Do not have an account?
Already have an account?

1. நான் மின்னணு-தாக்கல் முகப்பு பக்கத்தில் பதிவு செய்த மாத ஊதியம் பெறும் பணியாளர். மின்னணு-தாக்கல் இணைய முகப்பில் எனது வரி தொடர்பான அனைத்துத் தகவல்களையும் எங்கே அணுகுவது?
உங்கள் வரி தொடர்பான அனைத்து தகவல்களையும், செய்ய வேண்டிய விஷயங்களையும் உங்களின் மின்னணு-தாக்கல் முகப்புப் பலகையில் அணுகலாம். உங்கள் வருமானவரி சேவைகளுக்குத் தேவைப்படும் முக்கியமான இணைப்புகளை முகப்புப் பலகை கொண்டுள்ளது. மேலோட்டமாக, நீங்கள் பின்வருவனவற்றைச் செய்யலாம்

  • உங்களின் செல்லுபடியாகும் நிரந்தரக் கணக்கு எண் (PAN), ஆதார் மற்றும் புகைப்படத்துடன் உங்கள் சுயவிவரத்தைப் புதுப்பித்தல்.
  • உங்கள் ஆதார் மற்றும் நிரந்தரக் கணக்கு எண்ணை (PAN) இணைத்தல்.
  • உங்கள் தொடர்பு விவரங்களைப் பார்த்து புதுப்பித்தல்.
  • மின்னணு-தாக்கல் பெட்டக உயர் பாதுகாப்பு சேவையை உபயோகித்து உங்கள் கணக்கைப் பாதுகாத்தல்.
  • வரி நிலுவைத் தொகைக்கு பதிலளித்தல் மற்றும் பார்த்தல்.
  • பல நிதி ஆண்டுகள் (FY) / மதிப்பீட்டு ஆண்டுகளுக்கான (AY) உங்கள் வருமான வரிப் பேரேட்டைப் பார்த்தல்.
  • வருமான வரிப் படிவம் (ITR) தாக்கல் செய்தல் தொடர்பாக நீங்கள் செய்யவேண்டிய செயல்களைப் பார்த்து அதற்குப் பதிலளித்தல்.
  • நீங்கள் தாக்கல் செய்த படிவங்களின் நிலையைப் பார்த்தல், திரும்ப வரவேண்டிய உபரி வரித்தொகை மற்றும் மதிப்பிடப்பட்ட செலுத்த வேண்டிய வரித்தொகை உள்ளிட்டவற்றை பார்க்க.
  • திருத்தப்பட்ட வருமானவரிப் படிவத்தைத் தாக்கல் செய்தல் மற்றும் தாக்கல் செய்த வருமானவரிப் படிவங்களைப் பதிவிறக்குதல்
  • உங்கள் வரி வைப்பு விவரங்களான மூலத்தில் பிடித்தம் செய்யப்பட்ட வரி (TDS), மதிப்பீட்டுக்கு முன் கட்டிய வரி மற்றும் சுய மதிப்பீட்டு வரி போன்றவற்றைப் பார்க்க
  • உங்கள் நிலுவையிலுள்ள உள்ள செயல்களுக்குப் பதிலளித்தல்.
  • கடந்த 3 ஆண்டு அறிக்கைகள் மற்றும் சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்ட படிவங்களை பார்க்கவும்.
  • உங்கள் குறை நிவர்திக் கோரிக்கை விவரங்களைப் பார்த்தல்.


2. நான் ஒரு வரி செலுத்துபவர். எனது மின்னணு-தாக்கல் பணிப்பட்டியலில் எனக்குக் கிடைக்கும் சேவைகள் யாவை?
தனிநபர் வரி செலுத்துவோர், HUF, நிறுவனம், அமைப்பு, அறக்கட்டளை, AJP, AOP, BOI, உள்ளாட்சி அதிகாரம், மத்திய மற்றும் மாநில அரசு ஆகியோருக்கு அவர்களின் மின்னணு-தாக்கல் பணிப்பட்டியலில் பின்வரும் சேவைகள் கிடைக்கின்றன:

  • உங்கள் செயலுக்காக :
    • ஒப்புதலுக்காக நிலுவையில் உள்ள படிவங்கள்
    • திரும்ப வழங்கப்படாமல் நிலுவையில் இருக்கும் உபரி வரி
    • வருமான வரித் துறைக்கு அறிக்கை அளிப்பவரின் அடையாள எண்ணுக்கான (ITDREIN) கோரிக்கை
    • மின்னணு-சரிபார்ப்புக்காக நிலுவையில் உள்ளது / ITR-V பெறப்படாதவை / நிராகரிக்கப்பட்டவை
    • அங்கீகரிக்கப்பட்ட கையொப்பமிடுபவராக உங்களைச் சேர்ப்பதற்கான நிலுவையில் உள்ள கோரிக்கைகள் (தனிநபர் வரி செலுத்துவோருக்கு மட்டும்)
    • அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதியாக உங்களை சேர்ப்பதற்கான நிலுவையில் உள்ள கோரிக்கைகள் (தனிநபர் வரி செலுத்துவோருக்கு மட்டும் )
    • தாக்கல் செய்ய வேண்டிய கடைசித் தேதிக்குப் பிறகு பெறப்பட்ட ITR-V
    • தாக்கல் செய்வதற்கு நிலுவையில் உள்ளவை
    • வரிப் பிடித்தம் செய்பவர் மற்றும் வரி வசூலிப்பவர் பதிவின் ஒப்புதல் மற்றும் மாற்றம் (நிறுவனத்தின் PAN)
  • உங்கள் தகவலுக்காக:
    • பதிவேற்றிய படிவ விவரங்களைப் பார்த்தல்
    • பிரதிநிதித்துவ வரி செலுதுபவராக சேர்ப்பதற்கு சமர்ப்பிக்கப்பட்ட கோரிக்கைகள்
    • அங்கீகரிக்கப்பட்ட கையொப்பமிடுபவராக சேர்ப்பதற்காக சமர்ப்பிக்கப்பட்ட கோரிக்கைகள்
    • அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதியாக சேர்ப்பதற்காக சமர்ப்பிக்கப்பட்ட கோரிக்கைகள்
    • பெறப்பட்ட அங்கீகரிக்கப்பட்ட கையொப்பமிடுபவரின் கோரிக்கைகள் (தனிநபர் வரி செலுத்துவோருக்கு மட்டும்)
    • பெறப்பட்ட அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதியின் கோரிக்கைகள் (தனிநபர் வரி செலுத்துவோருக்கு மட்டும்)
    • வருமான வரித் துறை அறிக்கை அளிப்பவரின் அடையாள எண்ணுக்கான ITDREIN கோரிக்கை விவரங்களைப் பார்த்தல் (அறிக்கை அளிக்கும் நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்ட நிரந்தரக் கணக்கு எண் (PAN) என சேர்க்கப்படும் தனிநபர்களுக்கு)
    • அங்கீகரிக்கப்பட்ட / நிராகரிக்கப்பட்ட TAN பதிவு விவரங்களைப் பார்த்தல் (நிறுவன PANக்கு)


3. எனது முகப்புப் பலகையைப் பார்க்க நான் உள்நுழைய வேண்டுமா?
ஆம், மின்னணு-தாக்கல் இணைய முகப்பில் உள்நுழைந்த பிறகே முகப்புப் பலகையைப் பார்க்க முடியும், மேலும் அதில் உள்நுழைந்த PANக்கான தகவல்கள் மட்டுமே இருக்கும்.

4. புதிய மின்னணு-தாக்கல் இணைய முகப்பில் உள்ள முகப்புப் பலகையில் என்ன வித்தியாசம் உள்ளது?
முந்தைய மின்னணு-தாக்கல் இணைய முகப்பில் வரி செலுத்துவோருக்கு இரண்டு செயல்பாடுகள் இருந்தன: வருமானவரி படிவத்தைத் தாக்கல் செய்தல் மற்றும் மின்னணு முறையில் தாக்கல் செய்யப்பட்ட வருமானவரி படிவங்கள் / பிற படிவங்களைப் பார்த்தல். புதிய மின்னணு-தாக்கல் இணைய முகப்பில், முகப்புப் பலகையில் இன்னும் பல சேவைகள் உள்ளன. இது உங்கள் சுயவிவரம், பதிவுசெய்யப்பட்ட தொடர்பு விவரங்கள், வருமானவரிப் படிவத்தின் நிலை, வருமானவரித் துறைக்கு முன்னதாகச் செலுத்திய வரி வைப்புகள், நிலுவையில் உள்ள செயல்கள், சமீபத்தில் தாக்கல் செய்தவைகள் மற்றும் குறைகள் ஆகியவற்றின் விவரங்களை வெளிப்படையாகக் காண்பிப்பதால் இதை எளிதில் அணுக முடியும்.

5. எனது PAN செயல்படவில்லை அல்லது ஆதாருடன் இணைக்கப்படவில்லை. முகப்புப்பலகையில் கிடைக்கும் பல்வேறு சேவைகளை நான் அணுக முடியுமா?

உள்ளிடப்பட்ட PAN செயல்படாதபோது, சில அணுகல்கள் மட்டுப்படுத்தப்படலாம்/குறைக்கப்படலாம். செயல்படாத PAN உடன் உள்நுழைந்த பிறகு, முகப்புப்பலகையில் கீழே உள்ள எச்சரிக்கை பாப்-அப் காண்பிக்கப்படும் : “உங்கள் PAN உங்கள் ஆதாருடன் இணைக்கப்படாததால் செயலற்றதாக ஆக்கப்பட்டுள்ளது. சில அணுகல்கள் குறைவாக இருக்கலாம். 234H பிரிவின் கீழ் தேவையான கட்டணங்களை செலுத்திய பிறகு உங்கள் PAN எண்ணை இணைத்து செயல்படுத்தலாம்.”

6. PAN செயல்படாதபோது பயனருக்கு எவ்வாறு அறிவிக்கப்படும்?

பயனர் உள்நுழைந்த மின்னணு-தாக்கல் இணைய முகப்பில் அல்லது முகப்புப்பலகை பக்கத்தை அடைந்ததும் "உங்கள் PAN உங்கள் ஆதாருடன் இணைக்கப்படாததால் செயலற்றதாக ஆக்கப்பட்டுள்ளது" என்ற பாப்-அப் மற்றும் டிக்கர் செய்தி காண்பிக்கப்படும்.