1: படிவம் 15CC என்றால் என்ன?
ஒவ்வொரு அங்கீகரிக்கப்பட்ட முகவரும், நிறுவனம் அல்லாத வெளிநாட்டில் வசிக்கும் நபருக்கோ அல்லது வெளிநாட்டு நிறுவனத்திற்கோ பணம் அனுப்புதலை மேற்கொண்டால், அந்தப் பரிமாற்றத்தின் விவரங்களை ஒவ்வொரு காலாண்டிலும் படிவம் 15CC-இல் கட்டாயமாக வெளிப்படுத்த வேண்டும்.
2: படிவம் 15CC-ஐ சமர்ப்பிப்பதற்கான முறைகள் என்னென்ன?
படிவம் 15CC-ஐ ஆன்லைன் முறையில் மட்டுமே சமர்ப்பிக்க முடியும். படிவத்தை ஆன்லைனில் தாக்கல் செய்வதற்கு, மின்னணு-தாக்கல் இணைய முகப்பில் உள்நுழைந்த பிறகு, குறிப்பிட்ட படிவத்தைத் தேர்ந்தெடுத்து, அதைத் தயார் செய்து சமர்ப்பிக்கவும்.
3: படிவம் 15CC-ஐ தாக்கல் செய்வதற்கு முன் ITDREIN கட்டாயமாக உருவாக்கப்பட வேண்டுமா?
ஆம். அறிக்கையிடும் நிறுவனத்தால் சேர்க்கப்பட்ட அங்கீகரிக்கப்பட்ட தனிநபர்கள், ITDREIN-ஐ பயன்படுத்தி மின்னணு-தாக்கல் இணைய முகப்பில் உள்நுழைந்து, படிவம் 15CC-ஐ தாக்கல் செய்ய வேண்டும்.
4: படிவம் 15CC-ஐ எப்போது தாக்கல் செய்ய வேண்டும்?
அந்தப் பணம் செலுத்தல் தொடர்புடைய நிதியாண்டின் காலாண்டு முடிவடைந்ததிலிருந்து 15 நாட்களுக்குள், வருமான வரித்துறையின் அதிகாரப்பூர்வ அதிகாரிக்கு மின்னணு முறையில் படிவம் 15CC-ஐ சமர்ப்பிக்க வேண்டும்.
5: படிவம் வெற்றிகரமாக சமர்ப்பிக்கப்பட்டது என்பதை நான் எவ்வாறு அறிந்து கொள்வது?
நீங்கள் பதிவு செய்துள்ள மின்னணு-தாக்கல் இணைய முகப்பில் பதிவுசெய்யப்பட்ட உங்கள் மின்னஞ்சல் ID மற்றும் அலைபேசி எண்ணுக்கு உறுதிப்படுத்தல் செய்தி அனுப்பப்படும். மேலும், நீங்கள் உங்கள் நடவடிக்கைகளுக்காக டாபில் உள்ள பணிப்பட்டியல் பகுதியில் சென்று, படிவத்தின் நிலையைப் பார்க்கலாம்.
6: படிவம் 15CC-ஐ சமர்ப்பிப்பதற்கு மின்னணு-சரிபார்ப்பு தேவையா? தேவையெனில், படிவம் 15CC-ஐ எவ்வாறு மின்னணு-சரிபார்ப்பு செய்யலாம்?
ஆம், படிவம் 15CC-ஐ மின்னணு-சரிபார்ப்பு செய்வது அவசியம். நீங்கள் டிஜிட்டல் கையொப்பச் சான்றிதழைப் பயன்படுத்தி மின்னணு-சரிபார்ப்பு செய்ய வேண்டும்.