படிவம் 104 & 106 பயனர் கையேடு
1. மேலோட்டப்பார்வை
சில வகையான அமைப்புகள், தங்களுடைய செயல்பாடுகளைத் தொடங்குவதற்கு முன்பாக அல்லது குறிப்பிட்ட வரி விலக்குகள் அல்லது சலுகைகளைக் கோருவதற்கு முன்பாக, தற்காலிகப் பதிவு அல்லது அங்கீகாரத்தைப் பெற வேண்டும் என்று வருமான வரிச் சட்டம் கட்டாயமாக்குகிறது. இந்தப் பதிவு, விண்ணப்பதாரரின் அடிப்படை விவரங்களை வருமான வரித்துறை முன்கூட்டியே சரிபார்க்க உதவுகிறது; மேலும், தகுதியுள்ள அமைப்புகள் மட்டுமே எதிர்காலத்தில் இந்தச் சலுகைகளைக் கோருவதை இது உறுதி செய்கிறது.
இந்தத் தற்காலிகப் பதிவு அல்லது அங்கீகாரத்தைப் பெறுவதற்கு, விண்ணப்பதாரர்கள் மின்னணு-தாக்கல் இணைய முகப்பில் படிவம் 104-ஐ ஆன்லைனில் தாக்கல் செய்ய வேண்டும். படிவம் வெற்றிகரமாகச் சமர்ப்பிக்கப்பட்ட பிறகு, வருமான வரித்துறை படிவம் 106-இல் ஓர் ஆணையை, 16 இலக்க தனித்துவமான பதிவு எண்களுடன் (URN) சேர்த்து வழங்கும். இந்த URN எண், தற்காலிகப் பதிவு அல்லது அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது என்பதை உறுதிப்படுத்துகிறது.
மேலும், விண்ணப்பதாரர் படிவம் 104-ஐத் தாக்கல் செய்யும் போது ஏதேனும் தவறு செய்திருந்தால், தாக்கல் செய்த தேதியிலிருந்து 7 நாட்களுக்குள் அந்த விண்ணப்பத்தைத் திரும்பப் பெற்றுக் கொள்ளலாம்.
2. இந்தச் சேவையைப் பெறுவதற்கான முன்தேவைகள்
• நீங்கள் மின்னணு-தாக்கல் இணைய முகப்பில் பதிவுசெய்யப்பட்ட பயனராக இருக்க வேண்டும்
• வரி செலுத்துவோரின் PAN "செயலில்" இருக்க வேண்டும்
• DSC வாயிலாகப் படிவத்தைச் சரிபார்க்க, உங்களிடம் ஒரு செல்லுபடியாகும் DSC இருக்க வேண்டும்; மேலும், அது மின்னணு-தாக்கல் இணைய முகப்பில் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும் மற்றும் காலாவதியாகாமல் இருக்க வேண்டும்.
3. படிவத்தைப் பற்றி
3.1 நோக்கம்
பிரிவு 332 அல்லது பிரிவு 354-இன் கீழான தற்காலிகப் பதிவு அல்லது ஒப்புதல் ஆனது, ஒரு விண்ணப்பதாரர் குறிப்பிட்ட வரி தொடர்பான பலன்களைப் பெறுவதற்கு முன்னதாக, வருமான வரித் துறையால் முறையாக அங்கீகரிக்கப்படுவதை உறுதி செய்கிறது.
இத்தகைய பதிவு அல்லது ஒப்புதலை மின்னணு-தாக்கல் இணைய முகப்பில் படிவம் 104-ஐத் தாக்கல் செய்வதன் மூலம் பெறலாம். விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட்டவுடன், வருமான வரித்துறை படிவம் 106-ஐ வழங்கும். இது உங்களுடைய பதிவு/ஒப்புதலை உறுதிப்படுத்துவதுடன், ஒரு தனித்துவமான பதிவு எண்ணையும் (URN) வழங்கும்.
3.2 இதை யார் பயன்படுத்தலாம்?
வருமான வரிச் சட்டம், 2025-இன் பிரிவு 332 அல்லது 354-இன் கீழ் தற்காலிகப் பதிவு அல்லது ஒப்புதலைப் பெறுவதற்காக, தனிநபர் பயனர்களைத் தவிர, மின்னணு-தாக்கல் இணைய முகப்பில் பதிவுசெய்யப்பட்ட மற்ற அனைத்துப் பயனர்களும் தங்களுக்குத் தேவையான விவரங்களைப் படிவம் 104-இல் சமர்ப்பிக்கலாம்.
3.3 படிவம் ஒரு பார்வை
படிவம் 104 நான்கு பலகைகளைக் கொண்டுள்ளது:
1. பகுதி A: விண்ணப்பதாரரின் விவரங்கள்
2. பகுதி B: இதர தகவல்கள்
3. இணைப்புகள்
4. உறுதிமொழி
4. படிநிலை வழிகாட்டி
பகுதி I: படிவம் 104-ஐத் தாக்கல் செய்தல்
படிநிலை 1: உங்கள் பயனர் ID மற்றும் கடவுச்சொல்லைப் பயன்படுத்தி மின்னணு-தாக்கல் இணைய முகப்பில் உள்நுழையவும்.
படிநிலை 2: பயனர் ID (PAN) மற்றும் கடவுச்சொல்லை உள்ளிடவும்.
படிநிலை 3: மின்னணுத் தாக்கல் > வருமான வரிப் படிவங்கள் > வருமான வரிப் படிவங்களைத் தாக்கல் செய்தல் பகுதிக்கு செல்லவும்.
படிநிலை 4: வருமான வரிச் சட்டம் 2025 தாவலின் கீழ் உள்ள படிவங்களைத் தேர்ந்தெடுத்து, படிவம் 10A என்பதைத் தேடி, பின்னர் இப்போதே தாக்கல் செய்யவும் பட்டனைக் கிளிக் செய்யவும்.
படிநிலை 5: பொருத்தமான வரி ஆண்டைத் (T.Y) தேர்ந்தெடுத்து தொடரவும் என்பதைக் கிளிக் செய்யவும்.
படிநிலை 6. தொடங்குவோம் என்பதைக் கிளிக் செய்யவும்.
படிநிலை 7 : தொடங்குவோம் பட்டனைக் கிளிக் செய்த பிறகு, பயனர் குறிப்புகள் பகுதிக்கு அழைத்துச் செல்லப்படுவார், அங்குத் தொடர்வதற்கு சரி பட்டனைக் கிளிக் செய்யவும்.
படிநிலை 8: சரி என்பதைக் கிளிக் செய்த பிறகு, பயனர் பலகையைத் திரைக்கு அழைத்துச் செல்லப்படுவார்; அங்கு 1-வது பலகையான ‘பகுதி A: விண்ணப்பதாரரின் விவரங்கள்’ என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
படிநிலை 9: விவரங்களை உறுதிசெய்து சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.
குறிப்பு: முகவரி உட்பட எனது சுயவிவரம் பிரிவின் கீழ் உள்ள அனைத்து கட்டாய விவரங்களும் பூர்த்திச் செய்யப்பட்டுள்ளதை உறுதிப்படுத்தவும். எனது சுயவிவரம் என்ற ஹைப்பர்லிங்கைக் கிளிக் செய்வதன் மூலம் உங்கள் தொடர்பு மற்றும் முகவரி விவரங்களை நீங்கள் புதுப்பிக்கலாம்.
படிநிலை 10: முதல் பலகையைச் சேமித்த பிறகு, அதன் நிலை பூர்த்திச் செய்யப்பட்டது எனக் காண்பிக்கப்படும்; அதன் பின்னர், 2-வது பலகையான "பகுதி B: மற்ற தகவல்கள்" என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
படிநிலை 11: மற்ற தகவல்களை உறுதிசெய்து சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.
குறிப்புகள்: உங்கள் விண்ணப்ப வகையின் அடிப்படையில், புலம் எண் 6: விண்ணப்பம் இதற்காக என்பதில் பொருத்தமான பிரிவு குறியீட்டைத் தேர்ந்தெடுக்கவும்.
|
பிரிவு குறியீடு |
விளக்கம் |
|
01 |
பிரிவு 332(3)-இன் கீழான தற்காலிகப் பதிவு (செயல்பாடுகள் தொடங்கப்படாதவை) |
|
02 |
பிரிவு 133(1)(b)(ii)-இன் நோக்கத்திற்காக, பிரிவு 354(2)-இன் கீழான தற்காலிக அங்கீகாரம் (செயல்பாடுகள் தொடங்கப்படாதவை) |
|
03 |
பிரிவுகள் 332(3) மற்றும் 354(2)-இன் கீழான தற்காலிகப் பதிவு மற்றும் அங்கீகாரம் ஆகிய இரண்டும் |
- நீங்கள் ஏற்கனவே உங்கள் வணிகச் செயல்பாடுகளைத் தொடங்கியிருந்தால், இந்தவொரு படிவம் 104 உங்களுக்குப் பொருந்தாது. பதிவு அல்லது அங்கீகாரத்தைப் பெறுவதற்கு, படிவம் 105-ஐத் தாக்கல் செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்
- பிரிவு 332(2)(b)-இன் படி, இந்த அறக்கட்டளை திரும்பப் பெறத்தக்கதாக இருந்தால், உங்களால் இந்த விண்ணப்பத்தைத் தாக்கல் செய்ய முடியாது.
- கீழே குறிப்பிடப்பட்டுள்ளவாறு, புலம் எண் 11-இல் பொருத்தமான தன்மையைத் தேர்ந்தெடுக்கவும்.
|
குறியீடு |
விளக்கம் |
|
01 |
பொது அறக்கட்டளை |
|
02 |
சங்கங்கள் பதிவுச் சட்டம், 1860-ன் கீழ் அல்லது இந்தியாவில் அமலில் உள்ள எந்தவொரு சட்டத்தின் கீழும் பதிவு செய்யப்பட்ட ஒரு சங்கம் |
|
03 |
நிறுவனங்கள் சட்டம், 2013-இன் பிரிவு 8-இன் கீழ் பதிவு செய்யப்பட்ட ஒரு நிறுவனம் அல்லது நிறுவனங்கள் சட்டம், 1956-இன் பிரிவு 25-இன் கீழ் பதிவு செய்யப்பட்டு, நிறுவனங்கள் சட்டம், 2013-இன் பிரிவு 465(2)(g)-இன் தொடர்ச்சியாகப் பதிவு செய்யப்பட்டதாகக் கருதப்படும் நிறுவனங்கள். |
|
04 |
சட்டத்தினால் நிறுவப்பட்ட ஒரு பல்கலைக்கழகம் அல்லது அதனுடன் இணைக்கப்பட்ட அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட வேறு ஏதேனும் ஒரு கல்வி நிறுவனம் |
|
05 |
முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ அரசால் அல்லது உள்ளூர் அதிகார அமைப்பினால் நிதியுதவி அளிக்கப்படும் ஒரு நிறுவனம் |
|
06 |
அட்டவணை III [அட்டவணை: வரிசை எண் 27 முதல் 29 வரை மற்றும் 36] மற்றும் அட்டவணை VII [அட்டவணை: வரிசை எண் 10 முதல் 19 வரை மற்றும் 42]-இல் குறிப்பிடப்பட்டுள்ள எந்தவொரு நபர் |
|
07 |
பிரிவு 332(1)(g)-இன் கீழ் வாரியத்தால் அறிவிக்கப்பட்ட எந்தவொரு நபர் |
|
08 |
அட்டவணை VII [அட்டவணை: வரிசை எண் 1]-இல் குறிப்பிடப்பட்டுள்ள ஒரு பதிவுசெய்யப்பட்ட இலாப நோக்கற்ற அமைப்பு அல்லது நபர், அதாவது ஒன்றியத்தின் (மத்திய அரசின்) ஆயுதப் படைகளால் நிறுவப்பட்ட எந்தவொரு படைப்பிரிவு நிதி அல்லது பொது அல்லாத நிதி |
|
08A |
மற்றவை |
|
09 |
குறிப்பிடப்பட்ட முதலீட்டாளர் பாதுகாப்பு நிதி - இந்தியாவில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட பங்குச் சந்தைகளால் கூட்டாகவோ அல்லது தனித்தனியாகவோ நிறுவப்பட்ட எந்தவொரு முதலீட்டாளர் பாதுகாப்பு நிதி |
|
10 |
குறிப்பிடப்பட்ட முதலீட்டாளர் பாதுகாப்பு நிதி - இந்தியாவில் உள்ள சரக்கு பரிவர்த்தனை அமைப்புகளால் கூட்டாகவோ அல்லது தனித்தனியாகவோ நிறுவப்பட்ட எந்தவொரு முதலீட்டாளர் பாதுகாப்பு நிதி |
|
11 |
குறிப்பிடப்பட்ட முதலீட்டாளர் பாதுகாப்பு நிதி - வைப்புத்தொகை அமைப்பால் விதிகளின்படி நிறுவப்பட்ட எந்தவொரு முதலீட்டாளர் பாதுகாப்பு நிதி. |
|
12 |
குறிப்பிடப்பட்ட அமைப்பு அல்லது அதிகாரம் அல்லது வாரியம் அல்லது அறக்கட்டளை அல்லது ஆணையம் - அட்டவணை VII (அட்டவணை: வ. எண் 42)-இன் கீழ் உள்ளடக்கப்பட்டுள்ளவை தவிர்த்து, (எந்தப் பெயரால் அழைக்கப்பட்டாலும்) ஒரு அமைப்பு, அதிகாரம், வாரியம், அறக்கட்டளை அல்லது ஆணையம் அல்லது அதன் ஒரு பிரிவு |
|
13 |
குறிப்பிடப்பட்ட அமைப்பு அல்லது அதிகாரம் அல்லது வாரியம் அல்லது அறக்கட்டளை அல்லது ஆணையம் - மத்தியச் சட்டம் அல்லது மாநிலச் சட்டத்தின் மூலமாகவோ அல்லது அதன் கீழோ, பின்வரும் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நோக்கங்களுக்காக நிறுவப்பட்ட அல்லது உருவாக்கப்பட்ட, நிறுவனமாக இல்லாத எந்தவொரு அமைப்பு, அதிகாரம், வாரியம், அறக்கட்டளை அல்லது ஆணையம் — (a) வீட்டுவசதித் தேவைகளைக் கையாளுதல் மற்றும் பூர்த்தி செய்தல்; (b) மாநகரங்கள், நகரங்கள் மற்றும் கிராமங்களின் திட்டமிடல், மேம்பாடு அல்லது சீரமைப்பு; (c) பொதுமக்களின் நலனுக்காக ஏதேனும் ஒரு செயல்பாட்டைக் கட்டுப்படுத்துதல், அல்லது கட்டுப்படுத்துதல் மற்றும் மேம்படுத்துதல்; அல்லது (d) அது உருவாக்கப்ப்பட்ட நோக்கத்திலிருந்து எழும், பொதுமக்களின் நலன் சார்ந்த எந்தவொரு விஷயத்தையும் கட்டுப்படுத்துதல். |
|
14 |
குறிப்பிடப்பட்ட பல்கலைக்கழகம், மருத்துவமனை அல்லது பிற நிறுவனம் - அரசாங்கத்தால் முழுமையாகவோ அல்லது கணிசமான அளவிலோ நிதியுதவி பெறப்படும் எந்தவொரு பல்கலைக்கழகம் அல்லது பிற கல்வி நிறுவனம். |
|
15 |
குறிப்பிடப்பட்ட பல்கலைக்கழகம், மருத்துவகுறிப்பிடப்பட்ட பல்கலைக்கழகம், மருத்துவமனை அல்லது பிற நிறுவனம் - அரசாங்கத்தால் முழுமையாகவோ அல்லது கணிசமான அளவிலோ நிதியுதவி பெறப்படும் எந்தவொரு மருத்துவமனை அல்லது பிற நிறுவனம் |
|
16 |
குறிப்பிடப்பட்ட பல்கலைக்கழகம், மருத்துவமனை அல்லது பிற நிறுவனம் - மொத்த வருடாந்திர ரசீதுகள் ₹ 5,00,00,000-க்கு மிகாமல் இருக்கும் எந்தவொரு பல்கலைக்கழகம் அல்லது பிற கல்வி நிறுவனம் |
|
17 |
குறிப்பிடப்பட்ட பல்கலைக்கழகம் மருத்துவமனை அல்லது பிற நிறுவனங்களின் மொத்த வருடாந்திர ரசீதுகள் ₹ 5,00,00,000-க்கு மிகாமல் இருக்கும் எந்தவொரு மருத்துவமனை அல்லது பிற நிறுவனம் |

படிநிலை 11: 2-வது பலகையைச் சேமித்த பிறகு, அந்த பலகையின் நிலை நிறைவடைந்தது எனக் காட்டப்படும். பின்னர் 3-வது பலகையான “இணைப்புகள்” என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
படிநிலை 12: தொடர்புடைய ஆவணங்களை இணைத்து பின்னர் சேமி பட்டனைக் கிளிக் செய்யவும்.

படிநிலை 13: 3-வது பலகையைச் சேமித்த பிறகு, அந்தப் பலகையின் நிலை நிறைவடைந்தது எனத் திரையில் தோன்றும், பின்னர் 4-வது பலகையான உறுதிமொழியைத் தேர்ந்தெடுக்கவும்.
படிநிலை 14: உறுதிமொழிப் படிவத்தை உறுதிசெய்து, பின்னர் சேமி பட்னைக் கிளிக் செய்யவும்.
படிநிலை 15: 4-வது பலகையைச் சேமித்த பிறகு, அந்தப் பலகையின் நிலை நிறைவடைந்தது எனத் திரையில் தோன்றும் பின்னர் முன்னோட்டம் பட்டனைக் கிளிக் செய்யவும்.
படிநிலை 16: முன்னோட்டப் பக்கத்தில் விவரங்களைச் சரிபார்த்துவிட்டு மின்னணு சரிபார்ப்பு தொடரவும் பட்டனைக் கிளிக் செய்யவும்.


படிநிலை 17: மின்னணு சரிபார்ப்பைத் தொடரவும் பட்டனைக் கிளிக் செய்த பிறகு, நீங்கள் மின்னணு சரிபார்ப்பைத் தொடர விரும்புகிறீர்களா என்பதைக் கேட்கும் ஒரு உறுதிப்படுத்தல் பாப்-அப் திரையில் தோன்றும். அதில் ஆம் என்பதைக் கிளிக் செய்யவும்.
படிநிலை 18: ஆம் பட்டனைக் கிளிக் செய்ததும், நீங்கள் மின்னணு சரிபார்ப்புப் பக்கத்திற்கு அழைத்துச் செல்லப்படுவீர்கள். அங்கு EVC/DSC ஆகியவற்றில் பொருந்தக்கூடிய ஒன்றைப் பயன்படுத்திப் படிவம் 104-ஐச் சரிபார்க்கலாம்.
குறிப்பு: மேலும் அறிய மின்னணு சரிபார்ப்பு செய்வது எப்படி என்ற பயனர் கையேட்டைப் பார்க்கவும்.
வெற்றிகரமான மின்னணு சரிபார்ப்புக்கு பிறகு, பரிவர்த்தனை ID மற்றும் ஒப்புகை ரசீது எண் ஆகியவற்றுடன் கூடிய ஒரு வெற்றிகரமான செய்தி திரையில் தோன்றும். எதிர்காலக் குறிப்பிற்காக அந்தப் பரிவர்த்தனை ID மற்றும் ஒப்புகை ரசீது எண்ணைக் குறித்து வைத்துக் கொள்ளவும். மேலும், மின்னணு-தாக்கல் இணைய முகப்பில் பதிவுசெய்யப்பட்ட மின்னஞ்சல் ID(கள்) மற்றும் அலைபேசி எண்(களுக்கு) உறுதிப்படுத்தல் செய்தியும் அனுப்படும்
படிநிலை -19: தாக்கல் செய்யப்பட்ட படிவங்களைப் பார்க்கும் திரையிலிருந்து நீங்கள் தாக்கல் செய்த படிவம் 104, ARN மற்றும் இணைப்புகளைப் பதிவிறக்கம் செய்யலாம். இந்தத் திரைக்குச் செல்ல, மின்னணு தாக்கல் > வருமான வரிப் படிவங்கள் > புலப்படிவத்தைக் காண்க என்ற வரிசைப்படி செல்லவும்.
படிநிலை-20: வருமான வரிச் சட்டம் 2025-ன் படியான படிவங்கள் என்ற தாவலைத் தேர்ந்தெடுத்து, படிவம் 104-ஐத் தேடி பின்னர் அனைத்தையும் பார்க்கவும் பட்டனைக் கிளிக் செய்யவும்.
படிநிலை-21: முந்தைய படிநிலை-19-ல் உள்ள அனைத்தையும் பார் பட்டனைக் கிளிக் செய்ததும், கீழே குறிப்பிட்டுள்ளவாறு தாக்கல் செய்யப்பட்ட படிவங்களைப் பார்க்கும் திரைக்கு நீங்கள் அழைத்துச் செல்லப்படுவீர்கள். அங்கு நீங்கள் தாக்கல் செய்யப்பட்ட படிவம், ரசீது மற்றும் இணைப்புகளைப் பதிவிறக்கம் செய்யலாம்.
பகுதி-II: படிவம் 104-ஐத் திரும்பப் பெறுவதற்கான நடைமுறை
படிவம் 104-ஐத் திரும்பப் பெறும் வசதியானது படிவம் 104 தாக்கல் செய்யப்பட்ட தேதியிலிருந்து 7 நாட்களுக்கு மட்டுமே கிடைக்கும் என்பதைத் தயவுசெய்து கவனிக்கவும். 7 நாட்களுக்குப் பிறகு, உங்களால் படிவம் 104-ஐத் திரும்பப் பெற முடியாது.
படிநிலை-1: மேலே பகுதி A-வில் குறிப்பிட்டுள்ள நடைமுறைகளைப் (19 முதல் 21 வரை) பின்பற்றி தாக்கல் செய்யப்பட்ட படிவங்களைப் பார்க்கும் திரைக்குச் சென்று கூடுதல் செயல்கள் பட்டனைக் கிளிக் செய்யவும்.
படிநிலை-2: கூடுதல் செயல்கள் பட்டனைக் கிளிக் செய்த பிறகு, “படிவத்தை திரும்பப் பெறவும் 104” பட்டன் காட்டப்படும். அந்தப் பட்டனைக் கிளிக் செய்யவும்.
படிநிலை-3: படிவம் 104-ஐத் திரும்பப் பெறு பட்டனைக் கிளிக் செய்த பிறகு நீங்கள் அதைத் திரும்பப் பெறுவதற்கான காரணத்தைக் குறிப்பிட்டு தொடரவும் பட்டனைக் கிளிக் செய்ய வேண்டும்.
படிநிலை-4: தொடரவும் பட்டனைக் கிளிக் செய்த பிறகு பரிவர்த்தனை ID-யுடன் கூடிய வெற்றிகரமான செய்தி திரையில் தோன்றும். எதிர்காலக் குறிப்பிற்காக அந்தப் பரிவர்த்தனை ID-யைக் குறித்து வைத்துக் கொள்ளவும். பின்னர், தாக்கல் செய்யப்பட்ட படிவங்களைப் பார்க்கத் திரும்புக பட்டனைக் கிளிக் செய்யவும்.
படிநிலை-5: தாக்கல் செய்யப்பட்ட படிவங்களைப் பார்க்கத் திரும்பவும் பட்டனைக் கிளிக் செய்த பிறகு, நீங்கள் தாக்கல் செய்யப்பட்ட படிவங்களைப் பார்க்கும் திரைக்கு அழைத்துச் செல்லப்படுவீர்கள். அங்கு, படிவத்தின் வாழ்க்கைச் சுழற்சி மற்றும் நிலை ஆகியவை படிவம் திரும்பப் பெறப்பட்டது எனப் புதுப்பிக்கப்படும். திரும்பப் பெற்றதற்கான காரணத்தை நீங்கள் சரிபார்க்க விரும்பினால், 'திரும்பப் பெற்றதற்கான காரணம் என்ற ஹைப்பர்லிங்கைக் கிளிக் செய்யவும்.
பகுதி-III: படிவம் 106-ஐப் பதிவிறக்கம் செய்தல்
படிவம் 104 தாக்கல் செய்யப்பட்ட தேதியிலிருந்து 7 நாட்களுக்குப் பிறகுதான் படிவம் 106 உருவாக்கப்படும் என்பதைத் தயவுசெய்து கவனிக்கவும்.
படிநிலை-1: மேலே பகுதி A-வில் குறிப்பிட்டுள்ள நடைமுறைகளைப் (19 முதல் 21 வரை) பின்பற்றி, தாக்கல் செய்யப்பட்ட படிவங்களைப் பார்க்கும் திரைக்குச் சென்று, கூடுதல் செயல்பாடுகள் என்ற பட்டனைக் கிளிக் செய்யவும்.
படிநிலை-2: கூடுதல் செயல்பாடுகள் பட்டனைக் கிளிக் செய்த பிறகு படிவம் 106-ஐப் பதிவிறக்கு என்ற பட்டன் தோன்றும். படிவம் 106-ஐப் பதிவிறக்க அந்தப் பட்டனைக் கிளிக் செய்யவும்.
பகுதி-IV: படிவம் 106-ஐத் திரும்ப ஒப்படைத்தல்
படிவம் 104 தாக்கல் செய்யப்பட்ட தேதியிலிருந்து 7 நாட்களுக்குப் பிறகுதான் படிவம் 106 உருவாக்கப்படும் என்பதைத் தயவுசெய்து கவனிக்கவும். எந்தவொரு வரி ஆண்டிலும் வருமான வரிக் கணக்கில் நீங்கள் எந்தப் பலன்களையும் கோரவில்லை என்றால் மட்டுமே இதனை நீங்கள் திரும்ப ஒப்படைக்க முடியும்.
படிநிலை-1: மேலே பகுதி A-வில் குறிப்பிட்டுள்ள நடைமுறைகளைப் (19 முதல் 21 வரை) பின்பற்றி, தாக்கல் செய்யப்பட்ட படிவங்களைப் பார்க்கும் திரைக்குச் சென்று கூடுதல் செயல்பாடுகள் என்ற பட்டனைக் கிளிக் செய்யவும்.
படிநிலை-2: கூடுதல் செயல்பாடுகள் பட்டனைக் கிளிக் செய்த பிறகு படிவம் 106-ஐத் திரும்ப ஒப்படைப்பதற்கான பிரிவு குறியீடு <> என்ற பட்டன் தோன்றும். படிவம் 106-ஐத் திரும்ப ஒப்படைக்கும் செயல்முறையைத் தொடர அந்தப் பட்டனைக் கிளிக் செய்யவும்.
படிநிலை-3: படிவம் 106-ஐத் திரும்ப ஒப்படைப்பதற்கான பிரிவு குறியீடு <>" என்பதைப் புதுக்கிய பிறகு நீங்கள் அதற்கான உறுதிமொழி மற்றும் திரும்ப ஒப்படைப்பதற்கான காரணத்தை அளித்து தொடரவும் பட்டனைக் கிளிக் செய்ய வேண்டும்.
படிநிலை-4: தொடரவும் என்பதைப் புதுக்கியவுடன் நீங்கள் மின் சரிபார்ப்பு பக்கத்திற்கு அழைத்துச் செல்லப்படுவீர்கள். அங்கு, உங்களுக்குப் பொருந்தக்கூடியவாறு EVC அல்லது DSC-ஐ பயன்படுத்திப் படிவம் 106-ஐ திரும்பப் ஒப்படைத்ததை மின்னணு - சரிபார்ப்பைச் செய்து கொள்ளலாம்.
குறிப்பு: மேலும் அறிய மின்னணு-சரிபார்ப்பு செய்வது எப்படி என்ற பயனர் கையேட்டைப் பார்க்கவும்.
7. தொடர்புடைய தலைப்புகள்
- உள்நுழையவும்
- முகப்புப் பலகை
- மின்னணு சரிபார்ப்பு செய்வது எப்படி
- EVC-ஐ உருவாக்கவும்
- அங்கீகரிக்கவும் / பிரதிநிதியாகப் பதிவு செய்யவும்
8. சொற்களஞ்சியம்
|
சுருக்கப்பெயர் / சுருக்கம் |
விளக்கம் / முழு வடிவம் |
|
DSC |
மின்னணு கையொப்பச் சான்றிதழ் |
|
EVC |
மின்னணு சரிபார்ப்புக் குறியீடு |
|
ARN |
ஒப்புகை ரசீது எண் |
|
TY |
வரி ஆண்டு |