப்படையில் கணக்கிடப்படும் வணிகம் அல்லது தொழில் வருமானம் இருக்க வேண்டும். அத்துடன், பின்வரும் வருவாய் மூலங்களில் ஏதேனும் ஒன்றிலிருந்து வருமானம் பெற்றிருக்க வேண்டும்:
|
வருமான வரி சட்டம், 1961-ன் படி பொருந்தும் படிவங்கள்
|
||||||
| 2. படிவம் 26 AS | AIS (ஆண்டு தகவல் அறிக்கை) |
|
வழங்கியவர்:
வருமான வரித்துறை (இது மின்னணு-தாக்கல் இணைய முகப்பில் கிடைக்கும்): உள்நுழையவும் > மின்னணு-தாக்கல் > வருமானவரி அறிக்கை > 26AS படிவத்தை காண்க |
வழங்கியவர்:
வருமான வரித்துறை (வருமான வரி மின்னணு - தாக்கல் இணைய முகப்பில் உள்நுழைந்த பிறகு இதை அணுகலாம்.) மின்னணு-தாக்கல் இணைய முகப்புக்குச் செல்லவும் > உள்நுழையவும் > AIS |
|
படிவத்தில் வழங்கப்பட்டுள்ள விவரங்கள்:
மூலத்தில் பிடித்தம் செய்யப்பட்ட / வசூலிக்கப்பட்ட வரி
|
படிவத்தில் வழங்கப்பட்டுள்ள விவரங்கள்:
இதர விவரங்கள் (நிலுவையிலுள்ள/முடிவடைந்த நடவடிக்கைகள், GST விவரங்கள், வெளிநாட்டு அரசாங்கத்திடமிருந்து பெறப்பட்ட தகவல்கள் போன்றவை) |
| 3. படிவம் 3CB-CD | |
|
சமர்ப்பித்தவர் |
படிவத்தில் வழங்கப்பட்ட விவரங்கள் |
|
பிரிவு 44AB-இன் கீழ் ஒரு பட்டயக் கணக்காளரால் / தனது கணக்குகளைத் தணிக்கை செய்யக் கடமைப்பட்டுள்ள வரி செலுத்துவோர் வருமான வரிச் சட்டம், 1961-ன் பிரிவு 139-ன் உட்பிரிவு (1) -ன்கீழ் வருமான வரி அறிக்கை தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவிற்கு, குறைந்தது ஒரு மாதத்திற்கு முன்பாக இது சமர்ப்பிக்கப்பட வேண்டும். |
வருமான வரிச் சட்டம், 1961-ன் பிரிவு 44AB-இன் கீழ் சமர்ப்பிக்கப்பட வேண்டிய கணக்குத் தணிக்கை அறிக்கை (படிவம் 3CB) மற்றும் விவர அறிக்கை (படிவம் 3CD) |
|
||||||
| 5. படிவம் 15H – 60 வயது அல்லது அதற்கு மேற்பட்ட குடியிருப்பு தனிநபர் சில குறிப்பிட்ட வருவாய்களைப் பெறும்போது, அவற்றில் வரி (TDS) பிடித்தம் செய்யப்படாமல் இருப்பதற்காக வழங்கப்படும் அறிவிப்பு ஆகும் | |
|
சமர்ப்பித்தவர் |
படிவத்தில் வழங்கப்பட்ட விவரங்கள் |
|
60 வயது அல்லது அதற்கு மேற்பட்ட குடியிருப்பு தனிநபர், தங்களின் வட்டி வருமானத்தில் TDS பிடித்தம் செய்ய வேண்டாம் என்று வங்கிக்கு வழங்கும் அறிவிப்பு ஆகும். |
நிதியாண்டிற்கான FY மதிப்பிடப்பட்ட வருமானம் |
| 6. படிவம் 3CEB | |
|
சமர்ப்பித்தவர் |
படிவத்தில் வழங்கப்பட்ட விவரங்கள் |
|
பன்னாட்டுப் பரிவர்த்தனை அல்லது குறிப்பிட்ட உள்நாட்டுப் பரிவர்த்தனைகளை மேற்கொள்ளும் வரி செலுத்துவோர், வருமான வரிச் சட்டம், 1961-ன் பிரிவு 92E-இன் கீழ், பட்டயக் கணக்காளரிடமிருந்து தணிக்கை அறிக்கை பெற வேண்டியது கட்டாயமாகும். வருமான வரிச் சட்டம், 1961-ன் பிரிவு 139-ன் உட்பிரிவு (1)-ன் கீழ் வருமான வரி அறிக்கை தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவிற்கு, குறைந்தது ஒரு மாதத்திற்கு முன்பாக இது சமர்ப்பிக்கப்பட வேண்டும். |
அனைத்துப் பன்னாட்டுப் பரிவர்த்தனைகள் மற்றும் குறிப்பிட்ட உள்நாட்டுப் பரிவர்த்தனைகளின் விவரங்களைக் கொண்ட பட்டயக் கணக்காளரின் அறிக்கை |
மதிப்பீட்டு ஆண்டு (AY) 2026–27 வரி வரம்பு***
புதிய வரி விதிப்பு முறை Vs பழைய வரிவிதிப்பு முறை
- நிதிச் சட்டம் 2023, மதிப்பீட்டு ஆண்டு w.e.f AY 2024-25 முதல் பிரிவு 115BAC-ன் விதிகளில் திருத்தம் செய்துள்ளது. இதன்படி, தனிநபர், இந்து கூட்டுக் குடும்பம் (HUF), நபர்களின் கூட்டமைப்பு (AOP - கூட்டுறவுச் சங்கங்கள் அல்லாதவை), நபர்களின் அமைப்பு (BOI) அல்லது செயற்கைச் சட்ட நபர்கள் ஆகியோருக்குப் புதிய வரி முறையே இயல்புநிலை வரி முறையாக மாற்றப்பட்டுள்ளது. இருப்பினும், தகுதியுள்ள வரி செலுத்துவோர் இந்த இயல்புநிலை வரி முறையிலிருந்து விலகி, பழைய வரி முறையின் கீழ் வரி விதிக்கப்படுவதைத் தேர்ந்தெடுக்கும் விருப்பத்தைப் பெற்றுள்ளனர். பழைய வரி முறை என்பது புதிய வரி முறை அறிமுகப்படுத்தப்படுவதற்கு முன்பு நடைமுறையில் இருந்த வருமான வரி கணக்கீடு மற்றும் வரி அடுக்கு முறைகளைக் குறிக்கிறது. பழைய வரி முறையில், வரி செலுத்துவோர் பல்வேறு வரி விலக்குகளையும் சலுகைகளையும் கோரும் விருப்பத்தைப் பெற்றுள்ளனர்.
வணிகம் சாராத வழக்குகள்:
- "வணிகம் சாராத வழக்குகள்",வரி செலுத்துபவர், இயல்பான வரி முறையை மாற்றும் விருப்பத்தை ஒவ்வொரு ஆண்டும் நேரடியாக ITR-இல் பயன்படுத்தலாம். இவ்வாறு தேர்வு செய்யப்படும் ITR, வருமானவரி சட்டம், 1961-ன் பிரிவு 139(1)-ல் குறிப்பிடப்பட்டுள்ள கடைசி தேதிக்குள் தாக்கல் செய்யப்பட வேண்டும்.
வணிக வழக்குகள்
- வணிகம் மற்றும் தொழிலில் இருந்து வருமானம் பெறும் தகுதியுள்ள வரி செலுத்துநர்கள், இயல்புநிலை வரி முறையிலிருந்து விலக விரும்பினால், வருமான வரிச் சட்டம், 1961 இன் பிரிவு 139(1) கீழ் நிர்ணயிக்கப்பட்ட வருமான வரி அறிக்கை கடைசித் தேதிக்கு முன் படிவம்-10-IEA -ஐ சமர்ப்பிக்க வேண்டும். அதேபோல், அந்தத் தேர்வை திரும்பப் பெறுவது (அதாவது மீண்டும் புதிய வரி முறையில் சேருவது) கூட, பிரிவு 139(1) இல் குறிப்பிடப்பட்ட கடைசி தேதிக்குள் படிவம் எண்.10-IEA -ஐ சமர்ப்பிப்பதன் மூலம் செய்யப்பட வேண்டும்.எனினும், பழைய வரி முறையிலிருந்து விலகி மீண்டும் இயல்புநிலை வரி முறையில் சேரும் விருப்பம், அடுத்தடுத்த மதிப்பீட்டு ஆண்டில் மட்டுமே கிடைக்கும்; மேலும் வணிகம் மற்றும் தொழிலில் இருந்து வருமானம் பெறும் தகுதியுள்ள வரி செலுத்துநர்களுக்கு, இது வாழ்நாளில் ஒருமுறை மட்டுமே அனுமதிக்கப்படுகிறது.
வரி வரம்புகள்:
|
பழைய வரி முறை |
வருமான வரிச் சட்டம், 1961-இன் பிரிவு 115BAC-ன் கீழான இயல்புநிலை வரிவிதிப்பு முறை |
||
|
வருமான வரி வரம்பு |
வருமான வரி விகிதம் |
வருமான வரி வரம்பு |
வருமான வரி விகிதம் |
|
₹ 2,50,000 வரை |
ஏதுமில்லை |
₹ 400,000 வரை |
ஏதுமில்லை |
|
₹ 2,50,001 - ₹ 5,00,000** |
5% மேல் ₹ 2,50,000 |
₹ 4,00,001 - ₹ 8,00,000 |
5% மேல் ₹ 4,00,000 |
|
₹ 5,00,001 - ₹ 10,00,000 |
₹ 12,500 + ₹ 5,00,000-க்கு மேல் 20% |
₹ 8,00,001 - ₹ 12,00,000 |
₹ 20,000 + ₹ 8,00,000-க்கு மேல் 10% |
|
₹10,00,000-க்கு மேல் |
₹ 1,12,500 + 30% மேல் ₹ 10,00,000 |
₹ 12,00,001 - ₹ 16,00,000 |
₹ 60,000 + 15% -க்கு மேல் ₹ 12,00,000 |
|
|
|
₹ 16,00,001 - ₹ 20,00,000 |
₹ 1,20,000 + 20% -க்கு மேல் ₹ 16,00,000 |
|
|
|
₹ 20,00,001 - ₹ 24,00,000 |
₹ 2,00,000 + 25% -க்கு மேல் ₹ 20,00,000 |
|
|
₹ 24,00,000-க்கு மேல் |
3,00,000 + 30% -க்கு மேல் ₹ 24,00,000 |
|
|
பழைய வரி முறை |
வருமான வரி சட்டம், 1961 இன் பிரிவு 115BAC கீழ் புதிய வரி முறை |
||
|
வருமான வரி வரம்பு |
வருமான வரி விகிதம் |
வருமான வரி வரம்பு |
வருமான வரி விகிதம் |
|
₹ 3,00,000 வரை |
ஏதுமில்லை |
₹ 4,00,000 வரை |
ஏதுமில்லை |
|
₹ 3,00,001 - ₹ 5,00,000** |
₹ 3,00,000-க்கு மேல் 5% |
₹ 4,00,001 - ₹ 8,00,000 |
₹ 4,00,000-க்கு மேல் 5% |
|
₹ 5,00,001 – ₹ 10,00,000 |
₹ 10,000 + ₹ 5,00,000-க்கு மேல் 20% |
₹ 8,00,001 - ₹ 12,00,000 |
₹ 20,000 + ₹ 8,00,000-க்கு மேல் 10% |
|
₹10,00,000-க்கு மேல் |
₹ 1,10,000 + ₹ 10,00,000-க்கு மேல் 30% |
₹ 12,00,001 - ₹ 16,00,000 |
₹ 60,000 + ₹ 12,00,000-க்கு மேல் 15% |
|
|
|
₹ 16,00,001 - ₹ 20,00,000 |
₹ 1,20,000 + ₹ 16,00,000-க்கு மேல் 20% |
|
|
|
₹ 20,00,001 – ₹ 24,00,000 |
₹ 2,00,000 + ₹ 20,00,000-க்கு மேல் 25% |
|
|
|
₹ 24,00,000-க்கு மேல் |
₹ 3,00,000 + ₹ 24,00,000-க்கு மேல் 30% |
|
பழைய வரி முறை |
வருமான வரி சட்டம், 1961 -இன் பிரிவு 115BAC கீழ் புதிய வரி முறை |
||
|
வருமான வரி வரம்பு |
வருமான வரி விகிதம் |
வருமான வரி வரம்பு |
வருமான வரி விகிதம் |
|
₹ 5,00,000 வரை |
ஏதுமில்லை |
₹ 4,00,000 வரை |
ஏதுமில்லை |
|
₹ 5,00,001 - ₹ 10,00,000 |
₹ 5,00,000-க்கு மேல் 20% |
₹ 4,00,001 - ₹ 8,00,000** |
₹ 4,00,000-க்கு மேல் 5% |
|
₹10,00,000-க்கு மேல் |
₹ 1,00,000 + வருமானத்திற்கு மேல் 30% ₹ 10,00,000 |
₹ 8,00,001 - ₹ 12,00,000 |
₹ 20,000 + ₹ 8,00,000-க்கு மேல் 10% |
|
|
|
₹ 12,00,001 - ₹ 16,00,000 |
₹ 60,000 + 15% மேல் ₹ 12,00,000 |
|
|
|
₹ 16,00,001 - ₹ 20,00,000 |
₹ 1,20,000 + 20% மேல் ₹ 16,00,000 |
|
|
|
₹ 20,00,001 - ₹ 24,00,000 |
₹ 2,00,000 + ₹ 20,00,000-க்கு மேல் 25% |
| ₹ 24,00,000-க்கு மேல் | ₹ 3,00,000 + ₹ 24,00,000-க்கு மேல் 30% | ||
பொருந்தக்கூடிய உபரி வரி விகிதங்கள்:
|
வருமான வரம்பு |
வருமான வரித் தொகையின் மீதான உபரி வரி விகிதம்
(புதிய வரி முறை) |
வருமான வரித் தொகையின் மீதான உபரி வரி விகிதம்
(பழைய வரி முறை)
|
|
₹ 50 லட்சம் வரை |
ஏதுமில்லை |
ஏதுமில்லை |
|
ரூ. 50 லட்சம் முதல் ரூ. 1 கோடி வரை |
10% |
10% |
|
₹ 1 கோடி முதல் ₹ 2 கோடி வரை |
15% |
15% |
|
₹ 2 கோடி முதல் ₹ 5 கோடி வரை |
25% |
25% |
|
₹ 5 கோடிக்கு மேல் |
25% |
37% |
குறிப்பு: 111A, 112, 112A ஆகிய பிரிவுகளின் கீழ் வரி விதிக்கப்படும் வருமானம் மற்றும் ஈவுத்தொகை ஆகியவற்றிற்கு, சூழ்நிலையைப் பொறுத்து 25% மற்றும் 37% கூடுதல் வரி விதிக்கப்படாது. எனவே, இத்தகைய வருமானங்கள் மீது விதிக்கப்படும் அதிகபட்ச கூடுதல் வரி விகிதம் 15% ஆகும். இருப்பினும், வருமானமானது 115A, 115AB, 115AC, 115ACA மற்றும் 115E ஆகிய பிரிவுகளின் கீழ் வரிக்கு உட்பட்டதாக இருந்தால், இந்த விதிவிலக்கு பொருந்தாது.
பொருந்தக்கூடிய விலக்களித்தல் 87A வருமான வரிச் சட்டம், 1961-ன் : இந்தியாவில் தனிநபர்கள், வரி முறைகளைப் பொறுத்து, வருமான வரியின் மீது 100% வரை வரித் தள்ளுபடி பெறத் தகுதியுடையவர்கள். இதற்கான அதிகபட்ச வரம்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது:
|
வரி முறை |
தள்ளுபடி வரம்பு |
தள்ளுபடி நிபந்தனை |
|
புதிய வரி விதிப்பு முறை |
₹ 60,000 |
வரிக்குரிய வருமானம் ₹12,00,000-க்கு மிகாமல் இருக்க வேண்டும். |
|
பழைய வரி விதிப்பு முறை |
₹ 12,500 |
வருமானவரிக்குட்பட்ட வருமானம் ரூ. 5 லட்சத்தைத் தாண்டக்கூடாது |
குறிப்பு: இரு வரி முறைகளிலும், வருமான வரி தொகை மற்றும் பொருந்தினால் உபரி வரி தொகையின் மீது 4% ஆரோக்கியம் மற்றும் கல்விக்கான செஸ் வரி செலுத்தப்பட வேண்டும்.
பழைய வரி முறையின் கீழ் வருமானம் முறையே ₹ 50 லட்சம், ₹ 1 கோடி, ₹ 2 கோடி அல்லது ₹ 5 கோடிக்கு அதிகமாக இருக்கும்போதும், புதிய வரி முறையின் கீழ் வருமானம் முறையே ₹ 50 லட்சம், ₹ 1 கோடி, ₹ 2 கோடிக்கு அதிகமாக இருக்கும்போதும், கூடுதல் வரியிலிருந்து ஓரளவு நிவாரணம் கோரப்படலாம். அதன் விவரங்கள் பின்வருமாறு:
| நிகர வருமான வரம்பு | விளிம்புநிலை நிவாரணம் | |
|
மீறினால்(₹) |
மீறாதது(₹) |
|
|
50 லட்சம் |
1 கோடி |
இரு வரி முறைகளிலும், செலுத்த வேண்டிய வருமான வரி மற்றும் உபரி வரி ஆகியவற்றின் மொத்தத் தொகை, ₹50 இலட்சம் நிகர மொத்த வருமானத்திற்கு விதிக்கப்படும் வருமான வரியை விட, ₹50 இலட்சத்தை மீறும் வருமான அளவிற்கு மேல் அதிகமாக இருக்கக் கூடாது. |
|
1 கோடி |
2 கோடிகள் |
இரு வரி முறைகளிலும், செலுத்த வேண்டிய வருமான வரி மற்றும் உபரி வரி ஆகியவற்றின் மொத்தத் தொகை, ₹1 கோடி நிகர மொத்த வருமானத்திற்கு விதிக்கப்படும் வருமான வரியை விட, ₹1 கோடியை மீறும் வருமான அளவிற்கு மேல் அதிகமாக இருக்கக் கூடாது. |
|
2 கோடிகள் |
5 கோடிகள் |
இரு வரி முறைகளிலும், செலுத்த வேண்டிய வருமான வரி மற்றும் கூடுதல் வரி ஆகியவற்றின் மொத்தத் தொகை, ₹2 கோடி நிகர மொத்த வருமானத்திற்கு விதிக்கப்படும் வருமான வரியை விட, ₹2 கோடியை மீறும் வருமான அளவிற்கு மேல் அதிகமாக இருக்கக் கூடாது. |
|
5 கோடிகள் |
- |
பழைய வரி முறையின் கீழ், ₹5 கோடி மொத்த வருமானத்திற்கு விதிக்கப்படும் வருமான வரியை விட, ₹5 கோடியை மீறும் வருமான அளவிற்கு மேல், செலுத்த வேண்டிய வருமான வரி மற்றும் உபரி வரி ஆகியவற்றின் மொத்தத் தொகை அதிகமாக இருக்கக் கூடாது. |
வரிச் சலுகை பெறக்கூடிய முதலீடுகள் / செலுத்துதல்கள் / வருவாய்கள்
வருமான வரிச் சட்டம், 1961-இன் பிரிவு u/s 115BAC-இன் கீழ் புதிய வரி முறையைத் தேர்ந்தெடுக்கும் ஒரு வரி செலுத்துவோருக்குக் கிடைக்கும் வரிக்கழிவுகள்:
| 1. பிரிவு 24(b) – வீட்டுச் சொத்து வருமானத்தில், வீட்டுக் கடன் மீது செலுத்தப்பட்ட வட்டிக்கான பிடித்தம்: | |||
| சொத்தின் இயல்பு | கடனின் நோக்கம் | அனுமதிக்கத்தக்கது (அதிகபட்ச வரம்பு) | ITR -ஐ நிரப்புவதற்குத் தேவையான விவரங்கள் |
| வாடைக்கு விடுதல் | வீட்டைக் கட்டுமானம் அல்லது கொள்முதல் செய்தல் | எந்தவித வரம்புமின்றி உண்மையான மதிப்பு (ஆனால் 'வீட்டுச் சொத்து வருமானம்' எனும் தலைப்பின் கீழ் ஏற்படும் இழப்பை, அட்டவணை CYLA-வில் உள்ள வேறு எந்தத் தலைப்புகளுடனும் ஈடுசெய்ய முடியாது மற்றும் அடுத்தடுத்த ஆண்டுகளுக்குக் கொண்டு செல்லவும் முடியாது). |
|
| 2. வருமான வரிச் சட்டம், 1961 இன் அத்தியாயம் VI-A கீழ் குறிப்பிடப்பட்ட வரிப் பிடித்தங்கள் | |
| பிரிவு 80CCD (2) | |
| மத்திய அரசின் ஓய்வூதியத் திட்டத்திற்கு பணி வழங்குபவரால் அளிக்கப்பட்ட பங்களிப்பிற்கான வரிப் பிடித்தம் | |
| “மத்திய அரசு” அல்லது “மாநில அரசு” அல்லது “PSU” அல்லது “மற்றவை” | சம்பளத்தில் 14% வரையிலான வரிவிலக்கு வரம்பு |
| பிரிவு 80CCH | |
| அக்னிபத் திட்டத்தில் செய்யப்படும் பங்களிப்பிற்கான வரிப்பிடித்தம் | |
| அக்னிபத் திட்டத்தில் பதிவு செய்யப்பட்ட தனிநபர் வரி செலுத்துநர் ஒருவர், 2022 நவம்பர் 1ஆம் தேதி அல்லது அதற்குப் பிறகு அக்னிவீர் சட்டத்தொகுதி நிதியில் பங்களிப்புச் செய்து, முந்தைய ஆண்டில் அந்த நிதிக் கணக்கில் எந்தவொரு தொகையையும் செலுத்தியிருந்தால் அல்லது வைப்பு செய்திருந்தால். | மொத்த வருமானத்தைக் கணக்கிடும் போது, அவ்வாறு செலுத்தப்பட்ட அல்லது வைப்புத் தொகை செய்யப்பட்ட முழுத் தொகைக்கும் வரிப்பிடித்தம் அனுமதிக்கப்படும் |
| மத்திய அரசு, அக்னிவீர் சட்டத்தொகுதி நிதியில் வரி செலுத்துபவரின் கணக்கிற்கு ஏதேனும் ஒரு பங்களிப்பைச் செலுத்தினால் | மத்திய அரசு, அக்னிவீர் சட்டத்தொகுதி நிதியில் உள்ள ஒரு வரி செலுத்துபவரின் கணக்கில் ஏதேனும் பங்களிப்பைச் செய்யும் பட்சத்தில். |
1. பிரிவு 24(b) – வீட்டு சொத்திலிருந்து பெறும் வருமானத்தில், வீட்டுக் கடன் & வட்டியும் வீட்டு மேம்பாட்டு கடன் வட்டியும் பிடித்தமாக அனுமதிக்கப்படும். சுயமாக வசிக்கும் சொத்தின் நிலையில், வீட்டுக் கடன் மீது செலுத்தப்படும் வட்டிக்கான அதிகபட்ச பிடித்த வரம்பு ₹2 இலட்சம் ஆகும். பிரிவு 24(b) கீழ் அனுமதிக்கப்படும் கடன் வட்டி கீழே அட்டவணைப்படுத்தப்பட்டுள்ளது.
|
சொத்தின் இயல்பு |
கடன் பெறப்பட்டபோது |
கடனின் நோக்கம் |
அனுமதிக்கப்பட்ட (அதிகபட்ச வரம்பு) |
தேவையான விவரங்கள் |
|
சொந்தப் பயன்பாட்டில் |
01/04/1999 அன்றோ அல்லது அதற்குப் பிறகோ |
வீட்டைக் கட்டுமானம் அல்லது கொள்முதல் செய்தல் |
₹ 2,00,000 |
|
|
01/04/1999 அன்றோ அல்லது அதற்குப் பிறகோ |
வீட்டுச் சொத்தைப் புதுப்பித்தல் பணிகளுக்காக |
₹ 30,000 |
||
|
01/04/1999-க்கு முன்பு |
வீட்டைக் கட்டுமானம் அல்லது கொள்முதல் செய்தல் |
₹ 30,000 |
||
|
01/04/1999-க்கு முன்பு |
வீட்டுச் சொத்தைப் புதுப்பித்தல் பணிகளுக்காக |
₹ 30,000 |
||
|
வாடகைக்கு விடுதல் |
எந்த நேரத்திலும் |
வீட்டைக் கட்டுமானம் அல்லது கொள்முதல் செய்தல் |
எந்தவித வரம்பும் இன்றி உண்மையான மதிப்பு |
வருமான வரிச் சட்டம், 1961 இன் அத்தியாயம் VI-A கீழ் குறிப்பிடப்பட்ட பிடித்தங்கள்
| பிரிவு 80C, 80CCC, 80CCD (1) | ||
| செலுத்திய கட்டணங்களுக்கான பிடித்தத்தொகை | ||
| 80C |
|
₹ 1,50,000 வரையிலான ஒருங்கிணைந்த பிடித்தம் ஒவ்வொரு தகுதியான செலுத்துதலுக்கும் ITR-இல் நிரப்ப வேண்டிய விவரங்கள்:
|
| 80CCC | LIC அல்லது இதர காப்பீட்டு நிறுவனங்களின் ஓய்வூதியத்திற்கான ஆண்டுத்தொகை திட்டம் | |
| 80CCD(1) | மத்திய அரசின் ஓய்வூதியத் திட்டம் | |
| பிரிவு 80CCD(1B) | |
|
(1) பிரிவு 80CCD(1)-ன் கீழ் கோரப்பட்ட வரி விலக்கினைத் தவிர்த்து, மத்திய அரசின் ஓய்வூதியத் திட்டத்திற்குச் செலுத்தப்பட்ட தொகைகளுக்கான பிடித்தம்
(2) இந்த உபவிதியின் கீழ், குறிப்பிடப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தில் ஒரு மைனரின் கணக்கில் எந்தவொரு செலுத்தல் அல்லது வைப்பு செய்யப்பட்டாலும், அந்த மைனரின் பெற்றோர் அல்லது பாதுகாவலராக உள்ள வரி செலுத்துநருக்கும் இந்தப் பிடித்தம் அனுமதிக்கப்படும். |
₹ 50,000 வரையிலான வரிவிலக்கு வரம்பு |
குறிப்பு:
a. பிரிவு 80C-ன் கீழ் பிடித்தம் கோரும் வரி செலுத்துபவர்கள், கீழே கொடுக்கப்பட்டுள்ள விவரங்களை வழங்க வேண்டும்:
- பிடித்தம் பெறத் தகுதியான தொகை
- பாலிசி எண் அல்லது ஆவண அடையாள எண்
b. பிரிவு 80CCC, 80CCD (1), 80CCD (1B)-இன் கீழ் பிடித்தம் கோரும் வரி செலுத்துபவர்கள் கீழே உள்ள விவரங்களை வழங்க வேண்டும்:
- அடையாள ஆவணத்தின் வகை
- அடையாள ஆவணத்தின் பெயர்.
- அளவு
| பிரிவு 80CCD(2) | |
| மத்திய அரசின் ஓய்வூதியத் திட்டத்திற்கு வேலை வழங்குபவரால் அளிக்கப்பட்ட பங்களிப்பிற்கான பிடித்தம் | |
| பணி வழங்குபவர் பொதுத்துறை நிறுவனம் (PSU) அல்லது பிற நிறுவனமாக இருந்தால் | ஊதியத்தில் 10% வரையிலான வரி பிடித்தம் செய்தல் |
| பணி வழங்குபவர் மத்திய அல்லது மாநில அரசாக இருந்தால் | ஊதியத்தில் 14% வரையிலான வரி பிடித்தம் செய்தல் |
| பிரிவு 80CCH | |
| அக்னிபத் திட்டத்தில் செய்யப்படும் பங்களிப்பிற்கான வரிப்பிடித்தம் | |
| ஒரு தனிநபர், அக்னிபத் திட்டத்தில் சேர்ந்து, 2022-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 1-ஆம் தேதி அன்றோ அல்லது அதற்குப் பின்னரோ 'அக்னிவீர் சட்டத்தொகுதி நிதியில் சந்தா செலுத்துபவராக இருக்கும் பட்சத்தில், அவர் முந்தைய நிதியாண்டில் அந்த நிதியில் உள்ள தனது கணக்கில் ஏதேனும் ஒரு தொகையைச் செலுத்தியிருந்தால் அல்லது முதலீடு செய்திருந்தால். | மொத்த வருமானக் கணக்கீட்டில், இவ்வாறு செலுத்தப்பட்ட அல்லது வைப்பு செய்யப்பட்ட முழுத் தொகையும் பிடித்தம் செய்ய அனுமதிக்கப்படும். |
| மத்திய அரசு, அக்னிவீர் சட்டத்தொகுதி நிதியில் உள்ள ஒரு வரி செலுத்துபவரின் கணக்கில் ஏதேனும் பங்களிப்பைச் செய்யும் பட்சத்தில். | மொத்த வருமானத்தைக் கணக்கிடும் போது, அவ்வாறு செலுத்தப்பட்ட அல்லது வைப்புத் தொகை வைக்கப்பட்ட முழுத் தொகைக்கும் பிடித்தம் அனுமதிக்கப்படும் |
| பிரிவு 80D | |
| சுகாதாரக் காப்பீட்டு பிரீமியம் மற்றும் தடுப்புச் சுகாதாரப் பரிசோதனைக்காகச் செய்யப்பட்ட செலுத்தல்களுக்கான வரி பிடித்தம் | |
| தனக்கு / கணவன் அல்லது மனைவிக்கு அல்லது சார்ந்திருக்கும் குழந்தைகளுக்கு | ₹ 25,000 (யாரேனும் ஒருவர் மூத்த குடிமகனாக இருந்தால் ₹ 50,000) |
| மேற்கண்ட வரம்பிற்குள் உள்ளடங்கிய, நோய் தடுப்பு ஆரோக்கிய பரிசோதனைக்கானது ₹ 5,000 | |
| பெற்றோருக்கு | ₹ 25,000 (யாரேனும் ஒருவர் மூத்த குடிமகனாக இருந்தால் ₹ 50,000) |
| மேற்கண்ட வரம்பிற்குள் உள்ளடங்கிய, நோய் தடுப்பு ஆரோக்கிய பரிசோதனைக்கானது ₹ 5,000 | |
| மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்திற்கு பிரீமியம் ஏதும் செலுத்தப்படாத பட்சத்தில், ஒரு மூத்த குடிமகனுக்கு ஏற்பட்ட மருத்துவச் செலவுகளுக்காக வழங்கப்படும் வரித் தள்ளுபடி. | |
| சுய / வாழ்க்கைத் துணைக்கு அல்லது சார்ந்து இருக்கும் குழந்தைகளுக்கு | ₹ 50,000 வரையிலான வரிவிலக்கு வரம்பு |
| பெற்றோருக்கு | ₹ 50,000 வரையிலான வரிவிலக்கு வரம்பு |
குறிப்பு:
பிரிவு 80D-ன் கீழ் வரித் தள்ளுபடி கோரும் வரி செலுத்துவோர், கீழே குறிப்பிட்டுள்ளவாறு விவரங்களை வழங்க வேண்டும்:
- காப்பீட்டாளரின் பெயர் (காப்பீட்டு நிறுவனம்)
- பாலிசி எண்
- மருத்துவக் காப்பீட்டுத் தொகை
| பிரிவு 80DD | |
| மாற்றுத்திறனாளியைச் சார்ந்திருப்பவரின் பராமரிப்பு அல்லது மருத்துவச் சிகிச்சைக்காக செலுத்தப்பட்ட தொகைகள் அல்லது தொடர்புடைய அங்கீகரிக்கப்பட்ட திட்டத்தின் கீழ் செலுத்தப்பட்ட / வைப்புத் தொகைக்கான பிடித்தம். | மாற்றுத்திறனாளி ஒருவருக்கு, அவர் செய்த செலவுகளைப் பொருட்படுத்தாமல் கிடைக்கும் ₹ 75,000 நிலையான வரிவிலக்கு . |
| கடுமையான மாற்றுத்திறன் (80% அல்லது அதற்கு மேல்) உள்ள ஒருவருக்கு, இந்த வரிவிலக்கு ₹1,25,000 ஆகும். |
|
குறிப்பு:
பிரிவு 80DD-இன் கீழ் வரிப் பிடித்தம் கோருவதற்கு, ITR-இல் கீழே உள்ள விவரங்களை வழங்க வேண்டும்:
- இயலாமையின் தன்மை
- இயலாமையின் வகை
- பிடித்தம் செய்யும் தொகை
- சார்ந்திருப்பவரின் வகை
- சார்ந்திருப்பவரின் பான் (PAN)
- சார்புடையவரின் ஆதார் எண்
- ஆட்டிசம், பெருமூளை வாதம் அல்லது பலவகை மாற்றுத்திறன்கள் உள்ளவர்களின் நிலையில் தாக்கல் செய்யப்பட்ட Form 10-IA-வின் ஒப்புகை எண்.
- UDID எண் (இருந்தால்)
| பிரிவு 80DDB | |
| குறிப்பிட்ட நோய்களுக்கான மருத்துவச் சிகிச்சைக்காக, தனக்கோ அல்லது தங்களைச் சார்ந்திருப்பவர்களுக்கோ செய்யப்பட்ட செலவுகளுக்கான வரிப் பிடித்தம் | ₹ 40,000 வரையிலான வரிவிலக்கு வரம்பு (மூத்த குடிமகனாக இருந்தால் ₹ 1,00,000) |
தயவு செய்து கவனிக்கவும்: பிரிவு 80DDB-ன் கீழ் பிடித்தம் செய்வதைக் கோருவதற்கு, ITR-இல் பின்வரும் விவரங்கள் வழங்கப்பட வேண்டும்:
- பயனாளர் வகை
- குறிப்பிட்ட நோயின் பெயர்
- அளவு
| பிரிவு 80E | |
| தனக்கோ அல்லது தன் உறவினர்களுக்கோ உயர்கல்விக்காகப் பெறப்பட்ட கடனின் வட்டிச் செலுத்துதலுக்கான வரிப்பிடித்தம் | பெறப்பட்ட கடனுக்காகச் செலுத்தப்பட்ட நிகர மொத்த வட்டித் தொகை |
குறிப்பு:
பிரிவு 80E-ன் கீழ் வரி விலக்கு கோருவதற்கு,ITR-இல் வழங்கப்பட வேண்டிய விவரங்கள்:
- வங்கி அல்லது நிதி நிறுவனத்திடமிருந்து பெறப்பட்ட கடன்
- கடன் பெறப்பட்ட நிறுவனம் / வங்கியின் பெயர்.
- வங்கியின் கடன் கணக்கு எண்.
- கடன் ஒப்புதல் அளிக்கப்பட்ட தேதி
- மொத்தக் கடன் தொகை
- நிதி ஆண்டின் கடைசி நாளில் நிலுவையில் உள்ள கடன் தொகை
- பிரிவு 80E-இன் கீழ் வட்டி
| பிரிவு 80EE | |
| 01.04.2016 முதல் 31.03.2017 வரை அனுமதிக்கப்பட்ட கடனைப் பயன்படுத்தி குடியிருப்பு வீட்டுச் சொத்து வாங்கியதற்காக செலுத்தப்பட்ட வட்டித் தொகைக்கான பிடித்தம். | எடுக்கப்பட்ட கடனுக்காகச் செலுத்தப்பட்ட வட்டியின் மீது ₹ 50,000 வரையிலான வரிவிலக்கு வரம்பு |
குறிப்பு:
பிரிவு 80EE-ன் கீழ் பிடித்தத்தைக் கோருவதற்கு, வருமான வரிக் கணக்கில் (ITR) பின்வரும் விவரங்கள் வழங்கப்பட வேண்டும்:.
- வங்கி அல்லது நிதி நிறுவனத்திடமிருந்து பெறப்பட்ட கடன்
- கடன் பெறப்பட்ட வங்கி / நிறுவனத்தின் பெயர்.
- வங்கி / நிதி நிறுவனத்தின் கடன் கணக்கு எண்
- கடன் ஒப்புதல் அளிக்கப்பட்ட தேதி
- நிகர மொத்தக் கடன் தொகை
- நிதி ஆண்டின் கடைசி நாளில் நிலுவையில் உள்ள கடன் தொகை
- வட்டி 80EE பிரிவின் கீழ்
| பிரிவு 80EEA | |
| 01.04.2019 முதல் 31.03.2022 வரை அனுமதிக்கப்பட்ட கடனைப் பயன்படுத்தி முதன்முறையாக குடியிருப்பு வீட்டுச் சொத்தை வாங்குவதற்காக பெறப்பட்ட கடனின் மீது செலுத்தப்பட்ட வட்டிக்கான பிடித்தம். இப்பிடித்தம் தனிநபர்களுக்கு மட்டுமே கிடைக்கும்; மேலும், பிரிவு 80EE-ன் கீழ் ஏற்கனவே பிடித்தம் கோரப்பட்டிருக்கக் கூடாது. | எடுக்கப்பட்ட கடனுக்காகச் செலுத்தப்பட்ட வட்டியின் மீது ₹ 1,50,000 வரையிலான வரிவிலக்குவரம்பு |
குறிப்பு:
பிரிவு 80EEA-ன் கீழ் வரி பிடித்தம் கோருவதற்கு, ITR-இல் வழங்கப்பட வேண்டிய விவரங்கள்:
- வங்கி அல்லது நிதி நிறுவனத்திடமிருந்து பெறப்பட்ட கடன்
- கடன் பெறப்பட்ட வங்கி / நிதி நிறுவனத்தின் பெயர்
- வங்கி / நிதி நிறுவனத்தின் கடன் கணக்கு எண்
- கடன் ஒப்புதல் அளிக்கப்பட்ட தேதி
- நிகர மொத்தக் கடன் தொகை
- நிதி ஆண்டின் கடைசி நாளில் நிலுவையில் உள்ள கடன் தொகை
- வட்டி பிரிவின் கீழ் 80EE
பிரிவு 80EEA-இன் கீழ் பிடித்தம் கோருவது, பிரிவு 24(b)-இன் கீழ் அனுமதிக்கப்பட்ட வரம்பு முழுமையாக பயன்படுத்தப்பட்டிருந்தால் மட்டுமே சாத்தியம் என்பதை கவனத்தில் கொள்ளவும். மேலும், கடன் அனுமதிக்கப்பட்ட தேதி மற்றும் பிற தகுதிநிபந்தனைகளின் அடிப்படையில், வரி செலுத்துவோர் பிரிவு 80EE அல்லது 80EEA ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றின் கீழ் மட்டுமே பிடித்தம் கோர முடியும்
| பிரிவு 80EEB | |
| 01.04.2019 முதல் 31.03.2023 வரை அனுமதிக்கப்பட்ட கடனைப் பயன்படுத்தி மின்சார வாகனம் வாங்குவதற்காக பெறப்பட்ட கடனின் மீது செலுத்தப்பட்ட வட்டித் தொகைக்கான பிடித்தம். | பிடித்தம் அளவு ₹ 1,50,000 பெறப்பட்ட கடனுக்காக செலுத்தப்பட்ட வட்டித் தொகையின் மீது. |
குறிப்பு:
பிரிவு 80EEB கீழ் பிடித்தம் கோருவதற்காக, கீழே குறிப்பிடப்பட்டுள்ள விவரங்களை வருமான வரி அறிக்கையில் (ITR) வழங்க வேண்டும்.
- கடன் பெற்ற வங்கி / நிதி நிறுவனத்தின் பெயர்
- வங்கி / நிறுவனத்தின் கடன் கணக்கு எண்
- கடன் ஒப்புதலளிக்கப்பட்ட தேதி
- நிகர மொத்தக் கடன் தொகை
- நிதியாண்டின் இறுதி நாளின்படி நிலuவையில் உள்ள கடன் தொகை
- வாகனப் பதிவு எண்
- வட்டி 80EEB பிரிவின் கீழ்
| பிரிவு 80G | |
|
குறிப்பிடப்பட்ட நிதிகள், அறக்கட்டளைகள் மற்றும் பிற தொண்டு நிறுவனங்களுக்கு வழங்கப்படும் மானிய உதவிக்கான வரிப் பிடித்தம் செய்தல் போன்றவை. மானிய உதவி பின்வரும் பிரிவுகளின் கீழ் வரி பிடித்தம் செய்வதற்குத் தகுதியானவை |
|
| எந்தவித வரம்பும் இன்றி | 100% வரி பிடித்தம் செய்தல் |
| 50% வரிப் பிடித்தம் செய்தல் | |
| தகுதி வரம்பிற்கு உட்பட்டது | 100% வரி பிடித்தம் செய்தல் |
| 50% வரிப் பிடித்தம் செய்தல் | |
| குறிப்பு:இந்தப் பிரிவின் கீழ், ₹ 2000/-க்கு மேல் ரொக்கமாகச் செய்யப்படும் மானியங்களுக்கு எந்தவித வரி பிடித்தமும் அனுமதிக்கப்படமாட்டாது | |
| பிரிவு 80GG | ||
|
வீட்டு வாடகைக்கான பிடித்தம் செய்தல் (சுயதொழில் செய்பவர்களுக்கு அல்லது ஊதியத்தில் வீட்டு வாடகைப்படி (HRA) பெறாதவர்களுக்கு மட்டும் பொருந்தும்) பின்வருவனவற்றுள் எது குறைவோ, அதுவே பிடித்தம் செய்ய அனுமதிக்கப்படும். |
||
| இந்தப் பிடித்தம் வழங்குவதற்கு முன் கணக்கிடப்பட்ட நிகர மொத்த வருமானத்தின் 10% தொகையைக் கழித்த பின் செலுத்தப்பட்ட வாடகை. | மாதத்திற்கு ₹ 5,000 | நிகர மொத்த வருமானத்தில் 25% (நீண்ட கால மூலதன ஆதாயங்கள், பிரிவு 111A-இன் கீழான குறுகிய கால மூலதன ஆதாயங்கள் அல்லது பிரிவு 115A அல்லது 115D-இன் கீழான வருமானம் ஆகியவற்றைத் தவிர்த்து) |
| குறிப்பு: பிரிவு 80GG-ன் கீழ் வரிப் பிடித்தம் செய்வதற்கு, படிவம் 10BA-வைச் சமர்ப்பிப்பது கட்டாயமாகும். மேலும், வருமானவரி அறிக்கை தாக்கல் செய்யும்போது,படிவம 80GG அட்டவணையில் இந்த 10BA படிவத்தின் ஒப்புகை எண்ணைப் பதிவு செய்ய வேண்டும். | ||
| பிரிவு 80GGA |
|
அறிவியல் ஆய்வு அல்லது கிராமப்புற வளர்ச்சிக்காக வழங்கப்பட்ட மானிய உதவிக்கான பிடித்தம். பின்வரும் வகைகளின் கீழ் வழங்கப்பட்ட மானியங்கள் பிடித்தத்திற்குத் தகுதியானவை: |
|
பின்வரும் நோக்கங்களுக்கான ஆராய்ச்சி சங்கம் அல்லது பல்கலைக்கழகம், கல்லூரி அல்லது பிற நிறுவனம்:
|
|
கூட்டமைப்பு அல்லது நிறுவனத்திற்காக
|
| ஏதேனும் தகுதியுடைய திட்டத்தை செயல்படுத்துவதற்காக தேசியக் குழுவால் அங்கீகரிக்கப்பட்ட பொதுத்துறை நிறுவனம் (PSU) அல்லது உள்ளூர் நிர்வாக அமைப்பு அல்லது சங்கம் அல்லது நிறுவனம். |
|
மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட நிதிகள்
|
| மத்திய அரசால் அமைக்கப்பட்டு அறிவிக்கப்பட்ட தேசிய நகர்ப்புற வறுமை ஒழிப்பு நிதி |
| குறிப்பு: ₹ 2,000/- ஐ மீறும் ரொக்க நன்கொடைகளுக்கு இந்தப் பிரிவின் கீழ் எந்தப் பிடித்தமும் அனுமதிக்கப்படாது. மேலும், நிகர மொத்த வருமானத்தில் வணிகம்/தொழிலிலிருந்து கிடைக்கும் லாபம் அல்லது வருமானம் அடங்கியிருந்தாலோ, அல்லது பங்குதாரர் கூட்டாண்மை நிறுவனத்திலிருந்து ஊதியம் அல்லது மூலதனத்தின் மீதான வட்டி பெற்றாலோ, இந்தப் பிரிவின் கீழ் பிடித்தம் அனுமதிக்கப்படாது. |
| பிரிவு 80GGC | |
| அரசியல் கட்சி அல்லது தேர்தல் அறக்கட்டளைகளுக்கு வழங்கப்படும் மானிய உதவிக்கான வரி விலக்கு. |
அரசியல் கட்சி அல்லது தேர்தல் அறக்கட்டளைக்கு அளிக்கப்படும் பங்களிப்புகளுக்கான பிடித்தம்
ஒருவேளை மானியங்கள் ரொக்கமாக அளிக்கப்பட்டிருக்குமானால் பிடித்தம் செய்ய அனுமதிக்கப்படமாட்டாது
|
| பிரிவு 80IA | |
| பிரிவு 80-IA(4)(iv)-இல் குறிப்பிடப்பட்டுள்ள தொழில் நிறுவனத்தின் இலாபம் தொடர்பான பிடித்தம் | மதிப்பீட்டுத் துறையினர் உள்கட்டமைப்பு வசதியை உருவாக்கிய / இயக்கிப் பராமரிக்கத் தொடங்கும் மதிப்பீட்டு ஆண்டிலிருந்து (AY), 15 மதிப்பீட்டு ஆண்டுகள் கால அளவிற்குள் வரும், தொடர்ந்து வரும் 10 மதிப்பீட்டு ஆண்டுகளுக்கு, இலாபத்தில் 100% பிடித்தம் அனுமதிக்கப்படும் |
| ஏப்ரல் 1, 2017 அல்லது அதற்குப் பிறகு உள்கட்டமைப்பு வசதியை உருவாக்குதல் அல்லது இயக்கிப் பராமரிக்கும் பணிகளைத் தொடங்கும் எந்தவொரு நிறுவனத்திற்கும், இந்தச் சலுகையின் கீழ் பிடித்தம் அனுமதிக்கப்படமாட்டாது. (குறிப்பிட்ட வணிகங்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட தேதிகளுக்குப் பிறகு மேம்பாடு, செயல்பாடு போன்றவை தொடங்கப்பட்டால், எந்தவொரு பிடித்தமும் அனுமதிக்கப்படமாட்டாது) | |
| 80IB |
|
உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிறுவனங்களைத் தவிர, குறிப்பிடப்பட்ட தொழில்துறை நிறுவனங்களிலிருந்து பெறப்படும் இலாபம் மற்றும் ஆதாயங்களுக்கான பிடித்தம்: இந்தப் பிரிவின் கீழ் உள்ள பிடித்தம், பின்வரும் தொழில்களில் இருந்து பெறப்பட்ட இலாபங்கள் மற்றும் ஆதாயங்களை உள்ளடக்கிய நிகர மொத்த வருமானம் கொண்ட ஒரு மதிப்பீட்டுத் துறையினருக்கு மட்டுமே கிடைக்கும்: |
|
|
|
|
| (சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு) |
| 80IE | |
|
வடகிழக்கு மாநிலங்களில் நிறுவப்பட்ட குறிப்பிட்ட தொழில் நிறுவனங்களுக்கான பிடித்தம். (குறிப்பிட்ட நிபந்தனைகளுக்கு உட்பட்டு) |
|
| 80JJA | |
| மக்கும் கழிவுகளைச் சேகரித்தல் மற்றும் பதப்படுத்துதல் தொழிலிலிருந்து பெறப்படும் இலாபங்கள் மற்றும் ஆதாயங்கள் மீதான பிடித்தம் (சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு) |
உயிர் சிதைவடையக்கூடிய கழிவுகளைச் சேகரித்தல், பதப்படுத்துதல் மற்றும் சுத்திகரிப்பு செய்தல் போன்ற செயல்பாடுகளிலிருந்து கிடைக்கும் லாபத்தில், தொடர்ந்து வரும் 5 மதிப்பீட்டு ஆண்டுகளுக்கு (AYs) 100% வரி பிடித்தம் செய்தல் |
| 80JJAA | |
|
புதிய தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்துவது தொடர்பான பிடித்தம்/பணியாளர்கள் (பிரிவு 44AB பொருந்தக்கூடிய மதிப்பீட்டுத் துறையினருக்கு மட்டும்) (குறிப்பிட்ட நிபந்தனைகளுக்கு உட்பட்டு) |
குறிப்பிட்ட நிபந்தனைகளுக்கு உட்பட்டு, தொடர்ந்து வரும் 3 மதிப்பீட்டு ஆண்டுகளுக்கு (AY), கூடுதல் பணியாளர் செலவில் 30% வரி பிடித்தம் செய்தல். |
| 80QQB | |
| பாடப்புத்தகங்கள் தவிர்த்து, குறிப்பிட்ட பிற புத்தகங்களை எழுதிய உள்நாட்டு ஆசிரியர்களுக்கான பிடித்தம் | ஒரு நூலாசிரியர் / இணையாசிரியர் ஈட்டிய உரிமைத்தொகை வருமானம் - அதிகபட்சம் ₹ 3 இலட்சம் வரை (பிற நிபந்தனைகளுக்கு உட்பட்டு) |
குறிப்பு:இங்குக் கோரப்படும் கழிவை, வருமான வரிச் சட்டத்தின் வேறெந்தப் பிரிவின் கீழும் கோர முடியாது.
| 80RRB | |
| காப்புரிமைகள் மீதான உரிமைத்தொகை தொடர்பாக இந்தியாவில் குடியிருக்கும் தனிநபர்களுக்கான பிடித்தம் | காப்புரிமைச் சட்டம், 1970-ன் கீழ் முதல் கண்டுபிடிப்பாளர் / கூட்டு உரிமையாளர், உரிமைத்தொகை மூலம் ஈட்டும் வருமானம் - உரிமைத்தொகை அல்லது ₹ 3 இலட்சம் (இவ்விரண்டில் எது குறைவோ அது வரை) |
குறிப்பு: இங்குக் கோரப்படும் பிடித்தம், வருமான வரிச் சட்டத்தின் வேறெந்தப் பிரிவின் கீழும் கோர முடியாது.
| பிரிவு 80TTA | |
| மூத்த குடிமக்கள் அல்லாதவர்கள் சேமிப்பு வங்கிக் கணக்குகளில் பெறும் வட்டிக்கான பிடித்தம். | ₹ 10,000- வரையிலான வரிவிலக்கு |
| பிரிவு 80TTB | |
| குடியுரிமை பெற்ற மூத்த குடிமக்கள் வைப்புத் தொகைகளில் பெறும் வட்டிக்கான பிடித்தம். | ₹ 50,000- வரையிலான வரிவிலக்கு |
| பிரிவு 80U | |
| மாற்றுத் திறனாளியான குடியுரிமை பெற்ற தனிநபர் வரி செலுத்துநருக்கான பிடித்தங்கள். |
மாற்றுத்திறனாளி ஒருவருக்கு, அவர் செய்த செலவுகளைப் பொருட்படுத்தாமல் கிடைக்கும் நிலையான ₹ 75,000 வரிவிலக்கு கடுமையான மாற்றுத்திறன் (80% அல்லது அதற்கு மேல்) உள்ள ஒருவருக்கு, அவர் செய்த செலவுகளைப் பொருட்படுத்தாமல் கிடைக்கும் நிலையான ₹ 1,25,000 வரிவிலக்கு |
குறிப்பு:
பிரிவு 80DD அல்லது 80U-ன் கீழ் கழிவு கோரும் வரி செலுத்துவோர்,ITR-இல் பின்வரும் விவரங்களை வழங்க வேண்டும்:
- இயலாமையின் தன்மை
- இயலாமையின் வகை
- பிடித்தத் தொகை
- சார்ந்திருப்பவரின் பான் (PAN)
- சார்ந்திருப்பவரின் ஆதார் (Aadhaar)
- படிவம் 10 IA தாக்கல் செய்ததற்கான ஒப்புகை எண்