e-PAN பற்றி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
கேள்வி 1:
என்னிடம் PAN உள்ளது, ஆனால் நான் அதை இழந்துவிட்டேன். நான் ஆதார் மூலம் புதிய e-PAN ஐ பெற முடியுமா?
பதில்:
இல்லை. உங்களிடம் PAN இல்லை என்றால், பயன்பாட்டில் உள்ள ஆதார் மற்றும் உங்கள் வங்கியில் KYC விவரங்கள் மேம்படுத்தப்பட்டிருந்தால் மட்டுமே இந்தச் சேவையைப் பயன்படுத்த முடியும்.
கேள்வி 2:
இந்த e-PAN எண்ணைப் பெறுவதற்கு ஏதேனும் கட்டணம் உள்ளதா?
பதில்:
இல்லை. இந்தச் சேவை முற்றிலும் இலவசமானது.
கேள்வி 3:
உடனடி e-PAN ஐப் பெற என்னென்ன முன்தேவைகள் தேவைப்படுகின்றன?
பதில்:
உடனடி e-PAN ஐப் பெறுவதற்கான முன்நிபந்தனைகள்:
- இதுவரை PAN ஒதுக்கப்படாத தனிநபர்.
- பயன்பாட்டில் உள்ள ஆதார் எண் மற்றும் ஆதார் என்னுடன் இணைக்கப்பட்ட பயன்பாட்டில் உள்ள அலைபேசி எண்
- கோரிக்கை விடுத்த தேதியில் விண்ணப்பதாரர்/பயனர் சிறாராக இருக்கக் கூடாது; மற்றும்
- வருமானவரிச் சட்டம் பிரிவு 160 இன் கீழ் வரி மதிப்பிடப்படுபவரின் பிரதிநிதி என்ற வரையறைக்குள் பயனர் வராதிருக்க வேண்டும்.
கேள்வி 4:
புதிய e-PAN பெற எனக்கு என்ன ஆவணங்கள் தேவை?
பதில்:
உங்கள் வங்கியில் மேம்படுத்தப்பட்ட KYC விவரங்களுடன் பயன்பாட்டில் உள்ள ஆதார் மற்றும் உங்கள் ஆதாருடன் இணைக்கப்பட்ட பயன்பாட்டில் உள்ள அலைபேசி எண் இருந்தால் மட்டும் போதுமானது.
கேள்வி 5:
நான் ஏன் e-PAN ஐ உருவாக்க வேண்டும்?
பதில்:
உங்கள் வருமானவரிப் படிவத்தைத் தாக்கல் செய்யும் போது அதில் உங்கள் PAN எண்ணைக் குறிப்பிடுவது கட்டாயமாகும் உங்களுக்கு PAN ஒதுக்கப்படவில்லை என்றால், உங்கள் ஆதார் மற்றும் ஆதாருடன் இணைக்கப்பட்ட உங்கள் அலைபேசி எண்ணின் உதவியுடன் உங்கள் e-PAN ஐ உருவாக்கலாம். e-PAN ஐ உருவாக்கும் சேவை இலவசம், இணைய முகப்பில் (ஆன்லைன்) செயல்முறை மற்றும் எந்தப் படிவங்களையும் நிரப்பத் தேவையில்லை.
கேள்வி 6:
எனது PAN ஒதுக்கீடு கோரிக்கையின் தற்போதைய நிலை "PAN ஒதுக்கீடு கோரிக்கை தோல்வியுற்றது" என்ற செய்தியுடன் இருக்கிறது. நான் என்ன செய்ய வேண்டும்?
பதில்:
e-PAN ஒதுக்கீடு தோல்வியடைந்தால், நீங்கள் NSDL அல்லது UTITSL மூலம் PAN-க்கு விண்ணப்பிக்கலாம்.
கேள்வி 7:
எனது e-PAN உருவாக்க கோரிக்கை வெற்றிகரமாக சமர்ப்பிக்கப்பட்டதா என்பதை எப்படி அறிவது?
பதில்:
ஒப்புதல் ID உடன் வெற்றிச் செய்தி காட்டப்படும். எதிர்கால குறிப்புக்காக ஒப்புதல் ID ஐ குறித்து வைத்துக் கொள்ளவும். கூடுதலாக, ஆதாருடன் இணைக்கப்பட்ட உங்கள் அலைபேசி எண்ணில் நிரந்தரக் கணக்கு எண் அடையாள அட்டையின் (ID) நகலைப் பெறுவீர்கள்.
கேள்வி 8:
எனது e-PAN எண்ணில் எனது பிறந்த தேதியை என்னால் மேம்படுத்த முடியவில்லை. நான் என்ன செய்ய வேண்டும்?
பதில்:
உங்கள் ஆதாரில் பிறந்த வருடம் மட்டுமே இருந்தால், உங்கள் ஆதாரில் பிறந்த தேதியை மேம்படுத்தி மீண்டும் முயற்சி செய்யவும்.
கேள்வி 9:
வெளிநாட்டு குடிமக்கள் e-KYC மூலம் PAN க்கு விண்ணப்பிக்க முடியுமா?
பதில்:
இல்லை
கேள்வி 10:
எனது ஆதார் உறுதிப்படுத்தல் e-KYC யின் போது நிராகரிக்கப்பட்டால், நான் என்ன செய்ய வேண்டும்?
பதில்:
தவறான OTP உபயோகிப்பதன் காரணமாக ஆதார் அங்கீகரிப்பு நிராகரிக்கப்படலாம். சரியான ஒரு முறை கடவுச்சொல்லை உள்ளிடுவதன் மூலம் சிக்கலைத் தீர்க்க முடியும். அது இன்னும் நிராகரிக்கப்பட்டால், நீங்கள் UIDAI ஐ தொடர்பு கொள்ள வேண்டும்.
கேள்வி 11:
KYC விண்ணப்பத்தின் நகல் அல்லது ஆதார் அட்டையின் ஆதாரத்தை நான் சமர்ப்பிக்க வேண்டுமா?
பதில்:
இல்லை. இது ஒரு ஆன்லைன் செயல்முறை. காகித நிரூபணங்கள் எதுவும் தேவையில்லை.
கேள்வி 12:
e-KYC க்காக நான் ஸ்கேன் செய்யப்பட்ட புகைப்படம், கையொப்பம் போன்றவற்றை நான் பதிவேற்ற வேண்டுமா?
பதில்:
இல்லை
கேள்வி 13:
நான் நேரில் சரிபார்ப்பு (IPV) செய்ய வேண்டுமா?
பதில்:
இல்லை. இந்தச் செயல்முறை முற்றிலும் ஆன்லைன் செயல்முறையாகும். வருமான வரி அலுவலகத்திற்கோ அல்லது எந்த மையத்திற்கோ செல்ல வேண்டிய அவசியமில்லை.
கேள்வி 14:
எனக்கு PAN அட்டை கிடைக்குமா?
பதில்:
அட்டையாகக் கிடைக்காது. PAN இன் மின்னணு வடிவமான e-PAN உங்களுக்கு வழங்கப்படும்.
கேள்வி 15:
நான் எப்படி PAN அட்டையைப் பெறுவது?
பதில்:
ஒரு PAN ஒதுக்கீடு செய்யப்பட்டால், கீழே உள்ள இணைப்புகள் மூலம் ஒரு கோரிக்கையைச் சமர்ப்பிப்பதன் மூலம் ஒரு அச்சிடப்பட்ட PAN அட்டையைப் பெறலாம்.
https://www.onlineservices.nsdl.com/paam/ReprintEPan.html
https://www.utiitsl.com/UTIITSL_SITE/mainform.html
ஒரு PAN அட்டையைப் பெற நீங்கள் PAN ஐ பெற்றுத் தரும் சேவை முகவர்களுடன் அஞ்சல் மூலம் (ஆஃப்லைன்) முறையிலும் விண்ணப்பத்தைத் தாக்கல் செய்யலாம்.
கேள்வி 16:
எனது ஆதார் எண் ஏற்கனவே ஒரு PAN உடன் இணைக்கப்பட்டுள்ளது, நான் உடனடி e-PAN எண்ணிற்கு விண்ணப்பிக்க முடியுமா?
பதில்:
ஏற்கனவே ஒரு PAN உங்களுக்கு ஒதுக்கப்பட்டால், அது உங்கள் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டிருந்தால், நீங்கள் e-PANக்கு விண்ணப்பிக்க முடியாது. உங்கள் ஆதார் தவறான PAN எண்ணுடன் இணைக்கப்பட்டிருந்தால், PAN எண்ணிலிருந்து ஆதார் எண்ணைப் பிரிப்பதற்காக உங்கள் இடத்தின் அதிகார வரம்பு வருமானவரி மதிப்பீட்டு அதிகாரிக்கு (JAO) ஒரு கோரிக்கையைச் சமர்ப்பிக்கவும். ஆதாருடன் இணைக்கப்பட்ட PAN எண்ணின் இணைப்பு நீக்கப்பட்ட பிறகு, உடனடி e-PAN எண்ணிற்கான கோரிக்கையை சமர்ப்பிக்கவும்.
மதிப்பீட்டு அதிகாரி (AO) இன் தொடர்பு விவரங்களை அறிய பார்வையிடவும்:
https://eportal.incometax.gov.in/iec/foservices/#/pre-login/knowYourAO
கேள்வி 17:
எனது ஆதார் அட்டையில் உள்ள பெயர்/பிறந்த தேதி/பாலினம் தவறாக இருப்பதால் அல்லது எனது ஆதார் எண் எந்தவொரு செயலில் உள்ள அலைபேசி எண்ணுடன் இணைக்கப்படாததால் உடனடி e-PANக்கு விண்ணப்பிக்க முடியாது. நான் என்ன செய்ய வேண்டும்?
பதில்:
உங்கள் ஆதார் தரவுத்தளத்தில் உள்ள விவரங்களை சரிசெய்ய வேண்டும். உங்கள் ஆதார் விவரங்களை நீங்கள் சரிசெய்யலாம்:
- UIDAI வலைத்தளம் (https://uidai.gov.in/my-aadhaar/update-aadhaar.html).
ஒருவேளை கேள்வி/உதவி தேவைப்பட்டால், 18003001947 அல்லது 1947 என்ற கட்டணமில்லாத் தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொள்ளவும்.
ஆதாரில் அலைபேசி எண்ணை மேம்படுத்த நீங்கள் அருகிலுள்ள ஆதார் பதிவு மையத்தைப் பார்வையிட வேண்டும்.
பொறுப்புத்துறப்பு: இந்த அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள், தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே. இந்த ஆவணத்தில் எதுவும் சட்ட ஆலோசனையாக இல்லை.