Do not have an account?
Already have an account?

1. பொருந்தக்கூடிய அனைத்து வரி செலுத்துவோர் (உள்நாட்டு வியாபாரக் குழுமங்கள்) படிவம்-10-IC-ஐத் தாக்கல் செய்வது கட்டாயமா?
வருமான வரிச் சட்டம்,1961-ன் பிரிவு 115BAA-ன் கீழ் ஒரு உள்நாட்டு வியாபார நிறுவனம் 22% சலுகை விகிதத்தில் வரி செலுத்தத் தேர்வுசெய்தால் மட்டுமே படிவம் 10-IC-ஐத் தாக்கல் செய்ய வேண்டும்.

2. படிவம்-10-IC-ஐ நான் எவ்வாறு தாக்கல் செய்யலாம்?
மின்னணுத் தாக்கல் இணைய முகப்பில் உள்நுழைந்த பிறகு நீங்கள் படிவம்-10-IC-ஐ ஆன்லைன் பயன்முறையில் மட்டுமே தாக்கல் செய்ய முடியும்.

3. அடுத்த மதிப்பீட்டு ஆண்டிற்கான படிவத்தை மீண்டும் தாக்கல் செய்ய வேண்டுமா?
 

4. படிவம் வெற்றிகரமாக சமர்ப்பிக்கப்பட்டுள்ளது என்பதை நான் எவ்வாறு அறிவேன்?
மின்னணுத் தாக்கல் இணைய முகப்பில் பதிவுசெய்யப்பட்ட உங்கள் மின்னஞ்சலில் உறுதிப்படுத்தல் செய்தியைப் பெறுவீர்கள். கூடுதலாக, உங்கள் செயல்களுக்கான தாவலின் கீழ் உங்கள் பணிப்பட்டியலில் உள்ள நிலையையும் நீங்கள் காணலாம்.

5. படிவத்தைச் சமர்ப்பிக்கும்போது நான் மின்னணு-சரிபார்க்க வேண்டுமா?
ஆமாம். மின்னணு கையெழுதுச் சான்றிதழைப் (DSC) பயன்படுத்தி படிவத்தை மின்னணு-சரிபார்ப்பை நீங்கள் முடித்தவுடன் உங்கள் படிவம் சமர்ப்பிக்கப்படும்.

6. படிவம்-10-IC-ஐத் தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் என்ன?
பலன்களைப் பெறுவதற்கு முந்தைய ஆண்டிற்கான வருமான வரி அறிக்கையை அளிப்பதற்கான பிரிவு-139-ன் துணைப்பிரிவு (1)-ன் கீழ்க் குறிப்பிடப்பட்ட தேதியில் அல்லது அதற்கு முன் படிவம்-10-IC-ஐத் தாக்கல் செய்ய வேண்டும்.

7. படிவம்-10-IC-ஐ ஆஃப்லைனில் தாக்கல் செய்ய முடியுமா?
இல்லை, மின்னணுத் தாக்கல் இணைய முகப்பில் ஆஃப்லைன் பயன்பாட்டைப் பயன்படுத்தி படிவம்-10-IC-ஐ நீங்கள் தாக்கல் செய்ய முடியாது. நீங்கள் ஆன்லைன் பயன்முறையில் மட்டுமே படிவம்-10-IC-ஐத் தாக்கல் செய்ய முடியும்.

8. படிவம்-10-IC தாக்கல் செய்வதற்கான நோக்கம் என்ன?
வருமான வரிச் சட்டத்தின் பிரிவு-115BAA-ன் படி, உள்நாட்டு வியாபார நிறுவனங்கள் குறிப்பிட்ட விலக்குகள் மற்றும் சலுகைகளைப் பெறாவிட்டால், 22% (அதோடு பொருந்தக்கூடிய மேல்வரி மற்றும் வரியின் மீதான தீர்வை) சலுகை விகிதத்தில் வரி செலுத்த விருப்பம் உள்ளது. நிர்ணயிக்கப்பட்ட கால எல்லைக்குள் படிவம்-10-IC-ஐத் தாக்கல் செய்தால் மட்டுமே நிறுவனங்கள் மதிப்பீட்டு ஆண்டு 2020-21 முதல் சலுகை விகிதத்தைத் தேர்வு செய்யலாம்.