Do not have an account?
Already have an account?

1. கண்ணோட்டம்

பிரிவு 194N-ன் கீழ் பணம் எடுக்கப்படும் நேரம் வரிப்பிடித்தம் (TDS) செய்யும் சேவை, வரி செலுத்துவோர் தாங்கள் பணம் எடுக்கும் சமயத்தில் மூலத்தில் பிடித்தம் செய்ய வேண்டிய வரியின் சத விகிதத்தைக் காண உதவுகிறது. இந்த சேவை பின்வரும் (பதிவுசெய்யப்பட்ட மற்றும் பதிவு செய்யப்படாத) வரி செலுத்துவோருக்கு உள்நுழைவுக்கு முன்பே கிடைக்கிறது:

  • தனிநபர் வரி செலுத்துவோர்
  • இந்துக் (அவிபக்தக்) கூட்டுக் குடும்பம்
  • நிறுவனம்
  • ஏ.ஓ.பி. (ஒரே குறிக்கோளுடன் சேர்ந்த நபர்களின் சங்கம்) அல்லது பி.ஓ.ஐ. (தனி நபர்களின் கூட்டு)
  • பங்குதாரர்களின் கூட்டு நிறுவனம் அல்லது எல்.எல்.பி. (வரையறுக்கப்பட்ட பொறுப்பு கொண்ட பங்குதாரர்களின் கூட்டு நிறுவனம்)
  • உள்ளூர் நிர்வாகம்

இந்த சேவை மூலத்தில் வரி பிடித்தல் கணக்கு எண் (TAN) கொண்ட பதிவு செய்யப்பட்ட பயனர்களுக்கு ( அதாவது, பொது நிறுவனங்கள்/தனியார் நிறுவனங்கள்/கூட்டுறவு வங்கிகள், தபால் நிலையங்கள் போன்றவை) உள்நுழைந்த பின் கிடைக்கிறது. மொத்தமாக பதிவேற்றும் செயல்பாட்டைப் பயன்படுத்தி, வரி செலுத்துவோர் பணம் எடுக்கும்போது பிடிக்கப்பட வேண்டிய (TDS) வரி சதவிகிதத்தைக் காண இது அவர்களுக்கு உதவுகிறது.

2. இந்த சேவையைப் பெறுவதற்கான முன்-நிபந்தனைகள்

  • செல்லுபடியாகும் மற்றும் செயல்பாட்டில் உள்ள நிரந்தர கணக்கு எண் (PAN)/மூலத்தில் வரி பிடித்தல் கணக்கு எண் (TAN)
  • அனுமதிக்கப்பட்ட மற்றும் செயல்பாட்டில் உள்ள அலைபேசி எண்
  • மின்னணு தாக்கல் இணைய முகப்பில் (போர்ட்டலில்) பதிவு செய்த மூலத்தில் வரி பிடித்தல் கணக்கு எண் (TAN) (அனுமதிக்கப்பட்ட பயனர் அடையாளம் மற்றும் கடவுச்சொல்) வைத்திருக்கும் பயனர்கள்

3.படிப் படியான வழிகாட்டி

3.1. வங்கியிலிருந்து பணம் எடுக்கும் நேரம் மூலத்தில் வரி பிடித்தல் (TDS)-க்கான பொருந்தக்கூடிய வரி விகிதங்களைக் காண (உள்நுழைவதற்கு முன்)

படி 1: மின்னணு தாக்கல் இணைய முகப்புப் பக்கத்தில் (போர்ட்டலில்), பிரிவு 194N இன் கீழ், வங்கியிலிருந்து பணத்தை எடுக்கும் நேரம் மூலத்தில் வரி பிடித்தல் (TDS) இணைப்பைக் கிளிக் செய்யவும்.

Data responsive


படி 2:அடுத்த பக்கத்தில், உங்கள் நிரந்தர கணக்கு எண் (PAN)-ஐ உள்ளிடவும் மற்றும் சரியான அலைபேசி எண்ணை உள்ளிட்டு, அறிவிப்பு தேர்வுப்பெட்டியை தேர்ந்தெடுத்து, தொடரவும் என்பதைக்ச் சொடுக்கவும்.

Data responsive


படி 3: முந்தைய படியில் உங்களால் உள்ளிடப்பட்ட அலைபேசி எண்ணில் 6-இலக்க ஒரு முறை கடவுச் சொல்லை பெறுவீர்கள். சரிபார்ப்பு பக்கத்தில், ஒரு முறை கடவுச் சொல்லை உள்ளிட்டு தொடரவும் என்பதைக்ச் சொடுக்கவும்.

Data responsive

குறிப்பு:

  • 15 நிமிடங்களுக்கு மட்டுமே ஒரு முறை கடவுச் சொல்கள் செல்லுபடியாகும்.
  • சரியான ஒரு முறை கடவுச் சொல்லை உள்ளீடு செய்ய 3 வாய்ப்புகள் உள்ளன.
  • ஒரு முறை கடவுச் சொல் காலாவதியாகும் நேரத்தை திரையில் உள்ள ஒரு முறை கடவுச் சொல் காலாவதி கவுண்ட் டவுன் நேரம் காட்டி உங்களுக்குக் காட்டுகிறது.
  • ஒரு முறை கடவுச் சொல்லை மீண்டும் அனுப்பவும் என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், புதிய ஒரு முறை கடவுச் சொல் உருவாக்கப்பட்டு அனுப்பப்படும்.

மூலத்தில் வரி பிடித்தல் (TDS) விகிதப் பக்கத்தில், உங்களுக்கு பொருந்தும் மூலத்தில் வரி பிடித்தல் (TDS) வீதம் பின்வருமாறு காண்பிக்கப்படும்:

  • கடந்த மூன்று ஆண்டுகளாக உங்கள் வருமானம் தாக்கல் செய்யப்பட்டிருந்தால், பின்வருமாறு செய்தியைப் பெறுவீர்கள்: "திரும்பப் பெறும் பணம் ரூ. 1 கோடிக்கு மேல் இருந்தால் மூலத்தில் வரி பிடித்தல் (TDS) 2% என்ற விகிதத்தில் கழிக்கப்படுகிறது."

 

Data responsive

 

  • கடந்த மூன்று ஆண்டுகளில் முன்று ஆண்டுகளுக்குமோ அல்லது ஏதாவது ஒரு ஆண்டுக்கோ நீங்கள் வருமான வரிப்படிவம் தாக்கல் செய்யவில்லை என்றால், பின்வரும் செய்தி உங்களுக்கு கிடைக்கும்: "வருமான வரிச் சட்டம், 1961 இன் பிரிவு 194N-ன் சரத்துக்களுக்கு ஓப்பாததால் திரும்பப் பெறும் பணம் ரூ .20 லட்சத்திற்கு மேல் இருந்தால் 2% சதவீதமும், ரூ.1 கோடிக்கு மேல் இருந்தால் 5% என்ற விகிதத்தில் மூலத்தில் வரி பிடித்தல் (TDS) வரி பிடிக்கப்படும்."

 

Data responsive

 

3.2 மூலத்தில் வரி பிடித்தல் கணக்கு எண் (TAN) உள்நுழைவு- பிரிவு 194N-ன் கீழ் பொருந்தக்கூடிய மொத்த சரிபார்ப்பு (உள்நுழைவுக்கு பின்)

படி 1:உங்கள் பயனர் ஐ.டி. மற்றும் கடவுச்சொல்லைப் பயன்படுத்தி மின்னணு தாக்கல் இணைய முகப்பில் (போர்ட்டலில்) உள்நுழையவும்.

Data responsive


படி 2: சேவைகள் > பிரிவு 194N இன் கீழ் பொருந்தக்கூடிய மொத்த சரிபார்ப்பு என்பதைக் கிளிக் செய்யவும். பிரிவு 194N பொருந்தக்கூடிய மொத்த சரிபார்ப்பு பக்கத்தில், நீங்கள் இரண்டு விருப்பங்களைக் காண்பீர்கள்

  • மொத்த நிரந்தர கணக்கு எண் (PAN) விவரங்களை பதிவேற்றவும்
  • டோக்கன் நிலையை சரிபார்க்கவும்

 

Data responsive


படி 3:

மொத்த நிரந்தர கணக்கு எண் (PAN) விவரங்களை பதிவேற்ற 3.1-க்குச் செல்லவும்
டோக்கன் நிலையை சரிபார்க்க 3.2-க்குச் செல்லவும்

3.1 மொத்தமாக நிரந்தர கணக்கு எண் (PAN) விவரங்களை பதிவேற்றவும்

மொத்தமாக பதிவேற்றிய நிரந்தர கணக்கு எண் (PAN) விவரங்களுடன், மூலத்தில் வரி பிடித்தல் கணக்கு எண் (TAN) பயனர்கள் ஒரு சி.எஸ்.வி. வார்ப்புருவில் (மின்னணு தாக்கல் மூலம் வழங்கப்படும்) 1000 நிரந்தர கணக்கு எண் (PAN)கள் வரை விவரங்களை உள்ளிடலாம், ஒவ்வொரு நிரந்தர கணக்கு எண்(PAN)-க்கும் வருமானவரிப் படிவம் தாக்கல் செய்ததற்கான நிலை கணினியால் சோதிக்கப்படும். அதன்படி, பதிவேற்றப்பட்ட சி.எஸ்.வி. கோப்பில் ஒவ்வொரு நிரந்தர கணக்கு எண் (PAN) க்கும் பொருந்தக்கூடிய வங்கியிலிருந்து எடுக்கப்படும் பணத்திற்கான மூலத்தில் வரி பிடித்தல் (TDS) விகிதத்தை கணினி கொடுக்கிறது.

படி 3.1.1:பதிவேற்றவும் என்பதைச் சொடுக்கவும்.

Data responsive


படி 3.1.2: மொத்த நிரந்தர கணக்கு எண் (PAN) விவரங்களை பதிவேற்றும்பக்கத்தில், சி.எஸ்.வி. வார்ப்புருவை மொத்த நிரந்தர கணக்கு எண் (PAN) விவரங்களுடன் நிரப்புவதற்குபதிவிறக்கவும் என்பதைக் கிளிக் செய்க.

Data responsive


படி 3.1.3: மொத்த நிரந்தர கணக்கு எண் (PAN) விவரங்களை உள்ளடக்கிய சி.எஸ்.வி. கோப்பை பதிவேற்ற கோப்பை இணைக்கவும் என்பதைக் கிளிக் செய்யவும்.

குறிப்பு:ஒரு சி.எஸ்.வி. கோப்பில் உங்களால் 1000 நிரந்தர கணக்கு எண்களின் (PAN) விவரங்களை சேர்க்க முடியும். உங்கள் கணினியிலிருந்து சி.எஸ்.வி. கோப்பை இணைக்கவும்.

Data responsive


படி 3.1.4:கோப்பு இணைக்கப்பட்டவுடன், பதிவேற்றவும் என்பதைச் சொடுக்கவும்.

Data responsive


வெற்றிகரமாக பதிவேற்றியவுடன், எதிர்கால பயன்பாட்டுக்காக பரிவர்த்தனை ஐ.டி. மற்றும் டோக்கன் எண் ஆகியவற்றுடன் கூடிய வெற்றி செய்தியைப் பெறுவீர்கள். மூலத்தில் வரி பிடித்தல் கணக்கு எண் (TAN) பயனர்கள் பதிவு செய்த மின்னஞ்சல் ஐ.டி. மற்றும் அலைபேசி எண் ஆகியவற்றுக்கு மின்னஞ்சல் மற்றும் எஸ்.எம்.எஸ். அனுப்பப்படும்.

Data responsive

 

3.2 டோக்கன் நிலையை சோதிக்கவும்

டோக்கன் நிலையை சரிபார்க்கவும் என்னும் சுட்டியின் கீழ் மூலத்தில் வரி பிடித்தல் கணக்கு எண் (TAN) பயனர்கள், ஒவ்வொரு நிரந்தர கணக்கு எண் (PAN) க்கும் பொருந்தக்கூடிய மூலத்தில் வரி பிடித்தல் (TDS) விகிதங்களுடன் பதிவுகளை (கணினியால் கணக்கிடப்பட்ட சி.எஸ்.வி. கோப்பு) பதிவிறக்கம் செய்யலாம்.

படி 3.2.1: டோக்கன் நிலையை சரிபார்க்கவும் என்னும் சுட்டியின் கீழ் தொடரவும் என்பதைச் சொடுக்கவும்.

Data responsive


படி 3.2.2: டோக்கன் நிலை சரிபார்க்கவும் பக்கத்தில், டோக்கன் எண்ணை (நீங்கள் கோரிக்கையை உருவாக்கியபோது உங்கள் பதிவுசெய்யப்பட்ட மின்னஞ்சல் ஐ.டி. அல்லது அலைபேசி எண்ணில் நீங்கள் பெற்றது) அல்லது தொடக்க தேதி மற்றும் இறுதி தேதி (மின்னணு தாக்கல் போர்ட்டலில் டோக்கன் உருவாக்கப்பட்டது) ஐ உள்ளிடவும்.

Data responsive


படி 3.2.3: நிலையை சோதிக்கவும் என்பதைக் கிளிக் செய்யவும்.

Data responsive


படி 3.2.4: தேர்ந்தெடுக்கப்பட்ட அளவுகோல்களுடன் பொருந்தக்கூடிய பதிவுகள் கீழே ஒரு அட்டவணையில் தோன்றும். நீங்கள் விரும்பும் ஒரு பதிவை பதிவிறக்கம் செய்ய (சி.எஸ்.வி. வடிவம்) பதிவிறக்கவும் என்பதைச் சொடுக்கவும். பதிவிறக்கம் செய்யப்பட்ட சி.எஸ்.வி. கோப்பில் ஒவ்வொரு நிரந்தர கணக்கு எண் (PAN) ணுக்கான வங்கியிலிருந்து எடுக்கப்படும் பணத்திற்கு பொருந்தக்கூடிய மூலத்தில் வரி பிடித்தல் (TDS) வீதத்தை நீங்கள் காண முடியும்.

Data responsive

4. தொடர்புடைய தலைப்புகள்

  • முகப்பு பக்கம்
  • உள்நுழையவும்
  • டாஷ்போர்டு