1. மின்னணு-தாக்கல் முகப்பில் நான் ஏன் பதிவு செய்ய வேண்டும்?
செயலில் உள்ள மற்றும் செல்லுபடியாகும் PAN/TAN ஐ கொண்டுள்ள அனைத்து வெளி முகவாண்மை நிறுவனங்களுக்கும் பதிவு செய்தல் சேவை கிடைக்கிறது. மின்னணு-தாக்கல் முகப்பில் பதிவு செய்வதன் மூலம் ITD வழங்கும் மொத்த PAN / TAN உறுதிப்படுத்தல், TDS அறிக்கைகளைப் பதிவேற்றுதல் போன்ற பல்வேறு சேவைகள் மற்றும் வரி தொடர்பான சேவைகளை அணுகவும் பயன்படுத்தவும் இயலும்.
2. வெளி முகவாண்மை நிறுவனமாக பதிவு செய்ய எந்த அலைபேசி எண்ணில் நான் OTP ஐ பெறுவேன்?
வெளி முகவாண்மை நிறுவனமாக பதிவு செய்யும் போது கொடுக்கப்பட்ட முதன்மைத் தொடர்பாளரின் பதிவு செய்யப்பட்ட அலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் ID இல் நீங்கள் OTP ஐப் பெறுவீர்கள்.
3. இணைக்கப்பட வேண்டிய கையொப்பமிடப்பட்ட கோரிக்கைக் கடிதம் என்றால் என்ன?
கோரிக்கைக் கடிதம் என்பது வெளி முகவாண்மை நிறுவனத்தின் தலைமையால் வழங்கப்பட்ட அங்கீகாரக் கடிதமாகும். வெளி முகவாண்மை நிறுவனமாக பதிவு செய்வதற்கு அதைப் பதிவேற்ற வேண்டியது கட்டாயமாகும்.
4. வெளி முகவாண்மை நிறுவனம் என்றால் என்ன? மின்னணு-தாக்கல் முகப்பில் வெளி முகவாண்மை நிறுவனமாகப் பதிவு செய்வதற்கான முன்-நிபந்தனைகள் யாவை?
மத்திய மற்றும் மாநில அரசுத் துறைகள் அல்லது நிறுவனங்கள் அல்லது அங்கீகரிக்கப்பட்ட தன்னாட்சி அமைப்புகள் மற்றும் RBI ஆல் அங்கீகரிக்கப்பட்ட வங்கிகள் அல்லது நிதி நிறுவனங்கள் மின்னணு-தாக்கல் முகப்பில் வெளி முகவாண்மை நிறுவனங்களாக பதிவு செய்யலாம். மின்னணு-தாக்கல் முகப்பில் பதிவு செய்வதற்கு ஒரு வெளி முகவாண்மை நிறுவனத்தின் செல்லுபடியாகும் PAN/TAN ஒரு முன்நிபந்தனையாகும்.
கூடுதலாக, உங்கள் DSC ஐ மின்னணு-தாக்கல் இணைய முகப்பில் பதிவு செய்ய வேண்டும். மேலும் அறிய டிஜிட்டல் கையொப்ப சான்றிதழைப் பதிவு செய்தல் என்பதைப் பார்க்கவும்.