தனது சார்பாகச் செயல்பட மற்றொரு நபருக்கு அங்கீகாரம் வழங்குதல் (அங்கீகரிக்கப்பட்ட கையொப்பமிடுபவராகச் சேர்த்தல்)
1. மேலோட்டப்பார்வை
மின்னணு-தாக்கல் இணைய முகப்பில் பதிவு செய்யப்பட்ட அனைத்து பயனர்களுக்கும் இந்தச் சேவை கிடைக்கிறது. மின்னணு-தாக்கல் முகப்பில் பதிவுசெய்யப்பட்ட பயனர்கள், வெளிநாடு வாழ் இந்தியர் என்ற காரணத்தினாலோ அல்லது வேறு எந்தக் காரணத்தினாலோ, வருமானவரிப் படிவங்கள் (ITR)/ மற்ற படிவங்கள்/சேவை கோரிக்கைகளைச் சரிபார்க்க முடியாதவர்கள், வருமானவரிப் படிவங்கள் (ITR)/மற்ற படிவங்கள்/சேவை கோரிக்கைகளைச் சரிபார்க்க மற்றொரு நபரை தனது சார்பாகச் செயல்பட அங்கீகரிக்க இந்தச் சேவை உதவுகிறது. இந்தச் சேவையானது பயனர்களை தனது பிரதிநிதியாகப் பதிவு செய்யவும் மற்றொரு நபரின் சார்பாகச் செயல்படத் தங்களைப் பதிவு செய்யவும் அனுமதிக்கிறது.
2. இந்தச் சேவையைப் பெறுவதற்கான முன்தேவைகள்
-
சரியான பயனர் ID மற்றும் கடவுச்சொல்
-
PAN எண் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ளது.
3. செயல்முறை/படிப்படியான வழிகாட்டி
3.1 மற்றொரு நபரின் சார்பாக செயல்பட பதிவு செய்தல்
படி 1: மின்னணு-தாக்கல் இணைய முகப்பின் முகப்புப்பக்கத்திற்குச் செல்லவும்.
படி 2: பயனர் ID மற்றும் கடவுச்சொல்லை உள்ளிடவும்.
படி 3: அங்கீகரிக்கப்பட்ட கூட்டாளிகள் என்பதற்குச் சென்று, தனது சார்பாகச் செயல்பட மற்றொரு நபரை அங்கீகரிக்கவும் என்பதைக் கிளிக் செய்யவும்
படி 4: தொடங்குவோம் என்பதைக் கிளிக் செய்யவும்
படி 5: + அங்கீகரிக்கப்பட்ட கையொப்பமிடுபவரைச் சேர்க்கவும் என்பதைக் கிளிக் செய்யவும்
படி 6: அங்கீகரிக்கப்பட்ட கையொப்பமிடுபவரைச் சேர்ப்பதற்கான காரணத்தைத் தேர்ந்தெடுத்து, அங்கீகரிக்கப்பட்ட கையொப்பமிடுபவரின் PAN ஐ உள்ளிட்டு, அங்கீகரிக்கும் காலத்தை (தொடக்க தேதி -முதல்- இறுதி தேதி வரை) அல்லது பணியைத் தேர்ந்தெடுக்கவும்.
குறிப்பு:
கீழே உள்ள பணிகளுக்கு அங்கீகரிக்கப்பட்ட கையொப்பமிடுபவரைச் சேர்க்கலாம்:
- வருமானவரிப் படிவத்தைச் சமர்ப்பித்தல் மற்றும் சரிபார்த்தல்
- வருமானவரிப் அறிக்கையைச் சரிபார்த்தல்
- படிவத்தைச் சமர்ப்பித்தல்
- சேவைக்கான வேண்டுகோளைச் சமர்ப்பித்தல்
படி 7: கோரிக்கையைச் சரிபார்க்கத் தற்போது மின்னணு-தாக்கல் இணைய முகப்பில் பதிவு செய்யப்பட்ட அலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் ID இல் பெறப்பட்ட 6 இலக்க OTP ஐ உள்ளிடவும்
படி 8: கோரிக்கை வெற்றிகரமாகச் சமர்ப்பிக்கப்பட்டது. அங்கீகரிக்கப்பட்ட கையொப்பமிடுபவர் 7 நாட்களுக்குள் கோரிக்கையை ஏற்றுக்கொள்வார். 7 நாட்களுக்குள் வருமானவரித் துறையால் செயலாக்கப்படும்.
கோரிக்கையைக் காண கோரிக்கையைப் பார்க்க என்பதைக் கிளிக் செய்யவும்.
3.2 அங்கீகரிக்கப்பட்ட கையொப்பமிடுபவரின் கோரிக்கையை ஏற்றுக்கொள்ளுதல்:
படி 1: மின்னணு-தாக்கல் இணைய முகப்பின் முகப்புப்பக்கத்திற்குச் செல்லவும்.
படி 2: பயனர் ID மற்றும் கடவுச்சொல்லை உள்ளிடவும்.
படி 3: நிலுவையில் உள்ள செயல்கள் என்பதற்குச் சென்று பணிப்பட்டியல் என்பதைக் கிளிக் செய்யவும்
படி 4: அங்கீகரிக்கப்பட்ட கையொப்பமிடுபவராகச் சேர்ப்பதற்காக வருமான வரி செலுத்துபவர் எழுப்பிய கோரிக்கையைக் காணக்கூடிய பணிப்பட்டியல் திறக்கும். கோரிக்கையை ஏற்க ஏற்கவும் என்பதைக் கிளிக் செய்யவும்.
படி 5: கோப்பை இணைக்கவும் என்பதன் மீது கிளிக் செய்வதன் மூலம் பகர அதிகார ஆவணத்தை இணைத்து, சரிபார்ப்புக்கு தொடரவும் என்பதைக் கிளிக் செய்யவும்
குறிப்பு:
1) அதிகபட்ச கோப்பு அளவு 5 MB ஆக இருக்க வேண்டும்.
2) கோப்புகளை PDF வடிவில் மட்டுமே பதிவேற்ற முடியும்.
படி 6: தற்போது கீழே உள்ள சரிபார்ப்பு முறைகள் மூலம் கோரிக்கையை சரிபார்க்கவும்:
சரிபார்ப்புக்குப் பிறகு, வருமான வரித் துறை கோரிக்கையை செயலாக்கும். மேலும், அங்கீகாரம் நடைமுறைக்கு வருவதற்கு 24 முதல் 72 மணி நேரம் வரை ஆகும்.
தொடர்புடைய தலைப்புகள்
- உள்நுழையவும்
- PAN ஆதார் இணைப்பு
- முகப்புப் பலகை
- வருமானவரி அறிக்கை
- ITR ஐ தாக்கல் செய்யவும்
- முகப்பு பக்கம்
- மின்னணு-சரிபார்ப்பது எப்படி
சொற்களஞ்சியம்
|
சுருக்கப்பெயர்/ சுருக்கக் குறியீடு |
விவரம்/முழு வடிவம் |
|
AO |
வருமான மதிப்பீட்டு அதிகாரி |
|
AY |
மதிப்பீட்டு ஆண்டு |
|
AOP |
நபர்களின் கூட்டமைப்பு |
|
தனிநபர்களின் கூட்டமைப்பு (பி.ஓ.ஐ.) |
தனி நபர்களின் அமைப்பு |
|
CA |
பட்டய கணக்காளர் |
|
CPC |
மையப்படுத்தப்பட்ட செயலாக்க மையம் |
|
ERI |
மின்னணு - அறிக்கை இடையீட்டாளர் |
|
LA |
உள்ளூர் நிர்வாகம் |
|
TDS |
மூலத்தில் வரி பிடித்தம் செய்யப்பட்டது |
|
EXTA |
வெளி நிறுவனம் |
|
ITDREIN |
வருமான வரித் துறை அறிக்கையிடல் நிறுவன அடையாள எண் |
|
HUF |
இந்து கூட்டுக் குடும்பம் |
|
EVC |
மின்னணு-சரிபார்ப்புக் குறியீடு |
|
DSC |
மின்னணு கையொப்பச் சான்றிதழ் |
|
ITD |
வருமான வரித் துறை |
|
ITR |
வருமானவரி அறிக்கை |