Do not have an account?
Already have an account?

1. நான் ஏன் ஒரு வணிக நிறுவனமாக பதிவு செய்ய வேண்டும்?
பதிவு சேவையானது மின்னணு-தாக்கல் முகப்பில் பயனர் கணக்கை உருவாக்க உதவுகிறது. ITR ஐ தாக்கல் செய்தல், பிடித்தம் செய்யப்பட்ட வரி விவரங்கள், பணத்தைத் திரும்பப்பெறுதலின் தகுதி நிலை போன்ற சேவைகளைப் பெற வணிக நிறுவனமானது முகப்பில் பதிவு செய்யப்பட வேண்டும். பதிவு செய்த பிறகே அனைத்து வரி தொடர்பான செயல்பாடுகளையும் மின்னணு-தாக்கல் முகப்பின் மூலம் கண்காணிக்க முடியும்.

2. ஒரு வணிக நிறுவனமாக பதிவு செய்வதற்கான முன்தேவைகள் யாவை?
மின்னணு-தாக்கல் முகப்பில் ஒரு வணிக நிறுவனமாக பதிவு செய்ய, வணிக நிறுவனத்தின் செல்லுபடியாகும் மற்றும் செயலில் உள்ள PAN மற்றும் முதன்மைத் தொடர்பாளரின் பதிவு செய்யப்பட்ட DSC ஆகியவை தேவை. முதன்மைத் தொடர்பாளரின் PAN மின்னணு-தாக்கல் முகப்பில் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும்.

3. முதன்மைத் தொடர்பாளர் என்பவர் யார்?
வணிக நிறுவனத்தின் தலைமைப் பிரதிநிதியாக செயல்படும் தனிநபரே முதன்மைத் தொடர்பாளர் ஆவார். கையெழுத்திடும் அதிகாரம் மற்றும் வணிக நிறுவனத்தைப் பிணைக்கும் திறன் கொண்ட ஒரு நபரே முதன்மைத் தொடர்பாளர் என நியமனம் செய்யப்படுகிறார். முதன்மைத் தொடர்பாளர் வருமான வரித் துறையிலிருந்து வரும் வணிக நிறுவனம் சார்ந்த அனைத்து தகவல் தொடர்புகளையும் (அறிவிப்புகள்/ஆணைகள் உட்பட) பெறுவார். முதன்மைத் தொடர்பாளர் பெயர், முகவரி, தொலைபேசி எண் மற்றும் பிற விவரங்களுடன் மின்னணு-தாக்கல் முகப்பில் பதிவு செய்ய வேண்டும்.

4. எனது வணிக நிறுவனம்/நிறுவனத்தின் முதன்மைத் தொடர்பாளருக்கு PAN இல்லை. முதன்மைத் தொடர்பாளரின் இலக்கமுறை கையொப்பச் சான்றிதழ் (DSC) இயல்புநிலை PAN உடன் உள்ளது. DSC ஐ பதிவேற்ற/பதிவு செய்ய முயற்சிக்கும் போது, PAN பொருந்தவில்லை' என்ற பிழைச் செய்தி வருகிறது. என்ன செய்வது?
இயல்புநிலை PAN ஐ கொண்ட இலக்கமுறை கையொப்பச் சான்றிதழை மின்னணு-தாக்கல் முகப்பு ஏற்காது. இந்தச் சூழ்நிலையில், PAN குறியாக்கம் இல்லாத இலக்கமுறை கையொப்பச் சான்றிதழை பயன்படுத்த வேண்டும்.