1. கண்ணோட்டம்
வருமான வரித் துறைக்கு நிறுவனங்களைப் பற்றி இனங்காட்டி அறிக்கைத் தரல் அடையாள எண் (ஐ.டி.டி.ஆர்.இ.ஐ.என்.) நிர்வகிப்பு சேவை அனைத்து பதிவு செய்த பயனர்களுக்கும் மின்னணு தாக்கல் இணைய முகப்பில் (போர்ட்டலில்) கிடைக்கிறது. இந்த சேவை மூலம், படிவம் 15CC/படிவம் V-ஐ தாக்கல் செய்ய வேண்டிய ஒரு அறிக்கைத் தரல் (ரிப்போர்ட்டிங்) நிறுவனம் பின்வருவனவற்றைச் செய்யலாம்:
- வருமான வரித் துறைக்கு நிறுவனங்களைப் பற்றி இனங்காட்டி அறிக்கைத் தரல் அடையாள எண் ( ஐ.டி.டி.ஆர்.இ.ஐ.என்.-ஐ உருவாக்குதல் (வருமான வரித் துறை ரிப்போர்ட்டிங் நிறுவன அடையாள எண்); மற்றும்
- அவ்வாறு உருவாக்கப்பட்ட வருமான வரித் துறைக்கு நிறுவனங்களைப் பற்றி இனங்காட்டி அறிக்கைத் தரல் அடையாள எண் (ஐ.டி.டி.ஆர்.இ.ஐ.என்.) தொடர்பாக 15CC மற்றும் படிவம் V படிவங்களை பதிவேற்ற மற்றும் காண எந்தவொரு அங்கீகரிக்கப்பட்ட நபர்களையும் இயலச்செய்தல்.
அறிக்கைத் தரல் நிறுவனத்தால் (ரிப்போர்ட்டிங் நிறுவனத்தால்) அங்கீகரிக்கப்பட்ட நபர் சேர்க்கப்பட்ட பிறகு, அங்கீகரிக்கப்பட்ட நபர் இந்த சேவையின் மூலம் கோரிக்கையை ஏற்க முடியும்.
வருமான வரித் துறைக்கு நிறுவனங்களைப் பற்றி இனங்காட்டி அறிக்கைத் தரல் அடையாள எண் (ஐ.டி.டி.ஆர்.இ.ஐ.என்.) என்பது வருமான வரித் துறை (ITD)-ஆல் தரப்பட்டு தொடர்புகொள்ளப்படும் தனிப்பட்ட அடையாள எண் (ஐ.டி.) ஆகும். இது வருமான வரித் துறை (ஐ.டி.டி.) உடன் பதிவு செய்யப்பட்ட பிறகு அளிக்கப்படும். வருமான வரித் துறைக்கு நிறுவனங்களைப் பற்றி இனங்காட்டி அறிக்கைத் தரல் அடையாள எண் (ஐ.டி.டி.ஆர்.இ.ஐ.என்.) என்பது XXXXXXXXXX.YZNNN வடிவத்தில் 16-எழுத்து அடையாள எண், இதில்:
| வருமான வரித் துறைக்கு நிறுவனங்களைப் பற்றி இனங்காட்டி அறிக்கைத் தரல் அடையாள எண் (ஐ.டி.டி.ஆர்.இ.ஐ.என்.) வடிவம் | விளக்கம் |
| xxxxxxxxx | அறிக்கைத் தரல் நிறுவனத்தின் (ரிப்போர்ட்டிங் நிறுவனத்தின்) நிரந்தர கணக்கு எண் (PAN) அல்லது மூலத்தில் வரி பிடித்தல் கணக்கு எண் (TAN) |
| ஒய் | படிவம் குறியீடு |
| இசட் | படிவக் குறியீட்டிற்கான அறிக்கைத் தரல் (ரிப்போர்ட்டிங்) நிறுவனம் |
| என்.என்.என். | தரவரிசை எண் குறியீடு |
2. இந்த சேவையைப் பெறுவதற்கான முன்நிபந்தனைகள்
| வ.எண் | பயனர் | விளக்கம் |
| 1. | அறிக்கைத் தரல் (ரிப்போர்ட்டிங்) நிறுவனம் |
|
| 2. | அங்கீகரிக்கப்பட்ட நபர் |
|
3. படிப்படியான வழிகாட்டி
3.1. புதிய வருமான வரித் துறைக்கு நிறுவனங்களைப் பற்றி இனங்காட்டி அறிக்கைத் தரல் அடையாள எண் (ஐ.டி.டி.ஆர்.இ.ஐ.என்.) ஐ உருவாக்குதல்
படி 1: செல்லுபடியாகும் பயனர் முகவரி (ஐ.டி.) மற்றும் கடவுச்சொல்லைப் பயன்படுத்தி மின்னணு தாக்கல் இணைய முகப்பில் (போர்ட்டலில்) உள்நுழைக.
படி 2: உங்கள் முகப்புப்பெட்டியில் (டாஷ்போர்டில்), சேவைகள்> வருமான வரித் துறைக்கு நிறுவனங்களைப் பற்றி இனங்காட்டி அறிக்கைத் தரல் அடையாள எண்ணை (ஐ.டி.டி. ரிப்போர்ட்டிங் நிறுவன அடையாள எண்ணை) (ITDREIN) நிர்வகி என்பதை சொடுக்கவும்.
படி 3: வருமான வரித் துறைக்கு நிறுவனங்களைப் பற்றி இனங்காட்டி அறிக்கைத் தரல் அடையாள எண் (ஐ.டி.டி. ரிப்போர்டிங் நிறுவன அடையாள எண்) (ITDREIN) பக்கத்தில், புதிய வருமான வரித் துறைக்கு நிறுவனங்களைப் பற்றி இனங்காட்டி அறிக்கைத் தரல் அடையாள எண் (ஐ.டி.டி.ஆர்.இ.ஐ.என்.)-ஐ உருவாக்கவும் என்பதை சொடுக்கவும்.
படி 4: வருமான வரித் துறைக்கு நிறுவனங்களைப் பற்றி இனங்காட்டி அறிக்கைத் தரல் அடையாள எண் (வருமான வரித் துறை ரிப்போர்டிங் நிறுவன அடையாள எண்) (ITDREIN) பக்கத்தில், படிவ வகையைத் தேர்ந்தெடுக்கவும் (படிவம் 15CC அல்லது படிவம் V).
படி 5: பின்னர், கீழ்தோன்றும் பட்டியலில் இருந்து பொருத்தமான அறிக்கைத் தரல் நிறுவனம் (ரிப்போர்ட்டிங் நிறுவன) வகையைத் தேர்ந்தெடுத்து வருமான வரித் துறைக்கு நிறுவனங்களைப் பற்றி இனங்காட்டி அறிக்கைத் தரல் அடையாள எண் (ஐ.டி.டி.ஆர்.இ.ஐ.என்.)-ஐ உருவாக்கு என்பதை சொடுக்கவும்.
படி 6: வருமான வரித் துறைக்கு நிறுவனங்களைப் பற்றி இனங்காட்டி அறிக்கைத் தரல் அடையாள எண் (ஐ.டி.டி.ஆர்.இ.ஐ.என்.)-இன் வெற்றிகரமான உருவாக்கத்தில், ஒரு வெற்றிகரமான செய்தி காண்பிக்கப்படும். உங்கள் படிவத்தை தாக்கல் செய்ய அங்கீகரிக்கப்பட்ட நபரைச் சேர்க்க இப்போது அங்கீகரிக்கப்பட்ட நபரைச் சேர்க்கவும் என்பதை சொடுக்கவும்.
குறிப்பு:
- வருமான வரித் துறைக்கு நிறுவனங்களைப் பற்றி இனங்காட்டி அறிக்கைத் தரல் அடையாள எண் (ஐ.டி.டி.ஆர்.இ.ஐ.என்.)-இன் வெற்றிகரமான உருவாக்கத்தில், மின்னணு தாக்கல் இணைய முகப்பில் (போர்ட்டலில்) பதிவுசெய்யப்பட்ட முதன்மை அலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி (ஐ.டி.)-இல் உறுதிப்படுத்தல் செய்தியைப் பெறுவீர்கள்.
- அங்கீகரிக்கப்பட்ட நபரை பின்னர் சேர்க்கவும் அங்கீகரிக்கப்பட்ட நபரை பின்னர் சேர்க்கவும் என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
படி 7: அங்கீகரிக்கப்பட்ட நபரைச் சேர்க்கவும் பக்கத்தில், தேவையான விவரங்களை உள்ளிட்டு, அங்கீகரிக்கப்பட்ட நபர் வகையைத் தேர்ந்தெடுத்து, பதவியை உள்ளிட்டு, அணுகல் வகையைத் தேர்ந்தெடுத்து சேமி என்பதை சொடுக்கவும்.
குறிப்பு:
- அங்கீகரிக்கப்பட்ட நபரின் நிரந்தர கணக்கு எண் (PAN) அல்லது ஆதார் தகவல்களை அல்லது இரண்டையும் நீங்கள் வழங்கலாம்.
- அங்கீகரிக்கப்பட்ட நபரின் ஆதார் மட்டுமே நீங்கள் வழங்கினால், ஆதார் அங்கீகரிக்கப்பட்ட நபரின் நிரந்தர கணக்கு எண் (PAN) உடன் இணைக்கப்பட வேண்டும்.
- அங்கீகரிக்கப்பட்ட நபரின் பெயர் ஒரு விருப்பத்தேர்வு புலமாக இருக்கும். மின்னஞ்சல் முகவரி (ஐ.டி.,) அலைபேசி எண், அங்கீகரிக்கப்பட்ட நபர் வகை, பதவி மற்றும் அணுகல் வகை ஆகியவை கட்டாய புலங்கள்.
- அங்கீகரிக்கப்பட்ட நபரின் அணுகல் வகை பின்வரும் அட்டவணையின்படி மாறுபடும்:
| நீங்கள் படிவம் V-ஐத் தேர்ந்தெடுத்தால் | பதவி தேர்ந்தெடுக்கப்பட்டால் நியமிக்கப்பட்ட இயக்குனர் | அங்கீகரிக்கப்பட்ட நபர் படிவத்தை பதிவேற்றலாம் மற்றும் பார்க்கலாம் |
| பதவி தேர்ந்தெடுக்கப்பட்டால் முதன்மை அலுவலர் | அங்கீகரிக்கப்பட்ட நபர் படிவத்தை பதிவேற்றலாம் மற்றும் பார்க்கலாம் | |
| நீங்கள் படிவம் 15CC என்பதைத் தேர்ந்தெடுத்தால் | அங்கீகரிக்கப்பட்ட நபர் படிவத்தை பதிவேற்றலாம் மற்றும் பார்க்கலாம் |
படி 8: அங்கீகரிக்கப்பட்ட நபரை வெற்றிகரமாகச் சேர்த்தால், பின்வரும் மேல்வரல் (பாப்அப்) செய்தி காண்பிக்கப்படும், மேலும் மின்னணு தாக்கல் இணைய முகப்பில் (போர்ட்டலில்) பதிவுசெய்யப்பட்ட அங்கீகரிக்கப்பட்ட நபரின் அலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி (ஐ.டி.)-க்கு ஒரு தகவல் அனுப்பப்படும்.
படி 9: அங்கீகரிக்கப்பட்ட நபர்(கள்) நிலையைக் காண மூடவும் என்பதை சொடுக்கவும்.
படி 10: அங்கீகரிக்கப்பட்ட நபரை செயலிழக்கச் செய்ய, அங்கீகரிக்கப்பட்ட நபர்(கள்) பக்கத்தில், செயலில் உள்ள தாவலின் கீழ் செயலிழக்கச் செய்க என்பதை சொடுக்கவும்.
படி 11: செயலற்ற தாவலின் கீழ் ஏற்கனவே சேர்க்கப்பட்ட அங்கீகரிக்கப்பட்ட நபர்களின் பட்டியலுக்கு எதிராக செயல்படுத்தவும் விருப்பத்தை சொடுக்கல் செய்வதன் மூலம் செயலற்ற அங்கீகரிக்கப்பட்ட நபர்களை நீங்கள் செயல்படுத்தலாம்.
3.2. அங்கீகரிக்கப்பட்ட நபரின் செயல்படுத்தல்
படி 1: செல்லுபடியாகும் பயனர் முகவரி (ஐ.டி.) மற்றும் கடவுச்சொல்லைப் பயன்படுத்தி மின்னணு தாக்கல் இணைய முகப்பில் (போர்ட்டலில்) உள்நுழைக.
படி 2: உங்கள் முகப்புப்பெட்டியில் (டாஷ்போர்டில்), நிலுவையில் உள்ள செயல்கள்> பணிப்பட்டியல் என்பதை சொடுக்கவும்.
படி 3: பணிப்பட்டியல் பக்கத்தில், நீங்கள் செயல்படுத்த விரும்பும் வருமான வரித் துறைக்கு நிறுவனங்களைப் பற்றி இனங்காட்டி அறிக்கைத் தரல் அடையாள எண் (ஐ.டி.டி.ஆர்.இ.ஐ.என்.)-க்கு எதிராக செயல்படுத்து என்பதை சொடுக்கவும்.
படி 4: வருமான வரித் துறைக்கு நிறுவனங்களைப் பற்றி இனங்காட்டி அறிக்கைத் தரல் அடையாள எண் (ஐ.டி.டி.ஆர்.இ.என்.) ஒரு முறை கடவுச்சொல் கோரவும் சரிபார்ப்பு பக்கத்தில், அலைபேசி எண்ணில் பெறப்பட்ட தனித்துவமான 6-இலக்க ஒரு முறை கடவுச்சொல்லை உள்ளிடவும் (உங்களுக்கு கிடைக்கும்) மற்றும் அங்கீகரிக்கப்பட்ட நபரைச் சேர்க்கவும் என்ற பக்கத்தில் அங்கீகரிக்கப்பட்ட நபராக உங்களைச் சேர்க்கும்போது பயனர் உள்ளிட்ட மின்னஞ்சல் முகவரி (ஐ.டி.) மற்றும் தொடரவும் என்பதை சொடுக்கவும்.
குறிப்பு:
- ஒரு முறை கடவுச்சொல் 15 நிமிடங்களுக்கு மட்டுமே செல்லுபடியாகும்.
- சரியான ஒரு முறை கடவுச்சொல்லை உள்ளிட 3 முயற்சிகள் உள்ளன.
- ஒரு முறை கடவுச்சொல் எப்போது காலாவதியாகும் என்பதை திரையில் உள்ள ஒரு முறை கடவுச்சொல் காலாவதி இறங்குமுகக் கணிப்பு (கவுண்டவுன்) நேரங்கணிப்பி (டைமர்) உங்களுக்குக் கூறுகிறது.
- ஒரு முறை கடவுச்சொல்லை மீண்டும் அனுப்பவும் என்பதை சொடுக்கல் செய்தால், ஒரு புதிய ஒரு முறை கடவுச்சொல் உருவாக்கப்பட்டு அனுப்பப்படும்.
படி 5: வருமான வரித் துறைக்கு நிறுவனங்களைப் பற்றி இனங்காட்டி அறிக்கைத் தரல் அடையாள எண் (ஐ.டி.டி.ஆர்.இ.என்.) கோரிக்கை- புதிய கடவுச்சொல் அமைப்பு பக்கத்தில், புதிய கடவுச்சொல்லை அமை என்பதிலும் புதிய கடவுச்சொல்லை உறுதிசெய்க விருப்பங்களில் கடவுச்சொல்லை உள்ளிட்டு செயல்படுத்து என்பதிலும் சொடுக்கவும்.
குறிப்பு:
- புதுப்பி (ரிஃப்ரெஷ்) அல்லது பின்னோக்கி (பேக்) என்பதைசொடுக்க வேண்டாம்.
- உங்கள் புதிய கடவுச்சொல்லை உள்ளிடும்போது, கடவுச்சொல் கொள்கையில் கவனமாக இருக்கவும்:
- அது குறைந்தது 8 எழுத்துகள் மற்றும் அதிகபட்சம் 14 எழுத்துக்களை கொண்டிருக்க வேண்டும்.
- அது பெரிய எழுத்துக்கள் மற்றும் சிறிய எழுத்துக்கள் இரண்டையும் கொண்டிருக்க வேண்டும்.
- அது ஒரு எண்-ஐ கொண்டிருக்க வேண்டும்.
- அது ஒரு சிறப்பு எழுத்தை கொண்டிருக்க வேண்டும் (எ.கா. @#$%).
படி 6: வெற்றிகரமாக செயல்படுத்தும்போது, பின்வரும் செய்தி காண்பிக்கப்படும்.
படி 7: நீங்கள் படிவம் 15CC மற்றும்/அல்லது படிவம் V ஐ பதிவேற்ற/பார்க்க விரும்பினால், வருமான வரித் துறைக்கு நிறுவனங்களைப் பற்றி இனங்காட்டி அறிக்கைத் தரல் அடையாள எண் (ஐ.டி.டி.ஆர்.இ.என்.), நிரந்தர கணக்கு எண் (PAN) மற்றும் கடவுச்சொல்லைப் பயன்படுத்தி மின்னணு தாக்கல் இணைய முகப்பில் (போர்ட்டலில்) உள்நுழைக.
4. தொடர்புடைய தலைப்புகள்
- இங்கே உள்நுழையவும்
- முகப்புப்பெட்டி
- பணிப்பட்டியல்
- எனது தன்விவரம்
- கடவுச்சொல்லை மறந்துவிட்டேன்