1. மேலோட்டப்பார்வை
வருமானவரிச் சட்டம், 1961 இன் பிரிவு 195 மற்றும் வருமானவரி விதிகள், 1962 இன் விதி 37BB இன் படி, ஒரு நிறுவனமாகவோ அல்லது வெளிநாட்டு நிறுவனமாகவோ அல்லாத குடியுரிமை இல்லாத ஒருவருக்கு பணம் செலுத்தும் ஒவ்வொரு அங்கீகரிக்கப்பட்ட வணிகரும், அத்தகைய பணம் செலுத்திய அறிக்கையைப் படிவம் 15CC இல் சமர்ப்பிக்க வேண்டும்.
அத்தகைய அறிக்கையை நிதியாண்டின் எந்த காலாண்டில் அத்தகைய பணம் செலுத்தப்பட்டதோ, அந்த காலாண்டின் முடிவில் இருந்து பதினைந்து நாட்களுக்குள் மின்னணு முறையில் வருமானவரித் துறையின் தகுதியுடைய அதிகார அமைப்பிடம் சமர்பிக்க வேண்டும்.
படிவம் 15CC ஐ ஆன்லைன் பயன்முறையில் மட்டுமே சமர்ப்பிக்க முடியும்.
2. இந்தச் சேவையைப் பெறுவதற்கான முன்நிபந்தனைகள்
| பயனர் | முன்தேவைகள் |
| அறிக்கையிடல் நிறுவனம் |
|
| அங்கீகரிக்கப்பட்ட நபர்கள் |
|
3. படிவத்தைப் பற்றி
3.1. நோக்கம்
விதி 37BB இன் படி, படிவம் 15CC இல் நிதியாண்டின் ஒவ்வொரு காலாண்டில் செலுத்தப்படும் பணம் தொடர்பான காலாண்டு அறிக்கையை அங்கீகரிக்கப்பட்ட வணிகர்கள் சமர்ப்பிக்க வேண்டும்.
படிவம் 15CC ஐத் தாக்கல் செய்வதற்கு முன், அறிக்கையிடும் நிறுவனம் ITDREIN ஐ (படிவம் 15CC மற்றும் படிவம் V ஐ சமர்ப்பிப்பதற்காக வருமானவரித் துறையால் வழங்கப்பட்ட தனித்துவமான ID) மின்னணு-தாக்கல் முகப்பில் உருவாக்குவது அவசியமாகும். ITDREIN இன் வெற்றிகரமான உருவாக்கத்திற்குப் பிறகு, உருவாக்கப்பட்ட ITDREIN எண்ணிற்குரிய அங்கீகரிக்கப்பட்ட நபரை படிவம் 15CC ஐத் தாக்கல் செய்வதற்கு அறிக்கையிடல் நிறுவனம் சேர்க்க வேண்டும்.
3.2. இதை யார் பயன்படுத்தலாம்?
ITDREIN எண்ணின் உருவாக்கத்திற்கு பிறகு ஒரு அறிக்கையிடல் நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்ட நபர்கள்.
4. படிவம் பற்றிய ஒரு பார்வை
படிவம் 15CC மூன்று பிரிவுகளைக் கொண்டுள்ளது:
- அங்கீகரிக்கப்பட்ட வணிகரின் விவரங்கள்
- பணம் செலுத்திய விவரங்கள்
- சரிபார்ப்பு
4.1. அங்கீகரிக்கப்பட்ட வணிகரின் விவரங்கள்
முதல் பிரிவில் அங்கீகரிக்கப்பட்ட வணிகரின் விவரங்கள் உள்ளது.
4.2 பணம் செலுத்திய விவரங்கள்
அடுத்த பிரிவில், ஒரு நிறுவனமாகவோ அல்லது வெளிநாட்டு நிறுவனமாகவோ அல்லாத குடியுரிமை இல்லாத ஒருவருக்கு செலுத்தப்பட்ட பணம் பற்றிய விவரங்கள் உள்ளன. இந்தப் பிரிவில் நீங்கள் பணம் செலுத்தியவர், பெறுபவர் மற்றும் பணம் அனுப்பிய இடம் பற்றிய விவரங்களைச் சேர்க்கலாம்.
டெம்ப்ளேட்டைப் பயன்படுத்தி (அதே பக்கத்தில் கிடைக்கும்) பல முறை செலுத்திய பணம் பற்றிய விவரங்களைப் பதிவேற்ற, .csv கோப்பைப் பயன்படுத்தலாம். வெற்று டெம்ப்ளேட்டைப் பதிவிறக்க CSV டெம்ப்ளேட்டைப் பதிவிறக்கு என்பதைக் கிளிக் செய்யவும். csv கோப்பைப் புதுப்பித்த பிறகு, விவரங்களைப் பதிவேற்ற CSV கோப்பை இணைக்கவும் என்பதைக் கிளிக் செய்யவும். மேலும் தகவலுக்கு csv டெம்ப்ளேட்டை நிரப்பும் வழிமுறைகளைப் பதிவிறக்கவும்.
4.3. சரிபார்ப்பு
கடைசி பிரிவில் படிவம் 15CCக்கான ஒரு சுய அறிவிப்பு படிவம் உள்ளது.
5. எப்படி அணுகுவது மற்றும் சமர்ப்பிப்பது
நீங்கள் பின்வரும் முறைகள் மூலம் படிவம் 15CC ஐ நிரப்பிச் சமர்ப்பிக்கலாம்:
- ஆன்லைன் பயன்முறை - மின்னணு-தாக்கல் இணைய முகப்பு மூலம்
ஆன்லைன் பயன்முறை மூலம் படிவம் 115CC ஐ நிரப்ப மற்றும் சமர்ப்பிக்க பின்வரும் வழிமுறைகளை பின்பற்றவும்.
5.1. படிவம் 15CC ஐ சமர்ப்பித்தல் [ஆன்லைன் பயன்முறை]
படி 1: ITDREIN, உங்கள் பயனர் ID (PAN) மற்றும் கடவுச்சொல்லைப் பயன்படுத்தி மின்னணு-தாக்கல் முகப்பில் உள்நுழையவும்.
படி 2: உங்கள் முகப்புப்பலகையில், மின்னணு-தாக்கல்> வருமானவரி படிவங்கள் > வருமானவரி படிவங்களை தாக்கல் செய்தல் என்பதைக் கிளிக் செய்யவும்.
படி 3: வருமானவரி படிவங்கள் பக்கத்தில், அறிக்கையை தாக்கல் செய்தல் 15CC என்பதைத் தேர்ந்தெடுக்கவும். மாறாக, தேடல் பெட்டியில் படிவம் 15CC என்று உள்ளிட்டு படிவத்தைத் தேடவும்.
படி 4: படிவம் 15CC பக்கத்தில், தாக்கல் வகை, நிதி ஆண்டு (F.Y.) மற்றும் காலாண்டு ஆகியவற்றைத் தேர்ந்தெடுக்கவும். தொடரவும் என்பதைக் கிளிக் செய்யவும்.
படி 5: அறிவுறுத்தல்கள் பக்கத்தில், தொடங்கவும் என்பதைக் கிளிக் செய்யவும்.
படி 6: தொடங்கவும் என்பதைக் கிளிக் செய்தால், படிவம் 15CC காட்சிபடுத்தப்படும். தேவையான அனைத்து விவரங்களையும் நிரப்பி முன்னோட்டத்தை கிளிக் செய்யவும்.
படி 7: முன்னோட்டம் பக்கத்தில், விவரங்களைச் சரிபார்த்து மின்னணு-சரிபார்த்தலுக்குத் தொடரவும் என்பதைக் கிளிக் செய்யவும்.
படி 8: சமர்ப்பிக்க ஆம் என்பதைக் கிளிக் செய்யவும்.
படி 9: ஆம், என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், நீங்கள் மின்னணு-சரிபார்த்தல் பக்கத்திற்கு அழைத்துச் செல்லப்படுவீர்கள் அங்கே மின்னணு கையொப்பச் சான்றிதழைக் கொண்டு நீங்கள் சரிபார்க்கலாம்.
குறிப்பு: மேலும் அறிய மின்னணு-சரிபார்ப்பது எப்படி என்பது பற்றிய பயனர் கையேட்டைப் பார்க்கவும்.
வெற்றிகரமான மின்னணு-சரிபார்ப்பிற்குப் பிறகு, ஒரு பரிவர்த்தனை ID மற்றும் ஒப்புகை ரசீது எண்ணுடன் ஒரு வெற்றிச் செய்தி காண்பிக்கப்படும். எதிர்கால குறிப்புக்காக பரிவர்த்தனை ID மற்றும் ஒப்புதல் ரசீது எண்ணை குறித்து வைத்துக் கொள்ளவும். மின்னணு-தாக்கல் முகப்புப் பக்கத்தில் பதிவு செய்யப்பட்ட மின்னஞ்சல் ID[கள்] மற்றும் அலைபேசி எண்[களில்] ஒரு உறுதிப்படுத்துதல் செய்தியை நீங்கள் [மற்றும் அறிக்கையிடும் நிறுவனம்] பெறுவீர்கள்.