1. மேலோட்டப்பார்வை
வரி மதிப்பீட்டு அலுவலர், CPC அல்லது வேறு எந்த வருமானவரி அலுவலராலும் வழங்கப்பட்ட அறிவிப்புகள் / செய்திகள் / கடிதங்களுக்கு பதிலைக் காண மற்றும் சமர்ப்பிக்க அனைத்து பதிவு செய்யப்பட்ட பயனர்களுக்கும் மின்னணு-நடவடிக்கைகள் சேவை கிடைக்கிறது. மின்னணு-நடவடிக்கைகள் சேவையைப் பயன்படுத்தி பின்வரும் அறிவிப்புகள் / செய்திகள் / கடிதங்களைப் பார்க்கலாம் மற்றும் பதிலளிக்கலாம்:
- பிரிவு 139(9) இன் கீழ் குறைபாடுள்ள அறிவிப்பு
- 245 பிரிவின் கீழ் அறிவிப்பு – நிலுவைத் தொகைக்கு எதிராக ஈடுசெய்தல்
- பிரிவு 143(1)(a) இன் கீழ் முதல்கட்ட விசாரணையில் சரிசெய்தல்
- பிரிவு 154 இன் கீழ் தாமாகவே முன்வந்து திருத்தங்களை செய்தல்
- மதிப்பீட்டு அலுவலர் அல்லது வேறு ஏதேனும் வருமானவரி அலுவலரால் வழங்கப்பட்ட அறிவிப்புகள்
- தெளிவுப்படுத்தக் கோரும் தகவல்தொடர்பு கோரிக்கை
கூடுதலாக, மேற்கூறிய பட்டியலிடப்பட்ட அறிவிப்பு / தகவல்கள் / கடிதங்களுக்கு பதிலளிக்க அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதியை, பதிவு செய்யப்பட்ட பயனர் சேர்க்கலாம் அல்லது அகற்றலாம்.
2. இந்தச் சேவையைப் பெறுவதற்கான முன்தேவைகள்
- சரியான பயனர் ID மற்றும் கடவுச்சொல்லுடன் மின்னணு-தாக்கல் முகப்பில் பதிவு செய்யப்பட்ட பயனர்
- செயலில் உள்ள PAN
- (AO / CPC / வேறு ஏதேனும் வருமான வரி ஆணையம்) துறையிலிருந்து அறிவிப்பு / தகவல் / கடிதம்
- அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதியாக செயல்பட அங்கீகாரம் (அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதி வரி செலுத்துபவர் சார்பாக பதிலளிக்க விரும்பினால்)
- செயலில் உள்ள TAN (TAN நடவடிக்கைகளின் போது)
3.படிப்படியான வழிகாட்டி
படி 1: உங்கள் பயனர் ID மற்றும் கடவுச்சொல்லைப் பயன்படுத்தி மின்னணு-தாக்கல் இணைய முகப்பில் உள்நுழையவும்.
படி 2: உங்கள் முகப்புப் பலகையில், நிலுவையில் உள்ள செயல்கள் >மின்னணு-நடவடிக்கைகள் என்பதைக் கிளிக் செய்யவும்.
படி 3: மின்னணு-நடவடிக்கைகள் பக்கத்தில், சுயம் என்பதை கிளிக் செய்யவும்.
குறிப்பு:
- நீங்கள் அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதியாக உள்நுழைந்தால், அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதிஎன்பதை கிளிக் செய்து நீங்கள் அறிவிப்பின் விவரங்களைக் காணலாம்.
- சுய-PAN/TAN க்கு அறிவிப்புப் பிரிவு 133(6) அல்லது 131 இன் கீழ் இணக்கத்தின் ஒரு பகுதியாக வெளியிடப்பட்ட அறிவிப்புக்கு நீங்கள் பதிலளிக்க வேண்டும் என்றால், மற்ற PAN/TAN ஐ கிளிக் செய்யவும்.
| பிரிவு 139(9) இன் கீழ் குறைபாடுள்ள அறிவிப்பு | பிரிவு 3.1ஐ பார்க்கவும் |
| பிரிவு 143(1)(a) இன் கீழ் முதல்கட்ட விசாரணையில் சரிசெய்தல் | பிரிவு 3.2ஐ பார்க்கவும் |
| பிரிவு 154 இன் கீழ் தாமாகவே முன்வந்து திருத்தங்களை செய்தல் | பிரிவு 3.3ஐ பார்க்கவும் |
| மதிப்பீட்டு அலுவலர் அல்லது வேறு ஏதேனும் வருமானவரி அலுவலரால் வழங்கப்பட்ட அறிவிப்புகள் | பிரிவு 3.4ஐ பார்க்கவும் |
| தெளிவுப்படுத்தக் கோரும் தகவல்தொடர்பு கோரிக்கை | பிரிவு 3.5ஐ பார்க்கவும் |
| அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதியை சேர்க்க/நீக்க | பிரிவு 3.6ஐ பார்க்கவும் |
3.1. பிரிவு 139(9) இன் கீழ் குறைபாடுள்ள அறிவிப்புக்கான பதிலைப் பார்க்க மற்றும் சமர்ப்பிக்க:
படி 1: பிரிவு 139(9) இன் கீழ் குறைபாடுள்ள அறிவிப்புக்கு தொடர்புடைய அறிவிப்பை காண்க என்பதைக் கிளிக் செய்தால், நீங்கள் பின்வருவனவற்றை பெறலாம்:
| அறிவிப்பை காண்க மற்றும் பதிவிறக்கம் செய்க | படி 2 மற்றும் படி 3 ஐ பின்பற்றவும் |
| பதிலை சமர்ப்பிக்கவும் | படி 4 முதல் படி 7 வரை பின்பற்றவும் |
அறிவிப்பை பார்க்கவும் பதிவிறக்கவும்
படி 2: அறிவிப்பு/கடிதத்திற்கான pdf ஐ கிளிக் செய்யவும்.
படி3: உங்களுக்கு வழங்கப்பட்ட அறிவிப்பை உங்களால் பார்க்க முடியும். நீங்கள் அறிவிப்பை பதிவிறக்கம் செய்ய விரும்பினால், -பதிவிறக்கவும் என்பதை கிளிக் செய்யவும்.
பதிலை சமர்ப்பிக்க
படி 4: பதிலை சமர்ப்பிக்கவும் என்பதைக் கிளிக் செய்யவும்.
படி 5: நீங்கள் ஒப்புக்கொள்கிறேன் அல்லது ஒப்புக்கொள்ளவில்லை என்பதை தேர்வு செய்யலாம்.
படி 5a: நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்கள் என்பதைத் தேர்ந்தெடுத்தால், பதிலின் முறை (ஆஃப்லைன்) என்பதைத் தேர்ந்தெடுத்து, ITR வகையைத் தேர்ந்தெடுத்து, பொருத்தமான JSON கோப்பைப் பதிவேற்றி, சமர்ப்பக்கவும் என்பதைக் கிளிக் செய்யவும்.
படி 5b: நீங்கள் ஒப்புக்கொள்ளவில்லை என்றால், குறைபாடுடன் ஒப்புக்கொள்ளாததற்கான காரணத்தை எழுதி சமர்ப்பிக்கவும் என்பதைக் கிளிக் செய்யவும்.
படி 6: அறிவிப்பு தேர்வுப்பெட்டியை தேர்ந்தெடுக்கவும்.
வெற்றிகரமான சமர்ப்பிப்புக்குப் பிறகு, பரிவர்த்தனை ID உடன் ஒரு வெற்றிச் செய்தி காண்பிக்கப்படும். எதிர்கால குறிப்புக்காக இந்தப் பரிவர்த்தனை ID ஐ குறித்து வைத்துக் கொள்ளவும். மின்னணு-தாக்கல் இணைய முகப்பில் பதிவு செய்யப்பட்ட உங்கள் மின்னஞ்சல் IDயில் உறுதிப்படுத்தும் செய்தியையும் நீங்கள் பெறுவீர்கள்.
படி 7: சமர்ப்பிக்கப்பட்ட பதிலை நீங்கள் காண விரும்பினால், வெற்றிகரமான சமர்ப்பிப்பு பக்கத்தில் பதிலை காணவும்என்பதை கிளிக் செய்யவும். வழங்கப்பட்ட அறிவிப்புகள், பதில் / கருத்துக்கள் பற்றிய விவரங்களை உங்களால் பார்க்க முடியும்.
3.2. பிரிவு 143(1) (a) இன் கீழ் முதல்கட்ட விசாரணையில் சரிசெய்தலுக்கான பதிலை பார்க்க அல்லது சமர்ப்பிக்க
படி 1: பிரிவு 245 இன் கீழ் சரிசெய்தலுக்கு தொடர்புடைய அறிவிப்பை காண்க என்பதைக் கிளிக் செய்தால், நீங்கள் பின்வருவனவற்றை பெறலாம்:
| அறிவிப்பை காண்க மற்றும் பதிவிறக்கம் செய்க | படி 2 மற்றும் படி 3 ஐ பின்பற்றவும் |
| பதிலை சமர்ப்பிக்கவும் | படி 4 முதல் படி 11 வரை பின்பற்றவும் |
படி 2: அறிவிப்பு/கடிததத்திற்கான pdfஐ கிளிக் செய்யவும்.
படி3: உங்களுக்கு வழங்கப்பட்ட அறிவிப்பை உங்களால் பார்க்க முடியும். நீங்கள் அறிவிப்பை பதிவிறக்கம் செய்ய விரும்பினால், பதிவிறக்கவும் என்பதை கிளிக் செய்யவும்.
பதிலை சமர்ப்பிக்க
படி 4: பதிலை சமர்ப்பிக்கவும் என்பதைக் கிளிக் செய்யவும்.
படி 5: தாக்கல் செய்யப்பட்ட ITR இல் CPC ஆல் கண்டறியப்பட்ட முதல்கட்ட விசாரணையில் சரிசெய்தல் விவரங்களை உங்களால் பார்க்க முடியும். பதில்களை வழங்க ஒவ்வொரு மாறுபாட்டையும் கிளிக் செய்க.
படி 6: மாறுபாடு என்பதைக் கிளிக் செய்தால், மாறுபாட்டின் விவரங்கள் காண்பிக்கப்படும். குறிப்பிட்ட மாறுபாட்டிற்கான பதிலை வழங்க, பதிலை வழங்கவும் என்பதைக் கிளிக் செய்யவும்.
படி 7: முன்மொழியப்பட்ட சரிசெய்தலுக்கு ஒப்புக்கொள்கிறேன் அல்லது ஒப்புக்கொள்ளவில்லை என்பதைத் தேர்ந்தெடுத்து, ஒவ்வொரு முதல்கட்ட விசாரணை சரிசெய்தலுக்குப் பதிலளித்த பிறகும் சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.

படி 8: அனைத்து பதில்களும் வழங்கப்பட்டவுடன், பின்செல் என்பதைக் கிளிக் செய்யவும்.
படி 9: பின்செல் என்பதைக் கிளிக் செய்தால், உங்களது தாக்கல் செய்யப்பட்ட ITR இல் CPC ஆல் கண்டறியப்பட்ட முதல்கட்ட விசாரணையில் சரிசெய்தலின் விவரங்களுக்கு நீங்கள் அழைத்துச் செல்லப்படுவீர்கள். ஒவ்வொரு மாறுபாட்டிற்கும் பதிலளித்த பிறகு, அறிவிப்பு தேர்வுப்பெட்டியைத் தேர்ந்தெடுத்து சமர்ப்பிக்கவும் என்பதைக் கிளிக் செய்யவும்
படி 10: வெற்றிகரமான சமர்ப்பிப்பின் போது, பரிவர்த்தனை ID உடன் ஒரு வெற்றிச் செய்தி காண்பிக்கப்படும். எதிர்கால குறிப்புக்காக இந்தப் பரிவர்த்தனை ID ஐ குறித்து வைத்துக் கொள்ளவும். மின்னணு-தாக்கல் இணைய முகப்பில் பதிவு செய்யப்பட்ட உங்கள் மின்னஞ்சல் IDயில் உறுதிப்படுத்தும் செய்தியையும் நீங்கள் பெறுவீர்கள்.
படி 11: சமர்ப்பிக்கப்பட்ட பதிலை நீங்கள் காண விரும்பினால், வெற்றிகரமான சமர்ப்பிப்பு பக்கத்தில் பதிலை காணவும் என்பதைக் கிளிக் செய்யவும். வழங்கப்பட்ட அறிவிப்புகள், பதில் / கருத்துக்கள் பற்றிய விவரங்களை உங்களால் பார்க்க முடியும்.
3.3. பிரிவு 154(a) இன் கீழ் தாமாக முன்வந்து திருத்துதலுக்கான பதிலைக் காண மற்றும் சமர்ப்பிக்க
படி 1: பிரிவு 143(1)(a) இன் கீழ் சரிசெய்தலுக்கு தொடர்புடைய அறிவிப்பை காண்க என்பதை கிளிக் செய்தால், நீங்கள் பின்வருவனவற்றை பெறலாம்:
| அறிவிப்பை காண்க மற்றும் பதிவிறக்கம் செய்க | படி 2 மற்றும் படி 3 ஐ பின்பற்றவும் |
| பதிலை சமர்ப்பிக்கவும் | படி 4 முதல் படி 7 வரை பின்பற்றவும் |
படி 2: அறிவிப்பு/கடிதத்திற்கான pdfஐ கிளிக் செய்யவும்.
படி3: உங்களுக்கு வழங்கப்பட்ட அறிவிப்பை உங்களால் பார்க்க முடியும். நீங்கள் அறிவிப்பை பதிவிறக்கம் செய்ய விரும்பினால், பதிவிறக்கவும் என்பதை கிளிக் செய்யவும்.
பதிலை சமர்ப்பிக்க
படி 4: பதிலை சமர்ப்பிக்கவும் என்பதை கிளிக் செய்யவும்.
படி 5: சரிசெய்யப்பட வேண்டிய முன்மொழியப்பட்ட தவறுகளின் விவரங்கள் காண்பிக்கப்படும். சரிசெய்ய முன்மொழியப்பட்ட ஒவ்வொரு தவறுக்கும் பதிலை தேர்ந்தெடுக்கவும். நீங்கள் ஒப்புக்கொள்கிறேன் என்பதை தேர்ந்தெடுத்து திருத்துதலை தொடரலாம் அல்லது ஒப்புக்கொள்ளவில்லை என்பதை தேர்ந்தெடுத்து திருத்துதலுக்கு ஆட்சேபனை தெரிவிக்கலாம்.
படி 5a: முன்மொழியப்பட்ட திருத்துதலை நீங்கள் ஏற்றுக்கொண்டால், ஒப்புக்கொள்கிறேன் என்பதைத் தேர்ந்தெடுத்து திருத்தத்தை சரிசெய்து தொடரவும் என்பதைக் கிளிக் செய்யவும்.
படி 5b: முன்மொழியப்பட்ட திருத்துதலை நீங்கள் ஏற்கவில்லை என்றால், திருத்தத்திற்கு ஒப்புக்கொள்ளவில்லை மற்றும் திருத்துதலுக்கு ஆட்சேபனை தெரிவிக்கிறேன் என்பதைத் தேர்ந்தெடுத்து, கீழ்தோன்றல் பட்டியலில் காரணத்தைத் தேர்ந்தெடுத்த பின்னர் தொடரவும் என்பதைக் கிளிக் செய்யவும்.
படி 6: அறிவிப்பு தேர்வுப்பெட்டியை தேர்ந்தெடுக்கவும்.
வெற்றிகரமான சமர்ப்பிப்பின் போது, பரிவர்த்தனை ID உடன் ஒரு வெற்றிச் செய்தி காண்பிக்கப்படும். எதிர்கால குறிப்புக்காக இந்தப் பரிவர்த்தனை IDஐ குறித்து வைத்துக் கொள்ளவும். மின்னணு-தாக்கல் இணைய முகப்பில் பதிவு செய்யப்பட்ட உங்கள் மின்னஞ்சல் IDயில் உறுதிப்படுத்தும் செய்தியையும் நீங்கள் பெறுவீர்கள்.
படி 7: சமர்ப்பிக்கப்பட்ட பதிலை நீங்கள் காண விரும்பினால், வெற்றிகரமான சமர்ப்பிப்பு பக்கத்தில் பதிலை காணவும் என்பதைக் கிளிக் செய்யவும். வழங்கப்பட்ட அறிவிப்புகள், பதில் / கருத்துக்கள் பற்றிய விவரங்களை உங்களால் பார்க்க முடியும்.
3.4. மதிப்பீட்டு அதிகாரி அல்லது வேறு எந்த வருமானவரி அதிகாரியாலும் வழங்கப்பட்ட அறிவிப்புக்கு பதிலளிக்கும் உரிய தேதியைக் காண/சமர்ப்பிக்க அல்லது ஒத்திவைப்பதற்கு (பிற PAN/TAN தொடர்பான இணக்க ஒப்பந்தத்திற்கான பதில் உட்பட)
படி 1: வருமானவரி அதிகாரி வழங்கிய அறிவிப்புடன் தொடர்புடைய அறிவிப்பை காண்க என்பதை கிளிக் செய்தால், நீங்கள் பின்வருவனவற்றை பெறலாம்:
| அறிவிப்பை காண்க மற்றும் பதிவிறக்கம் செய்க | படி 2 மற்றும் படி 3 ஐ பின்பற்றவும் |
| பதிலை சமர்ப்பிக்கவும் | படி 4 முதல் படி 10 வரை பின்பற்றவும் |
| பிற PAN / TAN இணக்கத்தின் ஒரு பகுதியாக பதிலளிக்கவும் | படி 4 முதல் படி 10 வரை பின்பற்றவும் |
படி 2: அறிவிப்பு/கடிததத்திற்கான pdfஐ கிளிக் செய்யவும்.
படி 3: உங்களுக்கு வழங்கப்பட்ட அறிவிப்பை உங்களால் பார்க்க முடியும். நீங்கள் அறிவிப்பை பதிவிறக்கம் செய்ய விரும்பினால், பதிவிறக்கவும் என்பதை கிளிக் செய்யவும்.
பதிலை சமர்ப்பிக்க
படி 4: பதிலை சமர்ப்பிக்கவும் என்பதைக் கிளிக் செய்யவும்.
படி 5: ஆவணங்களை இணைப்பதற்கான வழிமுறைகளைப் படித்து, தொடரவும் என்பதைக் கிளிக் செய்யவும்.
குறிப்பு: நீங்கள் ITR ஐ சமர்ப்பிக்க வேண்டிய ஒரு அறிவிப்பிற்கு பதிலளிக்கிறீர்கள் என்றால், ITR ஐ தாக்கல் செய்வதற்காக ஒரு செய்தி காண்பிக்கப்படும். மேலும் தொடரவும் என்பதைக் கிளிக் செய்து, கீழ்தோன்றும் பட்டியலில் இருந்து ITR வகையைத் தேர்ந்தெடுத்து தொடரவும் என்பதைக் கிளிக் செய்யவும்.
படி 6: நீங்கள் பாதி பதிலளிப்பு (நீங்கள் ஒன்றுக்கு மேற்பட்ட சமர்ப்பிப்பில் பதிலளிப்பைச் சமர்ப்பிக்க விரும்பினால் அல்லது வகைகளின் எண்ணிக்கை 10க்கும் அதிகமாக இருந்தால்) அல்லது முழு பதிலளிப்பு என்பதை தேர்ந்தெடுக்கலாம் (ஒரே சமர்ப்பிப்பில் பதிலளிப்பைச் சமர்ப்பிக்க விரும்பினால் அல்லது வகைகளின் எண்ணிக்கை 10க்கும் குறைவாக இருந்தால்).
படி 7: எழுதப்பட்ட பதில்/குறிப்புகளைச் சேர்க்கவும் (4000 எழுத்துகள் வரை)என்பதை உள்ளிட்டு, ஆவணங்களை இணைப்பதற்கான வகைகளைத் தேர்ந்தெடுத்து, தேவையான இணைப்பைப் பதிவேற்ற ஆவணத்தை சேர்க்கவும் என்பதைக் கிளிக் செய்யவும். தொடரவும் என்பதைக் கிளிக் செய்யவும்.
குறிப்பு:
- தேர்ந்தெடுக்கப்பட்ட ஒவ்வொரு வகைக்கும் தேவையான ஆவணத்தை இணைக்க வேண்டும்.
- ஒரு இணைப்பின் அதிகபட்ச அளவு 5 MB ஆக இருக்க வேண்டும்.
வெற்றிகரமான சமர்ப்பிப்பின் போது, பரிவர்த்தனை ID மற்றும் ஒப்புதல் எண்ணுடன் கூடிய ஒரு வெற்றிச் செய்தி காண்பிக்கப்படும். திரையில் காட்டப்படும் பரிவர்த்தனை ID மற்றும் ஒப்புதல் எண்ணை குறித்து கொள்ளவும், மேலும் மின்னணு-தாக்கல் இணைய முகப்பில் பதிவு செய்யப்பட்ட மின்னஞ்சல் ID இல் உறுதிப்படுத்தும் செய்தியையும் நீங்கள் பெறுவீர்கள்.
படி 9: சமர்ப்பிக்கப்பட்ட பதிலை நீங்கள் காண விரும்பினால், வெற்றிகரமான சமர்ப்பிப்பு பக்கத்தில் பதிலை காணவும் என்பதைக் கிளிக் செய்யவும். வழங்கப்பட்ட அறிவிப்புகள், பதில் / கருத்துக்கள் பற்றிய விவரங்களை உங்களால் பார்க்க முடியும்.
ஒத்திவைப்பைக் கோர/பார்க்க
படி 1: ஒத்திவைப்பைக் கோர அல்லது பார்க்க விரும்பினால், ஒத்திவைப்பைக் கோர அல்லது பார்க்கஎன்பதை கிளிக் செய்யவும்.
படி 2: ஒத்திவைக்கப்பட வேண்டிய தேதி, ஒத்திவைப்பு கோருவதற்கான காரணத்தை தேர்ந்தெடுத்து, குறிப்பு/காரணத்தைஉள்ளிட்டு, கோப்பை இணைத்து (ஏதேனும் இருந்தால்) சமர்ப்பிக்கவும் என்பதை கிளிக் செய்யவும்.
வெற்றிகரமான சமர்ப்பிப்பின் போது, பரிவர்த்தனை ID காட்டப்படும். எதிர்காலக் குறிப்புக்கான இந்தப் பரிவர்த்தனை ID ஐ குறித்துக் கொள்ளவும். மின்னணு-தாக்கல் இணைய முகப்பில் பதிவு செய்யப்பட்ட மின்னஞ்சல் ID இல் உறுதிப்படுத்தும் செய்தியையும் நீங்கள் பெறுவீர்கள்.
இணையவழி கலந்தாய்வை பயன்படுத்த
படி 1: நீங்கள் இணையவழி கலந்தாய்வுக்கு கோர விரும்பினால், இணையவழி கலந்தாய்வைத் தேடு என்பதைக் கிளிக் செய்யவும்.
குறிப்பு: இணையவழி கலந்தாய்வு கோரிக்கையை எழுப்புவதற்கான அறிவிப்பை மதிப்பீட்டு அதிகாரி வெளியிட்டிருந்தால் மட்டுமே இது கிடைக்கும்.
படி 2: இணையவழி கலந்தாய்வை தேடுவதற்கான காரணத்தை தேர்ந்தெடுத்து, காரணம்/குறிப்புகளை உள்ளிட்டு, கோப்பு (ஏதேனும் இருந்தால்) இணைத்து சமர்ப்பிக்கவும்என்பதை கிளிக் செய்யவும்.
வெற்றிகரமான சமர்ப்பிப்பின் போது, பரிவர்த்தனை ID காட்டப்படும். எதிர்காலக் குறிப்புக்கான இந்தப் பரிவர்த்தனை ID ஐ குறித்துக் கொள்ளவும். மின்னணு-தாக்கல் இணைய முகப்பில் பதிவு செய்யப்பட்ட மின்னஞ்சல் IDயில் உறுதிப்படுத்தும் செய்தியையும் நீங்கள் பெறுவீர்கள்.
3.5. தெளிவுப்படுத்தக் கோரும் தகவல்தொடர்பு கோரிக்கைக்கான பதிலை காண மற்றும் சமர்ப்பிக்க
படி 1: தெளிவுப்படுத்துதலுடன் தொடர்புடைய அறிவிப்பை காண்க என்பதைக் கிளிக் செய்தால், நீங்கள் பின்வருவனவற்றை பெறலாம்:
| அறிவிப்பை காண்க மற்றும் பதிவிறக்கம் செய்க | படி 2 மற்றும் படி 3 ஐ பின்பற்றவும் |
| பதிலை சமர்ப்பிக்கவும் | படி 4 முதல் படி 6 வரை பின்பற்றவும் |
படி 2: அறிவிப்பு/கடிததத்திற்கான pdfஐ கிளிக் செய்யவும்.
படி 3: உங்களுக்கு வழங்கப்பட்ட அறிவிப்பை நீங்கள் பார்க்கலாம். நீங்கள் அறிவிப்பை பதிவிறக்கம் செய்ய விரும்பினால், பதிவிறக்கவும் என்பதை கிளிக் செய்யவும்.
பதிலை சமர்ப்பிக்க
படி 4: பதிலை சமர்ப்பிக்கவும் என்பதைக் கிளிக் செய்யவும்.
படி 5: பதிலை சமர்ப்பிக்கவும் பக்கத்தில், ஒப்புக்கொள்கிறேன் அல்லது ஒப்புக்கொள்ளவில்லை என்பதைத் தேர்ந்தெடுத்து, தொடரவும் என்பதைக் கிளிக் செய்யவும்.
நீங்கள் ஒப்புக்கொள்ளவில்லை என்றால், நீங்கள் கருத்துக்களை வழங்க வேண்டும்.
படி 6: அறிவிப்பு தேர்வுப்பெட்டியைத் தேர்ந்தெடுத்து சமர்ப்பிக்கவும் என்பதைக் கிளிக் செய்யவும்
வெற்றிகரமான சமர்ப்பிப்பின் போது, பரிவர்த்தனை ID உடன் கூடிய ஒரு வெற்றிச் செய்தி காண்பிக்கப்படும். எதிர்காலக் குறிப்புக்கான இந்தப் பரிவர்த்தனை ID ஐ குறித்துக் கொள்ளவும். மின்னணு-தாக்கல் இணைய முகப்பில் பதிவு செய்யப்பட்ட உங்கள் மின்னஞ்சல் IDயில் உறுதிப்படுத்தும் செய்தியையும் நீங்கள் பெறுவீர்கள்.
படி 7: ஒருவேளை நீங்கள் சமர்ப்பித்த பதிலை காண விரும்பினால், வெற்றிகரமான சமர்ப்பிப்பு பக்கத்தில் பதிலை காணவும் என்பதைக் கிளிக் செய்தால் உங்களுடைய பதில் காண்பிக்கப்படும்.

3.6. அறிவிப்பிற்கு பதிலளிக்க அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதியை சேர்க்க / நீக்க
(உங்கள் சார்பாக பல்வேறு வகையான மின்னணு-நடவடிக்கைகளுக்கு பதிலளிக்க அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதியை நீங்கள் சேர்க்கலாம்)
படி 1: உங்கள் சரியான பயனர் ID மற்றும் கடவுச்சொல்லை பயன்படுத்தி மின்னணு-தாக்கல் இணைய முகப்பில் உள்நுழையவும்.
படி 2: உங்கள் முகப்புப் பலகையில், நிலுவையில் உள்ள செயல்கள் > மின்னணு-நடவடிக்கைகள் என்பதைக் கிளிக் செய்யவும்.
படி 3: அறிவிப்பு / தகவல் / கடிதத்தைத் தேர்ந்தெடுத்து, அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதியை சேர்க்கவும் / பார்க்கவும் என்பதைக் கிளிக் செய்யவும்.
| அறிவிப்பை காண்க மற்றும் பதிவிறக்கம் செய்க | பிரிவு 3.6.1ஐ பார்க்கவும் |
| பதிலை சமர்ப்பிக்கவும் | பிரிவு 3.6.2ஐ பார்க்கவும் |
3.6.1 அறிவிப்பிற்கு பதிலளிக்க அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதியை சேர்க்க:
படி 1: அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதிகள் முன்னதாக சேர்க்கப்படவில்லை என்றால், அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதியை சேர்க்கவும் என்பதைக் கிளிக் செய்யவும்.
குறிப்பு: உங்கள் விருப்பப்படி ஏற்கனவே அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதி சேர்க்கப்பட்டிருந்தால், செயலாக்கவும் என்பதை தேர்ந்தெடுத்து உறுதிப்படுத்தவும் என்பதைக் கிளிக் செய்யவும்.
படி 3: மின்னணு-தாக்கல் இணைய முகப்பில் பதிவு செய்யப்பட்ட உங்கள் முதன்மை அலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் IDக்கு 6-இலக்க OTP அனுப்பப்படும். 6- இலக்க அலைபேசி அல்லது மின்னஞ்சல் OTPஐ உள்ளிட்டு சமர்ப்பிக்கவும் என்பதைக் கிளிக் செய்யவும்.
குறிப்பு:
- 15 நிமிடங்களுக்கு மட்டுமே OTPக்கள் செல்லுபடியாகும்.
- சரியான OTPஐ உள்ளிட உங்களுக்கு 3 வாய்ப்புகள் உள்ளன.
- திரையில் உள்ள OTP காலாவதி கணக்கிடு நேரம் காட்டி உங்களுக்கு OTP எப்போது காலாவதியாகும் என்பதைத் தெரிவிக்கும்.
- OTP ஐ மீண்டும் அனுப்பவும் என்பதைக் கிளிக் செய்தால், ஒரு புதிய OTP உருவாக்கப்பட்டு அனுப்பப்படும்.
வெற்றிகரமான சரிபார்ப்புக்குப் பிறகு, பரிவர்த்தனை ID உடன் ஒரு வெற்றிச் செய்தி காண்பிக்கப்படும். எதிர்கால குறிப்புக்காக இந்தப் பரிவர்த்தனை ID ஐ குறித்து வைத்துக் கொள்ளவும். மின்னணு-தாக்கல் முகப்புப்பக்கத்தில் பதிவு செய்யப்பட்ட உங்கள் மின்னஞ்சல் ID மற்றும் அலைபேசி எண்ணிற்கு ஒரு உறுதிப்படுத்தல் செய்தியையும் பெறுவீர்கள்.
3.6.2. அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதியை நீக்க
படி 1: குறிப்பிட்ட அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதியின் விவரங்களுக்கு எதிராக நீக்கு என்பதைக் கிளிக் செய்தால், அதன் நிலை ரத்துசெய்யப்பட்டது என்பதற்கு மாற்றப்படும்.
குறிப்பு: செயலில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதியை மட்டுமே நீங்கள் நீக்க முடியும். கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டதாக நிலை மாற்றப்பட்டால், நீங்கள் காரணத்தை வழங்க வேண்டும், மேலும் அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதியின் பெயர் அகற்றப்படும்.