Do not have an account?
Already have an account?

1: படிவம் 29B என்றால் என்ன?

படிவம் 29B என்பது, நிறுவனத்தின் புத்தக இலாபங்களைக் கணக்கிடுவதற்கான வருமான வரிச் சட்டத்தின் பிரிவு 115JB-இன் கீழ் வழங்கப்படும் ஒரு அறிக்கையாகும். பிரிவு 11JB பொருந்தும் நிறுவனத்திற்கு, இந்த அறிக்கையை ஒரு CA சமர்ப்பிக்க வேண்டும். வருமான வரிச் சட்டத்தின்படி கணக்கிடப்படும் வரியின் அடிப்படையில் கிடைக்கும் மேட்(MAT) கடன் பெறுவதற்கு, புத்தக லாபம் சரியாகக் கணக்கிடப்பட்டிருப்பதை உறுதிசெய்ய இது வரி செலுத்துநருக்கு உதவுகிறது.

2: படிவம் 29B-ஐ தாக்கல் செய்வது கட்டாயமா?

மதிப்பீட்டு ஆண்டு 2020-21 முதல், புத்தக லாபத்தில் 15%-க்குக் குறைவாக வருமானம் உள்ள ஒவ்வொரு நிறுவனமும், பட்டயக் கணக்காளர் மூலம் படிவம் 29B-இல் ஒரு அறிக்கையைப் பெற வேண்டும். இந்த அறிக்கையைப் பிரிவு 139(1)-இன் கீழ் வருமான வரி அறிக்கை தாக்கல் செய்வதற்கான உரிய தேதிக்கு ஒரு மாதத்திற்கு முன்போ அல்லது பிரிவு 142(1)(i)-இன் கீழ் பெறப்பட்ட அறிவிப்புக்கு இணங்க சமர்ப்பிக்கப்பட்ட வருமான வரி அறிக்கையுடன் சேர்த்துப் பெறப்பட்டு சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

3: படிவம் 29B-ஐ நிரப்புவதற்கான செயல்முறை என்ன?

இந்தப் படிவத்தை வரி செலுத்துபவரால் (நிறுவனம்) நியமிக்கப்பட்ட CA நிரப்ப வேண்டும். நியமிக்கப்பட்ட CA படிவத்தை நிரப்பி பதிவேற்றிய பிறகு, அது வெற்றிகரமாகச் சமர்ப்பிக்கப்படுவதற்காக, வரி விதிப்புக்குரியவர் தனது பணிப்பட்டியல் (உங்கள் செயல்களுக்காக) பகுதியில் இருந்து அதனை ஏற்றுக்கொண்டு மின்னணு சரிபார்ப்பு செய்ய வேண்டும்.

4: எனது CA படிவம் 29B-ஐ தயாரித்து சமர்ப்பித்துள்ளார் என்பதை நான் எவ்வாறு தெரிந்துகொள்வது?

மின்னணு-தாக்கல் இணைய முகப்பில் பதிவு செய்யப்பட்டுள்ள உங்கள் மின்னஞ்சல் ID மற்றும் அலைபேசி எண்ணிற்கு உறுதிப்படுத்தல் செய்தி அனுப்பப்படும். மேலும், உங்கள் பணிப்பட்டியல் (உங்கள் செயல்களுக்காக) பகுதியில் அதன் நிலை விவரத்தையும் நீங்கள் பார்க்கலாம். CA படிவம் 29B-ஐ பதிவேற்றியிருந்தால், உங்களுக்கு பதிவேற்றப்பட்டது – மதிப்பீட்டாளரின் ஒப்புதலுக்காக நிலுவையில் உள்ளது என்ற நிலை காண்பிக்கப்படும்.

5: படிவம் 29B-ஐ தாக்கல் செய்வதற்கான எனது கோரிக்கையை எனது CA நிராகரித்துள்ளார் என்பதை நான் எவ்வாறு தெரிந்துகொள்வது?

உங்களுக்கு ஒதுக்கப்பட்ட CA உங்கள் படிவம் 29B-ஐ தாக்கல் செய்வதற்கான கோரிக்கையை நிராகரித்திருந்தால், மின்னணு - தாக்கல் இணைய முகப்பில் பதிவு செய்யப்பட்டுள்ள உங்கள் மின்னஞ்சல் ID மற்றும் அலைபெசி எண்ணிற்கு ஒரு தகவல்தொடர்பு செய்தி அனுப்பப்படும்.

6: படிவம் 29B-ஐ தாக்கல் செய்வதற்கான எனது கோரிக்கையை எனது CA ஏற்றுக்கொண்டுள்ளார் என்பதை நான் எவ்வாறு தெரிந்துகொள்வது?

உங்களுக்கு ஒதுக்கப்பட்ட CA கோரிக்கையை ஏற்றுக்கொண்டிருந்தால், உங்கள் பணிப்பட்டியலில் (உங்கள் செயல்களுக்காக) பகுதியில் பின்வரும் நிலை காட்டப்படும்:

  • CA மூலம் பதிவேற்றப்பட்டது - ஒப்புதலுக்காக நிலுவையில் உள்ளது:அதாவது, CA உங்கள் கோரிக்கையை இன்னும் ஏற்கவில்லை; அல்லது
  • பதிவேற்றப்பட்டது - வரி செலுத்துபவரின் ஒப்புதலுக்காக நிலுவையில் உள்ளது: அதாவது, CA ஏற்கனவே படிவம் 29B-ஐ பதிவேற்றி சமர்ப்பித்துள்ளார்.