உங்கள் PAN எண்ணைச் சரிபார்க்கவும்
1. மேலோட்டப்பார்வை
‘PAN நிலையைச் சரிபார்க்கவும்’ என்பது வெளிப்புற முகமைகளைத் தவிர, அனைத்து பயனர்களுக்கும் மின்னணு-தாக்கல் இணைய முகப்பில் உள்நுழைவதற்கு முன் பயன்படுத்தக்கூடிய ஒரு சேவையாகும் (இணைய முகப்பில் உள்நுழையத் தேவையில்லை).
வெளிப்புற முகமைகள், மின்னணு-தாக்கல் இணைய முகப்பில் உள்நுழைந்த பிறகு, இந்த PAN நிலையைச் சரிபார்த்தல் சேவையை அணுகலாம்.
இந்தச் சேவையின் மூலம், நீங்கள் பின்வருவனவற்றைச் செய்யலாம்:
- PAN-இல் குறிப்பிடப்பட்டுள்ள பெயர், பிறந்த தேதி போன்ற விவரங்கள் சரியாக உள்ளனவா என்பதைச் சரிபார்க்கவும்.
- PAN செயலில் உள்ளதா எனச் சரிபார்க்கவும்.
2. இந்தச் சேவையைப் பெறுவதற்கான முன்தேவைகள்
- சரியான PAN எண்
- பயன்பாட்டிலுள்ள அலைப்பேசி எண் (உங்களை தொடர்பு கொள்ளக்கூடியது)
- வெளி முகமைகளுக்கு: பயன்பாட்டிலுள்ள பயனர் ID மற்றும் கடவுச்சொல்லுடன் மின்னணு-தாக்கல் இணைய முகப்பில் பதிவுசெய்யப்பட்ட பயனராக இருக்க வேண்டும், மேலும் நிறுவனத் தொடக்கத் தேதி தேவை.
3. படிப்படியான வழிகாட்டி
3.1 PAN நிலையை சரிபார்த்தல் செய்யவும்
படிநிலை 1: மின்னணு-தாக்கல் இணைய முகப்பின் முதன்மை பக்கத்திற்கு செல்லவும்.
படிநிலை 2: விரைவு இணைப்புகள் பிரிவில், 'PAN நிலையைச் சரிபார்க்கவும்' என்பதைக் கிளிக் செய்யவும்.
படிநிலை 3:' PAN நிலையைச் சரிபார்த்தல் ' பக்கத்தில், உங்கள் PAN, முழுப் பெயர், பிறந்த தேதி மற்றும் உங்களால் அணுகக்கூடிய அலைபேசி எண்ணை உள்ளிட்டு, 'தொடர்க' என்பதைக் கிளிக் செய்யவும்.
படிநிலை 4: 'சரிபார்ப்பு' பக்கத்தில், படிநிலை 3-இல் உள்ளிடப்பட்ட அலைபேசி எண்ணுக்கு வந்த 6 இலக்க OTP-ஐ உள்ளிட்டு, 'சரிபார்க்கவும்' என்பதைக் கிளிக் செய்யவும்.
குறிப்பு:
• OTP 15 நிமிடங்களுக்கு மட்டுமே செல்லுபடியாகும்.
• சரியான OTP-ஐ உள்ளிட உங்களுக்கு 3 வாய்ப்புகள் வழங்கப்படும்.
• புதிய OTP-ஐ மீண்டும் பெறுவதற்கான மீதமுள்ள நேரத்தை இந்த OTP டைமர் காண்பிக்கும்.'OTP-ஐ மீண்டும் அனுப்பலாம்' என்பதைக் கிளிக் செய்யும்போது, 'ஒரு புதிய OTP உருவாக்கப்பட்டு அனுப்பப்படும்.
சரிபார்ப்பு வெற்றிகரமாக முடிந்ததும், உங்களுடைய PAN நிலை திரையில் காண்பிக்கப்படும்.
குறிப்பு:
இது வெறும் தகவல் நோக்கத்திற்காக மட்டுமே, இது மின்னணு-தாக்கலில் பிற செயல்பாடுகள் எதையும் பாதிக்காது. ஏதேனும் சந்தேகம் அல்லது கேள்விகளுக்குப் பயனர் JAO மட்டுமே தொடர்பு கொள்ள வேண்டும்.
3.2 வெளிப்புற முகமைக்கான PAN சரிபார்த்தல்
படிநிலை 1: தங்களின் பயனர் அடையாளம் மற்றும் கடவுச்சொல்லைப் பயன்படுத்தி மின்னணு-தாக்கல் இணைய முகப்பில் உள்நுழையவும்.
படிநிலை 2: ‘சேவைகள்’ > ‘PAN விவரங்களைக் காண்க’ என்பதைக் கிளிக் செய்யவும்.
படிநிலை 3: ‘தங்களின் PAN-ஐ சரிபார்க்கவும்’ பக்கத்தில், சரிபார்க்க வேண்டிய PAN எண், முழுப் பெயர் மற்றும் நிறுவனத் தோற்றுவிக்கப்பட்ட தேதி (DOI) / பிறந்த தேதி (DOB) ஆகிய விவரங்களை உள்ளிட்டு, ‘தொடரவும்’ என்பதைக் கிளிக் செய்யவும்.
உறுதிப்படுத்துதல் வெற்றிகரமாக நிறைவடைந்ததும், PAN நிலை விவரங்கள் திரையில் தோன்றும்.
4. தொடர்புடைய தலைப்புகள்
- உங்களின் மதிப்பீட்டு அதிகாரியை (AO) தெரிந்துகொள்ளுங்கள்
- உடனடி e-PAN
- ஆதாரை இணைக்கவும்
- மொத்தமாக PAN /TAN ஐ சரிபார்க்கவும்