1. நான் பல டிமேட் கணக்குகளுக்கு EVC ஐ செயல்படுத்த முடியுமா?
முடியாது. EVC ஐ எப்போதும் ஏதாவது ஒரு டிமேட் கணக்கிற்காக மட்டுமே செயல்படுத்த முடியும். நீங்கள் வேறொரு டிமேட் கணக்கிற்கு EVC ஐ செயல்படுத்த முயற்சித்தால் நடப்புக் கணக்கிற்கான EVC விருப்பத்தேர்வை விலக்கக்கோரும் செய்தியை பெறுவீர்கள். நடப்புக் கணக்கிலிருந்து EVC விருப்பத்தை விலக்கியவுடன் அதை வேறொரு கணக்கிற்கு செயல்படுத்தலாம்.
2. ஒரு டிமேட் கணக்கை சேர்ப்பதற்கான முன்தேவைகள் என்னென்ன?
ஒரு டிமேட் கணக்கை சேர்க்க:
- நீங்கள் மின்னணு-தாக்கல் முகப்பில் பதிவு செய்யப்பட்ட பயனராக இருக்க வேண்டும்
- நீங்கள் NSDL அல்லது CDSL இல் செல்லுபடியாகக்கூடிய மற்றும் PAN உடன் இணைக்கப்பட்டுள்ள டிமேட் கணக்கை வைத்திருக்க வேண்டும்
- NSDL வகை வைப்பென்றால் நீங்கள் வைப்பு ID மற்றும் வாடிக்கையாளர் ID ஆகியவற்றை வைத்திருக்க வேண்டும்
- CSDL வகை வைப்பென்றால் நீங்கள் ஒரு டிமேட் கணக்கு எண்ணை வைத்திருக்க வேண்டும்
- OTP ஐ பெறும்பொருட்டு நீங்கள் டிமேட் கணக்குடன் இணைக்கப்பட்ட பயன்பாட்டில் உள்ள அலைபேசி எண் அல்லது மின்னஞ்சல் முகவரியை வைத்திருக்க வேண்டும்
3. டிமேட் கணக்கின் தொடர்பு விவரங்களுடன் இணைக்கப்பட்டு, வைப்பகத்தால் முன்னரே சரிபார்க்கப்பட்ட எனது அலைபேசி எண்/ மின்னஞ்சல் ID ஐ நான் மாற்றினால் என்ன நேரிடும் ?
அத்தகைய நிலையில், நீங்கள் சேர்த்த டிமேட் கணக்குகள் பக்கத்தில் சம்பந்தப்பட்ட அலைபேசி எண்/ மின்னஞ்சல் IDக்கு அருகில் ஒரு "!" என்ற எச்சரிக்கைக் குறியை காண்பீர்கள். நீங்கள் மின்னணு-தாக்கல் முகப்பில், உங்கள் தொடர்பு விவரங்களை வைப்பகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள விவரங்களில் உள்ளவாறு, புதுப்பிக்க அறிவுறுத்தப்படுவீர்கள்.
4. ஒருவேளை எனது டிமேட் கணக்கின் சரிபார்ப்பு தோல்வியடைந்ததாக கூறப்பட்டால் நான் என்ன செய்ய வேண்டும்?
ஒருவேளை சரிபார்ப்பு தோல்வியுற்றால், தோல்விக்கான காரணத்துடன் அடுத்து மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கையை தெரிவிக்கும் செய்தி திரையில் தோன்றும். நீங்கள் விவரங்களை மீண்டும் சரிபார்த்து, புதுப்பித்து கோரிக்கையை மீண்டும் சமர்ப்பிக்கலாம்.
5. PAN இல் இருக்கும் எனது பெயர் டிமேட் கணக்கில் உள்ள எனது பெயரோடு பொருந்தாத காரணத்தினால் எனது டிமேட் கணக்கை என்னால் சரிபார்க்க முடியவில்லை. நான் என்ன செய்ய வேண்டும்? நான் என்ன செய்ய வேண்டும்?
ஒருவேளை பெயர் பொருந்தவில்லையெனில், PAN இல் உள்ளவாறு பெயரை புதுப்பிக்க வைப்பகத்தை தொடர்பு கொள்ளவும். புதுப்பித்தவுடன், எனது டிமேட் கணக்கை மீண்டும் சரிபார்க்கவும் என்பதை கிளிக் செய்து, விவரங்களை புதுப்பித்து சரிபார்ப்புக்கான கோரிக்கையை சமர்ப்பிக்கலாம்.
6. வருமான வரி முகப்பின் மூலம் எனது டிமேட் கணக்கை செயல்படுத்துவதின் நோக்கம் என்ன?
உங்கள் டிமேட் கணக்கை செயல்படுத்தினால் நீங்கள் வருமானவரி அறிக்கை/படிவங்களின் மின்னணு சரிபார்ப்புக்கு EVC ஐ உருவாக்குதல், மின்-நடவடிக்கைகள், பணத்தைத் திரும்பப் பெறுதல், கடவுச்சொல்லை மீட்டமைத்தல் மற்றும் உங்கள் டிமேட் கணக்குடன் இணைக்கப்பட்ட சரிபார்க்கப்பட்ட அலைபேசி எண்/மின்னஞ்சல் IDக்கு அனுப்பப்பட்ட OTP ஐ பயன்படுத்தி மின்னணு-தாக்கல் முகப்பில் பாதுகாப்பாக உள்நுழைதல் ஆகியவற்றுக்கு இதை பயன்படுத்தலாம்.
7. மின்னணு-தாக்கல் முகப்பில் உள்ள எனது தொடர்பு விவரங்கள் எனது டிமேட் கணக்குடன் இணைக்கப்பட்ட எனது தொடர்பு விவரங்களிலிருந்து வேறுபட்டுள்ளது. நான் ஓரே தொடர்பு விவரங்களைத்தான் கொண்டிருக்கவேண்டும் என்பது கட்டாயமா?
இல்லை. உங்கள் மின்னணு-தாக்கல் இணைய முகப்பில் பதியப்பட்டுள்ள உங்களது தொடர்பு விவரங்களை உங்கள் டிமேட் கணக்கில் இணைக்கப்பட்டுள்ள தொடர்பு விவரங்களுக்குப் பொருந்துவதுபோல் புதுப்பிக்க வேண்டும் என்ற கட்டாயம் எதுவுமில்லை.
8. எனது மின்னணு-தாக்கல் கணக்கில் எனது முதன்மை தொடர்பு விவரங்களை எனது டிமேட் கணக்கிற்கான EVC ஐ செயல்படுத்திய பிறகு மாற்றவோ அல்லது புதுப்பிக்கவோ முடியுமா?
ஆம், EVC ஐ செயல்படுத்திய பின்னரும் உங்கள் முதன்மை தொடர்பு விவரங்களை நீங்கள் மாற்ற முடியும். நீங்கள் உங்கள் டிமேட் கணக்குடன் இணைக்கப்பட்ட மற்றும் சரிபார்க்கப்பட்ட அலைபேசி எண்/மின்னஞ்சல் ID இல் EVC ஐ பெறுவீர்கள்.