1. படிவம் 15CC என்றால் என்ன?
ஒரு நிறுவனமாகவோ அல்லது வெளிநாட்டு நிறுவனமாகவோ அல்லாத குடியுரிமை இல்லாத ஒருவருக்குப் பணம் அனுப்பும் ஒவ்வொரு அங்கீகரிக்கப்பட்ட வணிகரும், படிவம் 15CC இல் அத்தகைய பணம் அனுப்பியதை காலாண்டுக்கு ஒரு முறை வெளியிட வேண்டும்.
2. படிவம் 15CC-ஐ சமர்ப்பிக்கும் பயன்முறைகள் என்னென்ன?
ஆன்லைன் பயன்முறையில் மட்டுமே படிவம் 15CC ஐ சமர்ப்பிக்க முடியும். படிவத்தை ஆன்லைனில் தாக்கல் செய்ய, மின்னணு-தாக்கல் முகப்பில் உள்நுழைந்து, படிவத்தைத் தேர்ந்தெடுத்து, தயார் செய்து சமர்ப்பிக்கவும்.
3. படிவம் 15CC ஐத் தாக்கல் செய்வதற்கு முன் ITDREIN ஐ கட்டாயம் உருவாக்க வேண்டுமா?
ஆம், அறிக்கை அளிக்கும் நிறுவனத்தால் சேர்க்கப்பட்ட அங்கீகரிக்கப்பட்ட நபர் மின்னணு-தாக்கல் முகப்பில் ITDREIN ஐப் பயன்படுத்தி உள்நுழைந்து படிவம் 15CC ஐ தாக்கல் செய்ய வேண்டும்.
4. படிவம் 15CC ஐ எப்போது தாக்கல் செய்ய வேண்டும்?
நிதியாண்டின் எந்த காலாண்டில் அத்தகைய பணம் செலுத்தப்பட்டதோ, அந்த காலாண்டின் முடிவில் இருந்து பதினைந்து நாட்களுக்குள் மின்னணு முறையில் வருமான வரித் துறையின் தகுதியுடைய அதிகார அமைப்பிடம் இது சமர்பிக்கப்பட வேண்டும்.
5. படிவம் வெற்றிகரமாக சமர்ப்பிக்கப்பட்டது என்பதை நான் எப்படி அறிவது?
மின்னணு-தாக்கல் இணைய முகப்பில் பதிவு செய்யப்பட்ட உங்கள் மின்னஞ்சல் ID மற்றும் அலைபேசி எண்ணில் உறுதிப்படுத்துதலைப் பெறுவீர்கள். கூடுதலாக, உங்கள் பணிப்பட்டியல் தாவலின் கீழ் உங்கள் செயல்களின் நிலையை நீங்கள் பார்க்கலாம்.
6. படிவம் 15CC சமர்ப்பிக்க மின்னணு-சரிபார்ப்பு அவசியமா? ஆம் எனில், படிவம் 15CC-ஐ நான் எவ்வாறு மின்னணு முறையில் சரிபார்ப்பது?
ஆம், படிவம் 15CC ஐ மின்னணு முறையில் சரிபார்ப்பது அவசியம். இலக்கமுறை கையொப்பச் சான்றிதழைப் பயன்படுத்தி நீங்கள் மின்னணு முறையில் சரிபார்க்க வேண்டும்.