Do not have an account?
Already have an account?

1. எந்த மதிப்பீட்டு ஆண்டிலிருந்து படிவம் 10-IEA பொருந்தும்?

21 ஜூன், 2023 தேதியிட்ட அறிவிப்பு எண். 43/2023 மூலம் அறிவிக்கப்பட்ட படிவம் 10-IEA, 2024-25 மதிப்பீட்டு ஆண்டு முதல், அதாவது A.Y. 2024-25 மற்றும் வரவிருக்கும் ஆண்டுகளுக்குப் பொருந்தும்.

 

2. மின்னணு-தாக்கல் இணைய முகப்பில் படிவம் 10-IEA-வை யார் தாக்கல் செய்யலாம்?

இந்தப் படிவத்தை தனிநபர், இந்து கூட்டுக் குடும்பம் (HUF), நபர்களின் சங்கம் (கூட்டுறவு சங்கம் தவிர), தனிநபர்களின் அமைப்பு (BOI), வணிகம் அல்லது தொழிலில் இருந்து வருமானம் உள்ள பிரிவு 2(31)(vii) (AJP) இன் கீழ் குறிப்பிடப்படும் செயற்கை சட்ட நபர் ஆகியோர் தாக்கல் செய்யலாம்.

 

3. நான் ஏன் படிவம் 10-IEA-வை சமர்ப்பிக்க வேண்டும்?

புதிய வரி விதிப்பில் இருந்து விலகிக் கொள்ள/மீண்டும் நுழைய விரும்பினால், 'வணிகம் மற்றும் தொழிலின் இலாபங்கள் மற்றும் ஆதாயங்கள்' என்ற வகையின் கீழ் வருமானம் பெறுபவராக இருந்தால், நீங்கள் படிவம் 10-IEA ஐ சமர்ப்பிக்க வேண்டும்.


4. படிவம் 10-IEA-வை எந்தெந்த முறைகளில் சமர்ப்பிக்கலாம்?

படிவம் 10-IEA ஐ மின்னணு தாக்கல் இணைய முகப்பின் வழியாக ஆன்லைனில் மட்டுமே சமர்ப்பிக்க முடியும்.

 

5. படிவம் 10-IEA-வை எவ்வாறு மின்னணு முறையில் சரிபார்க்க முடியும்?

வரி செலுத்துபவர் ஆதார் OTP, EVC அல்லது DSC ஐ பயன்படுத்தி படிவத்தை மின்னணு சரிபார்க்கலாம். மேலும் அறிய, நீங்கள் எப்படி மின்னணு-சரிபார்ப்பு செய்வது என்ற பயனர் கையேட்டைப் பார்க்கலாம். (பயனர் கையேடுக்கான இணைப்பு இங்கே வழங்கப்பட வேண்டும்).

 

6. என் சார்பாக படிவம் 10-IEA-வை தாக்கல் செய்ய ஒரு அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதியை நான் சேர்க்கலாமா?

ஆம், உங்கள் சார்பாக படிவம் 10-IEA ஐ தாக்கல் செய்ய அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதியை நீங்கள் சேர்க்கலாம். மேலும் அறிய, ‘பிரதிநிதியாக அங்கீகரிக்கவும் / பதிவு செய்யவும் பயனர் கையேட்டைப்’ பார்க்கவும். (பயனர் கையேடுக்கான இணைப்பு இங்கே வழங்கப்பட வேண்டும்)

 

7. படிவம் 10-IEA-வை தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் என்ன?

வருமானவரிச் சட்டம், 1961 இன் பிரிவு 139(1) இன் கீழ் குறிப்பிடப்பட்டுள்ளபடி, வருமானவரி தாக்கல் செய்ய வேண்டிய நிலுவைத் தேதியில் அல்லது அதற்கு முன் 10-IEA இலிருந்து தாக்கல் செய்யப்பட வேண்டும். வரி செலுத்துபவர் படிவத்தை நிலுவைத் தேதிக்குப் பிறகு தாக்கல் செய்தால், அந்தப் படிவம் செல்லாததாகக் கருதப்படும்.


8. வருமானவரி அறிக்கையை தாக்கல் செய்த பிறகு படிவம் 10-IEA-வை சமர்ப்பிக்க முடியுமா?

படிவம் 10-IEA ஐ தாக்கல் செய்வதன் நன்மையை பெற, வருமானவரி தாக்கல் செய்வதற்கு முன்பு படிவத்தை தாக்கல் செய்வதற்கு பரிந்துரைக்கப்படுகிறது. படிவம் 10-IEA ஐ தாக்கல் செய்த தேதி மற்றும் ஒப்புகை எண் ஆகியவற்றை வருமானவரி தாக்கல் செய்யும்போது வழங்க வேண்டும்.

 

9. படிவம் 10-IEA-வை சமர்ப்பிக்கும் போது, ​​சரிபார்ப்பு தாவலின் கீழ் பதவி முன் நிரப்பப்படவில்லை. நான் என்ன செய்ய வேண்டும்?

"எனது சுயவிவரம்" பிரிவின் கீழ் "முக்கிய நபர் விவரங்களை" புதுப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறீர்கள். மின்னணு-தாக்கலிற்கான இணைய முகப்பில் மீண்டும் உள்நுழைந்து முயற்சிக்கவும்.

 

10. எனக்கு எந்த வணிக வருமானமும் இல்லை. படிவம் 10-IEA ஐ தாக்கல் செய்யும் போது, மதிப்பீட்டு ஆண்டில் "வணிகம் அல்லது தொழிலின் இலாபங்கள் மற்றும் ஆதாயங்கள்" என்ற தலைப்பின் கீழ் உங்களுக்கு வருமானம் இருக்கிறதா என்பதற்கு "இல்லை" என்பதைத் தேர்ந்தெடுத்தால் என்னால் மேலும் தொடர முடியவில்லை. நான் என்ன செய்ய வேண்டும்?
உங்களிடம் எந்த வணிகமும், வருமானமும் இல்லை என்றால், நீங்கள் ITR 1/ITR 2 ஐ தாக்கல் செய்ய வேண்டியிருந்தால், வருமானவரிச் சட்டம், 1961 இன் பிரிவு 115BAC(1A) இன் கீழ் புதிய வரி விதிப்பு முறையிலிருந்து விலக/மீண்டும் நுழைய படிவம் 10-IEA ஐ தாக்கல் செய்ய வேண்டிய அவசியமில்லை. அத்தகைய சந்தர்ப்பத்தில், வருமானவரிச் சட்டம், 1961 இன் பிரிவு 139 (1) இன் கீழ் குறிப்பிடப்பட்ட நிலுவைத் தேதியில் அல்லது அதற்கு முன்னர் அந்தந்த ITR படிவத்தை (ITR 1/ITR 2) தாக்கல் செய்யும் போது இந்த விருப்பத்தைப் பயன்படுத்தலாம்.


11. "வருமானவரி அறிக்கையைத் தாக்கல் செய்வதற்கான நிலுவைத் தேதி" என்பதற்கு நான் எதைத் தேர்ந்தெடுக்க வேண்டும்?

வருமானவரிச் சட்டம், 1961 இன் பிரிவு 139 (1) இன் கீழ் வருமானத்தை தாக்கல் செய்வதற்கான பொருந்தக்கூடிய நிலுவைத் தேதியை நீங்கள் தேர்ந்தெடுக்க வேண்டும். திரையில் கிடைக்கும் ‘உதவி ஆவணம்’ என்பதை நீங்கள் பார்க்கலாம் மற்றும் படிவம் 10-IEA ஐ தாக்கல் செய்வதற்கு பொருந்தக்கூடிய விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கலாம்.

 

12. புதிய வரி விதிப்பு முறையிலிருந்து 'விலக' ஒவ்வொரு ஆண்டும் படிவம் 10-IEA-வை தாக்கல் செய்ய வேண்டுமா?

நீங்கள் (வணிக/தொழில்முறை வருமானம் கொண்ட ஒரு நபராக) முந்தைய மதிப்பீட்டு ஆண்டில் புதிய வரி விதிப்பு முறையிலிருந்து 'வெளியேறி', பழைய வரி விதிப்பு முறையை வருமானவரிப் படிவத்தில் தொடர விரும்பினால், நீங்கள் ஒவ்வொரு ஆண்டும் படிவம் 10-IEA-வை தாக்கல் செய்ய வேண்டியதில்லை. இருப்பினும், வணிக/தொழில்முறை வருமானம் இல்லாத நபர்கள் ஒவ்வொரு ஆண்டும் நேரடியாக வருமானவரிப் படிவத்தில் வரி விதிகளை மாற்றலாம்.


13. படிவம் 10-IEA எனக்குப் பொருந்தும், இப்போது எனது ITR-இல் பழைய வரி விதிப்பு முறையின் விருப்பத்தைத் திரும்பப் பெற விரும்புகிறேன். அதற்கான நடைமுறை என்ன?

முந்தைய மதிப்பீட்டு ஆண்டில் நீங்கள் பழைய வரி விதிப்பு முறையைத் தேர்ந்தெடுத்து, புதிய வரி விதிப்பு முறையை 'மீண்டும் உள்ளிட' விரும்பினால், நடப்பு மதிப்பீட்டு ஆண்டிற்கான படிவத்தில் விருப்பத்தைத் திரும்பப் பெறுவதற்கு நீங்கள் படிவம் 10-IEA-வை தாக்கல் செய்ய வேண்டும். "

 

14. முந்தைய மதிப்பீட்டு ஆண்டில் படிவம் 10-IEA-வில் பழைய வரி விதிப்பு முறையில் இருந்து வெளியேறி, படிவத்தை மறு நுழைவு விருப்பத்துடன் தாக்கல் செய்தேன். படிவம் 10-IEA இல் பழைய வரி விதிப்பின் விருப்பத்தை நான் மீண்டும் பயன்படுத்த முடியுமா?

நீங்கள் பழைய வரி விதிப்பு முறையில் நுழைந்த பிறகு அதிலிருந்து வெளியேறிவிட்டால், வணிகம் அல்லது தொழிலில் இருந்து உங்களுக்கு வருமானம் இல்லாதபோது தவிர, பழைய வரி விதிப்பு முறையின் விருப்பத்தை மீண்டும் பயன்படுத்த நீங்கள் ஒருபோதும் தகுதி பெற மாட்டீர்கள்.

 

15. படிவம் 10-IEA-வில் புதிய வரி விதிப்பு முறையில் இருந்து விலக விரும்பினேன், ஆனால் வருமானவரி அறிக்கை செலுத்த வேண்டிய நிலுவைத் தேதிக்குப் பிறகு படிவம் 10-IEA-வை தாக்கல் செய்தேன். பழைய வரி விதிப்பின் நன்மைகள் எனக்கு கிடைக்குமா?

நீங்கள் புதிய வரி விதிப்பு முறையிலிருந்து விலக விரும்பினால், நிலுவைத் தேதிக்குள் படிவத்தை தாக்கல் செய்யத் தவறினால், உங்கள் வருமானவரிப் படிவத்தில் பழைய வரி விதிப்பு முறையின் பலனைப் பெற நீங்கள் தகுதி பெற மாட்டீர்கள்.

16. தாக்கல் செய்யப்பட்ட படிவம் 10-IEA இன் நிலை 'செல்லுபடியாகும் படிவம்' என்பதிலிருந்து 'செல்லுபடியாகாத படிவம்' என மாற்றப்பட்டுள்ளது. நான் என்ன செய்ய வேண்டும்?

வருமானவரி தாக்கலின் நிலுவைத் தேதிக்குப் பிறகு நீங்கள் படிவம் 10-IEA ஐ தாக்கல் செய்திருந்தால், படிவத்தின் நிலை தவறான படிவமாக இருக்கும். அப்படியானால், அடுத்த மதிப்பீட்டு ஆண்டில் படிவத்தை புதிதாக தாக்கல் செய்யலாம்.

17. தாக்கல் செய்யப்பட்ட படிவம் 10-IEA இன் நிலை 'செல்லுபடியாகும் படிவம்' என்பதிலிருந்து 'செல்லுபடியாகாத படிவம்' என மாற்றப்பட்டுள்ளது. நான் என்ன செய்ய வேண்டும்?

உங்கள் வருமானவரி தாக்கல் செய்வதற்குப் பொருத்தமான படிவம் 10-IEA ஐ தாக்கல் செய்யும் போது சரியான நிலுவைத் தேதியை தேர்ந்தெடுக்கப்படவில்லை எனில், நீங்கள் தாக்கல் செய்த படிவம் 10-IEA ஆனது ITR தாக்கல் செய்வதற்கான நிலுவைத் தேதிக்குப் பிறகு தாக்கல் செய்யப்பட்டதால் ITR செயலாக்கத்திற்கு ஏற்றுக்கொள்ளப்படவில்லை. அத்தகைய சந்தர்ப்பத்தில், படிவத்தின் நிலை "தவறான படிவம்" என்று மாற்றப்படும். அத்தகைய சூழ்நிலையில், படிவம் 10-IEA ஐ அடுத்த மதிப்பீட்டு ஆண்டில் புதிதாக தாக்கல் செய்யலாம்.

18. சமர்ப்பித்த பிறகு படிவம் 10-IEA-வை நான் திருத்தவோ அல்லது மாற்றவோ முடியுமா?

இல்லை, படிவம் 10-IEA-வின் திருத்தம் அனுமதிக்கப்படவில்லை. மேலும், படிவம் 10-IEA, ஒருமுறை தாக்கல் செய்யப்பட்டால், அதே ஆண்டில் அதைத் திரும்பப் பெற முடியாது.

19. தாக்கல் செய்த பிறகு படிவம் 10-IEA-வின் நிலையை நான் எவ்வாறு சரிபார்க்கலாம்?

வருமானவரி மின்னணு-தாக்கல் இணைய முகப்பில் உள்நுழைவதன் மூலம் படிவம் 10-IEA இன் தாக்கல் நிலையை நீங்கள் சரிபார்க்கலாம். தாக்கல் செய்யப்பட்ட படிவ விவரங்களை மின்னணு-தாக்கல் தாவலின் கீழ் காணலாம்----> வருமானவரிப் படிவங்கள்----> தாக்கல் செய்யப்பட்ட படிவங்களைக் காண்க----> படிவம் 10-IEA ஐத் தேடி, அது செல்லுபடியாகுமா அல்லது செல்லாததா என்பதை நிலையைச் சரிபார்க்கவும்.

20. நான் பின்னர் எனது வருமான ஆதாரத்தை வணிகம்/தொழிலாக மாற்றினால் என்ன நடக்கும்? நான் மீண்டும் 10-IEA படிவத்தை நிரப்ப வேண்டுமா?

ஆம், வருமான ஆதாரம் பின்னர் வணிகம் மற்றும் தொழிலாக மாற்றப்பட்டு, வரி செலுத்துபவர் பழைய வரி விதிப்பு முறையைத் தேர்வுசெய்ய விரும்பினால், சட்டத்தின் பிரிவு 139(1) இன் படி பொருந்தக்கூடிய நிலுவைத் தேதிக்குள் படிவம் 10-IEA ஐ தாக்கல் செய்ய வேண்டும்.

21. ஒவ்வொரு வருடமும் பழைய மற்றும் புதிய வரி விதிப்பு முறைகளுக்கு இடையில் மாற முடியுமா?

வணிகம் அல்லது தொழில் அல்லாத பிற வருமானம் கொண்ட வரி செலுத்துபவர், சட்டத்தின் பிரிவு 139(1) இன் படி, நிலுவைத் தேதிக்குள் வருமானவரி தாக்கல் செய்யும் போது, ​​பழைய வரி விதிப்பு முறை அல்லது புதிய வரி விதிப்பு முறைக்கு இடையில் ஒவ்வொரு ஆண்டும் மாறலாம். வணிகம் மற்றும் தொழிலில் இருந்து வருமானம் ஈட்டும் வரி செலுத்துபவர், 139(1) பிரிவின் கீழ் படிவம் 10-IEA-ஐ நிலுவைத் தேதிக்குள் தாக்கல் செய்த பிறகு பழைய வரி விதிப்பு முறையைத் தேர்வுசெய்யலாம், பின்னர் படிவம் 10-IEA-ஐ மீண்டும் தாக்கல் செய்த பிறகு, மீண்டும் உள்ளிடும் விருப்பத்துடன் ஒரு முறை மட்டுமே புதிய வரி விதிப்பு முறைக்கு மாறலாம்.