1. படிவம் 15CB என்றால் என்ன?
படிவம் 15CB என்பது ஒரு நிதியாண்டில் வணிக குழுமம் அல்லாத அல்லது அயல்நாட்டு வணிக குழுமம் அல்லாத அயல்நாடு வாழ் நபருக்கு செலுத்தும் வரி விதிப்பிற்குரிய மொத்தப் பணம்/ செலுத்திய பணத்தின் கூட்டுத்தொகை5 லட்சம் ரூபாய்க்கு மேல் இருந்து 195/197 பிரிவின் கீழ் வரி மதிப்பீட்டு அலுவலரிடம் (AO) சான்றிதழ் பெறப்படவில்லை எனும் போது ஓரு கணக்காளரால் வழங்கப்படும் சான்றிதழாகும்.
படிவம் 15CB இல், பணம் செலுத்துவதற்கான விவரங்கள், மூலத்தில் பிடித்தம் செய்யப்பட்ட வரியின் விகிதம் (TDS , பிடித்தம் செய்யப்பட்ட மூல வரி (TDS ) மற்றும் பிற விவரங்கள் மற்றும் பணம் அனுப்பும் நோக்கம் பற்றிய விவரங்களும் பட்டைய கணக்காளரால் (CA) சான்றளிக்கப்படுகிறது. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், படிவம் 15CB என்பது வரி நிர்ணய சான்றிதழ் ஆகும், இதில் அனுப்பும் பணத்துக்கு தொடர்பான வரி விதிப்பிற்குறிய CA ஆராய்கிறது.
2. படிவம் 15CB - ஐ யார் பயன்படுத்தலாம்?
மின்னணு தாக்கல் முகப்பில் பதிவுசெய்யப்பட்ட ஒரு பட்டயக் கணக்காளரால் படிவம் 15 CB அணுகி சமர்ப்பிக்கப்படுகிறது. படிவம் 15CB இல் விவரங்களை சான்றளிக்க ஏதுவாக வரி செலுத்துபவர் படிவம் 15CA ஐ பட்டைய கணக்காளருக்கு (CA-க்கு) ஒதுக்க வேண்டும்.
3. படிவம் 15CB - இல் சான்றளிப்பதற்கான நோக்கம் என்ன?
15CB என்பது வருமான வரிச் சட்டத்தின் பிரிவு 5 மற்றும் 9 இன் கீழ் விதிப்பிற்குரிய விதிமுறைகள் மற்றும் இரட்டை வரிவிதிப்பு தவிர்ப்பு ஒப்பந்தங்கள் (DTAA) ஏதேனும் இருந்தால் பணம் செலுத்தலை பட்டைய கணக்காளர் (CA) ஆய்வு செய்யும் வரி நிர்ணய சான்றிதழ் ஆகும்.
4. படிவம் 15CA (பகுதி C) ஐத் தாக்கல் செய்வதற்கு முன் படிவம் 15CB ஐத் தாக்கல் செய்வது கட்டாயமா?
படிவம் 15CA இன் பகுதி C ஐ நிரப்புவதற்கு முன் படிவம் 15CB ஐ பதிவேற்றுவது கட்டாயமாகும். படிவம் 15CA இன் பகுதி C இல் உள்ள விவரங்களை முன்-நிரப்ப, மின்னணு சரிபார்க்கப்பட்ட படிவம் 15CB இன் ஒப்புதல் எண் சரிபார்க்கப்பட வேண்டும்.
5. படிவம் 15CB அயல்நிலை பயன்முறையில் மட்டுமே தாக்கல் செய்ய முடியுமா?
படிவம் 15CB ஐ நிகழ்நிலை மற்றும் அயல்நிலை முறைகளில் நிரப்பப்பட்டு சமர்ப்பிக்கப்படலாம். சட்டரீதியான படிவங்களுக்கான அயல்நிலை பயன்பாட்டு சேவை, அயல்நிலை பயன்முறையில் படிவம் 15CB நிரப்பவும் சமர்ப்பிக்கவும் உதவுகிறது.
6. படிவம் 15CB எவ்வாறு சரிபார்க்கப்பட வேண்டும்? இந்த படிவத்தை சமர்ப்பிக்க ஏதேனும் கால வரம்பு உள்ளதா?
இந்த படிவத்தை இலக்கமுறை கையொப்ப சான்றிதழை (DSC-ஐ) பயன்படுத்தி மட்டுமே மின்னணு முறையில் சரிபார்க்க முடியும். பட்டைய கணக்காளரின் (CA) இன் இலக்கமுறை கையொப்ப சான்றிதழ் (DSC) மின்னணு தாக்கல் முகப்பில்ல் பதிவு செய்யப்பட வேண்டும். படிவம் 15CB-ஐ சமர்ப்பிக்க பரிந்துரைக்கப்பட்ட கால வரம்பு எதுவும் இல்லை. இருப்பினும், பணம் செலுத்துவதற்கு முன்பு சமர்ப்பிக்க வேண்டும்.