Do not have an account?
Already have an account?

1. கண்ணோட்டம்

மின்னணு-தாக்கல் முகப்பில் பதிவு செய்து அதை அணுக விரும்பும் பட்டய கணக்காளர்களுக்கு (CAகள்) இந்த உள்நுழைவுக்கு முந்தைய சேவை கிடைக்கிறது. பதிவுச் சேவையானது வரித் தொடர்பான அனைத்து செயல்பாடுகளை அணுகவும் கண்காணிக்கவும் பயனருக்கு உதவுகிறது.

2. இந்தச் சேவையைப் பெறுவதற்கான முன்நிபந்தனைகள்

  • பட்டயக் கணக்காளரின் (CA) உறுப்பினர் எண்
  • பட்டயக் கணக்காளராகப் (CA) பதிவு செய்ததற்கான சேர்க்கைத் தேதி
  • மின்னணு-தாக்கல் முகப்பில் பதிவு செய்யப்பட்டுள்ள PAN
  • குறிப்பிட்ட PAN உடன் பதிவு செய்யப்பட்ட செல்லுபடியாகும் மற்றும் செயலில் உள்ள DSC

3. படிப்படியான வழிகாட்டி


படி 1: மின்னணு-தாக்கல் முகப்பில் முதன்மை பக்கத்திற்கு சென்று பதிவு செய்யவும் என்பதை கிளிக் செய்யவும்.

Data responsive


படி 2: மற்றவை என்பதைக் கிளிக் செய்து, பட்டயக் கணக்காளர் என்ற வகைப்பிரிவைத் தேர்ந்தெடுத்து, தொடரவும் என்பதைக் கிளிக் செய்யவும்.

Data responsive


படி 3: PAN, பெயர், பிறந்த தேதி, உறுப்பினர் எண் மற்றும் சேர்க்கைத் தேதி போன்ற அனைத்து கட்டாயம் அளிக்க வேண்டிய விவரங்களையும் அடிப்படை விவரங்கள் பக்கத்தில் உள்ளிட்டு, தொடரவும் என்பதைக் கிளிக் செய்யவும்.

Data responsive


குறிப்பு:

  • உங்கள் PAN, மின்னணு-தாக்கல் முகப்பில் பதிவு செய்யப்படவில்லை என்றால், பிழைச் செய்தித் தோன்றும். உங்கள் PAN பதிவு செய்யப்பட்டிருந்தால் மட்டுமே நீங்கள் ஒரு பட்டயக் கணக்காளராகப் (CA) பதிவு செய்ய முடியும்.
  • இந்நிலையில், குறிப்பிடப்பட்ட PAN உடன் DSC இணைக்கப்பட்டுள்ளதா என்று கணினி அமைப்பு பரிசோதிக்கும். DSC பதிவு செய்யப்படவில்லை அல்லது PAN உடன் இணைக்கப்பட்டுள்ள DSC காலாவதியாகிவிட்டது என்றால், பிழைச் செய்தித் தோன்றும். தொடர்வதற்கு உங்கள் DSC ஐ PAN உடன் பதிவு செய்யவும்/புதுப்பிக்கவும்.


படி 4: ICAI தரவுத்தளத்துடனான வெற்றிகரமான சரிபார்ப்புக்குப் பிறகு, தொடர்பு விவரங்கள் பக்கம் தோன்றும். முதன்மை அலைபேசி எண், மின்னஞ்சல் ID மற்றும் முகவரி போன்ற அனைத்து கட்டாயம் அளிக்க வேண்டிய விவரங்களையும் உள்ளிட்டு, தொடரவும் என்பதைக் கிளிக் செய்யவும்.

Data responsive


படி 5: படி 4 இல் உள்ளிட்ட உங்கள் அலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் IDக்கு இரண்டு தனித்தனி OTPகள் அனுப்பப்படும். உங்கள் அலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் ID இல் பெறப்பட்ட தனித்தனி 6 இலக்க OTPகளை உள்ளிட்டு, தொடரவும் என்பதைக் கிளிக் செய்யவும்.

Data responsive



குறிப்பு:

  • OTP ஆனது 15 நிமிடங்களுக்கு மட்டுமே செல்லுபடியாகும்.
  • சரியான OTP ஐ உள்ளிட உங்களுக்கு 3 முயற்சிகள் உள்ளன.
  • திரையில் உள்ள OTP காலாவதி கவுண்டவுன் டைமர் உங்களுக்கு OTP எப்போது காலாவதியாகும் என்பதைத் தெரிவிக்கும்.
  • OTP ஐ மீண்டும் அனுப்பு என்பதைக் கிளிக் செய்தால், ஒரு புதிய OTP உருவாக்கப்பட்டு அனுப்பப்படும்.


படி 6: உள்ளிடப்பட்டுள்ள அனைத்து விவரங்களும் சரியாக உள்ளனவா என்பதைச் சரிபார்க்கவும். தேவைப்பட்டால், திரையில் உள்ள விவரங்களைத் திருத்தி, உறுதிசெய்க என்பதை கிளிக் செய்யவும்.

Data responsive


படி 7: கடவுச்சொல்லை அமைக்கின்ற பக்கத்தில், உங்களுக்கு விருப்பமான கடவுச்சொல்லை, கடவுச்சொல்லை அமைக்கவும் மற்றும் கடவுச்சொல்லை உறுதிப்படுத்தவும் ஆகிய இரண்டு உரைப் பெட்டிகளிலும் உள்ளிட்டு, உங்களின் தனிப் பயனாக்கப்பட்ட செய்தியை அமைத்து, பதிவு செய் என்பதைக் கிளிக் செய்யவும்

Data responsive


குறிப்பு:

  • புதுப்பிக்கவும் அல்லது பின் செல்லவும் என்பதை கிளிக் செய்ய வேண்டாம்.
  • உங்கள் புதிய கடவுச்சொல்லை உள்ளிடும்போது, கடவுச்சொல் கொள்கை பற்றி கவனமாக இருங்கள்.
    • கடவுச்சொல் குறைந்தபட்சம் 8 எழுத்துகள் மற்றும் அதிகபட்சம் 14 எழுத்துகள் கொண்டதாக இருக்க வேண்டும்.
    • இது பேரெழுத்து சிற்றெழுத்து இரண்டையும் கொண்டதாக இருக்க வேண்டும்.
    • இது ஒரு எண்ணையும் கொண்டிருக்க வேண்டும்.
    • இது ஒரு சிறப்பு எழுத்தையும் கொண்டிருக்க வேண்டும் (எ.கா. @#$%).


படி 8: உள்நுழைவு செயல்முறையைத் தொடங்க உள்நுழைவைத் தொடரவும் என்பதை கிளிக் செய்யவும். உங்கள் முதன்மை மின்னஞ்சல் ID-க்கு உங்களின் உள்நுழைவு விவரங்கள் அனுப்பப்படும்.

Data responsive


குறிப்பு: மின்னணு-தாக்கல் முகப்பில் உங்களுக்கு கிடைக்கக்கூடிய அனைத்து அம்சங்களையும் அணுக மின்னணு-தாக்கல் முகப்பில் உள்நுழைந்து, உங்கள் சுயவிவரத்தைப் புதுப்பிக்கவும்.

4. தொடர்புடைய தலைப்புகள்