மின்னணு-தாக்கல் முகப்பில் பதிவு செய்யவும்: மின்னணு தாக்கல் இடையீட்டாளர்களுக்கு (ERI களுக்கு)
படிப்படியான வழிகாட்டுதல்
1.1 மின்னணு தாக்கல் இடையீட்டாளர் (ERI) பதிவுக்கான வேண்டுகோளை சமர்ப்பிக்கவும்
படி 1: மின்னணு-தாக்கல் முகப்பின் முதன்மை பக்கத்துக்கு சென்று பதிவு செய் என்பதை கிளிக் செய்யவும்.
படி 2: மற்றவை தத்தல் இல், வகை கீழிறங்கலில் இருந்து மின்னணு-தாக்கல் இடையீட்டாளர் என்பதை தேர்ந்தெடுக்கவும்.
படி 3: புதிய விண்ணப்பதாரராக பதிவு செய்யவும் மற்றும் பொருந்தக்கூடிய மின்னணு தாக்கல் இடையீட்டாளர் (ERI) வகை முதலியவற்றைத் தேர்ந்தெடுக்கவும். தொடரவும் என்பதைச் சொடுக்குக.
படி 4: மின்னணு-தாக்கல் இடையீட்டாளர்பக்கத்தில் பதிவு செய்து, நீங்கள் மின்னணு தாக்கல் இடையீட்டாளர் (ERI) ஆக பதிவு செய்ய விரும்பும் நிரந்தர கணக்கு எண்/வரி பிடித்தம் & வசூல் கணக்கு எண் (PAN / TAN ஐ) உள்ளிட்டு, சரிபார் என்பதைக் கிளிக் செய்யவும்.
படி 5: வெற்றிகரமாக சரிபார்ப்பு செய்தவுடன், உள்ளிட்ட நிரந்தர கணக்கு எண்/வரி பிடித்தம் & வசூல் எண் (PAN / TAN) (இந்த PAN / TAN முன்னரே மின்னணு-தாக்கல் முகப்பில் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும்) பதிவு செய்யப்பட்ட அலைப்பேசி எண்ணுக்கு 6-இலக்க ஒற்றை பயன்பாட்டு கடவுச் சொல் (OTP) அனுப்பப்படும். ஒற்றை பயன்பாட்டு கடவுச் சொல்லை (OTP ஐ) உள்ளிட்டு தொடரவும் என்பதை கிளிக் செய்யவும்.
குறிப்பு:
- 15 நிமிடங்களுக்கு மட்டுமே ஒற்றை பயன்பாட்டு கடவுச் சொல் (OTP) செல்லுபடியாகும்
- சரியான ஒற்றை பயன்பாட்டு கடவுச் சொல்லை (OTP ஐ) உள்ளிட உங்களுக்கு 3 வாய்ப்புகள் உள்ளன
- திரையில் உள்ள ஒற்றை பயன்பாட்டு கடவுச்சொல் (OTP) காலாவதி இறங்குமுக நேர கணிப்பு கடிகை (timer) ஒற்றை பயன்பாட்டு கடவுச்சொல் (OTP) எப்போது காலாவதியாகும் என்பதை உங்களுக்கு தெரிவிக்கிறது
- ஒற்றை பயன்பாட்டு கடவுச்சொல்லை (OTP ஐ) மீண்டும் அனுப்பவும் என்பதை கிளிக் செய்தால், புதிய ஒற்றை பயன்பாட்டு கடவுச்சொல் (OTP) உருவாக்கப்படும்
படி 6: விண்ணப்பதாரரின் வகையைத் தேர்ந்தெடுத்து தொடரவும் என்பதை கிளிக் செய்யவும்.
படி 7: தனிப்பட்ட பயனருக்கான அடிப்படை விவரங்களை (பெயர் மற்றும் பிறந்த தேதி; நிறுவனத்தின் பெயர் மற்றும் வணிக குழுமம் /கூட்டாண்மை நிறுவனம் நிறுவப்பட்ட தேதி(DOI), நிறுவனத்தின் பெயர் மற்றும் வரைதல் & வழங்கல் அலுவலருக்கு (DDO க்கு) வரி பிடித்தம் & வசூல் எண் (TAN) ஒதுக்கீட்டு தேதி) உள்ளிட்டு தொடரவும்என்பதை கிளிக் செய்யவும்.
படி 8: வெற்றிகரமான சரிபார்ப்புக்குப் பிறகு, தனிப்பட்ட நபர்களாக இருந்தால், முதன்மை தொடர்பு விவரங்கள் பக்கம் அல்லது தொடர்பு விவரங்கள் திரைக்கு அழைத்துச் செல்லப்படுவீர்கள். முதன்மை தொடர்பு விவரங்களை உள்ளிட்டு தொடரவும் என்பதை கிளிக் செய்யவும்.
படி 9: படி 8 இல் உள்ளிடப்பட்ட மின்னஞ்சல் முகவரி (ID) மற்றும் அலைப்பேசி எண்ணில் 6-இலக்க ஒற்றை பயன்பாட்டு கடவுச்சொல்லை (OTP ஐப்) பெறுவீர்கள். உங்கள் அலைப்பேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவர்யில் (ID இல்) பெறப்பட்ட 6-இலக்க ஒற்றை பயன்பாட்டு கடவுச்சொல்லை (OTP ஐ) உள்ளிட்டு தொடரவும்என்பதை கிளிக் செய்யவும்.
படி 10: இணைப்புகள் தத்தலில், விண்ணப்பதாரர் பிரிவின் அடிப்படையில் ஆவணங்களை பதிவேற்றவும்.
வகை 1 மின்னணு தாக்கல் இடையீட்டாளர்களுக்கு (ERI களுக்கு)
- உறுதிமொழி
- வங்கி உத்தரவாதம்
வகை 2 மற்றும் 3 மின்னணு தாக்கல் இடையீட்டாளர்களுக்கு (ERI களுக்கு)
- உறுதிமொழி
- வங்கி உத்தரவாதம்
- தணிக்கை அறிக்கை
குறிப்பு: ஒரு இணைப்பின் அதிகபட்ச அளவு 5 MB இருக்க வேண்டும்.
படி 11: உங்கள் விவரங்களை சரிபாருங்கள் என்ற பக்கத்தில் தேவைப்பட்டால் விவரங்களைத் திருத்தி அமைக்கவும். உறுதிபடுத்துக என்பதை கிளிக் செய்யவும்.
வெற்றி என்ற செய்தி தோன்றும் மற்றும் உங்கள் பதிவுக்கான வேண்டுகோள் ஒப்புதலுக்காக சமர்ப்பிக்கப்படும்.
1.2 இடுகை வேண்டுகோள் சமர்ப்பிப்புக்கு பிந்தைய நிலை:
மின்னணு தாக்கல் இடையீட்டாளரை (ERI) ஐ பதிவு செய்வதற்கான வேண்டுகோள் சமர்ப்பிக்கப்பட்டவுடன், பின்வரும் காட்சிசூழல்களுள் ஒன்று உருவாகலாம்:
| பிரிவு | நேர்வு |
| A | பதிவு விண்ணப்பம் பதிவாளரால் ஏற்றுக்கொள்ளப்படும்போது |
| B | பதிவு வேண்டுகோளில் குறைபாடுகள் இருக்கும் போது |
| C | பதிவு வேண்டுகோள் நிராகரிக்கப்படும் போது |
| D | பதிவு வேண்டுகோள் பதிவாளரிடம் நிலுவையில் இருக்கும் போது |
1-5 வழிகளைப் பின்பற்றுங்கள் அதற்கு பிறகு நிலைமைக்கு தக்கபடி தொடரவும்.
படி 1: மின்னணு-தாக்கல் முகப்பின் முதன்மை பக்கத்துக்கு சென்று பதிவு செய்என்பதை கிளிக் செய்யவும்.
படி 2: பிற தத்தலில், வகை கீழிறங்கலில் இருந்து மின்னணு-தாக்கல் இடையீட்டாளரைத் தேர்ந்தெடுக்கவும்.
படி 3: பதிவின் தகுதி நிலையை சரிபார் என்பதை தேர்ந்தெடுக்கவும்.
படி 4: உங்கள் PAN / TAN ஐ உள்ளிட்டு செல்லுபடியாக்குஎன்பதை கிளிக் செய்யவும்.
படி 5: பதிவு செய்வதற்கான வேண்டுகோளை சமர்ப்பிக்கும் நேரத்தில் வழங்கப்பட்ட அலைப்பேசி எண்ணுக்கு 6-இலக்க ஒற்றை பயன்பாட்டு கடவுச்சொல் (OTP) அனுப்பப்படுகிறது.
குறிப்பு:
- 15 நிமிடங்களுக்கு மட்டுமே ஒற்றை பயன்பாட்டு கடவுச் சொல் (OTP) செல்லுபடியாகும்
- சரியான ஒற்றை பயன்பாட்டு கடவுச் சொல்லை (OTP ஐ) உள்ளிட உங்களுக்கு 3 வாய்ப்புகள் உள்ளன
- திரையில் உள்ள ஒற்றை பயன்பாட்டு கடவுச்சொல் (OTP) காலாவதி இறங்குமுக நேர கணிப்பு கடிகை (timer) ஒற்றை பயன்பாட்டு கடவுச்சொல் (OTP) எப்போது காலாவதியாகும் என்பதை உங்களுக்கு தெரிவிக்கிறது
- ஒற்றை பயன்பாட்டு கடவுச்சொல்லை (OTP ஐ) மீண்டும் அனுப்பவும் என்பதை கிளிக் செய்தால், புதிய ஒற்றை பயன்பாட்டு கடவுச்சொல் (OTP) உருவாக்கப்படும்
அ. பதிவு செய்வதற்கான விண்ணப்பம் பதிவாளரால் ஏற்றுக்கொள்ளப்படும் போது
படி 1: 6-இலக்க ஒற்றை பயன்பாட்டு கடவுச்சொல்லின் (OTP ன்) வெற்றிகரமான சரிபார்ப்புக்கு பின், அங்கீகரிக்கப்பட்ட விண்ணப்பம் திரையில் தோன்றும். தொடரவும் என்பதை கிளிக் செய்யவும்.
படி -2: கடவுச்சொல் அமைக்கவும் என்ற பக்கத்தில், கடவுச்சொல்லை அமைக்கவும் மற்றும் கடவுச்சொல்லை உறுதிப்படுத்தவும் ஆகிய இரண்டு உரைப்பெட்டிகளிலும் உங்களுக்கு விருப்பமான கடவுச்சொல்லை உள்ளிட்டு பதிவு செய்என்பதை கிளிக் செய்யவும்.
குறிப்பு:
புதுப்பிக்கவும் அல்லது பின் செல்லவும் என்பதை கிளிக் செய்ய வேண்டாம்.
உங்கள் புதிய கடவுச்சொல்லை உள்ளிடும்போது, கடவுச்சொல் கொள்கை பற்றி கவனமாக இருங்கள்:
- இது குறைந்தது 8 எழுத்துக்கள் அதிகபட்சம் 14 எழுத்துக்களை கொண்டதாக இருக்க வேண்டும்
- இது பெரிய எழுத்துக்கள் மற்றும் சிறிய எழுத்துக்கள் இரண்டையும் கொண்டதாக இருக்க வேண்டும்.
- இதில் ஒரு எண் இருக்க வேண்டும்
- இதில் ஒரு சிறப்பு எழுத்துரு (எ. கா. @#$%) இருக்க வேண்டும்
பதிவு செய்தல் முடிந்த பின்னர், நீங்கள் பதிவு செய்யும் செயல்முறை முடிந்தது என்ற பக்கத்திற்கு அழைத்துச் செல்லப்படுவீர்கள்.
ஆ. பதிவு வேண்டுகோளில் குறைபாடுகள் இருக்கும் போது
படி 1: ஒற்றை பயன்பாட்டு கடவுச் சொல்லின் (OTP இன்) வெற்றிகரமான சரிபார்ப்புக்குப் பிறகு, குறைபாடுகள் உள்ள ஆவணங்களின் பட்டியல் தோன்றும். சரிபார்க்கப்படாத ஆவணங்களின் பட்டியலை இணைக்க மீண்டும் சமர்ப்பிஎன்பதை கிளிக் செய்யவும்.
படி 2: ஆவணங்கள் பதிவேற்றப்பட்ட உடன், தொடரவும் என்பதை கிளிக் செய்யவும்.
குறிப்பு: ஒரு இணைப்பின் அதிகபட்ச அளவு 5 MB இருக்க வேண்டும்.
படி 3: விவரங்களைச் சரிபார்த்து, சமர்ப்பிஎன்பதை கிளிக் செய்யவும்.
பதிவு வேண்டுகோள் சமர்ப்பிக்கப்பட்ட பக்கம் தோன்றும்.
இ. பதிவு வேண்டுகோள் நிராகரிக்கப்படும்போது
படி 1: உள்ளிட்ட ஒற்றை பயன்பாட்டு கடவுச் சொல் (OTP) சரிபார்க்கப்பட்ட பின், நிராகரிப்பதற்கான காரணம் உங்களுக்கு காட்சிப்படுத்தப்படும். முகப்புப் பக்கத்திற்குச் செல்லவும் என்பதை கிளிக் செய்து, மின்னணு தாக்கல் இடையீட்டாளராக (ERI ஆக) பதிவு செய்ய மீண்டும் விண்ணப்பிக்க விரும்பினால் பதிவு செய்வதற்கான வேண்டுகோளை சமர்ப்பிக்கவும்.
ஈ. பதிவு வேண்டுகோள் பதிவாளரிடம் நிலுவையில் இருக்கும் போது
படி 1: ஒற்றை பயன்பாட்டு கடவுச் சொல் (OTP) சரிபார்க்கப்பட்டவுடன், பின்வரும் செய்தி உங்களுக்கு காட்சிபடுத்தப்படும்: ஒப்புதலுக்காக நிலுவையில் உள்ளது.