1. மேலோட்டப்பார்வை
வரி நிலுவைத் தொகைக்கு பதிலளித்தல் சேவை, பதிவு செய்யப்பட்ட எல்லாப் பயனர்களுக்கும், மின்னணு-தாக்கல் இணைய முகப்பில் நிலுவையிலுள்ள வரி நிலுவை கோரிக்கையைக் காணவும் அதற்கு பதிலளிக்கவும், நிலுவையிலுள்ள வரியைச் செலுத்தவும் அனுமதிக்கிறது. இந்தச் சேவையின் மூலம், பின்வருபவர்கள் எழுப்பிய நிலுவையில் உள்ள வரி தொகைக்கான உங்களின் பதிலைச் சமர்ப்பிக்கலாம்:
- மையப்படுத்தப்பட்ட செயலாக்க மையம்; அல்லது
- மதிப்பீட்டு அதிகாரி
2. இந்தச் சேவையைப் பெறுவதற்கான முன்நிபந்தனைகள்
- சரியான பயனர் ID மற்றும் கடவுச்சொல்லுடன் மின்னணு-தாக்கல் முகப்பில் பதிவு செய்யப்பட்ட பயனர்
3. படிப்படியான வழிகாட்டி
3.1. வரி நிலுவைத் தொகைக்கு பதிலளித்தல் (வரி செலுத்துவோருக்கு)
படி 1: உங்கள் பயனர் ID மற்றும் கடவுச்சொல்லுடன் மின்னணு-தாக்கல் இணைய முகப்பில் உள்நுழையவும்.
படி 2: உங்கள் முகப்புப் பலகையில், நிலுவையில் உள்ள நடவடிக்கைகள் > பக்கத்தை கிளிக் செய்து உங்கள் வரி நிலுவைத் தொகைகளின் பட்டியலைப் பார்க்கவும்.
கவனத்திற்கு: நீங்கள் வரியைச் செலுத்த விரும்பினால், இப்போது செலுத்தவும் என்பதைக் கிளிக் செய்யவும். நீங்கள் மின்னணு-வரி செலுத்துதல் பக்கத்திற்கு அழைத்துச் செல்லப்படுவீர்கள், அங்கு நீங்கள் வரியை செலுத்தலாம்.
வரி நிலுவைத் தொகைக்கு பதிலளித்தல் பக்கத்தில், “சமீபத்திய பிரிவு 245 அறிவிப்பு” அல்லது “பிரிவு 245 முன்னதாக வழங்கப்பட்ட அறிவிப்பு” என்ற பட்டன்களைக் கிளிக் செய்வதன் மூலம் சமீபத்திய மற்றும் முந்தைய பிரிவு 245 அறிவிப்புகளை பதிவிறக்கம் செய்துகொள்லாம்
முன்பு வழங்கப்பட்ட அறிவிப்புகளை நீங்கள் பதிவிறக்க விரும்பினால், 245 அறிவிப்பு வெளியிடப்பட நிதியாண்டைத் தேர்ந்தெடுத்து பதிவிறக்கம் செய்வதற்கான பட்டனைக் கிளிக் செய்யவும்.
படி 3: வரி நிலுவைத் தொகைக்கான பதிலளித்தல் பக்கத்தில், வரி நிலுவைத் தொகைக்கான பதிலை சமர்ப்பிக்கவும் என்பதைக் கிளிக் செய்யவும்.
சூழ்நிலையைப் பொறுத்து தொடர்புடைய பிரிவிற்கு நீங்கள் செல்லலாம்:
| வரி நிலுவைத் தொகை சரியாக இருந்து நீங்கள் முன்னதாகவே செலுத்தவில்லை என்றால் | பிரிவு 3.1 (A) ஐ பார்க்கவும் |
| தொகை சரியாக இருந்து நீங்கள் முன்கூட்டியே பணம் செலுத்திவிட்டால் | பிரிவு 3.1 (B) ஐ பார்க்கவும் |
| செலுத்த வேண்டிய தொகை உங்களுக்கு உடன்பாடாக இல்லை (முழுமையாக அல்லது பகுதியாக) எனில் | பிரிவு 3.1 (C) ஐ பார்க்கவும் |
குறிப்பு: செலுத்த வேண்டிய தொகைக்கான பதில் பக்கத்தில், நீங்கள் சமர்ப்பித்த அனைத்து பதில்களையும் பார்க்க, குறிப்பிட்ட தொகைக்கு நேராக காட்டு என்பதைக் கிளிக் செய்யவும்.
3.1 (A) தொகை சரியாக இருந்து, நீங்கள் ஏற்கனவே பணம் செலுத்தவில்லை எனில் பதிலைச் சமர்ப்பிக்கவும்
படி 1: செலுத்த வேண்டிய தொகைக்கான பதில் பக்கத்தில், தொகை சரியானது என்ற விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும், அத்துடன் கோரிக்கை சரியானது என்று நீங்கள் பதிலைச் சமர்ப்பித்தபின், நீங்கள் கோரிக்கையுடன் உடன்படவில்லை என்கிற விருப்பத்தை தேர்வு செய்யமுடியாது என்ற பொறுப்புத்துறப்பு விருப்பத்தையும் தேர்ந்தெடுக்கவும்.
படி 2: அதே பக்கத்தில், இன்னும் பணம் செலுத்தவில்லை என்ற விருப்பத்தைத் தேர்ந்தெடுத்து இப்போதே பணம் செலுத்துக என்பதைக் கிளிக் செய்யவும்
கவனத்திற்கு: நீங்கள் மின்னணு-வரி செலுத்துதல் பக்கத்திற்கு அழைத்துச் செல்லப்படுவீர்கள், அங்கு நீங்கள் வரியை செலுத்தலாம்.
வரி செலுத்துதல் வெற்றிகரமாக அமைந்ததும், ஒரு பரிவர்த்தனை ID உடன் ஒரு செய்தி காட்டப்படும். எதிர்கால தேவைகளுக்கு இந்தப் பரிவர்த்தனை ID ஐ குறித்துக் கொள்ளவும்.
3.1 (B) தொகை சரியாக இருந்து நீங்கள் ஏற்கெனவே பணம் செலுத்திவிட்டால் பதிலைச் சமர்ப்பிக்கவும்
படி 1: செலுத்த வேண்டிய தொகைக்கான பதில் பக்கத்தில், தொகை சரியானது என்ற விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும், அத்துடன் கோரிக்கை சரியானது என்று நீங்கள் பதிலைச் சமர்ப்பித்தபின் நீங்கள் கோரிக்கையுடன் உடன்பட வில்லை என்கிற விருப்பத்தை தேர்வு செய்யமுடியாது என்ற பொறுப்புத்துறப்பு விருப்பத்தையும் தேர்ந்தெடுக்கவும்.
படி 2: ஆம் என்பதைத் தேர்ந்தெடுக்கவும், ஏனெனில் ஏற்கனவே பணம் செலுத்தப்பட்டுள்ளது மற்றும் செலுத்துச் சீட்டில் CIN உள்ளது. செலுத்துச் சீட்டு விவரங்களைச் சேர் என்பதைக் கிளிக் செய்யவும்.
படி 3: செலுத்துச் சீட்டு விவரங்களைச் சேர்க்க, கட்டண வகை (மைனர் ஹெட்) என்பதைத் தேர்ந்தெடுத்து, செலுத்துச் சீட்டு தொகை, BSR குறியீடு, வரிசை எண் ஆகியவற்றை உள்ளிட்டு பணம் செலுத்தும் தேதியைத் தேர்ந்தெடுக்கவும். செலுத்துச் சீட்டு (PDF) நகலைப் பதிவேற்ற இணைப்பு என்பதைக் கிளிக் செய்யவும். பிறகு சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.
குறிப்பு:
- ஒரு இணைப்பின் அதிகபட்ச அளவு 5MB ஆக இருக்க வேண்டும்.
படி 4: செலுத்துச் சீட்டு விவரங்களை உள்ளிட்ட பிறகு, பதிலையும் உள்ளிடப்பட்ட செலுத்துச் சீட்டு விவரங்களையும் சமர்ப்பிக்க சமர்ப்பி என்பதைக் கிளிக் செய்யவும்.
சரிபார்க்கப்பட்ட பிறகு, ஒரு பரிவர்த்தனை ID உடன் ஒரு செய்தி காட்டப்படும். எதிர்கால தேவைகளுக்கு இந்தப் பரிவர்த்தனை ID ஐ குறித்துக் கொள்ளவும்.
3.1 (C) நீங்கள் தொகையுடன் உடன்படவில்லை (முழுமையாக அல்லது பகுதியாக) எனில் பதிலை சமர்ப்பிக்கவும்
படி 1: செலுத்த வேண்டிய தொகைக்கான பதில் பக்கத்தில், தொகையுடன் உடன்படவில்லை (முழுமையாக அல்லது பகுதியாக) என்ற விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும். காரணங்களைச் சேர் என்பதைக் கிளிக் செய்யவும்.
படி 2: உங்கள் கருத்து வேறுபாடுகளுக்கான காரணங்களை விருப்பங்களிலிருந்து தேர்ந்தெடுத்து விண்ணப்பி என்பதைக் கிளிக் செய்யவும். (நீங்கள் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட விருப்பங்களைத் தேர்ந்தெடுக்கலாம்.)

படி 3: உங்கள் கருத்து வேறுபாட்டுக்கு பொருத்தமான காரணங்களைத் தேர்ந்தெடுத்த பிறகு, செலுத்த வேண்டிய தொகைக்கான பதில் பக்கத்தில் படி 2 இல் நீங்கள் பட்டியலிட்டுள்ள ஒவ்வொரு காரணத்தையும் தேர்ந்தெடுத்து, ஒவ்வொரு காரணத்துக்கும் பொருத்தமான விவரங்களை உள்ளிடவும்.
கவனத்திற்கு: நீங்கள் விவரங்களைச் சமர்ப்பித்த காரணத்திற்காக பூர்த்தி செய்யப்பட்ட நிலை காண்பிக்கப்படும்.
படி 4: படி 2 இல் பட்டியலிடப்பட்டுள்ள அனைத்து காரணங்களுக்கான விவரங்களைச் சமர்ப்பித்த பிறகு, கட்டண சுருக்கத்தில் (நீங்கள் ஓரளவு உடன்படவில்லை என்றால்) உள்ள மீதமுள்ள நிலுவை தொகையைச் செலுத்த இப்போதே செலுத்துக என்பதைக் கிளிக் செய்யவும்.
கவனத்திற்கு: நீங்கள் மின்னணு-வரி செலுத்துதல் பக்கத்திற்கு அழைத்துச் செல்லப்படுவீர்கள், அங்கு நீங்கள் வரியை செலுத்தலாம்.
படி 5: பணம் செலுத்திய பிறகு, செலுத்த வேண்டிய தொகைக்கான பதில் பக்கம் உங்களுக்குக் காட்டப்படும். உங்கள் பதிலைச் சமர்ப்பிக்க சமர்ப்பி என்பதைக் கிளிக் செய்யவும்.
படி 6: உங்கள் சமர்ப்பிப்பை உறுதிப்படுத்த உறுதிப்படுத்து என்பதைக் கிளிக் செய்யவும்.
சமர்ப்பித்த பிறகு, ஒரு பரிவர்த்தனை ID உடன் ஒரு செய்தி காட்டப்படும். எதிர்கால தேவைகளுக்கு இந்தப் பரிவர்த்தனை ID ஐ குறித்துக் கொள்ளவும்.