1. மின்னணு-தாக்கல் பெட்டகம் என்றால் என்ன?
பதிவு செய்துகொண்ட பயனர்களுக்கு தங்கள் மின்னணு-தாக்கல் கணக்குகளில், உயர் பாதுகாப்பு மின்னணு-தாக்கல் பெட்டக வசதி இரண்டு காரணி அங்கீகாரத்துடன் கிடைக்கிறது. இது உங்கள் மின்னணு-தாக்கல் கணக்கில் உள்நுழைய / அல்லது கடவுச் சொல்லை மீட்டமைக்க பயன்படுத்தப்படலாம். மின்னணுத் தாக்கல் பெட்டக சேவையைப் பயன்படுத்துவது கட்டாயமில்லை என்றாலும், உங்கள் மின்னணுத் தாக்கல் கணக்கைப் பெறுவதற்கு அதைப் பயன்படுத்த பரிந்துரைக்கப்படுகிறது.
2. இரண்டு-காரணி அங்கீகாரம் என்றால் என்ன?
இரண்டாம் காரணி அங்கீகாரம் என்பது உங்கள் மின்னணு-தாக்கல் கணக்கிற்கு உயர் நிலை பாதுகாப்புகளை செயல்படுத்துவதற்கான செயல்முறையாகும். இது மின்னணுத் தாக்கல் முகப்பில் பதிவு செய்யப்பட்ட பயனர் ID மற்றும் கடவுச்சொல்லை சரிபார்ப்பதைத் தவிர மற்றொரு நிலை பாதுகாப்பையும் உறுதி செய்கிறது. மின்னணு-தாக்கல் பெட்டக சேவையைப் பயன்படுத்தி, உள்நுழைய முயற்சிக்கும் போதெல்லாம் இயல்புநிலையாக தோன்றும் உள்நுழைவு விருப்பத்தை நீங்கள் தேர்வு செய்யலாம்.
3. எனது மின்னணுத் தாக்கல் கணக்குக்கு உயர் பாதுகாப்பை நான் எவ்வாறு செயல்படுத்த முடியும்?
நீங்கள் பின்வரும் வழிகளில் ஏதாவது ஒன்றின் மூலம் உயர் பாதுகாப்பை இரண்டு-காரணி அங்கீகாரத்தின் வடிவில் செயல்படுத்தலாம்
- இணைய வங்கி சேவை
- மின்னணு பாதுகாப்புச் சான்றிதழ் (டி.எஸ்.சி)
- ஆதாரில் பதிவு செய்யப்பட்ட அலைபேசி எண்ணில் ஒரு முறை கடவுச் சொல்
- வங்கிக் கணக்கு EVC
- டீமேட் கணக்கு EVC
4. எனது மின்னணு-தாக்கல் கணக்கின் உயர் பாதுகாப்பை நான் செயல்படுத்த முடியுமா?
நீங்கள் மின்னணு-தாக்கல் முகப்பில் பதிவு செய்து கொண்ட பயனர் என்றால், மின்னணு தாக்கல் பெட்டகத்தை பயன்படுத்தி உங்கள் மின்னணு-தாக்கல் கணக்கின் உயர் பாதுகாப்பை செயல்படுத்தலாம்.
5. உயர் பாதுகாப்புத் தெரிவுகளில் ஒன்றை நான் தேர்ந்தெடுக்காவிட்டால் நான் எவ்வாறு உள்நுழைவேன்?
உயர் பாதுகாப்புக்கான எந்தவொரு விருப்பங்களையும் நீங்கள் தேர்வு செய்யவில்லை என்றால், இயல்புநிலை பயனர் ID மற்றும் கடவுச்சொல்லைப் பயன்படுத்தி நீங்கள் உள்நுழையலாம் மற்றும் பல்வேறு உள்நுழைவு முறைகளில் ஒன்றில் உள்நுழையலாம். மேலும் கற்றுக்கொள்ள உள்நுழைவு பயனர் கையேட்டைப் பார்க்கவும்.
6. மின்னணு-தாக்கல் பெட்டகத்தில் உள்ள கடவுச்சொல்லை மாற்றியமைக்கும் விருப்பத்தேர்வுகளுள் எந்த ஓன்றையும் நான் தேர்வு செய்யவில்லை என்றால் எனது கடவுச்சொல்லை எவ்வாறு மாற்றியமைப்பது?
நீங்கள் ஒரு மின்னணு-தாக்கல் பெட்டகத்தின் கடவுச்சொல்லை மாற்றி அமைக்கும் விருப்பத்தெரிவு எதையும் தேர்வு செய்யவில்லை எனில், ஆதார் OTP/ மின்னணு-தாக்கல் OTP ஐப் பயன்படுத்தலாம். மேலும் விவரங்கள் அறிய படிப்படியான வழிகாட்டுதலுக்கு கடவுச்சொல்லை மறந்துவிட்டால் பற்றிய பயனர் கையேட்டைப் பார்க்கவும்.
7. மின்னணு-தாக்கல் பெட்டகத்திற்கு ஒன்றுக்கு மேற்பட்ட பாதுகாப்பு முறைகளை நான் பயன்படுத்தலாமா?
உள்நுழைய மற்றும் கடவுச்சொல்லை பல்வேறு உயர் பாதுகாப்பு வாய்ப்புகள் இருந்தாலும் உள்நுழைதல் மற்றும் கடவுச்சொல்லை மாற்றியமைத்தல் ஆகியவற்றில் எதாவது ஒன்றைத்தான் பயன்படுத்த முடியும்.
8. புதிய மின்னணு-தாக்கல் முகப்பில் நான் உயர் பாதுகாப்பு பெட்டக விருப்பத்தை மீண்டும் தேர்வு செய்ய வேண்டுமா அல்லது பழைய மின்னணு-தாக்கல் முகப்பில் உள்ளதே போதுமானதா ?
தொழிநுட்ப காரணங்களால் தகவல்கள் புதிய மின்னணு-தாக்கல் முகப்பிற்கு மாற்றப்படவில்லை. எனவே உயர் பாதுகாப்பு பெட்டக விருப்பத்தை மீண்டும் தேர்வு செய்ய வேண்டும். நீங்கள் மின்னணு பாதுகாப்புச் சான்றிதழை (DSC) உயர் பாதுகாப்பு பெட்டக விருப்பாக தேர்வு செய்ய விருப்பினால், புதிய மிண்ணனு-தாக்கல் முகப்பில் DSC பதிவு செய்யப்படவேண்டும்