1. கண்ணோட்டம்
மின்னணு-தாக்கல் முகப்பில் பதிவு செய்து அணுக விரும்பும் அனைத்து வணிக குழுமங்களுக்கும் இந்த உள்நுழைவுக்கு முந்தைய சேவை கிடைக்கிறது.பதிவுச் சேவையானது வரித் தொடர்பான அனைத்து செயல்பாடுகளை அணுகவும் கண்காணிக்கவும் பயனருக்கு உதவுகிறது.
2. இந்தச் சேவையைப் பெறுவதற்கான முன்நிபந்தனைகள்
- குழுமத்தின் பயன்பாட்டில் மற்றும் செயலில் உள்ள PAN
- மின்னணு தாக்கல் முகப்பில் முதன்மைத் தொடர்பாளரின் PAN பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும்
- குறிப்பிட்ட PAN உடன் பதிவு செய்யப்பட்ட முதன்மைத் தொடர்பாளரின் இலக்கமுறை கையொப்பச் சான்றிதழ் (DSC)
3. படிப்படியான வழிகாட்டி
படி 1: மின்னணு-தாக்கல் இணைய முகப்பில் முதன்மைப் பக்கத்திற்குச் சென்று பதிவு செய்யவும் என்பதை கிளிக் செய்யவும்.
படி 2: வரி செலுத்துவோராகப் பதிவு செய்யவும் என்பதைத் தேர்ந்தெடுத்து குழுமத்தின் PANஐ உள்ளிடவும். சரிபார்க்கவும் என்பதைக் கிளிக் செய்யவும். PAN ஏற்கனவே பதிவு செய்யப்பட்டிருந்தால் அல்லது தவறானதாக இருந்தால், ஒரு பிழைச் செய்தித் தோன்றும்.
படி 3: நிறுவனத்தின் பெயர், நிறுவப்பட்ட தேதி (DOI), வணிகக் குழுமத்தின் வகை மற்றும் குழும அடையாள எண் (CIN) போன்ற அனைத்து கட்டாயம் அளிக்க வேண்டிய விவரங்களையும் அடிப்படை விவரங்கள் பக்கத்தில் உள்ளிட்டு தொடரவும் என்பதைக் கிளிக் செய்யவும்.
படி 4: PAN சரிபார்க்கப்பட்ட பிறகு, முதன்மைத் தொடர்பு விவரங்கள் பக்கம் தோன்றும். முதன்மைத் தொடர்பாளரின் முதன்மை அலைபேசி எண், முதன்மை மின்னஞ்சல் ID மற்றும் அஞ்சல் முகவரி போன்ற கட்டாயம் அளிக்க வேண்டிய விவரங்களை உள்ளிட்டு தொடரவும் என்பதைக் கிளிக் செய்யவும்.
குறிப்பு:
- முதன்மைத் தொடர்பாளரின் PAN மின்னணு-தாக்கல் முகப்பில் பதிவு செய்யப்பட்டுள்ளதா என்பதை கணினி அமைப்பு சரிபார்க்கும், பதிவு செய்யவில்லையென்றால், முதன்மைத் தொடர்பாளர் முதலில் PAN ஐப் பதிவு செய்ய வேண்டும்.
- கொடுக்கப்பட்ட PANக்கு செல்லுபடியாகும் மற்றும் செயலில் உள்ள DSC பதிவு செய்யப்பட்டுள்ளதா என்பதைக் கணினி அமைப்பு சரிபார்க்கும். இல்லையெனில், முதலில் PANக்கான DSC ஐப் பதிவு செய்ய வேண்டும் / புதுப்பிக்க வேண்டும்.
படி 5: படி 4 இல் உள்ளிடப்பட்ட முதன்மைத் தொடர்பாளரின் முதன்மை அலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் IDக்கு இரண்டு தனித்தனி OTPகள் அனுப்பப்படும். அலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் ID இல் பெறப்பட்ட இரண்டு தனித்தனி 6-இலக்க OTPகளை உள்ளிட்டு தொடரவும் என்பதைக் கிளிக் செய்யவும்.
குறிப்பு:
- OTP ஆனது 15 நிமிடங்களுக்கு மட்டுமே செல்லுபடியாகும்.
- சரியான OTP ஐ உள்ளிட உங்களுக்கு 3 முயற்சிகள் உள்ளன.
- திரையில் உள்ள OTP காலாவதி கவுண்டவுன் டைமர் உங்களுக்கு OTP எப்போது காலாவதியாகும் என்பதைத் தெரிவிக்கும்.
- OTP ஐ மீண்டும் அனுப்பு என்பதைக் கிளிக் செய்தால், ஒரு புதிய OTP உருவாக்கப்பட்டு அனுப்பப்படும்.
படி 6: விவரங்களைச் சரிபார்த்தல் பக்கத்தில் தேவைப்பட்டால் விவரங்களைத் திருத்தம் செய்து, உறுதிசெய் என்பதை கிளிக் செய்யவும்.
படி 7: கடவுச்சொல்லை அமைக்கின்ற பக்கத்தில், உங்களுக்கு விருப்பமான கடவுச்சொல்லை, கடவுச்சொல்லை அமைக்கவும் மற்றும் கடவுச்சொல்லை உறுதிப்படுத்தவும் ஆகிய இரண்டு களத்திலும் உள்ளிடவும். உங்களின் தனிப்பயனாக்கப்பட்ட செய்தியை வழங்கி, பதிவு செய்யவும் என்பதை கிளிக் செய்யவும்.
குறிப்பு:
- புதுப்பிக்கவும் அல்லது பின் செல்லவும் என்பதை கிளிக் செய்ய வேண்டாம்.
- உங்கள் புதிய கடவுச்சொல்லை உள்ளிடும்போது, கடவுச்சொல் கொள்கை பற்றி கவனமாக இருங்கள்.
- கடவுச்சொல் குறைந்தபட்சம் 8 எழுத்துகள் மற்றும் அதிகபட்சம் 14 எழுத்துகள் கொண்டதாக இருக்க வேண்டும்.
- இது பேரெழுத்து சிற்றெழுத்து இரண்டையும் கொண்டதாக இருக்க வேண்டும்.
- இது ஒரு எண்ணையும் கொண்டிருக்க வேண்டும்.
- இது ஒரு சிறப்பு எழுத்தையும் கொண்டிருக்க வேண்டும் (எ.கா. @#$%).
படி 8: நீங்கள் வெற்றிகரமாக பதிவு செய்ததும், உள்நுழைவு செயல்முறையைத் தொடங்க உள்நுழைவைத் தொடரவும் என்பதைக் கிளிக் செய்யவும்.
குறிப்பு: கிடைக்கக்கூடிய அனைத்து சேவைகளையும் அணுக மின்னணு-தாக்கல் முகப்பில் உள்நுழைந்து, உங்கள் சுயவிவரத்தைப் புதுப்பிக்கவும்