1. மேலோட்டப்பார்வை
மின்னணு-தாக்கல் இணைய முகப்பு இடுகை உள்நுழைவில் பதிவுசெய்யப்பட்ட அனைத்து பயனர்களுக்கும் இணக்க இணைய முகப்பு மற்றும் அறிக்கையிடல் இணைய முகப்பு சேவை கிடைக்கும். உங்கள் மின்னணு-தாக்கல் கணக்கிலிருந்து ஒற்றைக் கையெழுத்து உள்நுழைவு (SSO) மூலம் இணக்க இணைய முகப்புக்கும் அறிக்கையிடல் இணைய முகப்புக்கும் உங்களை அழைத்துச் செல்கிறது. இந்தச் சேவை உங்களுக்குப் பின்வருவனவற்றை இயலச்செய்கிறது:
- இணக்க இணைய முகப்புக்கு நேரடியாகச் சென்று வருடாந்திர தகவல் அறிக்கை, மின்னணு-பிரச்சாரங்கள், மின்னணு-சரிபார்ப்பு, மின்னணு-நடைமுறைகள் மற்றும் DIN அங்கீகாரம் போன்ற சேவைகளை அணுகலாம்.
- இணக்க இணைய முகப்பில் உங்களுக்குத் தொடர்புடைய பகுதிக்குச் செல்வதற்கு முன், செயலில் உள்ள மின்னணு-பிரச்சாரங்கள் மற்றும் மின்னணு-சரிபார்ப்புகளின் எண்ணிக்கையைக் காண
- உங்கள் மின்னணு-தாக்கல் கணக்கிலிருந்து அறிக்கையிடல் இணைய முகப்பிற்கு நேரடியாகச் செல்ல
2. இந்தச் சேவையைப் பெறுவதற்கான முன்நிபந்தனைகள்
- மின்னணு-தாக்கல் முகப்பில் பதிவு செய்யப்பட்ட பயனரின், சரியான பயனர் ID மற்றும் கடவுச்சொல்
- செயலில் உள்ள மின்னணு-பிரச்சாரங்கள் அல்லது மின்னணு-சரிபார்ப்புகள் (இணக்க இணைய முகப்பிற்காக)
3. படிப்படியான வழிகாட்டி
| இணக்க இணைய முகப்பிற்கு (வருடாந்திர தகவல் அறிக்கை) | பிரிவு 3.1ஐ பார்க்கவும் |
| இணக்க இணைய முகப்பிற்கு (மின்னணு-பிரச்சாரம், மின்னணு-சரிபார்ப்பு, மின்னணு-நடைமுறைகள் அல்லது DIN அங்கீகாரம்) | பிரிவு 3.2ஐ பார்க்கவும் |
| அறிக்கையிடல் இணைய முகப்புக்காக | பிரிவு 3.3ஐ பார்க்கவும் |
3.1 இணக்க இணைய முகப்பு (வருடாந்திர தகவல் அறிக்கை)
வரி செலுத்துவோரின் நிதி பரிவர்த்தனைகள் (செலுத்தப்பட்ட வரி, செலுத்த வேண்டிய மற்றும் திரும்பப் பெற வேண்டிய உபரி வரி, நிலுவையில் உள்ள மற்றும் நிறைவு செய்யப்பட்ட நடவடிக்கைகள் உள்ளிட்ட, பிற தகவல்கள்) பற்றிய விரிவான தகவல்களை வருடாந்திர தகவல் அறிக்கை வழங்குகிறது
படி1: உங்கள் பயனர் ID மற்றும் கடவுச்சொல்லைப் பயன்படுத்தி மின்னணு-தாக்கல் இணைய முகப்பில் உள்நுழையவும்.
படி 2: உங்கள் முகப்புப் பலகையில், நிலுவையில் உள்ள செயல்கள் > ஆண்டு தகவல் அறிக்கை என்பதைக் கிளிக் செய்யவும்.
குறிப்பு: ஒரு தனி சேவையாக நிலுவையில் உள்ள செயல்களில் இருந்து வருடாந்திர தகவல் அறிக்கையை அணுகலாம். இருப்பினும், இது இணக்க இணைய முகப்பிலும் அணுகப்படக் கூடியது.
படி 3: நீங்கள் இணக்க இணைய முகப்புக்கு அழைத்துச் செல்லப்படுவீர்கள் என்று ஒரு செய்தி காட்டப்படும். தொடரவும் என்பதைக் கிளிக் செய்யவும்.நீங்கள் இணக்க இணைய முகப்புக்கு அழைத்துச் செல்லப்படுவீர்கள். உங்கள் வருடாந்திர தகவல் அறிக்கையை நீங்கள் அங்கே அணுகலாம்.
3.2 இணக்க இணைய முகப்பு (மின்னணு-பிரச்சாரம், மின்னணு-சரிப்பார்த்தல், மின்னணு-நடவடிக்கைகள், DIN அங்கீகாரம்)
செயலில் உள்ள மின்னணு-பிரச்சாரங்கள், துறையிலிருந்து மின்னணு-சரிபார்ப்புகள் மற்றும் மின்னணு-நடைமுறைகள் மற்றும் DIN அங்கீகாரம் பற்றிய அறிவிப்புகள் ஆகியவற்றிற்கு பதிலளிக்க வரி செலுத்துவோர் இணக்க இணைய முகப்புக்குச் செல்ல வேண்டி இருக்கலாம்.
படி1: உங்கள் பயனர் ID மற்றும் கடவுச்சொல்லைப் பயன்படுத்தி மின்னணு-தாக்கல் இணைய முகப்பில் உள்நுழையவும்.
படி 2: உங்கள் முகப்புப் பலகையில், நிலுவையில் உள்ள செயல்கள்> இணக்க இணைய முகப்பு என்பதைக் கிளிக் செய்யவும்.
படி 3: மின்னணு-பிரச்சாரம், மின்னணு-சரிபார்ப்பு, மின்னணு-நடவடிக்கைகள் அல்லது DIN அங்கீகாரம் ஆகியவற்றில் ஒன்றை தேர்ந்தெடுக்கவும். மேலும் தொடர கீழே உள்ள அட்டவணையைப் பார்க்கவும்:
| மின்னணுப் பிரசாரம் | படி 3a ஐப் பின்பற்றவும் |
| மின்னணு-சரிபார்ப்பு | படி 3b ஐப் பின்பற்றவும் |
| மின்னணு-நடவடிக்கைகள் | படி 3c ஐப் பின்பற்றவும் |
| ஆவண அடையாள எண் (DIN) அங்கீகாரம் | படி 3d ஐப் பின்பற்றவும் |
படி 3a: நீங்கள் மின்னணு-பிரச்சாரத்தைத் தேர்ந்தெடுத்தால், அடுத்த பக்கத்தில் குறிப்பிடத்தக்க பரிவர்த்தனைகள், வருமானவரிப் படிவம் தாக்கல் செய்யப்படாதது மற்றும் உயர் மதிப்பு பரிவர்த்தனைகள் ஆகிய செயலில் உள்ள பிரச்சாரங்களின் எண்ணிக்கையை உங்களுக்குக் காட்டும். தொடரவும் என்பதைக் கிளிக் செய்யவும். உங்கள் தரப்பில் மேற்கொண்டு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகளுக்கு நீங்கள் இணக்க இணைய முகப்புக்கு அழைத்துச் செல்லப்படுவீர்கள்.
படி 3b: நீங்கள் மின்னணு-சரிபார்ப்பைத் தேர்ந்தெடுத்தால், அடுத்த பக்கத்தில் செயலில் உள்ள உங்களது மின்னணு சரிபார்ப்பு எண்ணிக்கையை உங்களுக்குக் காட்டும். தொடரவும் என்பதைக் கிளிக் செய்யவும். உங்கள் தரப்பில் மேற்கொண்டு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகளுக்கு நீங்கள் இணக்க இணைய முகப்புக்கு அழைத்துச் செல்லப்படுவீர்கள்.
படி 3c: நீங்கள் மின்னணு-நடவடிக்கைகள் என்பதைத் தேர்ந்தெடுத்தால், நீங்கள் மின்னணு-நடவடிக்கைகள் பக்கத்திற்கு அழைத்துச் செல்லப்படுவீர்கள், அங்கு நீங்கள் தொடரவும் என்பதைக் கிளிக் செய்ய வேண்டும். உங்கள் தரப்பில் மேற்கொண்டு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகளுக்கு நீங்கள் இணக்க இணைய முகப்புக்கு அழைத்துச் செல்லப்படுவீர்கள்.
படி 3d: நீங்கள் ஆவண அடையாள எண் (DIN) அங்கீகாரத்தைத் தேர்ந்தெடுத்தால், நீங்கள் DIN அங்கீகாரப் பக்கத்திற்கு அழைத்துச் செல்லப்படுவீர்கள், அங்கு நீங்கள் தொடரவும் என்பதைக் கிளிக் செய்ய வேண்டும். மேற்கொண்டு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகளுக்காக நீங்கள் இணக்க இணைய முகப்புக்கு அழைத்துச் செல்லப்படுவீர்கள்.
3.3 அறிக்கையிடல் இணைய முகப்பு
அறிக்கையிடல் இணைய முகப்பு வருமானவரித் துறைக்கு குறிப்பிட்ட அறிக்கைகளை வழங்க அறிக்கையிடல் நிறுவனங்களை இயலச்செய்கிறது, இது அறிக்கையிடல் இணைய முகப்பை அணுகுவதன் மூலம் செய்யப்படலாம்.
படி 1: உங்கள் சரியான பயனர் ID மற்றும் கடவுச்சொல்லை பயன்படுத்தி மின்னணு-தாக்கல் இணைய முகப்பில் உள்நுழையவும்.
படி 2: உங்கள் முகப்புப் பலகையில், நிலுவையில் உள்ள செயல்கள்>அறிக்கையிடல் இணைய முகப்பு என்பதைக் கிளிக் செய்யவும்.
படி 3: நீங்கள் அறிக்கையிடல் இணைய முகப்பிற்கு அழைத்துச் செல்லப்படுவீர்கள் என்று தெரிவிக்கும் ஒரு செய்தி காண்பிக்கப்படும். தொடரவும் என்பதைக் கிளிக் செய்யவும். உங்கள் தரப்பில் மேற்கொண்டு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகளுக்கு நீங்கள் அறிக்கையிடல் இணைய முகப்பிற்கு இட்டுச் செல்லப்படுவீர்கள்