ERIகளின் சேவை கோரிக்கையைச் சரிபார்க்கவும் > பயனர் கையேடு
1. கண்ணோட்டம்
சேவை கோரிக்கையை சரிபார்க்கவும் என்பது மின்னணு-தாக்கல் இணைய முகப்பில் முன் உள்நுழைவு செயல்பாடு ஆகும். இந்த சேவையின் மூலம், நீங்கள் (ERI இன் வாடிக்கையாளர்) உங்கள் சார்பாக மின்னணு-தாக்கல் இணைய முகப்பில் குறிப்பிட்ட செயல்களைச் செய்யும்போது ஒரு மின்னணு முறையில் வரி தாக்கல் இடைத்தரகர் சமர்ப்பித்த கோரிக்கையை சரிபார்க்க முடியும், இதில் வருமானங்கள் மற்றும் படிவங்களைத் தாக்கல் செய்வதும் அடங்கும்.
மின்னணு தாக்கல் இடையீட்டாளர்கள் (ERI கள்) அவர்களின் வாடிக்கையாளர் சார்பாக பின்வரும் சேவைகளைச் செய்யலாம்:
- வாடிக்கையாளரை (பதிவு செய்யப்பட்ட மற்றும் பதிவு செய்யப்படாத பயனர்கள்] சேர்த்தல்
- வாடிக்கையாளரை செயல்படுத்துதல்
- வாடிக்கையாளர் செல்லுபடி நிலையை நீட்டித்தல்
- சேவை செல்லுபடிக்காலத்தை நீட்டித்தல்
- சேவையைச் சேர்த்தல்
- வருமான வரிப் படிவங்களைத் தாக்கல் செய்தல்
- வரி பணத்தை திரும்பப் பெறுதலின் மறு வழங்கல் கோரிக்கை
வாடிக்கையாளரால் சரிபார்க்கப்பட்ட பின்னரே, ERI சமர்ப்பித்த கோரிக்கை நிறைவடையும்.
2. இந்தச் சேவையைப் பெறுவதற்கான முன்நிபந்தனைகள்
- சரியான மற்றும் செயல்பாட்டில் உள்ள நிரந்தர கணக்கு எண் (PAN)
- ஒரு மின்னணு முறையில் வரி தாக்கல் இடைத்தரகர் தனது வாடிக்கையாளருக்கு (வரி செலுத்துபவர்) ஒரு கோரிக்கையைத் தொடங்கியிருக்க வேண்டும்
- மின்னணு தாக்கல் இடையீட்டாளர் (ERI) மூலம் சமர்பிக்கப்பட்ட வேண்டுகோளின் பரிவர்த்தனை அடையாளம் (ID)
- வேண்டுகோளை சரிபார்க்கும்போது, அதற்குரிய, பரிவர்த்தனை அடையாளம் (ID), செல்லுபடியாகும் வகையிலும்/செயலில் உள்ளதாகவும் இருக்க வேண்டும்
- OTP-ஐ பெற செயலில் உள்ள முதன்மை அலைபேசி எண் / முதன்மை மின்னஞ்சல் ID
- படிவங்களை சரிபார்த்தல்/பணத்தைத் திரும்பப் பெறுதல் மறு வழங்கல் கோரிக்கைக்கு, வரி செலுத்துவோர் பின்வருவனவற்றில் ஒன்றைக் கொண்டிருக்க வேண்டும்: PAN அல்லது EVC உடன் இணைக்கப்பட்ட ஆதார் வங்கி அல்லது டிமேட் கணக்கு/நெட்பேங்கிங் உள்நுழைவு/பதிவு செய்யப்பட்ட DSC
3. படிப்படியான வழிகாட்டி
படி 1: மின்னணு தாக்கல் இணைய முகப்பில் முகப்புப்பக்கத்திற்குச் சென்று சேவை கோரிக்கையைச் சரிபார்க்கவும்என்பதைக் கிளிக் செய்யவும்.
படி 2: சேவை கோரிக்கையை சரிபார்க்கவும் பக்கத்தில், உங்கள் மின்னஞ்சல் ID மற்றும் அலைபேசி எண்ணில் (மின்னணுத் தாக்கல் முகப்பில் பதிவு செய்யப்பட்டுள்ளது) பெறப்பட்ட கோரிக்கையின் பரிவர்த்தனை ID மற்றும் PANஐ உள்ளிடவும். உறுதி செய் என்பதைச் சொடுக்கவும்.
குறிப்பு: சரிபார்ப்புக் கோரிக்கை இணைய முகப்பில் பதிவு செய்வதற்கானதாக இருந்தால், பதிவு செய்தல் கோரிக்கையைச் சமர்ப்பிக்கும் போது உங்கள் ERI வழங்கியமின்னஞ்சல் ID மற்றும் அலைபேசி எண்ணில் பெறப்பட்ட பரிவர்த்தனை ID ஐ உள்ளிடவும்.
படி 3: வெற்றிகரமான சரிபார்ப்புக்குப் பிறகு, தொடரவும் என்பதைக் கிளிக் செய்யவும்.
படி 4: சரிபார்ப்பு முறை ERI சமர்ப்பித்த கோரிக்கையின் வகையைப் பொறுத்தது.
|
சமர்ப்பிக்கப்பட்ட வேண்டுகோளின் தன்மை |
சரிபார்ப்பு முறை |
|
மின்னணு தாக்கல் இணைய முகப்பில் பதிவு செய்யப்பட்ட மின்னஞ்சல் ID மற்றும் அலைபேசி எண்ணில் பெறப்பட்ட 6 இலக்க OTP |
|
மின்னணு தாக்கல் இணைய முகப்பில் பதிவு செய்யப்பட்ட மின்னஞ்சல் ID மற்றும் அலைபேசி எண்ணில் பெறப்பட்ட இரண்டு தனித்தனி 6 இலக்க OTPகள் |
|
மின்னணு-சரிபார்ப்பு |
படி 5a: 6 இலக்க OTP/OTPகளை உள்ளிடவும் (மேலும் விவரங்களுக்கு படி 4 இல் உள்ள அட்டவணையைப் பார்க்கவும்). சொடுக்கு தொடர.
குறிப்பு:
- 15 நிமிடங்களுக்கு மட்டுமே OTPக்கள் செல்லுபடியாகும்.
- சரியான OTPஐ உள்ளிட உங்களுக்கு 3 முயற்சிகள் உள்ளன
- OTP காலாவதியாகும் நேரத்தை திரையில் உள்ள OTP காலாவதி கவுண்டன் டைமர் உங்களுக்குக் காட்டுகிறது.
- OTP ஐ மீண்டும் அனுப்பவும்என்பதை கிளிக் செய்வதன் மூலம், புதிய OTP உருவாக்கப்பட்டு அனுப்பப்படும்.
- நீங்கள் பதிவுசெய்யப்படாத பயனராக இருந்தால், உங்களை வாடிக்கையாளராகச் சேர்க்கும்போது உங்கள் ERI வழங்கிய உங்கள் மின்னஞ்சல் ID மற்றும் அலைபேசி எண்ணில் பெறப்பட்ட இரண்டு தனித்தனி 6 இலக்க OTPகளை உள்ளிட வேண்டும்.
படி 5b: வருமான வரி படிவங்களை தாக்கல் செய்தல், பணத்தைத் திரும்பப் பெறுதல் மறு வழங்கல் கோரிக்கை போன்ற சேவைகளைச் செய்ய, உங்கள் சார்பாக ERI கோரியிருந்தால், கிடைக்கக்கூடிய விருப்பங்களைப் பயன்படுத்தி கோரிக்கையை மின்னணு-சரிபார்க்க வேண்டும்.
குறிப்பு: மேலும் அறிய எவ்வாறு மின்னணு-சரிபார்ப்பது பயனர் கையேட்டைப் பார்க்கவும்.
வெற்றிகரமான சரிபார்ப்புக்குப் பிறகு, பரிவர்த்தனை அடையாளத்துடன் (ID யுடன்) ஒரு வெற்றிச் செய்தி தோன்றும். எதிர்கால குறிப்புக்கான இந்தப் பரிவர்த்தனை அடையாளத்தை குறித்துக் கொள்ளவும். மின்னணுத் தாக்கல் முகப்புப்பக்கத்தில் பதிவு செய்யப்பட்ட உங்கள் மின்னஞ்சல் அடையாளம் மற்றும் அலைபேசி எண்ணிற்கு ஒரு உறுதிப்படுத்தல் செய்தியும் பெறுவீர்கள்.
4. தொடர்புடைய தலைப்புகள்
உள்நுழையவும்
முகப்புப் பலகை
வாடிக்கையாளர் மற்றும் வகை 1 ERI சேவைகளைப் பார்க்கவும்
எவ்வாறு மின்னணு சரிபார்ப்பு செய்வது
பதிவு செய்தல்
ERIகளுக்கான சேவை கோரிக்கையை சரிபார்க்கவும் > அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
1. ERIகளுக்கான சேவை கோரிக்கையை சரிபார்க்கவும் சேவை என்பது என்ன?
இந்த சேவையின் மூலம், வகை 1 ERI இன் வாடிக்கையாளர் தங்கள் சார்பாக ERIகள் சமர்ப்பித்த கோரிக்கைகளை சரிபார்க்க முடியும்.
2. ERIகள் மூலம் சமர்ப்பித்த சேவை கோரிக்கைகளை யார் சரிபார்க்க முடியும்?
[பதிவு செய்யப்பட்ட / பதிவு செய்யப்படாத] அனைத்து பயனர்களும் மின்னணு தாக்கல் இடையீட்டாளர்களால் (ERI களால்) சமர்ப்பிக்கப்பட்ட சேவை வேண்டுகோளை சரிபார்க்கலாம்.
3. எனது சார்பாக ஒரு ERIஆல் என்ன வகையான சேவைகளைச் செய்ய முடியும்?
மின்னணு தாக்கல் இடையீட்டாளர்கள் (ERI கள்) அவர்களின் வாடிக்கையாளர் சார்பாக பின்வரும் சேவைகளைச் செய்யலாம்:
- வாடிக்கையாளரை (பதிவு செய்யப்பட்ட மற்றும் பதிவு செய்யப்படாத பயனர்கள்] சேர்த்தல்
- வாடிக்கையாளரை செயல்படுத்துதல்
- வாடிக்கையாளர் செல்லுபடி நிலையை நீட்டித்தல்
- சேவை செல்லுபடிக்காலத்தை நீட்டித்தல்
- சேவையைச் சேர்த்தல்
- ITR-V ஐச் சமர்ப்பிப்பதில் ஏற்பட்ட தாமதத்தை பொறுத்துக்கொள்ளக் கோரும் வேண்டுகோள்
- அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதியைச் சேர்த்தல்
- தன் சார்பாக செயல்பட மற்றொரு நபரை அங்கீகரித்தல்
- மதிப்பீட்டுக்குரியவரின் பிரதிநிதியாக பதிவு செய்தல்
- வேறு நபரின் சார்பாக செயல்பட பதிவு செய்தல்
- வருமான வரிப் படிவங்களைத் தாக்கல் செய்தல்
- வரி பணத்தை திரும்பப் பெறுதலின் மறு வழங்கல் கோரிக்கை
- திருத்தல் கோரிக்கை
- நேரம் கடந்துவிட்டப் பிறகு ITR தாக்கல் செய்வதற்கான பிழைபொருத்தல் கோரிக்கை
- வங்கிக் கணக்குடன் சரிபார்க்கப்பட்ட தொடர்பு விவரங்களுக்கு ஏற்ப முதன்மை தொடர்பு விவரங்களைப் புதுப்பிக்கவும்
- (டீ மாட்) பங்கு வர்த்தக மின்னணு கணக்குடன் சரிபார்க்கப்பட்ட தொடர்பு விவரங்களுக்கு ஏற்ப முதன்மை தொடர்பு விவரங்களைப் புதுப்பிக்கவும்
4. ஒரு ERI பணத்தைத் திரும்பப்பெறும் மறு வெளியீடு கோரிக்கையை சமர்ப்பித்திருந்தால், நான் சரிபார்க்கவில்லை என்றாலும் அந்தக் கோரிக்கை செல்லுபடியாகுமா?
இல்லை. உங்கள் சார்பாக ERI ஆல் சமர்ப்பிக்கப்பட்ட எந்தவொரு கோரிக்கையும் உங்களால் உறுதிப்படுத்தப்படாவிட்டால் அது நிறைவு செய்யப்படாது.
5. எனது சார்பாக ERIகள் சமர்ப்பித்த கோரிக்கையை நான் சரிபார்க்க ஏதேனும் கால அவகாசம் உள்ளதா?
பரிவர்த்தனை ID உருவாக்கப்பட்ட 7நாட்களுக்குள் கோரிக்கையை நீங்கள் சரிபார்க்க வேண்டும், அதன் பிறகு அது செல்லாது.
6. ஒரு ERI சமர்ப்பித்த சேவை கோரிக்கையை சரிபார்க்க எனக்கு என்ன விவரங்கள் தேவை?
உங்கள் நிரந்தர கணக்கு எண் (PAN) மற்றும் சமர்ப்பிக்கப்பட்ட வேண்டுகோளின் பரிவர்த்தனை அடையாளம் (ID) ஆகியவைத் தேவை.
சொற்களஞ்சியம்
|
சுருக்கக்குறிப்பு/சுருக்கக் குறியீடு |
விவரம்/முழு வடிவம் |
|
மதிப்பீட்டு ஆண்டு (AY) |
மதிப்பீட்டு ஆண்டு |
|
ITD |
வருமான வரித் துறை |
|
ITR |
வருமான வரி அறிக்கை |
|
இந்துக் கூட்டுக் குடும்பம் [HUF] |
இந்து கூட்டுக் குடும்பம் |
|
மூலத்தில் வரி பிடித்தல் கணக்கு எண் (TAN) |
TDS & TCS கணக்கு எண் |
|
ERI |
மின்னணு - அறிக்கை இடையீட்டாளர் |
மெட்டாடேட்டா
வாடிக்கையாளர்களை சேர்க்கவும்
வகை 1 ERIகள்
வகை 2 ERIகள்
சேவை கோரிக்கையைச் சரிபார்க்கவும்
மின்னணு தாக்கல் இடையீட்டாளர்கள் (ERI-கள்)
மதிப்பீட்டுக் கேள்விகள்
(குறிப்பு: சரியான பதில் தடித்த எழுத்துக்களில் உள்ளது.)
Q1. வாடிக்கையாளர்களை (ERIக்கள் மூலம்) சேர்ப்பதற்கான கோரிக்கை செயலில் உள்ள காலம் என்ன?
a) 24 மணிநேரங்கள்
b) 5 நாட்கள்
c) 7 நாட்கள்
d) 30 நாட்கள்
பதில் – c) 7 நாட்கள்
Q1. ஒரு ERI பணத்தைத் திரும்பப்பெறும் மறு வெளியீடு கோரிக்கையை சமர்ப்பித்திருந்தால், வரி செலுத்துவோர் கோரிக்கையை சரிபார்க்க முடியுமா? (நீங்கள் ஒன்றுக்கு மேற்பட்ட விருப்பங்களைத் தேர்வு செய்யலாம்)
a) கோரிக்கையை சமர்ப்பிக்கும் போது உள்ளிடப்பட்ட அலைபேசி எண்ணில் உள்ள OTP
b) மின்னணு-தாக்கல் இணைய முகப்பில் பதிவு செய்யப்பட்ட அலைபேசி எண்ணில் OTP
c) EVC
d) ஆதாரில் பதிவுசெய்யப்பட்ட அலைபேசி எண்ணில் OTP
பதில் – b) மின்னணு-தாக்கல் இணைய முகப்பில் பதிவு செய்யப்பட்ட அலைபேசி எண்ணில் OTP & d) ஆதாருடன் பதிவு செய்யப்பட்ட அலைபேசி எண்ணில் OTP