1. மேலோட்டப்பார்வை
எனது வங்கிக் கணக்கு சேவை, செல்லுபடியாகும் PAN எண் மற்றும் செல்லுபடியாகும் வங்கி கணக்கு வைத்திருக்கும் அனைத்துப் பதிவுசெய்யப்பட்ட வரி செலுத்துவோருக்கும், மின்னணு-தாக்கல் இணைய முகப்பில் உள்நுழைந்த பிறகு கிடைக்கும். கீழ்கண்டவற்றிற்கு இந்த சேவை உங்களை அனுமதிக்கும்:
- வங்கிக் கணக்கைச் சேர்க்கவும், அதை முன்-சரிபார்க்கவும்
- மூடப்பட்ட அல்லது செயலிழந்த வங்கிக் கணக்கை அகற்றவும்
- வருமானவரித் திரும்பப் பெறுதலை பெறுவதற்கும் மற்றும் இணைய வங்கிச் சேவை மூலம் உள்நுழைவதற்கும், சரிபார்க்கப்பட்ட ஒரு வங்கிக் கணக்கை பரிந்துரைக்கவும்
- திருப்பிச் செலுத்திய தொகையை ஒரு வங்கிக் கணக்கில் பெறாதிருக்க அந்த வங்கிக் கணக்கின் பரிந்துரையை நீக்கவும்
- சரிபார்க்கப்பட்ட வங்கிக் கணக்கிற்கு EVC-ஐ இயக்கவும் அல்லது முடக்கவும் (தனிப்பட்ட வரி செலுத்துவோருக்கு மட்டும், மின்னணு-தாக்கல் ஒருங்கிணைந்த வங்கிகளுக்கு மட்டும்)
- முன்- சரிபார்ப்பு தோல்வியுற்ற வங்கிக் கணக்குகளை மீண்டும் சரிபார்க்கவும்-
2. இந்த சேவையை பெறுவதற்கான முன் தேவைகள்
- மின்னணு-தாக்கல் முகப்பில் பதிவு செய்து, செல்லுபடியாகும் பயனர் ID மற்றும் கடவுச்சொல் வைத்திருக்கும் பயனர்
- முன் சரிபார்க்கப்பட வேண்டிய வங்கிக் கணக்குடன் PAN இணைக்கப்பட்டிருக்க வேண்டும்
| சேவை | முன்தேவைகள் |
|---|---|
| வங்கிக் கணக்கைச் சேர்த்து சரிபார்க்கவும் |
1. கணக்கு PAN உடன் இணைக்கப்பட வேண்டும்
குறிப்பு*: பயனர் உள்நுழைவு வகையைப் பொறுத்து சரிபார்ப்பு விருப்பங்கள் கிடைக்கின்றன. |
| வங்கிக் கணக்கை அகற்றவும் |
1. ஏதேனும் ஒரு சரிபார்ப்பு முறைக்கான அணுகல்*:
குறிப்பு*: பயனர் உள்நுழைவு வகையைப் பொறுத்து சரிபார்ப்பு விருப்பங்கள் கிடைக்கின்றன. |
| ஒரு வங்கிக் கணக்கை பரிந்துரைக்கவும் அல்லது பணத்தைத் திரும்பப் பெறுவதற்கான பரிந்துரையிலிருந்து வங்கிக் கணக்கை அகற்றவும். |
1. சரிபார்க்கப்பட்ட வங்கிக் கணக்கு |
| EVCஐ இயக்கவும் |
1. மின்னணு-தாக்கல் ஒருங்கிணைந்த வங்கிகளில் உள்ள கணக்கு. |
3. படிப்படியான வழிகாட்டி
படி 1: உங்கள் பயனர் ID மற்றும் கடவுச்சொல்லை பயன்படுத்தி மின்னணு-தாக்கல் முகப்பில் உள்நுழையவும்.
படி 2: முகப்புப் பலகையிலிருந்து எனது சுயவிவரப் பக்கத்திற்குச் செல்லவும்.
படி 3: எனது வங்கிக் கணக்கை கிளிக் செய்யவும்.
எனது வங்கிக் கணக்குகள் பக்கத்தில், சேர்க்கப்பட்ட, தோல்வியடைந்த மற்றும் நீக்கப்பட்ட வங்கிக் கணக்குகள் தாவல்கள் காட்டப்படும்.
எனது வங்கிக் கணக்கு சேவையின் கீழ் உள்ள பல்வேறு வசதிகளை எவ்வாறு பயன்படுத்துவது என்பதை அறிய, பின்வரும் பிரிவுகளைப் பார்க்கவும்:
| வங்கிக் கணக்கைச் சேர்த்து, முன்- சரிபார்க்கவும் | பிரிவு 3.1க்குச் செல்லவும் |
| வங்கிக் கணக்கை அகற்றவும் | பிரிவு 3.2க்குச் செல்லவும் |
| ஒரு வங்கிக் கணக்கை பரிந்துரைக்கவும் அல்லது பணத்தைத் திரும்பப் பெறுவதற்கான பரிந்துரையிலிருந்து வங்கிக் கணக்கை அகற்றவும். | பிரிவு 3.3க்குச் செல்லவும் |
| EVC ஐ செயல்படுத்த மற்றும் முடக்க | பிரிவு 3.4க்குச் செல்லவும் |
| வங்கிக் கணக்கை மீண்டும் சரிபார்க்கவும் | பிரிவு 3.5க்குச் செல்லவும் |
| இணைய வங்கிசேவை மூலம் உள்நுழைய ஒரு வங்கிக் கணக்கை பரிந்துரைக்கவும் | பிரிவு 3.6க்குச் செல்லவும் |
3.1 வங்கிக் கணக்கைச் சேர்த்து முன்- சரிபார்க்கவும்
PAN அல்லது ஆதார் எண்ணைப் பயன்படுத்தி மின்னணு-தாக்கல் முகப்பில் உள்நுழைவதன் மூலம்
படி 1: எனது வங்கிக் கணக்குகள் பக்கத்தில், வங்கிக் கணக்கைச் சேர்க்கவும் என்பதை கிளிக் செய்யவும்.
படி 2: வங்கிக் கணக்கைச் சேர் பக்கத்தில், வங்கிக் கணக்கு எண்ணை உள்ளிட்டு, கணக்கு வகை மற்றும் கணக்கை கொண்டிருப்பவர் வகையைத் தேர்ந்தெடுத்து, IFSC ஐ உள்ளிடவும். வங்கியின் பெயர் மற்றும் கிளை IFSC அடிப்படையில் தானாக நிரப்பப்படும். உங்கள் வங்கி மின்னணு-தாக்கல் மூலம் ஒருங்கிணைக்கப்பட்டிருந்தால், உங்கள் அலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் ID உங்கள் மின்னணு தாக்கல் சுயவிவரத்திலிருந்து முன்கூட்டியே நிரப்பப்படும், மேலும் அவற்றைத் திருத்த முடியாது.
படி 3: மின்னணு-சரிபார்ப்புக்குச் செல்லவும் என்பதை கிளிக் செய்யவும்.
மின்னணு-சரிபார்ப்பு விருப்பத்தைத் தேர்ந்தெடுத்து தொடரவும் என்பதைக் கிளிக் செய்யவும்.
OTP-ஐ உள்ளிட்டு சரிபார்க்கவும்.
சரிபார்ப்பு கோரிக்கை வெற்றிகரமாக சமர்ப்பிக்கப்பட்டதும், ஒரு வெற்றிச் செய்தி காட்டப்படும். மேலும், உங்கள் அலைபேசி எண் மற்றும் மின்னணு-தாக்கல் முகப்பில் பதிவுசெய்யப்பட்ட மின்னஞ்சல் IDக்கு ஒரு செய்தியைப் பெறுவீர்கள்.
3.2 வங்கி கணக்கு நீக்கம்
படி 1: விரும்பிய வங்கிக் கணக்கிற்கான செயல் நெடுவரிசையின் கீழ் வங்கிக் கணக்கை அகற்று என்பதைக் கிளிக் செய்யவும்.
படி 2: வங்கிக் கணக்கை அகற்றுவதற்கான கீழ்தோன்றும் ஒரு காரணத்தைத் தேர்ந்தெடுக்கவும். நீங்கள் மற்றவை என்பதைத் தேர்ந்தெடுத்தால், உரைப்பெட்டியில் காரணத்தை உள்ளிட்டு தொடரவும் என்பதை கிளிக் செய்யவும்.
படி 3: மின்னணு-சரிபார்ப்பு செய்வதற்கான விருப்பத்தைத் தேர்ந்தெடுத்து, தொடரவும் என்பதைக் கிளிக் செய்யவும்.
படி 4: OTP ஐ உள்ளிட்டு சரிபார்க்கவும்.
வங்கிக் கணக்கை வெற்றிகரமாக அகற்றும்போது, வெற்றிச் செய்தி காட்டப்படும்.
‘சரிபார்ப்பு செயல்பாட்டில் உள்ளது’ என்ற நிலை கொண்ட வங்கிக் கணக்கை நீங்கள் நீக்கலாம், நீக்கப்பட்டவுடன் அதே வங்கிக் கணக்கை சரியான விவரங்களுடன் சேர்க்க முயற்சி செய்யலாம்.
3.3 ஒரு வங்கிக் கணக்கை பரிந்துரைக்கவும் அல்லது பணத்தைத் திரும்பப் பெறுவதற்கான பரிந்துரையிலிருந்து வங்கிக் கணக்கை அகற்றவும்
A. தொகையைத் திருப்பிச் செலுத்துவதற்காக ஒரு வங்கிக் கணக்கை பரிந்துரைக்கவும்
படி 1: பணத்தைத் திரும்பப் பெறுவதற்காக ஒரு வங்கிக் கணக்கைப் பரிந்துரைக்க, நீங்கள் பரிந்துரைக்க விரும்பும் வங்கிக் கணக்கிற்கான 'பணத்தைத் திரும்பப் பெறுவதற்காகப் பரிந்துரைக்கவும்' என்ற டாக்கிள்/சுவிட்சைக் கிளிக் செய்யவும் (அந்த சுவிட்ச் இடதுபுறத்தில் அமைந்திருக்கும்).
படி 2: தேர்ந்தெடுக்கப்பட்ட வங்கிக் கணக்கை பரிந்துரைக்க விரும்புகிறீர்கள் என்பதை உறுதிப்படுத்த, தொடரவும் என்பதை கிளிக் செய்யவும்.
வெற்றியடைந்ததும், சுவிட்ச் வலதுபுறம் நகரும்.
B. திருப்பிச் செலுத்திய தொகைக்கு ஒரு வங்கிக் கணக்கை பரிந்துரையில் இருந்து நீக்கவும்
படி 1: பணத்தைத் திரும்பப் பெறுவதற்காகப் பரிந்துரைக்கப்பட்ட வங்கிக் கணக்கை நீக்க, நீங்கள் பரிந்துரையிலிருந்து நீக்க விரும்பும் வங்கிக் கணக்கிற்கான 'பணத்தைத் திரும்பப் பெறுவதற்காகப் பரிந்துரை' டாக்கிள்/சுவிட்சை (அது வலதுபுறத்தில் அமைந்திருக்கும்) கிளிக் செய்யவும்.
படி 2: தேர்ந்தெடுக்கப்பட்ட வங்கிக் கணக்கின் நியமனத்தை நீக்க விரும்புகிறீர்கள் என்பதை உறுதிப்படுத்த, தொடரவும் என்பதை கிளிக் செய்யவும்.
வெற்றியடைந்ததும், சுவிட்ச் இடதுபுறமாக மாறும்.
3.4 EVC ஐ செயல்படுத்த மற்றும் முடக்க
A. EVC ஐ செயலாக்கவும்
படி 1: நீங்கள் EVC ஐ இயக்க விரும்பினால், வங்கிக் கணக்கில் செயல்கள் நெடுவரிசையின் கீழ் EVC ஐ செயல்படுத்தவும் என்பதை கிளிக் செய்யவும்.
படி 2: ஒரு உறுதிப்படுத்தும் செய்தி காட்டப்படும். தொடரவும் என்பதை கிளிக் செய்யவும்.
குறிப்பு:
- பின்வரும் நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்பட்டால் மட்டுமே சரிபார்க்கப்பட்ட வங்கிக் கணக்கில் மின்னணு சரிபார்ப்பு குறியீட்டை (EVC ஐ) செயலாக்க முடியும்:
- உங்கள் அலைபேசி எண் அல்லது மின்னஞ்சல் ID வங்கியால் சரிபார்க்கப்பட வேண்டும்.
- மின்னணு-தாக்கலில் பதிவுசெய்யப்பட்ட உங்கள் அலைபேசி எண் வங்கியால் சரிபார்க்கப்பட்ட அதே எண்ணாக இருக்க வேண்டும். அவை பொருந்துவதை உறுதிசெய்ய, உங்கள் மின்னணு-தாக்கல் சுயவிவரத்தில் உங்கள் அலைபேசி எண்ணை வங்கியுடன் இணைக்கப்பட்டதைப் போலவே புதுப்பிக்கவும் அல்லது உங்கள் மின்னணு-தாக்கல் சுயவிவரத்தில் உள்ளதைப் போலவே உங்கள் வங்கியுடன் உங்கள் அலைபேசி எண்ணைப் புதுப்பிக்கவும்.
- வேறு எந்த வங்கிக் கணக்கிற்கும் மின்னணு சரிபார்ப்பு குறியீடு (EVC) செயலாக்கப்படக்கூடாது.
- உங்கள் வங்கி மின்னணு-தாக்கல் உடன் ஒருங்கிணைக்கப்பட வேண்டும். மின்னணு-தாக்கல் மூலம் ஒருங்கிணைக்கப்பட்ட வங்கிகளின் பட்டியலை இங்கே காணலாம்: உள்நுழைவு > எனது சுயவிவரம் > எனது வங்கிக் கணக்கு > குறிப்புகளில் பிரிவு > “வங்கிகளின் பட்டியல்” என்பதைக் கிளிக் செய்யவும்
- நீங்கள் உங்கள் வங்கிக் கணக்கை முன்கூட்டியே சரிபார்த்து EVC-ஐ இயக்காமல் இருக்க விரும்பினால், உங்கள் வங்கி சரிபார்க்கப்பட்ட மின்னணு -தாக்கல் அலைபேசி அல்லது மின்னஞ்சல் தொடர்பு விவரங்களுடன் பொருந்த வேண்டியதில்லை.
மேலே உள்ள நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்பட்டால், தேர்ந்தெடுக்கப்பட்ட வங்கிக் கணக்கிற்கு EVC வெற்றிகரமாக செயல்படுத்தப்படும், மேலும் நிலை சரிபார்க்கப்பட்டது மற்றும் EVC செயல்படுத்தப்பட்டது என புதுப்பிக்கப்படும்:
படி 3: ஒரு வங்கிக் கணக்கிற்கு EVC ஏற்கனவே இயக்கப்பட்டிருந்தால், மற்றொரு வங்கிக் கணக்கிற்கு EVC ஐ இயக்க முயற்சித்தால், அதைப் பற்றி உங்களுக்குத் தெரிவிக்கும் ஒரு செய்தி காட்டப்படும். செய்தியில் தொடரவும் என்பதைக் கிளிக் செய்யவும், படி 2 இல் குறிப்பிடப்பட்டுள்ள நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்பட்டால் வங்கிக் கணக்கிற்கு EVC இயக்கப்படும். அப்படியானால், முன்பு செயல்படுத்தப்பட்ட வங்கிக் கணக்கிற்கு EVC முடக்கப்படும்.
குறிப்பு: நீங்கள் ரத்துசெய் என்பதைக் கிளிக் செய்தாலோ அல்லது செய்தியை மூடிவிட்டாலோ, ஏற்கனவே உள்ள வங்கிக் கணக்கிற்கு EVC செயல்படுத்தப்பட்ட நிலையிலேயே இருக்கும்.
B. EVC ஐ முடக்கு
படி 1: EVC செயல்படுத்தப்பட்ட வங்கிக் கணக்கு செயல்கள் நெடுவரிசையின் கீழ் EVC ஐ முடக்கு என்பதைக் கிளிக் செய்யவும்.
Step 2: ஒரு உறுதிப்படுத்தும் செய்தி காட்டப்படும். தொடரவும் என்பதை கிளிக் செய்யவும்.
வெற்றிபெற்றதும், தேர்ந்தெடுக்கப்பட்ட கணக்கிற்கு EVC முடக்கப்பட்டு, அதன் நிலை சரிபார்க்கப்பட்டது என்று மட்டும் புதுப்பிக்கப்படும்.
3.5 வங்கிக் கணக்கை மீண்டும் சரிபார்க்கவும்
படி 1: வங்கிக் கணக்கிற்கான சரிபார்ப்பு முன்பு தோல்வியுற்று இருந்தால், தோல்வியுற்ற வங்கிக் கணக்குகள் தாவலின் கீழ் அதன் விவரங்களை காண்பீர்கள். நீங்கள் மறுமதிப்பீடு செய்ய வேண்டிய வங்கிக் கணக்கிற்கான செயல் நெடுவரிசையின் கீழ் மீண்டும் சரிபார்க்கவும் என்பதை கிளிக் செய்யவும்.
உங்கள் அலைபேசி/மின்னஞ்சல் முகவரியில் வங்கியுடன் இணைக்கப்பட்டிருந்தால் அல்லது மின்னணு-தாக்கல் சுயவிவரத்தில் ஏதேனும் புதுப்பிப்பு இருந்தால் அல்லது உங்கள் கணக்கு வகை/கணக்கு நிலை புதுப்பிக்கப்பட்டிருந்தால், நீங்கள் சேர்க்கப்பட்ட வங்கிக் கணக்கை மறுமதிப்பீடு செய்யலாம்.
படி 2: வங்கிக் கணக்கைச் சேர்க்க பக்கத்தில், வங்கி மற்றும் தொடர்பு விவரங்கள் முன்பே நிரப்பப்பட்டிருக்கும். வங்கி விவரங்கள் திருத்தப்படக் கூடியவையாக இருக்கும், ஆனால் தொடர்பு விவரங்கள் திருத்தப்பட முடியாதவையாக இருக்கும். திருத்தப்படக்கூடிய விவரங்களை தேவைப்பட்டால் புதுப்பிக்கவும். மின்னணு-சரிபார்ப்புக்குச் செல்லவும் என்பதை கிளிக் செய்யவும்.
படி 3: மின்னணு-சரிபார்ப்புக்கான முறையைத் தேர்ந்தெடுக்கவும்.
ஆதார் பதிவு செய்யப்பட்ட அலைபேசி எண்ணில் பெறப்பட்ட OTP-ஐ உள்ளிடவும்.
வெற்றிகரமாக முடிந்ததும், வங்கிக் கணக்கு 'சேர்க்கப்பட்ட வங்கிக் கணக்குகள்' தாவலின் கீழ் சேர்க்கப்படும், மேலும் அதன் நிலை 'சரிபார்ப்பு நடைபெற்று வருகிறது' எனப் புதுப்பிக்கப்படும்.
பின்னர், உங்கள் தொடர்பு விவரங்கள் வங்கி விவரங்களுடன் சரிபார்க்கப்படும். கணக்கு விவரங்கள் வங்கியால் சரிபார்க்கப்பட்டால், உங்கள் வங்கிக் கணக்கு சரிபார்க்கப்படும். சேர்க்கப்பட்ட வங்கிக் கணக்குகள் தாவலின் நிலை நெடுவரிசையில் சரிபார்ப்பு நிலையை நீங்கள் சரிபார்க்கலாம்.
சரிபார்ப்பு இப்போதும் தோல்வியுற்றால், தோல்விக்கான காரணத்தின் அடிப்படையில் (ஒருங்கிணைந்த வங்கிகளுக்கு) பின்வரும் நடவடிக்கைகளை மேற்கொள்ளவும்:
| தோல்விக்கான காரணம் | எடுக்க வேண்டிய நடவடிக்கை |
| PAN-வங்கி கணக்கு-IFSC இணைப்பு தோல்வியடைந்தது | வங்கிக் கணக்குடன் உங்கள் PAN ஐ இணைக்க கிளையைத் தொடர்பு கொள்ளவும், கோரிக்கையைச் சமர்ப்பிக்க மறு-சரிபார் என்பதை கிளிக் செய்யவும். மேலும் தகவலுக்கு உங்கள் கிளையைத் தொடர்பு கொள்ளவும். |
| பெயர் பொருந்தவில்லை | PAN இன் படி பெயரை மேம்படுத்த கிளையை தொடர்பு கொள்ளவும். பின்னர், மீண்டும் சரிபார்த்து விவரங்களை மேம்படுத்தி மறு சரிபார்ப்புக்கான கோரிக்கையை சமர்ப்பிக்கவும். |
| வங்கி கணக்கு எண் பொருந்தவில்லை | மறு-சரிபார்ப்பு என்பதை கிளிக் செய்து, சரியான வங்கிக் கணக்கு எண்ணை உள்ளிட்டு மறு-சரிபார்ப்புக்கான கோரிக்கையைச் சமர்ப்பிக்கவும். |
| கணக்கு எண் கண்டறியப்படவில்லை | சரியான வங்கிக் கணக்கு எண்ணை உள்ளிட்டு மறு சரிபார்ப்புக்கான கோரிக்கையைச் சமர்ப்பிக்கவும். |
| வங்கிக் கணக்கு மூடப்பட்டது / செயலற்றது | வேறு வங்கிக் கணக்கு எண்ணைப் பயன்படுத்தி முயற்சிக்கவும். மேலும் தகவலுக்கு உங்கள் கிளையைத் தொடர்பு கொள்ளவும். |
ஒருங்கிணைக்கப்படாத வங்கிகள் ஒன்றில் கணக்கு வைத்திருந்தால், பின்வரும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்:
| தோல்விக்கான காரணம் | எடுக்க வேண்டிய நடவடிக்கை |
| வங்கிக் கணக்குடன் PAN இணைக்கப்படவில்லை | PAN ஐ வங்கிக் கணக்குடன் இணைத்து கோரிக்கையைச் சமர்ப்பிக்க மறு-சரிபார்ப்பு என்பதை கிளிக் செய்யவும். மேலும் தகவலுக்கு உங்கள் கிளையைத் தொடர்பு கொள்ளவும். |
| PAN பொருந்தவில்லை | சரியான PAN ஐ வங்கிக் கணக்குடன் இணைத்து கோரிக்கையைச் சமர்ப்பிக்க மறு-சரிபார்ப்பு என்பதை கிளிக் செய்யவும். மேலும் தகவலுக்கு உங்கள் கிளையைத் தொடர்பு கொள்ளவும். |
| தவறான கணக்கு வகை | மறு-சரிபார்ப்பு என்பதை கிளிக் செய்து, செல்லுபடியாகும் வங்கிக் கணக்கு வகையைத் தேர்ந்தெடுத்து, சரிபார்ப்புக்கான கோரிக்கையைச் சமர்ப்பிக்கவும். |
| கணக்கு மூடப்பட்டது/செயலற்ற கணக்கு/வழக்கு தொடரப்பட்ட கணக்கு/கணக்கு முடக்கப்பட்டது அல்லது தடுக்கப்பட்டது | வேறு செல்லுபடியாகும் வங்கிக் கணக்கு எண்ணைப் பயன்படுத்தி முயற்சிக்கவும். மேலும் தகவலுக்கு உங்கள் கிளையைத் தொடர்பு கொள்ளவும். |
| கணக்கு வைத்திருப்பவரின் பெயர் தவறானது | மறு-சரிபார்ப்பு என்பதை கிளிக் செய்து விவரங்களை மேம்படுத்தவும். PAN படி பெயரைப் புதுப்பிக்க உங்கள் கிளையைத் தொடர்பு கொள்ளவும். |
வங்கி சரிபார்ப்பு நிலை 'சரிபார்ப்பைச் செய்ய முடியாது' எனில், வங்கி விவரங்களை வருமானவரித் துறையால் சரிபார்க்க முடியவில்லை என்று அர்த்தம். மின்னணு-தாக்கல் முறையுடன் ஒருங்கிணைக்கப்பட்ட மற்றும் துறையால் சரிபார்க்கக்கூடிய மற்றொரு கணக்கை நீங்கள் சேர்க்கலாம் அல்லது பணத்தைத் திரும்பப் பெறுவது பொருந்தினால், பணத்தைத் திரும்பப் பெறுவதற்கான மறு வெளியீட்டு கோரிக்கையை எழுப்பும்போது ECS ஆணை படிவத்தைச் சமர்ப்பிக்கலாம்.
3.6 இணைய வங்கிச் சேவை மூலம் உள்நுழைய ஒரு சரிபார்க்கப்பட்ட வங்கிக் கணக்கை பரிந்துரைக்கவும்
படி 1: இணைய வங்கிச் சேவை மூலம் உள்நுழைவதற்கான பரிந்துரைப் பட்டனை இயக்கவும்:
படி 2: தொடரவும் என்பதைக் கிளிக் செய்யவும்.
படி 3: இப்போது, இணைய வங்கிச் சேவை மூலம் உள்நுழைவதற்காக வங்கிக் கணக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.