Do not have an account?
Already have an account?

1. ரொக்கமாக பணம் திரும்ப எடுக்கும் போது பிரிவு 194N இன் கீழ் பிடிக்கப்படும் மூல வரி (TDS) என்பது என்ன?
சட்டத்தின் பிரிவு 194N இன் படி, மூலத்தில் வரி பிடித்தம் (TDS) செய்ய ஒரு குறிப்பிட்ட நிதியாண்டில் ஒரு நபரால் திரும்ப எடுக்கப்பட்ட பணம் அல்லது திரும்ப எடுத்த பணத்தின் மொத்த தொகையின் பின்வரும் அளவை மீறினால் :

  • ₹ 20 லட்சம் [முந்தைய மூன்று மதிப்பீட்டு ஆண்டுகளுக்கான அனைத்து வருமான வரிப்படிவங்களும் தாக்கல் செய்யப்படவில்லை என்றால்], அல்லது
  • ₹ 1 கோடி (முந்தைய மூன்று மதிப்பீட்டு ஆண்டுகள் அனைத்துக்குமான வருமான வரிப்படிவங்களோ அல்லது மூன்றில் ஏதாவது ஓரு மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான வரி படிவமோ தாக்கல் செய்யப்பட்டிருந்தால்].

2. சட்டத்தின் பிரிவு 194N இன் கீழ் பணத்தை திரும்பப் எடுக்கும் போது மூலத்தில் வரி பிடித்தலை (TDS) ஐ யார் செய்கிறார்கள்?
வங்கிகள் [தனியார், பொது மற்றும் கூட்டுறவு] அல்லது தபால் நிலையங்கள் மூலத்தில் வரி பிடித்தம் செய்கின்றன. வங்கிகள் அல்லது தபால் நிலையங்களில் பராமரிக்கப்படும் எந்த ஒருவரது கணக்கில் இருந்தும் ₹ 20 லட்சம் அல்லது ₹ 1 கோடிக்கும் அதிகமாக பணத்தை [அந்தந்த தருணத்திற்கேற்ப] அவருக்கு திரும்ப வழங்கும் போது இந்த வரியானது பிடித்தம் செய்யப்படுகிறது.

3. பணத்தை திரும்ப எடுக்கும் போது சட்டப் பிரிவு 194N இன் கீழ் மூலத்தில் வரி பிடித்தல் (TDS) என்பது யாருக்கெல்லம் பொருந்தாது?
பிரிவு 194N இன் கீழ் பணம் எடுக்கும்போது மூலத்தில் வரி பிடித்தல் (TDS) பின்வரும் நபர்களுக்கு பொருந்தாது:

  • மத்திய அல்லது மாநில அரசு
  • தனியார் அல்லது பொதுத்துறை வங்கி
  • எந்தவொரு கூட்டுறவு வங்கி
  • தபால் அலுவலகம்
  • எந்தவொரு வங்கியின் வணிக பேராளர்
  • எந்தவொரு வங்கியின் வெள்ளை முத்திரை பெற்ற தானியங்கி பண பரிமாற்ற எந்திரங்களை (ஏ.டி.எம்.) இயக்கும் உரிமைபெற்றவர்
  • விவசாயத்திற்கான விளை பொருட்களை வாங்கியதற்காக விவசாயிகளுக்கு பணம் வழங்க மத்திய அரசால் அடையாளம் காணப்பட்டு வேளாண் உற்பத்தி சந்தைக் குழுவின் (APMC) கீழ் இயங்கும் தரகு முகவர்கள் அல்லது வர்த்தகர்கள்
  • அங்கீகரிக்கப்பட்ட விற்பனையாளர்கள் மற்றும் அவர்களின் தனி உரிமை பெற்ற முகவர் மற்றும் துணை முகவர் மற்றும் இந்திய ரிசர்வ் வங்கியிடம் உரிமம் பெற்ற முழு நேர பணம் மாற்றுபவர் (FFMC)மற்றும் அதன் தனி உரிமை பெற்ற முகவர்கள்,
  • இந்திய ரிசர்வ் வங்கியின் ஆலோசனையுடன் அரசு அறிவிக்கையில் இடம்பெற்ற வேறு எந்த ஓரு நபர்

4. சட்டத்தின் பிரிவு 194N இன் கீழ் பணத்தை ரொக்கமாக திரும்ப எடுக்கும் போது மூலத்தில் வரி பிடித்தல் (TDS) என்பது எப்போதிலிருந்து அமலில் உள்ளது?
சட்டத்தின் பிரிவு 194N இன் கீழ் பணத்தை ரொக்கமாக திரும்ப எடுக்கும் போது மூலத்தில் வரி பிடித்தல் (TDS) என்பது செப்டம்பர் 1, 2019 அல்லது நிதியாண்டு 2019-2020 முதல் அமலில் உள்ளது.

5. பிரிவு 194N இன் படி பணத்தை ரொக்கமாக திரும்பப் எடுக்கும் போது மூலத்தில் வரி பிடித்தல் (TDS) ஆனது எந்த விகிதத்தில் பிடித்தம் செய்யப்படுகிறது?
பணத்தை திரும்பப் பெறுபவர் மூன்று முந்தைய மதிப்பீட்டு ஆண்டுகளில் ஏதாவது ஓரு முந்தைய மதிப்பீட்டு ஆண்டிற்கான அல்லது முந்தைய மூன்று மதிப்பீட்டு ஆண்டுகள் அனைத்திற்குமன வருமான வரியையும் தாக்கல் செய்திருந்தால், ₹ 1 கோடிக்கும் மேல் பணத்தை ரொக்கமாக திரும்பப் எடுக்கும் போது மூலத்தில் வரி பிடித்தம் (TDS) 2% எனும் விகிதத்தில் செய்யப்படும்.
பணத்தை திரும்பப் பெறுபவர் முந்தைய மூன்று மதிப்பீட்டு ஆண்டுகளில் எந்த ஓரு ஆண்டிற்கான வருமான வரியையும் தாக்கல் செய்யவில்லை என்றால், ₹ 20 லட்சத்திற்கும் அதிகமான பணத்தை ரொக்கமாக திரும்ப எடுக்கும்போது 2% மற்றும் ₹ 1 கோடிக்கும் அதிகமான பணத்தை ரொக்கமாக திரும்பப் எடுக்கும்போது 5% என்ற விகிதத்தில் மூலத்தில் வரி பிடித்தம் (TDS) செய்யப்படுகிறது.