1. படிவம் 10BD என்றால் என்ன?
படிவம் 10BD என்பது பிரிவு 80G(5)(viii) மற்றும் பிரிவு 35(1A)(i) இன் படி கட்டாயமாக தாக்கல் செய்யப்பட வேண்டிய நன்கொடைகள் பெறப்பட்டதற்கான அறிக்கையாகும். இது DSC அல்லது EVC பயன்படுத்தி மின்னணு முறையில் வழங்கப்படும்.
குறிப்பு: நிதியாண்டில் நன்கொடை பெறப்படாவிட்டால், மேற்கண்ட படிவம் தேவையில்லை.
2. படிவம் 10BD இல் உள்ள அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டிய கடைசி தேதி என்ன?
படிவம் 10BD இல் அறிக்கையை சமர்ப்பிக்க கடைசி தேதி நன்கொடை பெறப்பட்ட நிதியாண்டின் முடிவின் அடுத்து வரும் 31 மே ஆகும்.
3. படிவம் 10BE என்றால் என்ன?
10BD படிவத்தில் நன்கொடைகளின் அறிக்கையை தாக்கல் செய்த பின்னர், மேற்கூறிய நிறுவனங்கள் சான்றிதழை 10BE படிவத்தில் பதிவிறக்கம் செய்து அதை நன்கொடையாளர்களுக்கு வழங்க வேண்டும்.
4. படிவம் 10BE இல் சான்றிதழ் வழங்குவதற்கான கடைசி தேதி என்ன?
படிவம் 10BE இல் நன்கொடையாளருக்கு சான்றிதழ் வழங்குவதற்கான கடைசி தேதி நன்கொடை பெறப்பட்ட நிதியாண்டின் முடிவின் அடுத்து வரும் மே 31 ஆகும்.
5. படிவம் 10BD ஐச் சமர்ப்பிக்கும் போது நான் மின்னணு- சரிபார்க்க வேண்டுமா?
ஆம், பதிவுசெய்யப்பட்ட அலைபேசி எண்ணில் DSC/EVC/OTP இன் வழியாக படிவத்தை நீங்கள் மின்னணு சரிபார்ப்பை முடித்தவுடன் உங்கள் படிவம் சமர்ப்பிக்கப்படும்.
6. படிவம் 10BD ஐத் தாக்கல் செய்யாவிடில் ஏற்படும் விளைவுகள் யாவை?
படிவம் 10BD ஐ பூர்த்தி செய்யவில்லை என்றால், புதிதாக சேர்க்கப்பட்ட பிரிவு 234G இன் படி தாமதமாகும் ஒவ்வொரு நாளுக்கும் ரூ.200/- தாமதக் கட்டணம் விதிக்கப்படும். படிவம் 10BD இல் நன்கொடைகள் பெறப்பட்டதற்கான அறிக்கையை சமர்பிப்பதில் ஏற்படும் தாமதத்திற்கான கட்டணம் தவிர, அத்தகைய அறிக்கையை தாக்கல் செய்யத் தவறினால், பிரிவு 271K இன் கீழ் அபராதம் விதிக்கப்படும், இது ரூ.10,000/- க்கு குறையாமலும் ரூ.1,00,000 வரை அதிகமாக உயரலாம்.