1. கண்ணோட்டம்
மின்னணு-தாக்கல் முகப்பில் பதிவுசெய்யப்பட்ட பயனருக்கு மின்னணு-தாக்கல் முகப்பையும் முகப்புக்குள் வழங்கப்பட்ட அனைத்து சேவைகளையும் அணுக உள்நுழைவு சேவையானது உதவுகிறது. மின்னணு-தாக்கல் முகப்பில் உள்நுழைய பல்வேறு முறைகள் உள்ளன. உள்ளிட வேண்டிய சான்றுகளுடன் அனைத்து உள்நுழைவு முறைகளும் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன:
|
குறிப்பு: மின்னணு-தாக்கல் பெட்டக உயர் பாதுகாப்பு விருப்பத் தேர்வுகள் உள்நுழைவு மற்றும் கடவுச்சொல்லை மாற்றியமைப்பதற்கான பல காரணி அங்கீகாரத்தை வழங்குகின்றன. உயர் பாதுகாப்பு விருப்பங்கள் தேர்ந்தெடுக்கப்படும்போது உள்நுழைவதற்கான செயல்முறையும் இந்த பயனர் கையேட்டில் வழங்கப்பட்டுள்ளது.
புதிய மின்னணு-தாக்கல் இணைய முகப்பு இரண்டு காரணி அங்கீகாரத்தை கட்டாயப்படுத்துகிறது, அதாவது பயனர் பெயர் மற்றும் கடவுச்சொல் தவிர, மின்னணு-தாக்கல் முகப்பில் பதிவு செய்யப்பட்ட முதன்மை அலைபேசி எண்/மின்னஞ்சல் ID அல்லது ஆதாருடன் இணைக்கப்பட்ட அலைபேசி ஆகியவற்றில் பெறப்பட்ட OTP மூலம் மற்றொரு அங்கீகாரம் உள்ளிடப்பட வேண்டும். அத்தகைய அலைப்பேசி எண்/மின்னஞ்சலுக்கான அணுகல் இல்லாத வரி செலுத்துவோருக்கு, எந்தத் தொந்தரவும் ஏற்படாமல் இருக்க, ஆரம்ப காலத்தில் இரண்டு காரணி அங்கீகாரம் முடக்கப்படும். இந்த காலகட்டத்தில், வரி செலுத்துவோர் தங்கள் தனிப்பட்ட அலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரியை தங்கள் சுயவிவரத்தில் முதன்மை அலைபேசி / மின்னஞ்சலாக புதுப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள், இது இரண்டு காரணி அங்கீகாரம் இயக்கப்பட்டவுடன், சுலபமான உள்நுழைவை உறுதி செய்கிறது.
2. இந்தச் சேவையைப் பெறுவதற்கான முன்நிபந்தனைகள்
- பொதுவான முன்தேவைகள்
- மின்னணு-தாக்கல் முகப்பில் பதிவு செய்யப்பட்ட பயனர்
- மின்னணு-தாக்கல் முகப்பில் செல்லுபடியாகும் பயனர் ID மற்றும் கடவுச்சொல்.
- இணைய வங்கியைப் பயன்படுத்துதல்
- இணைய வங்கி (தனிப்பட்ட பயனர்கள் மட்டும்) மூலம் உள்நுழைய உங்கள் PAN எண்ணை உங்கள் வங்கிக் கணக்குடன் இணைத்திருக்க வேண்டும் மற்றும் நீங்கள் மின்னணு-தாக்கல் இணைய முகப்பில் பதிவு செய்திருக்க வேண்டும்.
- DSC ஐ)பயன்படுத்துதல்
- செல்லுபடியாகும் மற்றும் செயலில் உள்ள DSC மற்றும் மின்னணு-தாக்கல் இணைய முகப்பில் DSC பதிவு செய்யப்பட வேண்டும்.
- நீங்கள் எம்சைனரை நிறுவியிருக்க வேண்டும், அது கணினியில் இயங்க வேண்டும்..
- கணினியில் DSC USB டோக்கன் செருகப்பட்டிருக்க வேண்டும்.
- இந்தியாவின் சான்றளிக்கும் அதிகார வழங்குநரிடமிருந்து பெறப்பட்ட DSC .
- DSC USB டோக்கன் வகை 2 அல்லது வகை 3 சான்றளிக்கப்பட்டதாக இருக்க வேண்டும்.
3. படிப்படியான வழிகாட்டி
தேவையான உள்நுழைவு முறைக்கு கீழே உள்ள அட்டவணையைப் பார்க்கவும்:
| மின்னணு-தாக்கல் கடவுச்சொல்லைப் பயன்படுத்தி உள்நுழைய | பிரிவு 3.1 ஐ பார்க்கவும் |
| ஆதார் OTP ஐ பயன்படுத்தி உள்நுழைய (மின்னணு-தாக்கல் பெட்டக உயர் பாதுகாப்பு விருப்பத்தேர்வு செயலாக்கப்பட்டிருக்கும் நிலை உட்பட) | பிரிவு 3.2 ஐ பார்க்கவும் |
| இணைய வங்கியைப் பயன்படுத்தி உள்நுழைய (மின்னணு-தாக்கல் பெட்டக உயர் பாதுகாப்பு விருப்பத்தேர்வு செயலாக்கப்பட்டிருக்கும் நிலை உட்பட) | பிரிவு 3.3 ஐ பார்க்கவும் |
| வங்கிக் கணக்கு / டீமேட் கணக்கு EVC ஐ பயன்படுத்தி உள்நுழைய (மின்னணு-தாக்கல் பெட்டக உயர் பாதுகாப்பு விருப்பத்தேர்வு செயலாக்கப்பட்டிருக்கும் நிலையில்) | பிரிவு 3.4 ஐ பார்க்கவும் |
| DSC ஐ பயன்படுத்தி உள்நுழைய (மின்னணு-தாக்கல் பெட்டக உயர் பாதுகாப்பு விருப்பத்தேர்வு செயலாக்கப்பட்டிருக்கும் நிலையில்) | பிரிவு 3.5 ஐ பார்க்கவும் |
| வரி செலுத்துவோர் அல்லாத பிறர் உள்நுழைய (CA, ERI, வெளிப்புற நிறுவனம், TAN பயனர்கள், ITDREIN பயனர்கள்) | பிரிவு 3.6 ஐ பார்க்கவும் |
3.1 மின்னணு-தாக்கல் கடவுச்சொல்லைப் பயன்படுத்தி உள்நுழையவும்
படி 1: மின்னணு-தாக்கல் முகப்புப் பக்கத்திற்குச் சென்று உள்நுழை என்பதைக் கிளிக் செய்யவும்.
படி 2: உங்கள் பயனர் ID ஐ உள்ளிடும் உரைப்பெட்டியில் உங்கள் PAN ஐ உள்ளிட்டு தொடரவும் என்பதைக் கிளிக் செய்யவும்.
படி 3: உங்கள் பாதுகாப்பான அணுகல் செய்தியை உறுதிப்படுத்தவும். உங்கள் கடவுச்சொல்லை உள்ளிட்டு தொடரவும் என்பதைக் கிளிக் செய்யவும்.
வெற்றிகரமான சரிபார்ப்புக்கு பிறகு, மின்னணு-தாக்கல் முகப்புப்பலகை தோன்றும்.
தனிப்பட்ட பயனர்களுக்கு, PAN ஆதாருடன் இணைக்கப்படவில்லை என்றால், உங்கள் PAN உங்கள் ஆதாருடன் இணைக்கப்படாததால் செயலற்றதாக ஆக்கப்பட்டுள்ளது என்ற பாப்-அப் செய்தியை நீங்கள் காண்பீர்கள்.
ஆதாருடன் PAN ஐ இணைக்க, இப்போதே இணை என்ற பட்டனைக் கிளிக் செய்யவும், இல்லையெனில் தொடரவும் என்பதைக் கிளிக் செய்யவும்.
3.2 ஆதார் OTP ஐ பயன்படுத்தி உள்நுழையவும் (மின்னணு-தாக்கல் பெட்டக உயர் பாதுகாப்பு விருப்பத்தேர்வு செயலாக்கப்பட்டிருக்கும் நிலை உட்பட)
படி 1: மின்னணு-தாக்கல் முகப்புப் பக்கத்திற்குச் சென்று உள்நுழை என்பதைக் கிளிக் செய்யவும்.
படி 2: உங்கள் பயனர் ID ஐ உள்ளிடும் உரைப்பெட்டியில் உங்கள் PAN ஐ உள்ளிட்டு தொடரவும் என்பதைக் கிளிக் செய்யவும்.
படி 3: உங்கள் பாதுகாப்பான அணுகல் செய்தியை உறுதிப்படுத்தவும். உங்கள் கடவுச்சொல்லை உள்ளிட்டு தொடரவும் என்பதைக் கிளிக் செய்யவும்.
படி 4: உங்களிடம் ஏற்கனவே OTP இருந்தால், என்னிடம் ஆதாரில் பதிவு செய்யப்பட்ட அலைபேசி எண்ணில் OTP ஏற்கனவே உள்ளது என்பதைத் தேர்ந்தெடுத்து படி 5க்குச் செல்லவும். சரியான OTP கிடைக்கவில்லை என்றால், OTP ஐ உருவாக்கு என்பதைக் கிளிக் செய்து தொடரவும் என்பதைக் கிளிக் செய்யவும்.
படி 5: சரிபார்க்கவும், இது நீங்கள் தான் என்ற பக்கத்தில், எனது ஆதார் விவரங்களை சரிபார்க்க நான் ஒப்புக்கொள்கிறேன் > ஆதார் OTP ஐ உருவாக்கு என்பதைக் கிளிக் செய்யவும்.
படி 6: ஆதாரில் பதிவு செய்யப்பட்ட உங்கள் அலைபேசி எண்ணில் பெறப்பட்ட 6 இலக்க OTP ஐ உள்ளிட்டு உள்நுழைக என்பதைக் கிளிக் செய்யவும்.
வெற்றிகரமான சரிபார்ப்புக்குப் பிறகு, நீங்கள் மின்னணு-தாக்கல் முகப்புப்பலகைக்கு அழைத்துச் செல்லப்படுவீர்கள்.
உங்கள் PAN ஆதாருடன் இணைக்கப்படவில்லை என்றால், உங்கள் PAN உங்கள் ஆதாருடன் இணைக்கப்படாததால் செயலற்றதாக ஆக்கப்பட்டுள்ளது என்ற பாப்-அப் செய்தியை நீங்கள் காண்பீர்கள்.
ஆதாருடன் PAN ஐ இணைக்க, இப்போதே இணை என்ற பட்டனைக் கிளிக் செய்யவும், இல்லையெனில் தொடரவும் என்பதைக் கிளிக் செய்யவும்.
3.3 ஆதார் OTP ஐ பயன்படுத்தி உள்நுழையவும் (மின்னணு-தாக்கல் பெட்டக உயர் பாதுகாப்பு விருப்பத்தேர்வு செயலாக்கப்பட்டிருக்கும் நிலை உட்பட)
படி 1: மின்னணு-தாக்கல் முகப்புப் பக்கத்திற்குச் சென்று உள்நுழை என்பதைக் கிளிக் செய்யவும். இணைய வங்கியை உயர் பாதுகாப்பு விருப்பமாகப் பயன்படுத்தினால், உங்கள் பயனர் ID, கடவுச்சொல்லை உள்ளிட்டு, உயர் பாதுகாப்பு விருப்பங்கள் பக்கத்தில் இணைய வங்கி மூலம் என்பதைக் கிளிக் செய்து படி 3க்குச் செல்லவும்.
படி 2: நீங்கள் மின்னணு-தாக்கல் பெட்டக உயர் பாதுகாப்பு விருப்பத்தைத் தேர்வு செய்யவில்லை என்றால், உங்கள் கணக்கை அணுகுவதற்கான பிற வழிகள் என்னும் பக்கத்தின் கீழே காணப்படும் இணைய வங்கி விருப்பத்தை கிளிக் செய்யவும்.
படி 3: விருப்பமான வங்கியைத் தேர்ந்தெடுத்து தொடரவும் என்பதைக் கிளிக் செய்யவும்.
படி 4: பொறுப்புத்துறப்பை படித்து புரிந்து கொள்ளுங்கள். தொடரவும் என்பதைக் கிளிக் செய்யவும்.
படி 5: உங்கள் இணைய வங்கி பயனர் ID மற்றும் கடவுச்சொல்லைப் பயன்படுத்தி உங்கள் இணைய வங்கிக் கணக்கில் உள்நுழையவும்.
படி 6: உள்நுழைவிற்குப் பின், வங்கியின் இணையதளத்தில் மின்னணு-தாக்கல் முகப்பிற்கான இணைப்பைத் தேர்ந்தெடுக்கவும். நீங்கள் மின்னணு-தாக்கல் முகப்புப்பலகைக்கு அழைத்துச் செல்லப்படுவீர்கள்.
தனிப்பட்ட பயனர்களுக்கு, PAN ஆதாருடன் இணைக்கப்படவில்லை என்றால், உங்கள் PAN உங்கள் ஆதாருடன் இணைக்கப்படாததால் செயலற்றதாக ஆக்கப்பட்டுள்ளது என்ற பாப்-அப் செய்தியை நீங்கள் காண்பீர்கள்.
ஆதார் உடன் PAN ஐ இணைக்க, இப்போதே இணை என்ற பட்டனைக் கிளிக் செய்யவும், இல்லையெனில் தொடரவும் என்பதைக் கிளிக் செய்யவும்.
3.4 வங்கிக் கணக்கு/டீமேட் கணக்கு EVC ஐ பயன்படுத்தி உள்நுழையவும். (மின்னணு-தாக்கல் பெட்டக உயர் பாதுகாப்பு விருப்பத்தேர்வு செயலாக்கப்பட்டிருக்கும் நிலையில்)
படி 1: மின்னணு-தாக்கல் முகப்புப் பக்கத்திற்குச் சென்று உள்நுழை என்பதைக் கிளிக் செய்யவும்.
படி 2: உங்கள் பயனர் ID ஐ உள்ளிடும் உரைப்பெட்டியில் உங்கள் PAN ஐ உள்ளிட்டு தொடரவும் என்பதைக் கிளிக் செய்யவும்.
படி 3 : உங்கள் பாதுகாப்பான அணுகல் செய்தியை உறுதிப்படுத்தவும். உங்கள் கடவுச்சொல்லை உள்ளிட்டு தொடரவும் என்பதைக் கிளிக் செய்யவும்.
படி 4: வங்கிக் கணக்கு மின்னணு சரிபார்ப்புக் குறியீடு (EVC) / டீமேட் கணக்கு EVC ஐ தேர்ந்தெடுத்து தொடரவும் என்பதைக் கிளிக் செய்யவும்.
படி 5: உங்களிடம் EVC இல்லையென்றால், EVC ஐ உருவாக்கு என்பதைக் கிளிக் செய்யவும். உங்கள் வங்கிக் கணக்கு / டீமேட் கணக்கில் பதிவு செய்யப்பட்ட உங்கள் அலைபேசி எண்ணில் EVC ஐப் பெறுவீர்கள்.
குறிப்பு: உங்களிடம் ஏற்கனவே EVC இருந்தால், என்னிடம் ஏற்கனவே EVC உள்ளது என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
படி 6: EVC ஐஉள்ளிட்டு உள்நுழைக என்பதைக் கிளிக் செய்யவும்.
வெற்றிகரமான சரிபார்ப்புக்குப் பிறகு, நீங்கள் மின்னணு-தாக்கல் முகப்புப்பலகைக்கு அழைத்துச் செல்லப்படுவீர்கள்.
தனிப்பட்ட பயனர்களுக்கு, PAN ஆதாருடன் இணைக்கப்படவில்லை என்றால், உங்கள் PAN உங்கள் ஆதாருடன் இணைக்கப்படாததால் செயலற்றதாக ஆக்கப்பட்டுள்ளது என்ற பாப்-அப் செய்தியை நீங்கள் காண்பீர்கள்.
ஆதாருடன் PAN எண்ணை இணைக்க, இப்போதே இணை என்ற பட்டனைக் கிளிக் செய்யவும், இல்லையெனில் தொடரவும் என்பதைக் கிளிக் செய்யவும்.
3.5 DSC ஐ பயன்படுத்தி உள்நுழைதல் (மின்னணு-தாக்கல் பெட்டக உயர் பாதுகாப்பு விருப்பத்தேர்வு செயலாக்கப்பட்டிருக்கும் நிலையில்)
படி 1: மின்னணு-தாக்கல் முகப்புப் பக்கத்திற்குச் சென்று உள்நுழை என்பதைக் கிளிக் செய்யவும்.
படி 2: உங்கள் பயனர் ID ஐ உள்ளிடும் உரைப்பெட்டியில் உங்கள் PAN ஐ உள்ளிட்டு தொடரவும் என்பதைக் கிளிக் செய்யவும்.
படி 3 : உங்கள் பாதுகாப்பான அணுகல் செய்தியை உறுதிப்படுத்தவும். உங்கள் கடவுச்சொல்லை உள்ளிட்டு தொடரவும் என்பதைக் கிளிக் செய்யவும்.
படி 4: DSC விருப்பத்தேர்வைத் தேர்ந்தெடுத்து தொடரவும் என்பதைக் கிளிக் செய்யவும்.
படி 5: புதிய DSC அல்லது பதிவு செய்யப்பட்ட DSC (தேவைக்கேற்ப) என்பதைத் தேர்ந்தெடுத்து தொடரவும் என்பதைக் கிளிக் செய்யவும். மேலும் அறிய DSC ஐ பதிவு செய்வதற்கான பயனர் கையேட்டைப் பார்க்கவும்.
படி 6: நான் எம்சைனர் பயன்பாட்டை பதிவிறக்கம் செய்து நிறுவியுள்ளேன் என்பதைத் தேர்ந்தெடுத்துத் தொடரவும் என்பதைக் கிளிக் செய்யவும்.
குறிப்பு: நீங்கள் பக்கத்தின் கீழ்பகுதியில் உள்ள மீத்தொடுப்பை பயன்படுத்தி, பயன்பாட்டைப் பதிவிறக்கம் செய்து நிறுவலாம்.
படி 7: தரவு குறி பக்கத்தில், வழங்குநர் மற்றும் சான்றிதழ் என்பதைத் தேர்வுசெய்யவும். வழங்குநர் கடவுச்சொல்லை உள்ளிட்டு உள்நுழை என்பதைக் கிளிக் செய்யவும்.
வெற்றிகரமான சரிபார்ப்புக்குப் பிறகு, நீங்கள் மின்னணு-தாக்கல் முகப்புப்பலகைக்கு அழைத்துச் செல்லப்படுவீர்கள்.
தனிப்பட்ட பயனர்களுக்கு, PAN ஆதாருடன் இணைக்கப்படவில்லை என்றால், உங்கள் PAN உங்கள் ஆதாருடன் இணைக்கப்படாததால் செயலற்றதாக ஆக்கப்பட்டுள்ளது என்ற பாப்-அப் செய்தியை நீங்கள் காண்பீர்கள்.
ஆதாருடன் PAN எண்ணை இணைக்க, இப்போதே இணை என்ற பட்டனைக் கிளிக் செய்யவும், இல்லையெனில் தொடரவும் என்பதைக் கிளிக் செய்யவும்.
3.6 வரி செலுத்துவோர் அல்லாத பிறருக்கான உள்நுழைவு (CA, TAN பயனர், ERI, வெளிப்புற நிறுவனம், ITDREIN பயனர்)
படி 1: மின்னணு-தாக்கல் முகப்பின் முதன்மை பக்கத்திற்குச் சென்று உள்நுழை என்பதைக் கிளிக் செய்யவும்.
படி 2: உங்கள் பயனர் ID உரைப்பெட்டியில் உங்கள் பயனர் ID ஐ உள்ளிட்டு தொடரவும் என்பதைக் கிளிக் செய்யவும்.
குறிப்பு: வெவ்வேறு பயனர்களுக்கான பயனர் IDகள் கீழே உள்ள அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ளன:
|
வ. எண் |
பயனர் |
பயனர் முகவரி (ID) |
|
1 |
CA |
ARCA ஐத் தொடர்ந்து 6 இலக்க உறுப்பினர் எண். |
|
2 |
மூலத்தில் வரி பிடித்தம் செய்பவர் மற்றும் மூலத்தில் வரி வசூலிப்பவர் |
TAN |
|
3 |
ERI |
ERIP ஐத் தொடர்ந்து |
|
4 |
வெளி நிறுவனம் |
EXTA ஐத் தொடர்ந்து 6 இலக்க எண் உள்ளது. |
|
5 |
ITDREIN பயனர் |
அறிக்கையிடும் நிறுவனத்தின் PAN/TAN, அதைத் தொடர்ந்து 2 எழுத்துக்கள் மற்றும் 3 இலக்கங்கள்; |
படி 3: உங்கள் பாதுகாப்பான அணுகல் செய்தியை உறுதிப்படுத்தவும். உங்கள் கடவுச்சொல்லை உள்ளிட்டு தொடரவும் என்பதைக் கிளிக் செய்யவும்.
மேலும் தொடர கீழே உள்ள அட்டவணையைப் பார்க்கவும்:
| மின்னணு-தாக்கல் கடவுச்சொல்லைப் பயன்படுத்தி உள்நுழையவும் | பிரிவு 3.1 ஐ பார்க்கவும் |
| ஆதார் OTP ஐ பயன்படுத்தி உள்நுழையவும் | பிரிவு 3.2 ஐ பார்க்கவும் |
| இணைய வங்கியைப் பயன்படுத்தி உள்நுழையவும் | பிரிவு 3.3 ஐ பார்க்கவும் |
| வங்கிக் கணக்கு / டீமேட் கணக்கு EVC ஐ பயன்படுத்தி உள்நுழையவும் | பிரிவு 3.4 ஐ பார்க்கவும் |
| DSC ஐ பயன்படுத்தி உள்நுழையவும் | பிரிவு 3.5 ஐ பார்க்கவும் |
4. தொடர்புடைய தலைப்புகள்