1. எனது பட்டயக் கணக்கரை(CA) மின்னணு-தாக்கல் இணையக் கணக்கில் எவ்வாறு சேர்ப்பது?
உங்கள் கணக்கில் உள்நுழைந்த பிறகு இந்த சேவையைப் பயன்படுத்தி உங்கள் பட்டயக் கணக்காளர்(களை) உங்களின் மின்னணுத் தாக்கல் கணக்கில் சேர்க்கலாம். எனது பட்டயக் கணக்கர் (CA) சேவை பின்வருவனவற்றைச் செய்ய உங்களை அனுமதிக்கிறது:
- உங்களின் மின்னணு-தாக்கல் இணையக் கணக்கில் இருக்கும் நீங்கள் அங்கீகரித்த செயலில் உள்ள மற்றும் செயலற்ற பட்டயக் கணக்கர்களின்(CA) பட்டியலைக் காண்க
- பட்டயக் கணக்கரைச் (CA) சேர்த்தல்
- பட்டயக் கணக்கருக்குப் (CA) படிவங்களை ஒதுக்குதல்
- ஒதுக்கப்பட்ட படிவங்களைத் திரும்பப் பெறுதல்
- பட்டயக் கணக்கரைச் (CA) செயல்படுத்துதல்
- பட்டயக் கணக்கரைச் (CA) செயலிழக்கச் செய்தல்
2. எனது பட்டயக் கணக்கர் (CA) சேவையை யாரெல்லாம் அணுக முடியும்?
பின்வரும் வகைப்பிரிவுகளில் ஒன்றில் இருக்கும் மின்னணு-தாக்கல் இணைய முகப்பின் அனைத்து பதிவு செய்யப்பட்ட பயனர்களும் இந்தச் சேவையை அணுகலாம்:
- தனிநபர்
- HUF
- நிறுவனம், AOP, BOI, AJP, அறக்கட்டளை, அரசு, LA (உள்ளாட்சி அதிகாரி), அமைப்பு
- மூலத்தில் வரி பிடித்தம் செய்பவர் மற்றும் மூலத்தில் வரி வசூலிப்பவர்
3. பட்டயக் கணக்கருக்கு (CA) ஒதுக்கப்பட்ட படிவங்களை நான் திரும்பப் பெறலாமா?
ஆம், பட்டயக் கணக்கருக்கு (CA) ஒதுக்கப்பட்ட பிறகும் படிவங்களைத் திரும்பப் பெற முடியும். ஒரு பட்டயக் கணக்கருக்கு(CA) ஒதுக்கப்பட்டுள்ள அனைத்து படிவங்களையும் பயனரால் பார்க்க முடியும் மற்றும் தேவைப்பட்டால் திரும்பப் பெறவும் முடியும்.
4. நான் ஏன் ஒரு பட்டயக் கணக்கரை (CA) அங்கீகரிக்க வேண்டும்?
பட்டயக் கணக்கர், மின்னணு-தாக்கல் இணைய முகப்பில் உங்கள் சார்பாக எந்தவொரு படிவத்தையும் தாக்கல் செய்வதற்கு முன் அல்லது சமர்ப்பிப்புகளைச் செய்வதற்கு முன், அவர் உங்களால் அங்கீகரிக்கப்பட வேண்டும் மேலும், பட்டய கணக்காளர் (CA) சான்றளிப்பு தேவைப்படும் சில சட்டரீதியான படிவங்கள் உள்ளன. இந்த சேவையைப் பயன்படுத்தி நீங்கள் பட்டயக் கணக்கர் (CA) சேர்க்கலாம். மேலும் வருமான வரிப் படிவங்கள் (ITR)/ மற்ற படிவங்களைச் சமர்ப்பிப்பதற்கு, பட்டயக் கணக்கர் (CA) சேர்த்தல் கோரிக்கையை ஏற்க வேண்டும்.