Do not have an account?
Already have an account?

1. எனது வருமானவரி அறிக்கையின் நிலையை சரிபார்க்க வேண்டியது ஏன் முக்கியம்?

வருமானவரி அறிக்கை நிலை என்பது வருமானவரி அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட பிறகு அதன் தற்போதைய நிலை / கட்டத்தை காட்டுகிறது. உங்கள் வருமானவரி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டவுடன், அது வருமானவரித் துறையால் ஏற்றுக்கொள்ளப்பட்டு செயல்படுத்தப்பட்டதா என்பதை நீங்கள் சரிபார்க்கலாம். சில சந்தர்ப்பங்களில், சில முரண்பாடுகள் காணப்படும்போது, வருமான வரித் துறை யிலிருந்து வரும் தொடர்புகளுக்கு நீங்கள் பதிலளிக்க வேண்டியிருக்கும். எனவே, உங்கள் வருமானவரி அறிக்கையின் நிலையை அவ்வப்போது சரிபார்க்க அறிவுறுத்தப்படுகிறது.


2. பல்வேறு வகையான வருமானவரி அறிக்கை நிலைகள் என்ன?

  • சமர்ப்பிக்கப்பட்டது மற்றும் மின்னணு-சரிபார்ப்பு/சரிபார்ப்பிற்காக நிலுவையில் உள்ளது : இந்த நிலையில் நீங்கள் உங்கள் ITR ஐத் தாக்கல் செய்து விட்டீர்கள் ஆனால் மின்னணு முறையில் இன்னும் சரிபார்க்கவில்லை, அல்லது நீங்கள் கையொப்பமிட்ட ITR-V இன்னும் CPC இல் கிடைக்கப்பெறவில்லை.
  • வெற்றிகரமாக மின்னனு-சரிபார்க்கப்பட்டது / சரிபார்க்கப்பட்டது : இந்த நிலையில் உங்கள் வருமானவரி அறிக்கையை நீங்கள் சமர்ப்பித்து முறையாக மின்னணு-சரிபார்ப்பு / சரிபார்ப்பு செய்துவிட்டீர்கள், ஆனால் வருமானவரி அறிக்கை இன்னும் செயலாக்கப்படவில்லை.
  • செயலாக்கப்பட்டது: இந்த நிலையில் உங்கள் வருமானவரி அறிக்கை வெற்றிகரமாக செயலாக்கப்பட்டு விட்டது.
  • குறைபாடுள்ளது: இந்த நிலையில் தாக்கல் செய்யப்பட்ட ரிட்டர்னில் சட்டத்தின் கீழ் சில அவசியமான தகவல்கள் இல்லாமல் இருத்தல் அல்லது சில முரண்பாடுகளை துறையானது கண்டுபிடிக்கும். அத்தகைய சந்தர்ப்பத்தில், அறிவிப்பு கிடைத்த நாளிலிருந்து ஒரு குறிப்பிட்ட கால வரம்பிற்குள் குறைகளை சரிசெய்யுமாறு பிரிவு 139 (9) இன் கீழ் நீங்கள் ஓர் அறிவிப்பைப் பெறுவீர்கள். குறைபாடுள்ள வருமானவரி அறிக்கை நிலைக்கு நீங்கள் பதிலளிக்கவில்லை என்றால், உங்கள் வருமானவரி அறிக்கை தவறானது என்று கருதப்படும், மேலும் செயலாக்கத்திற்கு இது எடுக்கப்படாது.
  • வழக்கு மதிப்பீட்டு அலுவலருக்கு மாற்றப்பட்டது: CPC உங்கள் ITR-ஐ உங்கள் அதிகார வரம்பிற்குட்பட்ட AOவுக்கு மாற்றிய நிலை இதுதான். உங்கள் வழக்கு உங்கள் மதிப்பீட்டு அலுவலருக்கு மாற்றப்பட்டால், தேவையான விவரங்களை வழங்குமாறு அலுவலரால் நீங்கள் தொடர்பு கொள்ளப்படுவீர்கள்.

3. என்னுடைய அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதி / ERI எனது ITR நிலையை அவருடைய உள்நுழைவு விவரங்களைக் கொண்டு அணுக முடியுமா?

ஆம், அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதி / ERIகளால் தாக்கல் செய்யப்பட்ட ITRகளுக்கு, அது உங்களுக்கும் உங்கள் அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதி / ERIக்கும் காண்பிக்கப்படும். உங்கள் சொந்த வருமானவரி அறிக்கையை (பதிவுசெய்த வரி செலுத்துவோராக) நீங்கள் தாக்கல் செய்தால், அதன் நிலை உங்கள் மின்னணு தாக்கல் கணக்கில் மட்டுமே உங்களுக்குக் காண்பிக்கப்படும்.


4. பதிவுசெய்யப்பட்ட வரி செலுத்துவோராக எனது வருமானவரி அறிக்கை நிலையை பார்ப்பதற்காக மட்டுமே வருமானவரி அறிக்கை நிலை சேவை உள்ளதா?

இல்லை. உங்கள் ITR இன் நிலையைப் பார்ப்பது தவிர, உங்கள் வருமான வரி அறிக்கைகளின் விவரங்களைக் காணலாம்:

  • உங்கள் ITR-V ஒப்புதல், பதிவேற்றப்பட்ட JSON [ஆஃப்லைன் பயன்பாட்டில் இருந்து], PDF இல் முழுமையான ITR படிவம் மற்றும் அறிவிப்பு ஆணையைப் பார்த்து பதிவிறக்குங்கள்,
  • சரிபார்ப்புக்காக நிலுவையில் உள்ள உங்கள் வருமானத்தை(களை) காண்க, மேலும் உங்கள் வருமானத்தை(களை) மின்னணு-சரிபார்க்க கூடுதல் நடவடிக்கை எடுக்கவும்.

5. எனது வருமானவரி அறிக்கை நிலையை சரிபார்க்க நான் உள்நுழைய வேண்டுமா?

இல்லை, ITR நிலை உள்நுழைவதற்கு முன்பும் பின்பும் சரிபார்க்கலாம். உள்நுழைந்த பிறகு உங்கள் ITR நிலையை சரிபார்த்தால், தாக்கல்/அறிவிப்பைப் பதிவிறக்குவது போன்ற கூடுதல் தகவல்களைப் பெறலாம்.

6. ITR நிலை சேவை மூலம், கடைசியாக தாக்கல் செய்த வருமானவரி அறிக்கையை மட்டும் பார்க்க முடியுமா அல்லது அதற்கு முந்தைய வருமானவரி அறிக்கைகளையும் பார்க்கலாமா?

உங்கள் கடந்த கால தாக்கல்களையும் மற்றும் தற்போதைய தாக்கல்களையும் நீங்கள் காணலாம்.

7. உள்நுழையாமல் எனது வருமானவரி அறிக்கை நிலையைக் காண மின்னணு தாக்கல் இணைய முகப்பில் (போர்ட்டலில்) பதிவுசெய்யப்பட்ட எனது அலைபேசி எண் தேவையா?

இல்லை, உள்நுழையாமல் உங்கள் வருமானவரி அறிக்கை நிலையைக் காண எந்தவொரு செல்லுபடியாகும் அலைபேசி எண்ணையும் பயன்படுத்தலாம். இருப்பினும், நீங்கள் உள்நுழையாமல் இந்த சேவையைப் பயன்படுத்துகிறீர்கள் என்றால் நீங்கள் சரியான வருமானவரி அறிக்கை ஒப்புகை எண்ணை உள்ளிட வேண்டும்.

8. எனது வாழ்க்கைத்துணையின் வருமானவரி அறிக்கை நிலையைப் பார்க்க விரும்புகிறேன். நான் அதை செய்ய முடியுமா?

உங்கள் வாழ்க்கைத்துணையின் வருமானவரி அறிக்கை நிலையை பின்வரும் வழிகளில் பார்க்கலாம்:

  • உள்நுழைவதற்கு முன்பு: மின்னணு தாக்கல் முகப்புப் பக்கத்தில், ITR நிலையைப் பார்க்கவும் என்பதை கிளிக் செய்யவும். உங்களுக்கு அவரது வருமானவரி அறிக்கை ஒப்புகை எண் மற்றும் செல்லுபடியாகும் அலைபேசி எண் தேவைப்படும்.
  • பின்-உள்நுழைவு:
    • உங்கள் வாழ்க்கைத்துணையின் ITR ஐ அங்கீகரிக்கப்பட பிரதிநிதி/அங்கீகரிக்கப்பட்ட கையொப்பமிடுபவராக நீங்கள் தாக்கல் செய்திருந்தால், ITR நிலையை நீங்கள் மற்றும் உங்கள் வாழ்க்கைத்துணை இருவரும் பார்க்கலாம்.
    • உங்கள் வாழ்க்கைத்துணை அவரது ITR ஐ அவரே தாக்கல் செய்திருந்தால், அவருடைய சொந்த மின்னணு தாக்கல் கணக்கில் நிலையை அவர் பார்ப்பார்.

9. எனது ITR நிலையை சரிபார்க்கும் போது எனது ஒப்புகை எண்ணை எங்கு உள்ளிடவேண்டும்?

  • உங்கள் ரிட்டர்னை மின்னணு தாக்கல் செய்த பிறகு உங்கள் பதிவுசெய்யப்பட்ட மின்னஞ்சல் முகவரிக்கு பெறப்பட்ட ITR-V இல் இருந்து உங்கள் ஒப்புதல் எண்ணை சரிபார்க்கலாம். உங்கள் ITR-V ஐ மின்னணு-தாக்கல் இணைய முகப்பில் உள்நுழைந்த பின் பதிவிறக்கம் செய்யலாம்: மின்னணு-தாக்கல் > வருமான வரி அறிக்கைகள் > தாக்கல் செய்யப்பட்ட அறிக்கைகளைப் பார்க்கவும் > பதிவிறக்க ரசீது விருப்பத்தைப் பார்க்கவும்.
  • நிரப்பப்பட்டப் படிவங்களைப் பார்க்கவும் சேவை மூலம் மின்னணு-தாக்கல் முகப்பில் தாக்கல் செய்த ITR இன் ஒப்புதல் எண்ணை நீங்கள் சரிபார்க்கலாம் [உள்நுழைந்த பின்பு].