Do not have an account?
Already have an account?

1. மேலோட்ட பார்வை

இந்த முந்தைய-உள்நுழைவு சேவை அனைத்து வரி செலுத்துவோருக்கும் கிடைக்கிறது. இந்த கையேடு, மின்னணு-தாக்கல் இணைய முகப்பில் பதிவு செய்து அணுக விரும்பும் அனைத்து வரி செலுத்துவோருக்கும் (மின்னணு-தாக்கல் இணைய முகப்பில் மற்றொரு பிரத்யேக பயனர் கையேட்டைக் கொண்ட நிறுவனங்கள் தவிர) பொருந்தும். பதிவு சேவை வரி செலுத்துவோர் வரி தொடர்பான அனைத்து நடவடிக்கைகளையும் அணுகவும் கண்காணிக்கவும் உதவுகிறது.

2. இந்த சேவையை பெறுவதற்கான முன் தேவைகள்

  • பயன்பாட்டில் உள்ள மற்றும் செல்லத்தக்க PAN
  • செல்லுபடியாகும் அலைபேசி எண்
  • சரியான மின்னஞ்சல் ID

3. படிப்படியான வழிகாட்டி


படி 1: மின்னணு-தாக்கல் இணைய முகப்பில் முதன்மைப் பக்கத்திற்கு சென்று பதிவு செய்யவும் என்பதைக் கிளிக் செய்யவும்.

Data responsive



படி 2: வரி செலுத்துபவராகப் பதிவுசெய்தல் விருப்பத்தின் கீழ் உங்கள் PAN எண்ணைப் பதிவு செய்து சரிபார்க்கவும் என்பதைக் கிளிக் செய்யவும். PAN ஏற்கனவே பதிவு செய்யப்பட்டிருந்தால் அல்லது தவறானதாக இருந்தால், ஒரு பிழைச் செய்தித் தோன்றும்.

Data responsiveData responsive

PAN மற்றும் ஆதார் இணைக்கப்பட்டிருந்தால், பாப்-அப் செய்தியில், UIDAI தரவுத்தளத்துடன் விவரங்களைச் சரிபார்க்க உறுதிப்படுத்த தேர்வுப்பெட்டியைத் தேர்ந்தெடுக்கவும்.

Data responsive



படி 3: அடிப்படை விவரங்கள் பக்கத்தில் உங்கள் PAN இன் படி பெயர், DOB / DOI, பாலினம் (பொருந்தினால்) மற்றும் குடியிருப்பு நிலை உள்ளிட்ட அனைத்து கட்டாய விவரங்களையும் உள்ளிட்டு தொடரவும் என்பதைக் கிளிக் செய்யவும்.

Data responsive



படி 4: PAN சரிபார்க்கப்பட்ட பிறகு, தனி நபர் வரி செலுத்துவோருக்குத் தொடர்பு விவரங்கள் பக்கம் தோன்றும். முதன்மை அலைபேசி எண், மின்னஞ்சல் ID மற்றும் முகவரி உள்ளிட்ட உங்கள் தொடர்பு விவரங்களை உள்ளிடவும்.தொடரவும் என்பதை கிளிக் செய்யவும்.

Data responsive




படி 5: குறிப்பிடப்பட்ட முதன்மை அலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் IDக்கு இரண்டு தனித்தனி OTPகள் அனுப்பப்படும். மொபைல் எண் மற்றும் மின்னஞ்சல் IDயில் பெறப்பட்ட தனித்தனி 6 இலக்க OTPகளை உள்ளிட்டு தொடரவும் என்பதைக் கிளிக் செய்யவும்.

குறிப்பு:

  • OTP ஆனது 15 நிமிடங்களுக்கு மட்டுமே செல்லுபடியாகும்.
  • சரியான OTP ஐ உள்ளீடு செய்ய உங்களுக்கு 3 வாய்ப்புகள் உள்ளது.
  • திரையில் தோன்றும் OTP காலாவதி இறங்குமுகக் கடிகை உங்களுக்கு OTP எப்போது காலாவதியாகும் என்பதை தெரிவிக்கும்.
  • OTP ஐ மீண்டும் அனுப்பவும் என்பதை கிளிக் செய்தால், ஒரு புதிய OTP உருவாக்கப்பட்டு அனுப்பப்படும்.

 

படி 6: தேவைப்பட்டால் அந்தப் பக்கத்தில் உள்ள விவரங்களை மாற்றம் செய்து உறுதிப்படுத்தவும் என்பதை கிளிக் செய்யவும்.

Data responsive



படி 7: கடவுச்சொல் அமை பக்கத்தில், கடவுச்சொல் அமை மற்றும் கடவுச்சொல்லை உறுதிப்படுத்து ஆகிய இரண்டு உரைப் பெட்டிகளிலும் உங்களுக்கு விருப்பமான கடவுச்சொல்லை உள்ளிடவும். உங்கள் தனிப்பயனாக்கப்பட்ட செய்தியை உள்ளிட்டு பதிவு என்பதை கிளிக் செய்யவும்.

Data responsive

குறிப்பு:

  • புதுப்பிக்கவும் அல்லது பின் செல்லவும் என்பதை கிளிக் செய்ய வேண்டாம்.
  • உங்கள் புதிய கடவுச்சொல்லை உள்ளிடும்போது, கடவுச்சொல் கொள்கையில் கவனமாக இருங்கள்:
    • கடவுச்சொல் குறைந்தபட்சம் 8 எழுத்துகள் மற்றும் அதிகபட்சம் 14 எழுத்துகள் கொண்டதாக இருக்க வேண்டும்.
    • இது பெரிய எழுத்து மற்றும் ஒரு சிறிய எழுத்து இரண்டையும் கொண்டதாக இருக்க வேண்டும்.
    • இது ஒரு எண்ணையும் கொண்டிருக்க வேண்டும்.
    • இது ஒரு சிறப்பு எழுத்தையும் கொண்டிருக்க வேண்டும் (எ.கா. @#$%).

படி 8:நீங்கள் வெற்றிகரமாகப் பதிவு செய்ததும், உள்நுழைவு செயல்முறையைத் தொடங்க உள்நுழைவைத் தொடரவும் என்பதைக் கிளிக் செய்யவும்.

Data responsive

4. தொடர்புடைய தலைப்புகள்

  • உள்நுழையவும்
  • முகப்புப் பலகை
  • PAN ஆதார் இணைப்பு
  • வருமானவரி அறிக்கை