1. மேலோட்ட பார்வை
வருமானவரி திருப்பிச் செலுத்தும் தொகை என்பது செலுத்தப்பட்ட வரித்தொகையானது (TDS அல்லது TCS அல்லது முன்கூட்டிய வரி அல்லது சுய மதிப்பீட்டு வரி மூலமாக) நிலுவைத் தொகையை விட அதிகமாக இருக்கும்பட்சத்தில் வருமானவரித் துறையால் திருப்பிச் செலுத்தப்படும் தொகையாகும். வரியாகப்பட்டது வருமானவரித் துறையால் அனைத்து பிடித்தங்களும், விலக்குகளும் மதிப்பீட்டின்போது பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு பின்னர் கணக்கிடப்படுகிறது.
வருமானவரித் துறையின் வரித்தொகை திருப்பிச் செலுத்தும் நடவடிக்கையானது வரி செலுத்துபவரால் அறிக்கை மின்னணு-சரிபார்க்கப்பட்ட பின்னரே தொடங்குகிறது. வழக்கமாக, திருப்பிச் செலுத்தும் தொகையானது வரி செலுத்துபவரின் கணக்கில் வரவு வைக்கப்பட 4-5 வாரங்கள் ஆகும். இருப்பினும், இந்த காலகட்டத்தில் திருப்பிச் செலுத்திய தொகை கிடைக்கவில்லை என்றால், வரி செலுத்துபவர் கட்டாயமாக ITR இல் உள்ள முரண்பாடுகள் குறித்த தகவல் குறிப்பை ஆய்வு செய்யவும்; தொகையை திருப்பிச் செலுத்துவது தொடர்பான வருமானவரித் துறையின் யாதொரு அறிவிப்புக்கும் மின்னஞ்சலை ஆய்வு செய்யவும். வரி செலுத்துவோர் தொகையை திருப்பிச் செலுத்தல் நிலையை மின்னணு-தாக்கலில் கீழே விவரிக்கப்பட்டுள்ள செயல்முறையின்படியும் ஆய்வு செய்ய முடியும்.
2. இந்த சேவையைப் பெறுவதற்கான முன்-நிபந்தனைகள்
- சரியான பயனர் ID மற்றும் கடவுச்சொல்
- ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட PAN
- தொகையை திருப்பிச் செலுத்தக் கோரி ITR தாக்கல்
3. செயல்முறை/படிப்படியான வழிகாட்டி
3.1 தொகையை திருப்பிச் செலுத்தும் நிலை
படி 1: மின்னணு-தாக்கல் இணைய முகப்பின் முகப்புப் பக்கத்திற்குச் செல்லவும்.
படி 2: பயனர் ID மற்றும் கடவுச்சொல்லை உள்ளிடவும்.
தனிநபர் பயனர்களுக்கு, PAN ஆதாருடன் இணைக்கப்படவில்லை என்றால், ஆதாருடன் இணைக்கப்படாததால் உங்கள் PAN செயலற்றதாக ஆக்கப்பட்டுள்ளது என்ற பாப்அப் செய்தியை நீங்கள் காண்பீர்கள்.
PAN ஐ ஆதாருடன் இணைக்க, இப்போது இணைக்கவும் என்ற பட்டனை கிளிக் செய்யவும், இல்லையெனில் தொடரவும் என்பதை கிளிக் செய்யவும்.
படி 3: மின்னணு-தாக்கல் தாவல் > வருமானவரி அறிக்கைகள் > தாக்கல் செய்யப்பட்ட அறிக்கைகளை காண்க என்பதற்கு செல்லவும்.
படி 4: இப்போது நீங்கள் விரும்பிய மதிப்பீட்டு ஆண்டிற்கான தொகை திருப்பிச் செலுத்தல் நிலையை ஆய்வு செய்யலாம்.
விவரங்களை காண்க என்பதை கிளிக் செய்யவும், இங்கு நீங்கள் தாக்கல் செய்த ITR இன் நிகழ் சுழற்சியையும் ஆய்வு செய்யலாம்.
நிலை 1: தொகையைத் திருப்பிச் செலுத்தும்போது:
நிலை 2: திருப்பிச் செலுத்தப்படும் தொகை பகுதியளவு சரிகட்டப்படும்போது:
நிலை 3: திருப்பிச் செலுத்தப்படும் தொகை முழுவதுமாக சரிகட்டப்படும்போது:
நிலை 4: தொகையைத் திருப்பிச் செலுத்துவது தோல்வியடையும்போது:
குறிப்பு: உங்கள் PAN செயல்பாட்டில் இல்லையென்றால், உங்கள் தொகையைத் திருப்பிச் செலுத்துவது தோல்வியடையும், மேலும் உங்கள் PAN ஐ ஆதாருடன் இணைக்கவேண்டி ஒரு எச்சரிக்கை செய்தியை நீங்கள் காண்பீர்கள்.
தொகையைத் திருப்பிச் செலுத்துவது தோல்வியடைய இதர காரணங்கள்:
மேற்கூறியவற்றிற்கும் மேலாக, வருமானவரித் துறையினரால் அனுப்பப்படும் திருப்பிச் செலுத்தப்படும் தொகையானது பின்வரும் காரணங்களுக்காக திட்டமிட்டபடி உங்கள் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படுவதிலிருந்து தோல்வியடைய நேரிடலாம்:
1. ஒருவேளை வங்கிக் கணக்கு முன்கூட்டியே சரிபார்க்கப்படாமல் இருந்தால். இப்போது உங்கள் வங்கிக் கணக்கை முன்கூட்டியே சரிபார்ப்பது கட்டாயமாகும்.
2. வங்கிக் கணக்கில் குறிப்பிடப்பட்டுள்ள பெயர் PAN அட்டை விவரங்களுடன் பொருந்தாமல் இருத்தல்.
3. ஒருவேளை IFSC குறியீடு தவறாக இருக்கும்போது.
4. ஒருவேளை நீங்கள் ITR இல் குறிப்பிட்டுள்ள கணக்கு மூடப்பட்டுவிட்டிருந்தால்.