Do not have an account?
Already have an account?

1. நான் ஏன் ஒரு செலுத்துச் சீட்டை உருவாக்க வேண்டும்?
ஒரு மதிப்பீட்டு ஆண்டிற்கான எந்தவொரு வருமானவரி செலுத்துதலையும் மின்னணு-தாக்கல் இணைய முகப்பின் மூலம் செய்ய, நீங்கள் அதற்கான ஒரு செலுத்துச் சீட்டை உருவாக்க வேண்டும்.

2. செலுத்துச் சீட்டை யார் உருவாக்கலாம்?
பதிவு செய்யப்பட்ட அல்லது பதிவு செய்யப்படாத பயனர்கள் (பெருநிறுவனம் / பெருநிறுவனம் அல்லாத பயனர்கள், ERIக்கள் மற்றும் மதிப்பீட்டுக்குரியவரின் பிரதிநிதி) மின்னணு-தாக்கல் முகப்பில் ஒரு செலுத்துச் சீட்டை உருவாக்கலாம்.

3. நான் எந்த வகையான பெருநிறுவன வரி கொடுப்பனவுகளை செய்யலாம்?
பெருநிறுவன வரி விருப்பங்களின் கீழ் பின்வருவனவற்றை நீங்கள் செலுத்தலாம்:

  • முன்கூட்டிய வரி
  • சுய மதிப்பீடு வரி
  • வழக்கமான மதிப்பீட்டின் மீதான வரி
  • நிறுவனங்களின் விநியோகிக்கப்பட்ட இலாபத்தின் மீதான வரி
  • அலகுகள் (யூனிட்) வைத்திருப்பவர்களுக்கு விநியோகிக்கப்பட்ட வருமானத்தின் மீதான வரி
  • கூடுதல் வரி
  • வருமான வரிச் சட்டம், 1961 இன் பிரிவு 92CE இன் கீழ் இரண்டாம் நிலை சரிசெய்தல் வரி
  • வருமான வரிச் சட்டம், 1961 இன் பிரிவு 115TD இன் கீழ் திரட்டல் வரி

4. நான் என்ன வகையான வருமான வரி கட்டணங்களை செலுத்த முடியும்?
பெருநிறுவன வரி விருப்பங்களின் கீழ் பின்வருவனவற்றை நீங்கள் செலுத்தலாம்:

  • முன்கூட்டிய வரி
  • சுய மதிப்பீடு வரி
  • வழக்கமான மதிப்பீட்டின் மீதான வரி
  • வருமான வரிச் சட்டம், 1961 இன் பிரிவு 92CE இன் கீழ் இரண்டாம் நிலை சரிசெய்தல் வரி
  • வருமான வரிச் சட்டம், 1961 இன் பிரிவு 115TD இன் கீழ் திரட்டல் வரி.

5. நான் என்ன கட்டணம் அல்லது பிற வரி செலுத்துதல்களை செய்ய முடியும்?
கட்டணம் செலுத்து / பிற செலுத்துதல்களின் கீழ் நீங்கள் பின்வருவனவற்றை செலுத்தலாம்:

  • செல்வ வரி
  • விளிம்பு நன்மை வரி
  • வங்கி பணப் பரிவர்த்தனை வரி
  • வட்டி வருமானத்தின் மீதான வரி
  • விடுதி ரசீதுகள் மீதான வரி
  • அன்பளிப்பு வரி
  • பண்ணை வரி
  • செலவு / ஏனைய வரி
  • மேல்முறையீட்டு கட்டணம்
  • வேறு எந்தவொரு கட்டணம்

6. செலுத்துச் சீட்டு படிவத்தை உருவாக்கிய பிறகு வரிக் கட்டணத்தை நான் எவ்வாறு செலுத்துவது?
நீங்கள் கீழ்கண்டவற்றின் மூலம் செலுத்தலாம்:

  • இணைய வங்கி; அல்லது
  • பற்று அட்டை; அல்லது
  • பணம் செலுத்தும் நுழைவாயில் மூலம் (அங்கீகரிக்கப்படாத வங்கிகளின் கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு அல்லது இணைய வங்கிச் சேவை; அல்லது ஒருங்கிணைந்த பணம் செலுத்தும் இடையகத்தின் (UPI) ஐப் பயன்படுத்துதல்)
  • உங்கள் வங்கி கவுண்டர் மூலம்; அல்லது
  • நிகழ் நேர மொத்தப் பணம் செலுத்துதல் (RTGS) / தேசிய மின்னணு பணப் பரிமாற்றம் (NEFT)

7. ஆணை படிவம் என்றால் என்ன? அது எப்போது தேவைப்படும்?
RTGS / NEFT என்ற வரி செலுத்தும் வகையைத் தேர்ந்தெடுத்த பிறகு ஆணை படிவம் உருவாக்கப்படுகிறது. நீங்கள் உங்கள் வங்கியின் இணைய வங்கியைப் பயன்படுத்தலாம் அல்லது செலுத்துச் சீட்டு உருவாக்கிய பிறகு ஆணை படிவத்தைப் பதிவிறக்கம் செய்து, கட்டணம் செலுத்துவதற்காக உங்கள் வங்கிக் கிளையை அணுகலாம்.

8. செலுத்துச் சீட்டை உருவாக்கிய பின்னர் உடனடியாக நான் செலுத்தாவிட்டால், அது காலாவதியாகுமா?
ஆம், நீங்கள் செலுத்துச் சீட்டு உருவானதிலிருந்து 15 நாட்களுக்குள் வரியை செலுத்தியிருக்க வேண்டும் (அதாவது வாடிக்கையாளர் தொடர்பு எண் (CRN) உருவான தேதியிலிருந்து 15 நாட்கள்). முன்கூட்டியே செலுத்தும் வரி என்றால், வாடிக்கையாளர் தொடர்பு எண் (CRN) உருவான தேதியிலிருந்து 15 நாட்களுக்குள் அல்லது நடப்பு நிதியாண்டின் மார்ச் மாதம் 31 ஆம் தேதிக்குள் எது முந்தையதோ அதற்குள், வரி செலுத்த வேண்டும்.

9. எனது செலுத்துச் சீட்டு விவரங்களை நான் எங்கே பார்க்கலாம்? எனது காலாவதியான செலுத்துச் சீட்டுகளை என்னால் பார்க்க முடியுமா?
மின்னணு-வரி செலுத்தல் என்னும் பக்கத்தில் உருவாக்கப்பட்ட செலுத்துச் சீட்டு என்னும் தாவலில் உங்களது உருவாக்கப்பட்ட செலுத்துச் சீட்டைப் பார்க்க முடியும். மின்னணு-வரி செலுத்தல் என்னும் பக்கத்தில், உருவாக்கப்பட்ட செலுத்துச் சீட்டு என்னும் தாவலில் செலுத்துச் சீட்டு செல்லுபடியாகும் நாளில் இருந்து (செலுத்துச் சீட்டில் இந்த தேதி இருக்கும்) ஒரு மாதம் வரை காலாவதியான செலுத்துச் சீட்டுகளும் இருக்கும்.