1. மூலத்தில் வரி பிடிப்புக் கணக்கு எண் (TAN) என்றால் என்ன?
TAN என்பது வரி பிடித்தம் மற்றும் வரி வசூலித்தல் கணக்கு எண்ணை குறிக்கிறது. இது வருமான வரித் துறை (ஐடிடி) (ITD) வழங்கிய 10-இலக்க எழுத்து -எண்ணுரு வகை எண்.
2. TAN ஐ யார் பெற வேண்டும்?
மூலத்தில் வரியை பிடித்தம் செய்வதற்கு பொறுப்பான அல்லது மூலத்தில் வரி வசூலித்தலுக்கு பொறுப்பான அனைத்து நபர்களும் TAN ஐப் பெற வேண்டும். TDS/TCS அறிக்கை, TDS/TCS கட்டணம் செலுத்துச் சீட்டு, TDS/TCS சான்றிதழ்கள் மற்றும் ITD தகவல் தொடர்பில் குறிப்பிட்டுள்ள பிற ஆவணங்களில் TAN ஐக் குறிப்பிடுவது கட்டாயமாகும். இருப்பினும், பிரிவு 194IA அல்லது பிரிவு 194IB அல்லது பிரிவு 194M இன் படி TDS-ஐக் பிடித்தம் செய்ய வேண்டிய ஒருவர், TAN க்கு பதிலாக PAN ஐ மேற்கோள் காட்டலாம்.
3. "TAN விவரங்களை அறிந்து கொள்ளுங்கள்" சேவையை பயன்படுத்த நான் மின்னணு-தாக்கல் இணைய முகப்பில் பதிவுசெய்த பயனராக இருக்க வேண்டுமா?
இல்லை. பதிவு செய்யப்பட்ட மற்றும் பதிவு செய்யப்படாத பயனர்கள் இருவரும் இந்தச் சேவையை உபயோகிக்கலாம். முகப்புப்பக்கத்தில் TAN விவரங்களை அறிந்து கொள்ளுங்கள் என்பதைக் கிளிக் செய்வதன் மூலம் மின்னணு-தாக்கல் இணைய முகப்பில் உள்நுழைவுக்கு முன்பு அணுகலாம்.
4. எனது வரி பிடித்தம் செய்பவர் TAN விவரங்களை நான் எந்த நோக்கத்திற்காக பயன்படுத்த வேண்டும்?
உங்கள் சார்பாக மூலத்திலிருந்து வரி பிடிக்கும் (TDS என அழைக்கப்படும்) எந்தவொரு நபரின் TAN ஐ சரிபார்ப்பது இது ஒரு நல்ல நடைமுறை. உங்கள் படிவம் 16/16A/26AS பார்க்கவும், நிதியாண்டிற்கான TDS விவரங்களை அதில் காண்பீர்கள். TAN விவரங்களை அறிந்து கொள்ளுங்கள் என்ற சேவையை பயன்படுத்தி, சரியான நபரால் பணம் பிடிக்கப்பட்டுள்ளதா என்பதை நீங்கள் சரிபார்க்கலாம். மேலும், ஏதேனும் TDS இருந்தால், உங்கள் வருமானவரி அறிக்கைகளை தாக்கல் செய்யும்பொழுது TAN ஐ குறிப்பிட வேண்டும்.
5. எனக்கு பணி வழங்கியவர் TAN ஐ பெற்றிருக்கவில்லை என்றால் என்ன செய்வது?
வருமானவரிச் சட்டம், 1961-இன் தொடர்புடைய பிரிவின் கீழ் TAN ஐ பெற மற்றும்/அல்லது குறிப்பிட தவறியதற்காக பணி வழங்குபவருக்கு அபராதம் விதிக்கப்படும். மேலும், பணி வழங்குபவர் TDS தொகையை வங்கியில் செலுத்த இயலாது (பிடித்தம் செய்யப்பட்டிருந்தால்) அத்துடன் அதற்கான TDS அறிக்கையையும் தாக்கல் செய்ய முடியாது. உங்கள் ஊதியம் வரி விதிக்கக்கூடிய வரம்பிற்குள் இருந்தாலோ, உங்களது பணி வழங்குபவர் TDS பிடித்தம் செய்யவில்லை என்றாலோ, நீங்கள் சுய மதிப்பீட்டு வரி மற்றும்/அல்லது முன்கூட்டியே செலுத்தும் வரி இவற்றில் எது பொருந்துமோ அதை செலுத்த வேண்டியிருக்கும்.
6. அரசாங்கத்தில் வரிப் பிடித்தம் செய்பவர்கள் TANக்கு விண்ணப்பிப்பது கட்டாயமா?
ஆம்,
7. மூலத்திலிருந்து வரி வசூலிக்க, தனியாக TAN ஐ பெறுவது அவசியமா?
ஒருவேளை ஏற்கனவே TAN ஒதுக்கப்பட்டிருந்தால், TAN பெறுவதற்கு தனியாக விண்ணப்பிக்க வேண்டிய அவசியமில்லை. TCSக்கான அனைத்து வருமானவரி அறிக்கை, செலுத்துச் சீட்டு மற்றும் சான்றிதழ்களில் ஒரே எண்ணை மேற்கோள் காட்டலாம்.