1. கட்டண தகுதிநிலை அறிதல் சேவை என்றால் என்ன?
இந்த சேவையின் மூலம், நிகழ்நிலை / அகல்நிலை முறைகள் மூலம் செலுத்தப்படும் வரிக் கட்டணத்தின் தகுதிநிலையை நீங்கள் காண முடியும்.
2. வரி செலுத்துவதற்கான விருப்பத்தேர்வுகள் என்னென்ன?
நீங்கள் இதன் மூலம் செலுத்தலாம்:
- இணைய வங்கி; அல்லது
- கடன் அட்டை; அல்லது
- பற்று அட்டை; அல்லது
- வங்கியின் கவுண்டரில் பணம் செலுத்தல்; அல்லது
- RTGS / NEFT.
3. செலுத்துச் சீட்டு (challan) உருவாக்கிய பிறகு வரி செலுத்துவதற்கு ஏதேனும் காலக்கெடு உள்ளதா?
செலுத்துச் சீட்டு (challan) உருவானதிலிருந்து நீங்கள் 15 நாட்களுக்குள் வரிக் கட்டணத்தை செலுத்த வேண்டும் (அதாவது CRN உருவான தேதியிலிருந்து 15 நாட்கள்).
ஓருவேளை முன்கூட்டிய வரி என்றால், CRN உருவானதிலிருந்து 15 நாள்களுக்குள் நீங்கள் கட்டணம் செலுத்த வேண்டும் அல்லது நடப்பு நிதியாண்டின் மார்ச் 31-ஆம் தேதி, இதில் எது முதலில் வருமோ அதற்குள் செலுத்த வேண்டும்.
4. அரசாங்கத்தின் நேரடி வரிக் கணக்கில் எனது கட்டணம் வெற்றிகரமாக செலுத்தப்பட்டிருப்பதை நான் எப்படி அறிவேன்?
மின்னணு தாக்கல் முகப்பில் பதிவு செய்யப்பட்ட உங்கள் மின்னஞ்சல் முகவரியில் உறுதிப்படுத்தும் மின்னஞ்சல் மற்றும் அலைபேசி எண்ணில் குறுஞ்செய்தியை (SMS-ஐ) பெறுவீர்கள். மேலும், உறுதிப்படுத்தப்பட்ட கட்டணத்தின் அடிப்படையில் வங்கியால் வழங்கப்படும் CIN உடன் வெற்றிகரமான கட்டண தகுதிநிலையை கட்டண வரலாறு பிரதிபலிக்கும்.
5. என்னால் செலுத்தப்படாத ஒரு CRN கட்டண தகுதிநிலையை நான் சரிபார்க்க முடியுமா?
உங்களிடம் பின்வருவன இருந்தால் எந்தவொரு CRN/PAN தகுதிநிலையையும் நீங்கள் சரிபார்க்கலாம்:
- CRN அல்லது செலுத்துச் சீட்டு (challan) குறிப்பு எண்;
- (செல்லுபடியாகும்) PAN / TAN ( எதற்க்கு நிகராக கட்டணம் செலுத்தப்பட்டதோ); மற்றும்
- உங்களிடம் இருக்கக் கூடிய செயலில் உள்ள அலைபேசி எண்.
6. வங்கியில் இருந்து பதில் ஏதும் இல்லை என்றால் நான் மீண்டும் கட்டணம் செலுத்த வேண்டுமா?
விவரங்கள் வங்கியிலிருந்து பெறப்பட்டவுடன் தகுதிநிலை புதுப்பிக்கப்படும். தயவுசெய்து ஒரு மணி நேரம் காத்திருந்து CRN நிலையை சரிபார்க்கவும். தொகை பற்று வைக்கப்பட்டிருந்தால், தயவுசெய்து வங்கியைத் தொடர்பு கொள்ளவும்.
7. வரி செலுத்துதல் தோல்வியுற்றால் அதே CRN உடன் நான் கட்டணம் செலுத்த முடியுமா?
தொகை பற்று வைக்கப்பட்டிருந்தால், தயவுசெய்து வங்கியைத் தொடர்பு கொள்ளவும்.
நகல் வசதியைப் பயன்படுத்தி அல்லது புதிய கட்டணம் செலுத்தல் என்பதை கிளிக் செய்வதன் மூலம் புதிய செலுத்துச் சீட்டு (challan) - ஐ உருவாக்கவும்.
8. பரிவர்த்தனை கைவிடப்படுமானால் நான் என்ன செய்ய வேண்டும்?
தொகை பற்று வைக்கப்பட்டிருந்தால், தயவுசெய்து வங்கியைத் தொடர்பு கொள்ளவும்.
9. வங்கி உறுதிப்படுத்தலுக்காக காத்திருக்கும் செய்தியைக் கண்டால் நான் என்ன செய்ய வேண்டும்?
சரிபார்ப்பவர் பரிவர்த்தனைக்கு ஒப்புதல் அளித்தவுடன் பரிவர்த்தனையின் தகுதிநிலை புதுப்பிக்கப்படும். மேலும் விவரங்களுக்கு தயவுசெய்து உங்கள் வங்கியைத் தொடர்பு கொள்ளவும்.
10. வங்கியில் இருந்து தவறான விவரங்கள் எனும் செய்தியை நான் காணும்போது ஒரு CRN-க்கான கட்டணத்தை நான் மீண்டும் செலுத்த முடியுமா?
தொகை பற்று வைக்கப்பட்டிருந்தால், தயவுசெய்து வங்கியைத் தொடர்பு கொள்ளவும்.