1. எனது சுயவிவரம் மின்னணு-தாக்கல் முகப்பில் புதுப்பிக்கப்பட்டுள்ளது என்று எனக்கு எப்படித் தெரியவரும்?
உங்கள் சுயவிவரத்தில் ஏதேனும் தகவல் புதுப்பிக்கப்பட்டால், மின்னணு-தாக்கல் முகப்பில் பதிவு செய்யப்பட்டுள்ள முதன்மை மின்னஞ்சல் ID இல் நீங்கள் ஒரு மின்னஞ்சலைப் பெறுவீர்கள்.
2. நான் ஒரு அயல்நாடு வாழ் இந்தியர் (NRI) மேலும் எனக்கு இந்திய எண் இல்லை. எனது தொடர்பு விவரங்களை சரிபார்க்க நான் எப்படி OTP ஐ பெறுவேன்?
மின்னணு-தாக்கல் முகப்பில் பதிவு செய்யப்பட்டுள்ள மின்னஞ்சல் ID இல் நீங்கள் OTP ஐ பெறுவீர்கள்.
3. சுயவிவரத்தைப் புதுப்பிக்க வேண்டியது கட்டாயமா?
இல்லை, உங்கள் சுயவிவரத்தை மின்னணு-தாக்கல் முகப்பில் புதுப்பிக்க வேண்டிய கட்டாயமில்லை. இருப்பினும், மேம்பட்ட பயனர் அனுபவத்தை (முன்- நிரப்புதல் உட்பட) பெறவும், வருமான வரித் துறையிலிருந்து குறித்த நேரத்தில் தகவல்தொடர்புகளைப் பெறவும் உங்கள் சுயவிவரத்தைப் புதுப்பிக்க பரிந்துரைக்கப்படுகிறது.
4. சுயவிவரத்தைப் புதுப்பிப்பதால் என்ன நன்மை?
நீங்கள் புதுப்பித்த சுயவிவரங்கள், தேவைப்பட்டால், ITD ஐ உங்களுடன் சரியான நேரத்தில் தொடர்பு கொள்ள ஏதுவாக்கும். இது மின்னணு-தாக்கல் முகப்பில் உங்களுக்கு பொருந்தக்கூடிய வெவ்வேறு படிவங்கள் மற்றும் ITR ஐ முன்-நிரப்புதலுக்கான உள்ளீட்டையும் வழங்கும்.
5. எனது சுயவிவரத்தின் வாயிலாக நான் திருத்தக்கூடிய / புதுப்பிக்கக்கூடிய விவரங்கள் யாவை?
உங்கள் சுயவிவரத்தின் வாயிலாக பின்வருவனவற்றை புதுப்பிக்கலாம் அல்லது மாற்றலாம்:
- வருமானம் வரும் இனங்களின் விவரங்கள்
- வங்கிக் கணக்கு மற்றும் டிமேட் கணக்கு விவரங்கள்
- DSC ஐ பதிவு செய்ய
- தொடர்பு விவரங்கள் (OTP அங்கீகாரம் மூலம்), முக்கிய நபர்களின் விவரங்கள்
- நீங்கள் வரி செலுத்துபவராக உள்நுழைந்திருந்தால் - குடியிருப்பு தகுதிநிலை மற்றும் கடவுச்சீட்டு எண் போன்ற உங்கள் அடிப்படை சுயவிவர விவரங்களையும், முதன்மை மற்றும் இரண்டாம் நிலை அலைப்பேசி எண், மின்னஞ்சல் முகவரி (ID) மற்றும் முகவரி போன்ற தொடர்பு விவரங்களையும் உங்களால் திருத்த முடியும்.
- நீங்கள் ERI ஆக உள்நுழைந்திருந்தால் -வெளி முகவாண்மை வகை, சேவைகளின் வகை, நிறுவனத்தின் PAN, நிறுவனத்தின் TAN போன்ற உங்கள் அடிப்படை சுயவிவர விவரங்களை நீங்கள் திருத்தலாம்; தொடர்பு விபரங்கள்; சான்றிதழ்களை நிர்வகிக்கலாம், முதன்மை தொடர்பு விவரங்களை புதுப்பிக்கலாம், ERI ஐ சேர்க்கலாம் அல்லது நீக்கலாம், ERI வகையை மாற்றலாம்.
- நீங்கள் வெளி முகவாண்மை நிறுவனமாக உள்நுழைந்திருந்தால் - நீங்கள் தொடர்பு விவரங்களை புதுப்பிக்கலாம், சான்றிதழ்களை நிர்வகிக்கலாம், முக்கிய நபர்களை சேர்க்கலாம் அல்லது நீக்கலாம் மற்றும் சேவைகளை சேர்க்கலாம் அல்லது நீக்கலாம்.
- நீங்கள் TIN 2.0 பங்குதாரராக உள்நுழைந்திருந்தால் - நீங்கள் தொடர்பு விவரங்களை புதுப்பிக்கலாம், சான்றிதழ்களை நிர்வகிக்கலாம் மற்றும் புதிய தொழில்நுட்ப SPOC விவரங்களை புதுப்பிக்கலாம் அல்லது சேர்க்கலாம்.
6. ITD இன் தகவல் தொடர்புகளை எனது சுயவிவரத்தில் குறிப்பிட்டுள்ள முதன்மை மற்றும் இரண்டாம் நிலை தொடர்புகள் இரண்டிலும் நான் பெற முடியுமா?
ஆம், ITD இன் தகவல் தொடர்புகளை உங்கள் மின்னணு-தாக்கல் சுயவிவரத்தில் சேர்க்கப்பட்டுள்ள முதன்மை மற்றும் இரண்டாம் நிலைத் தொடர்புகள் இரண்டிலும் பெறலாம்
7. எனது சுயவிவரம் எந்த அளவுக்கு புதுப்பிக்கப்பட்டுள்ளது / முழுமையாக இருக்கிறது என்று எனக்கு எப்படித் தெரியும்?
உங்கள் சுயவிவர பக்கத்தில் சுயவிவர நிறைவு விழுக்காடு பட்டியை பார்த்து, சுயவிவர நிறைவு நிலையை அறிந்து கொள்ளலாம். இது பின்வரும் பயனர் வகைகளைத் தவிர பதிவு செய்யப்பட்ட அனைத்து பயனர்களுக்கும் கிடைக்கும்:
- ERIகள்
- வெளி முகவாண்மை நிறுவனங்கள்
- TIN 2.0 பங்குதாரர்கள்
- ITDREIN
- வரி பிடித்தம் மற்றும் வசூல் செய்பவர்
8. எனது இலக்கமுறை கையொப்பச்சான்றிதழ் (DSC) பதிவு செய்யப்பட்டுள்ளதா என்று எனக்கு எப்படித் தெரியும்?
பதிவு நிலையைக் காண, நீங்கள் உங்கள் சுயவிவரத்திற்குச் சென்று, DSC ஐ பதிவு செய் என்பதை கிளிக் செய்யவும். CA / பெரு நிறுவனம் / ERI ஆகியோருக்கு PANக்கான / முதன்மை தொடர்பாளருக்கான DSC பதிவு செய்யப்படவில்லை அல்லது காலாவதியாகி விட்டது என்றால், அதை குறிக்கும் செய்தி சுயவிவரத்தில் உள்நுழைந்த பின் காண்பிக்கப்படும். கூடுதலாக, மேலும் அறிந்துகொள்ள DSC பதிவு செய்வதற்கான பயனர் கையேட்டைப் பார்க்கவும்.