1. படிவம் 15CA என்றால் என்ன?
- பிரிவு 195 இன் படி, அயல்நாடு வாழ் நபர்களுக்கு (வணிக குழுமம் அல்லாத) அல்லது வெளிநாட்டு வணிக குழுமதிற்கு பணம் செலுத்தும் ஒவ்வொரு நபரும், அந்த தொகை வருமானவரிவிதிப்பிற்கு உட்பட்டது என்றால் மூலத்தில் வரி பிடித்தம் (TDS) செய்ய வெண்டும் மற்றும் அதன் விவரங்கள் படிவம் 15CA - இல் அளிக்கப்பட வேண்டும்.
- பணம் அனுப்புவதற்கு (செலுத்துதல்) பொறுப்பான நபர் படிவம் 15CA - ஐ சமர்ப்பிக்க வேண்டும். இந்த படிவத்தை நிகழ்நிலை மற்றும் அகல்நிலை முறையில் சமர்ப்பிக்கலாம். ரூ.5 லட்சத்திற்கு அதிகமாக பணம் செலுத்தும் தருணங்களில், 15CA படிவத்தை நிகழ்நிலையில் பதிவேற்றுவதற்கு முன், பட்டய கணக்காளரிடமிருந்து 15CB படிவத்தில் சான்றிதழ் தேவைப்படும்.
2. படிவம் 15CA இன் எந்த பகுதியை நான் நிரப்ப வேண்டும்?
அயல்நாடு வாழ் நபருக்கு , ஒரு வணிக குழுமம் அல்லாத அல்லது ஒரு வெளிநாட்டு வணிக குழுமத்திற்கு பணம் செலுத்துவதற்கான தகவல்கள் படிவம் 15CA இல் 4 பகுதிகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. நிகழ்வின் தன்மையைப் பொறுத்து, நீங்கள் தொடர்புடைய பகுதியை நிரப்ப வேண்டும்:
பகுதி A: நிதியாண்டில் செலுத்தும் பணம் அல்லது செலுத்தும் பணத்தின் கூட்டுத் தொகை 5 லட்சம் ரூபாய்க்கு மேல் இல்லையென்றால்.
பகுதி B: நிதியாண்டில் செலுத்தும் பணம் அல்லது செலுத்தும் பணத்தின் கூட்டுத்தொகை 5 லட்சம் ரூபாய்க்கு மேல் இருந்ததால், வரி மதிப்பீட்டு அதிகாரியிடமிருந்து 195(2)/ 195(3)/197 சட்டப் பிரிவின் கீழ் உத்தரவு/சான்றிதழ் பெறப்பட்டிருந்தால்.
பகுதி C: நிதியாண்டில் செலுத்திய பணம் அல்லது செலுத்திய பணத்தின் கூட்டுத் தொகை 5 லட்சம் ரூபாய்க்கு மேல் இருந்தால், ஒரு கணக்காளரிடமிருந்து படிவம் எண் 15CB இல் சான்றிதழ் பெறப்பட்டிருந்தால்.
பகுதி D: வருமான வரிச் சட்டம், 1961 இன் கீழ் அனுப்பும் பணம் வரி விதிப்பிற்கு உட்படாததாக இருந்தால்
3. படிவம் 15CA-ஐ யார் தாக்கல் செய்ய வேண்டும்?
விதி 37BB இன் படி, ஒரு அயல்நாடு வாழ் நபருக்கு, வணிக குழுமம் அல்லாத அல்லது ஓரு அயல் நாட்டு வணிக குழுமத்திற்கு பணம் செலுத்துவதற்கு பொறுப்பான எந்தவொரு நபரும் அத்தகைய தகவல்களை படிவம் 15CA இல் அளிக்க வேண்டும்.
4. படிவம் 15CB - ஐ சமர்ப்பிக்க வேண்டியது கட்டாயமா?
இல்லை, படிவம் 15CB - ஐ சமர்ப்பிக்க வேண்டியது கட்டாயமில்லை. படிவம் 15CB என்பது ஒரு நிதி ஆண்டில் பணம் அனுப்பும் தொகை ரூ.5 லட்சத்தை தாண்டும்போது மட்டுமே நிரப்பப்பட வேண்டிய நிகழ்வு அடிப்படையிலான படிவமாகும், மேலும் பிரிவு 288 இல் வரையறுக்கப்பட்டுள்ளபடி கணக்காளரிடமிருந்து சான்றிதழ் ஒன்றை நீங்கள் அளிக்க வேண்டும்.
5. படிவம் 15CA - ஐத் திரும்பப் பெற முடியுமா?
இல்லை, படிவம் 15CA - ஐத் திரும்பப் பெற வழி இல்லை.
6. படிவம் 15CA எப்போது அளிக்கப்பட வேண்டியதில்லை?
விதி 37BB இன் துணைப் பிரிவுக்கு (3) இணங்க, படிவம் 15CA பகுதி-D இல் உள்ள தகவல்கள் பின்வரும் பரிவர்த்தனைகளில் அளிக்கப்பட தேவையில்லை:
- ஒரு தனிநபரால் பணம் செலுத்தப்படும்போது மற்றும் ரிசர்வ் வங்கியின் முன் ஒப்புதல் தேவைப்படாத போது
- ரிசர்வ் வங்கியின் நோக்கங்கள் நெறிமுறையின் கீழ் குறிப்பிடப்பட்டுள்ள தன்மைக்கு ஏற்ப பணம் செலுத்தப்பட்டிருந்தால்
7. படிவம் 15CA ஐ எவ்வாறு மின்னணு முறையில் சரிபார்க்க வேண்டும்?
இந்த படிவத்தை இலக்கமுறை கையொப்பச் சான்றிதழ் (DSC) அல்லது மின்னணு சரிபார்ப்பு குறியீட்டை (EVC) பயன்படுத்தி மின்னணு சரிபார்ப்பு செய்ய முடியும். இலக்கமுறை கையொப்பச் சான்றிதழ் (DSC) பதிவு செய்யப்பட்டிருந்தால் இலக்கமுறை கையொப்பச் சான்றிதழ் (DSC - ஐ) பயன்படுத்தி நீங்கள் மின்னணு முறையில் சரிபார்க்க வேண்டும். மின்னணு சரிபார்ப்புக்கான படிப்படியான செயல்முறையைப் புரிந்துகொள்ள மின்னணு முறையில் சரிபார்ப்பது எவ்வாறு என்ற பயனர் கையேட்டைப் பார்க்கவும்.
8. படிவம் 15CA ஐ நிகழ்நிலையில் மட்டும் தாக்கல் செய்யலாமா? இந்த படிவத்தை நான் எப்போது தாக்கல் செய்ய வேண்டும்?
இந்த படிவத்தை நிகழ்நிலை மற்றும் அகல்நிலை முறைகளில் தாக்கல் செய்யலாம். அகல்நிலை பயன்பாட்டு சேவை படிவம் 15CA ஐ அகல்நிலை பயன்முறையில் தாக்கல் செய்ய உங்களுக்கு உதவுகிறது. இந்தப் படிவத்தை தாக்கல் செய்ய கால வரம்பு பரிந்துரைக்கப்படவில்லை. இருப்பினும், பணம் செலுத்துவதற்கு முன்பு தாக்கல் செய்யப்பட வேண்டும்.