Do not have an account?
Already have an account?

1. நான் ஏன் மின்னணு சரிபார்ப்பு செய்ய வேண்டும்?
வருமான வரி தாக்கல் செயல்முறையை முடிக்க உங்கள் வருமான வரி கணக்கை நீங்கள் சரிபார்க்க வேண்டும். நிர்ணயிக்கப்பட்ட நேரத்திற்குள் சரிபார்ப்பு நிகழாவிட்டால், அந்த ITR தவறானது/செல்லாதது என்று கருதப்படுகிறது. உங்கள் ITR ஐச் சரிபார்க்க மின்னணு சரிபார்ப்பே மிகவும் வசதியான மற்றும் உடனடி வழியாகும்.

சரிபார்த்தல் உள்ளிட்ட, அந்தந்த செயல்முறைகளை வெற்றிகரமாக முடிக்க, பிற கோரிக்கைகள் / பதில்கள் / சேவைகளையும் நீங்கள் மின்னணு சரிபார்ப்பு செய்யலாம்

  • வருமான வரி படிவங்கள் ஆன்லைன் முகப்பு / ஆஃப்லைன் பயன்பாடு வழியாக]
  • மின்னணு நடவடிக்கைகள்
  • வரி பணத்தை திரும்பப் பெறுதலின் மறு வழங்கலை கோரும் வேண்டுகோள்
  • திருத்தல் கோரிக்கைகள்
  • உரிய தேதிக்குப் பிறகு ITR ஐ தாக்கல் செய்வதில் தாமதம் ஏற்பட்டதற்கான மன்னிப்பு
  • சேவை வேண்டுகோள்கள் (ERI-களால் சமர்ப்பிக்கப்பட்டது)
  • ITR-ஐ மொத்தமாக பதிவேற்றுதல் (ERIகள் மூலம்)

2. எனது படிவங்களை நான் மின்னணு சரிபார்க்கக்கூடிய பல்வேறு வழிகள் யாவை?
நீங்கள் பின்வருவனவற்றைப் பயன்படுத்தி உங்கள் படிவங்களை இனையவழியில் மின்னணு சரிபார்க்கலாம்:

  • ஆதாருடன் பதிவு செய்யப்பட்ட அலைபேசி எண்ணில் OTP, அல்லது
  • உங்கள் முன் சரிபார்க்கப்பட்ட வங்கிக் கணக்கு மூலம் EVC உருவாக்கப்பட்டது அல்லது
  • உங்கள் முன் சரிபார்க்கப்பட்ட டிமேட் கணக்கின் மூலம் உருவாக்கப்பட்ட EVC, அல்லது
  • ATM மூலம் EVC (ஆஃப்லைன் முறை), அல்லது
  • இணையவங்கிச் சேவை, அல்லது
  • இலக்கமுறை கையொப்பச் சான்றிதழ் (DSC).

3. நான் 120 நாட்களுக்கு முன்பே எனது படிவத்தை தாக்கல் செய்துவிட்டேன். இப்போதும் எனது படிவத்தை நிகழ்நிலையில் சரிபார்க்க முடியுமா?
ஆம், தாமதத்திற்குப் பொருத்தமான காரணத்துடன் நீங்கள் தாமத மன்னிப்பு கோரிக்கையைச் சமர்ப்பிக்க வேண்டும் [சேவை கோரிக்கை பயனர் கையேட்டைப் பார்க்கவும்] ஆனால் மன்னிப்பு வேண்டுகோளை வருமான வரித்துறை ஒப்புக்கொண்ட பிறகுதான் படிவம் சரிபார்க்கப்பட்டதாகக் கருதப்படும்.

4. எனது சார்பில் ஒரு அங்கீகரிக்கப்பட்ட கையொப்பமிட்டவர் / மதிப்பீட்டு பிரதிநிதி ரிட்டர்னை மின்-சரிபார்க்க முடியுமா?
ஆம், கீழே உள்ள முறைகளில் ஒன்றை பயன்படுத்தி அங்கீகரிக்கப்பட்ட கையொப்பமிட்டவர் / மதிப்பீட்டு பிரதிநிதி வரி விதிப்புக்குரியவர் சார்பில் ரிட்டர்னை மின் சரிபார்ப்பு செய்யலாம்.

  • ஆதார் OTP: ஆதாருடன் பதிவு செய்யப்பட்ட அங்கீகரிக்கப்பட்ட கையொப்பமிட்டவர் / மதிப்பீட்டு பிரதிநிதியின் அலைபேசி எண்ணுக்கு OTP அனுப்பப்படும்.
  • இணையவங்கிச் சேவை: இணையவங்கிச் சேவை மூலம் உருவாக்கப்பட்ட EVC யானது மின்னணு-தாக்கல் முகப்புப் பக்கத்தில் பதிவு செய்யப்பட்ட அங்கீகரிக்கப்பட்ட கையொப்பமிட்டவர் / மதிப்பீட்டு பிரதிநிதியின் அலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் ID க்கு அனுப்பப்படும்.
  • வங்கிக் கணக்கு / டிமேட் கணக்கு EVC:முன்னரே சரிபார்க்கப்பட்ட வங்கிக் கணக்கு / டிமேட் கணக்கு மூலம் உருவாக்கப்பட்ட EVC யானது மின்னணு-தாக்கல் முகப்புப் பக்கத்தில் பதிவு செய்யப்பட்ட அங்கீகரிக்கப்பட்ட கையொப்பமிட்டவர் / மதிப்பீட்டு பிரதிநிதியின் அலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் ID க்கு அனுப்பப்படும்.

5. எனது மின்னணு சரிபார்ப்பு முடிந்தது என்பதை நான் எவ்வாறு தெரிந்து கொள்வது?
உங்கள் வருமானவரி அறிக்கையை நீங்கள் மின்னணு-சார்பார்கிறீர்கள் என்றால்:

  • ஒரு பரிவர்த்தனை ID உடன் ஒரு வெற்றிச் செய்தி காண்பிக்கப்படும்.
  • மின்னணு-தாக்கல் முகப்புப் பக்கத்தில் பதிவு செய்யப்பட்ட உங்கள் மின்னஞ்சல் IDக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பப்படும்.

ஒருவேளை நீங்கள் அங்கீகரிக்கப்பட்ட கையொப்பமிட்டவர் / மதிப்பீட்டுப் பிரதிநிதி என்றால்:

  • ஒரு பரிவர்த்தனை ID உடன் ஒரு வெற்றிச் செய்தி காண்பிக்கப்படும்.
  • வெற்றிகரமான சரிபார்ப்பிற்குப் பிறகு, அங்கீகரிக்கப்பட்ட கையொப்பமிட்டவர் / மதிப்பீட்டுப் பிரதிநிதி இருவரது முதன்மை மின்னஞ்சல் ID மற்றும் மின்னணு தாக்கல் முகப்பில் பதிவு செய்யப்பட்ட உங்கள் மின்னஞ்சல் ID க்கு ஒரு மின்னஞ்சல் உறுதியளித்து அனுப்பப்படும்.

6. தாமதத்திற்கான மன்னிப்பு கோரிக்கையை நான் எப்பொழுது தாக்கல் / விண்ணப்பிக்க வேண்டும்?
தாக்கல் செய்த 120 / 30 நாட்களுக்குப் பிறகும் உங்கள் வருமானத்தை நீங்கள் சரிபார்க்கவில்லை என்பதை நீங்கள் கவனித்தவுடன் மன்னிப்பு கோரிக்கையை தாக்கல் செய்ய பரிந்துரைக்கப்படுகிறது.

முக்கிய குறிப்பு:

29.07.2022 தேதியிட்ட அறிவிக்கை எண் 5/2022 மூலம், 01/08/2022 முதல் மின்னணு-சரிபார்ப்பு அல்லது ITR-V சமர்ப்பிப்பதற்கான கால வரம்பு வருமான அறிக்கையை தாக்கல் செய்த தேதியிலிருந்து 30 நாட்கள் ஆகும்.

இருப்பினும், 31.07.2022 அன்று அல்லது அதற்கு முன்னர் வருமான வரி கணக்கு தாக்கல் செய்யப்பட்டால், முந்தைய 120 நாட்கள் கால அவகாசம் தொடர்ந்து பொருந்தும்.

7. எனது பதிவுசெய்யப்பட்ட அலைபேசி எண் ஆதாருடன் புதுப்பிக்கப்படவில்லை, நான் இன்னும் ஆதார் OTP கொண்டு எனது ரிட்டர்னை மின்-சரிபார்க்கலாமா?
இல்லை. ஆதார் OTP கொண்டு உங்கள் ரிட்டர்னை சரிபார்க்க உங்கள் அலைபேசி எண்ணை ஆதாருடன் நீங்கள் புதுப்பிக்க வேண்டும்.

8 எனது டிமேட் கணக்கு / வங்கிக் கணக்கு செயல்பாட்டில் இல்லை, அந்தக் கணக்கு கொண்டு எனது ரிட்டர்னை நான் மின்-சரிபார்க்கலாமா?
இல்லை. உங்கள் டிமேட் கணக்கு / வங்கிக் கணக்கு கொண்டு உங்கள் வருமான அறிக்கையை மின்னணு சரிபார்க்க உங்களிடம் மின்னணு தாக்கல் முகப்புப் பக்கத்தில் முன்னரே சரிபார்க்கப்பட்டு மற்றும் EVC செயல்படுத்தப்பட்ட செயலில் உள்ள டிமேட் கணக்கு / வங்கிக் கணக்கு இருக்க வேண்டும்.

9. மின்னணு சரிபார்ப்பில் ஏற்படும் தாமதம் ஏதேனும் அபராத விதிப்பை ஈர்க்குமா?
நீங்கள் சரியான நேரத்தில் சரிபார்க்கவில்லை என்றால், உங்கள் படிவம் தாக்கல் செய்யப்படவில்லை எனக் கருதப்படும், மேலும் இது வருமான வரிச் சட்டம், 1961 இன் கீழ் வருமான வரி படிவத்தை தாக்கல் செய்யாததற்கான அனைத்து விளைவுகளையும் ஈர்க்கும். இருப்பினும், பொருத்தமான காரணத்தைக் கூறி சரிபார்ப்பதில் தாமத மன்னிப்பை நீங்கள் கோரலாம். அது போன்ற ஒரு கோரிக்கையைச் சமர்ப்பித்த பிறகு தான், உங்கள் ரிட்டர்னை நீங்கள் மின்-சரிபார்க்க முடியும். இருப்பினும், மன்னிப்பு வேண்டுகோளுக்கு தகுதிவாய்ந்த வருமான வரி அதிகாரி ஒப்புதல் அளித்த பின்னரே படிவம் செல்லுபடியானதாகக் கருதப்படும்

10. EVC என்றால் என்ன?
மின்னணு சரிபார்ப்புக் குறியீடு (EVC) என்பது மின்னணு சரிபார்ப்பு செயல்பாட்டின் பொழுது மின்னணு-தாக்கல் முகப்புப் பக்கம் / வங்கிக் கணக்கு / டிமேட் கணக்கு (சூழலைப் பொறுத்து) உடன் பதிவு செய்யப்பட்ட உங்கள் அலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் ID க்கு அனுப்பப்படும் ஒரு 10 இலக்க எண்ணெழுத்து குறியீடு ஆகும். அது உருவாக்கபப்ட்ட நேரத்திலிருந்து 72-மணிநேரத்திற்குச் செல்லுபடியாகும்.

 

11. ITR-V நிராகரிக்கப்பட்டால் என்ன செய்வது?
உங்கள் மின்னணு தாக்கல் முகப்புப் பலகையில் நிராகரிப்புக் காரணத்தை நீங்கள் பார்க்கலாம். நீங்கள் மற்றொரு ITR-V ஐ அனுப்பலாம் அல்லது நிகழ்நிலையில் ITR ஐ மின்னணு சரிபார்ப்புச் செய்ய தேர்வு செய்யலாம்.

12. மின்னணு சரிபார்ப்பின் பயன்கள் யாவை?

  • உங்கள் ITR-V இன் பிரதியை நீங்கள் CPC, பெங்களூருக்கு அனுப்ப வேண்டியதில்லை.
  • உங்கள் ITR சரிபார்ப்பு உடனடியாக நடக்கும், இது ITR-V பயணத்தின் போது ஏற்படும் தாமதத்தில் இருந்து உங்களைப் பாதுகாக்கும்.
  • பல்வேறு முறைகளில் ஒன்றின் மூலம் நீங்கள் மின்னணு சரிபார்க்கலாம் - ஆதார் OTP / EVC (முன்னரே சரிபார்க்கப்பட்டு வங்கி / டிமேட் கணக்கு மூலம்) / இணைய வங்கியியல் / டிஜிட்டல் ஒப்பமிடுதல் சான்றிதழ் (DSC)

13. உங்கள் படிவத்தை மின்னணு சரிபார்ப்பது கட்டாயமானதா?
இல்லை. உங்கள் தாக்கல் செய்த ITR ஐ சரிபார்க்க ஒரு முறை தான் மின்-சரிபார்த்தல் என்பது. உங்களின் தாக்கல் செய்த ITR-ஐ சரிபார்க்க இரண்டு முறைகளில் ஏதேனும் ஒன்றை நீங்கள் தேர்வு செய்யலாம்:

  • ரிட்டர்ன்களை ஆன்லைனில் மின்-சரிபார்த்தல் செய்யவும், அல்லது
  • உங்கள் முறையாக கையொப்பமிட்ட ITR-V இன் பிரதியை CPC, பெங்களூருக்கு அனுப்பவும்.

14. நான் ITR-ஐ தாக்கல் செய்து, ITR-V இன் அச்சிடப்பட்ட நகலை CPC க்கு அனுப்பியுள்ளேன். இருப்பினும், அவர்கள் ITR-V பெறவில்லை என்றும், தாக்கல் செய்த தேதியிலிருந்து 120 / 30 நாட்கள் கடந்துவிட்டன என்றும் CPCயிடமிருந்து எனக்கு ஒரு அறிவிப்பு வந்தது. நான் என்ன செய்ய வேண்டும்?
ஒரு மன்னிப்பு கோரிக்கை சமர்பித்த பின்பு உங்கள் ITR ஐ ஆன்லைனில் நீங்கள் மின்-சரிபார்த்தல் செய்யலாம்.

15. உள்நுழைவதற்கு முன்பு மின்-சரிபார்த்தல் மற்றும் உள்நுழைந்த பின்பு மின்-சரிபார்த்தல் இரண்டிற்கும் உள்ள வேறுபாடு என்ன?
உங்கள் தாக்கல் செய்த ITR ஐ மின்னணு தாக்கல் முகப்பில் உள்நுழைவதற்கு முன்பு அல்லது பின்பு நீங்கள் மின்-சரிபார்ப்பு செய்யலாம். ஒரே வேறுபாடு என்னவென்றால் உள்நுழைவதற்கு முன்பு சேவையை உபயோகித்தால், ITR மின்-சரிபார்த்தல் செய்வதற்கு முன்பு நீங்கள் உங்களது தாக்கல் செய்த ITR இன் தகவல்களைக் [PAN, மதிப்பீட்டு ஆண்டு மற்றும் ஒப்புதல் எண்] கொடுக்க வேண்டியிருக்கும். உள்நுழைந்த பின்பு சேவையை உபயோகித்தால், ITR ஐ மின் சரிபார்க்கும் முன்பு விவரங்களை கொடுப்பதற்குப் பதிலாகத் தாக்கல் செய்த ITR இன் குறிப்பிட்ட பதிவைத் தேர்ந்தெடுக்க முடியும்.

16 டிஜிட்டல் கையொப்ப சான்றிதழ் மூலம் எனது ITR ஐ நான் மின்-சரிபார்க்கலாமா?
ஆம், மின்னணு-சரிபார்ப்புக்கான வழிகளில் DSC ஒன்றாகும். இருப்பினும், உங்கள் ITR ஐத் தாக்கல் செய்த உடனேயே இலக்கமுறை கையொப்பச் சான்றிதழை (DSC) பயன்படுத்தி மின்னணு சரிபார்ப்பு செய்ய முடியும்.

வருமானவரி அறிக்கைகளை சமர்ப்பிக்கும் பொழுது பின்னர் மின்னணு-சரிபார்க்கவும் விருப்பத்தை நீங்கள் தேர்வு செய்திருந்தால் மின்னணு சரிபார்க்க நீங்கள் DSC ஐ விருப்பத்தேர்வாக தேர்ந்தெடுக்க முடியாது.