மின்னணு-தாக்கல் முகப்பில் பதிவு செய்யவும்: வெளி முகவாண்மை நிறுவனங்களுக்கு
படிப்படியான வழிகாட்டுதல்
படி 1: மின்னணு-தாக்கல் முகப்பின் முதன்மை பக்கத்திற்கு செல்லவும் பதிவு செய்கஎன்பதனை கிளிக் செய்யவும்.
படி 2: மற்றவர்கள் என்பதை கிளிக் செய்து, வெளி முகவாண்மை நிறுவனம் என்ற வகையைத் தேர்ந்தெடுத்து தொடரவும் என்பதை கிளிக் செய்யவும்.
படி 3: நிறுவனத்தின் வகை, நிறுவனத்தின் வரி பிடித்தம் வசூல் எண்/நிரந்தர கணக்கு எண் (TAN / PAN), நிறுவனத்தின் பெயர் மற்றும் நிறுவப்பட்ட தேதி (DOI) உள்ளிட்ட அனைத்து கட்டாய விவரங்களையும் அடிப்படை விவரங்கள் பக்கத்தில் உள்ளிட்டு தொடரவும் என்பதை கிளிக் செய்யவும்.
படி 4: முதன்மை அலைப்பேசி எண், மின்னஞ்சல் முகவரி (ID) மற்றும் முகவரி உள்ளிட்ட தேவையான விவரங்களை முதன்மை தொடர்பு விவரங்கள் பக்கத்தில் உள்ளிட்டு தொடரவும் என்பதைக் கிளிக் செய்யவும்.
படி 5: படி 4 இல் உள்ளிடப்பட்ட முதன்மை அலைப்பேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரிக்கு (ID க்கு) தனித்தனியாக இரண்டு ஒற்றை பயன்பாட்டு கடவுச்சொற்கள் (OTP கள்) அனுப்பப்படுகின்றன. உங்கள் அலைப்பேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி (ID இல்) பெறப்பட்ட தனித்தனி 6-இலக்க ஒற்றை பயன்பாட்டு கடவுச்சொற்களை (OTP களை) உள்ளிடவும் மற்றும் தொடரவும் என்பதை கிளிக் செய்யவும்.
குறிப்பு:
- 15 நிமிடங்களுக்கு மட்டுமே ஒற்றை பயன்பாட்டு கடவுச் சொல் (OTP) செல்லுபடியாகும்
- சரியான ஒற்றை பயன்பாட்டு கடவுச் சொல்லை (OTP ஐ) உள்ளிட உங்களுக்கு 3 வாய்ப்புகள் உள்ளன.
- திரையில் உள்ள ஒற்றை பயன்பாட்டு கடவுச் சொல் (OTP) காலாவதி இறங்குமுக நேரக் கணிப்பு கடிகை(timer), ஒற்றை பயன்பாட்டு கடவுச் சொல் (OTP) எப்போது காலாவதியாகும் என்பதை உங்களுக்கு தெரிவிக்கிறது
- ஒற்றை பயன்பாட்டு கடவுச்சொல்லை (OTP ஐ) மீண்டும் அனுப்பவும் என்பதை கிளிக் செய்தால் புதிய ஒற்றை பயன்பாட்டு கடவுச்சொல் (OTP) உருவாக்கப்பட்டு அனுப்பப்படும்
படி 6: கையொப்பமிடப்பட்ட வேண்டுகோள் கடிதத்தின் கதிர்படிமப்பிரதியை இணைத்து தொடரவும் என்பதை கிளிக் செய்யவும்.
குறிப்பு:
- ஒற்றை இணைப்பின் அதிகபட்ச அளவு 5 MB ஆக இருக்க வேண்டும்.
- பதிவேற்றம் செய்ய உங்களிடம் பல ஆவணங்கள் இருந்தால், அவற்றை ஜிப் செய்யப்பட்ட கோப்புறையில் சேர்த்து கோப்புறையைப் பதிவேற்றவும். ஜிப் செய்யப்பட்ட கோப்புறையில் உள்ள அனைத்து இணைப்புகளின் அதிகபட்ச அளவு 50 MB இருக்க வேண்டும்.
படி 7: விவரங்களைச் சரிபார் பக்கத்தில், தேவைப்பட்டால் அந்த பக்கத்தில் உள்ள விவரங்களைத் திருத்தவும். பக்கத்தில் வழங்கப்பட்ட விவரங்களைச் சரிபார்த்து உறுதி செய் என்பதை கிளிக் செய்யவும்.
படி 8: கடவுச்சொல்லை அமைக்கவும் என்ற பக்கத்தில், உங்களுக்கு விருப்பமான கடவுச்சொல்லை, கடவுச்சொல்லை அமைக்கவும் மற்றும் கடவுச்சொல்லை உறுதிப்படுத்தவும் ஆகிய இரண்டு உரைப்பெட்டிகளிலும் உள்ளிட்டு, உங்கள் தனிப்பயனாக்கபட்ட செய்தியை அமைத்து பதிவு செய் என்பதை கிளிக் செய்யவும்.
குறிப்பு:
புதுப்பிக்கவும் அல்லது பின் செல்லவும் என்பதை கிளிக் செய்ய வேண்டாம்.
உங்கள் புதிய கடவுச்சொல்லை உள்ளிடும்போது, கடவுச்சொல் கொள்கை பற்றி கவனமாக இருங்கள்:
- இது குறைந்தது 8 எழுத்துக்கள் அதிகபட்சம் 14 எழுத்துக்களை கொண்டதாக இருக்க வேண்டும்
- இது பெரிய எழுத்துக்கள் மற்றும் சிறிய எழுத்துக்கள் இரண்டையும் கொண்டதாக இருக்க வேண்டும்.
- இதில் ஒரு எண் இருக்க வேண்டும்
- இதில் ஒரு சிறப்பு எழுத்துருக்கள் (எ. கா. @#$%) இருக்க வேண்டும்
படி 9: DGIT (முறைமை) இன் ஒப்புதலின் பேரில், மின்னணு-தாக்கல் தகவில் பதிவு செய்யப்பட்ட உங்கள் முதன்மை மின்னஞ்சல் முகவரியில் (ID இல்) பயனர் அடையாளத்தை (ID ஐ) கொண்ட ஒரு மின்னஞ்சலைப் பெறுவீர்கள். பெறப்பட்ட பயனர் அடையாளம் (ID) மற்றும் பதிவு செய்தலின் போது நீங்கள் அமைத்த கடவுச்சொல் ஆகியவற்றைப் பயன்படுத்தி மின்னணு தாக்கல் முகப்பில் நீங்கள் உள்நுழையலாம்.