படிவம் 174

 

1. மேலோட்டப்பார்வை

குறிப்பிட்ட நபரால் இந்தியாவில் கடன், பகிர்வு மூலதனம் அல்லது அலகு வடிவில் மேற்கொள்ளப்பட்ட முதலீட்டின் மூலம் கிடைக்கும் ஈவுத்தொகை, வட்டி, வருமான வரிச் சட்டம் 2025-இன் பிரிவு 92(2)(k)-இல் குறிப்பிடப்பட்டுள்ள ஏதேனும் ஒரு தொகை மற்றும் மூலதன ஆதாயங்கள் ஆகியவற்றிற்கு 100% வரி விலக்கு பெறுவதற்காக, ஒரு ஓய்வூதிய நிதி நிறுவனத்தால் படிவம் 174 தாக்கல் செய்யப்படுகிறது.

2. இந்தச் சேவையைப் பெறுவதற்கான முன்தேவைகள்

• வரி செலுத்துபவர் மின்னணு-தாக்கல் இணைய முகப்பில் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும்.
• வரி செலுத்துபவரிடம் மின்னனு-தாக்கல் 2.0 இணைய முகப்பிற்கான செல்லுபடியாகும் பயனர் பெயர் (PAN) மற்றும் கடவுச்சொல் இருக்க வேண்டும்.
• வரி செலுத்துபவரின் PAN நிலை, PAN தரவுத்தளத்தில் "செயலில் உள்ளது" என இருக்க வேண்டும்.
• DSC முறையின் மூலம் படிவத்தை சரிபார்க்க, வரி செலுத்துபவரிடம் செல்லுபடியாகும் DSC இருக்க வேண்டும். அது மின்னணு-தாக்கல் இணைய முகப்பில் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும் மற்றும் அதன் காலாவதி தேதி முடிவடையாமல் இருக்க வேண்டும்.

3. படிவம் குறித்து

3.1 நோக்கம்

இந்தியாவில் உள்ள கடன் பத்திரம், பகிர்வு மூலதனம் அல்லது அலகு ஆகியவற்றில் ஏதேனும் ஒரு குறிப்பிட்ட நபர் செய்த முதலீட்டின் வாயிலாகக் கிடைக்கும் ஈவுத்தொகை, வட்டி, வருமான வரிச் சட்டம் 2025-இன் பிரிவு 92(2)(k)-இல் குறிப்பிடப்பட்டுள்ள இதர தொகைகள் மற்றும் மூலதன ஆதாயங்கள் ஆகியவற்றிற்கு 100% வரிப் பிடித்தம் பெறுவதே இந்தப் படிவத்தைத் தாக்கல் செய்வதன் நோக்கமாகும்.

3.2 இதை யார் பயன்படுத்தலாம்?

வருமான வரிச் சட்டம், 2025-இன் அட்டவணை V [அட்டவணை: வரிசை எண் 7. குறிப்பு 5(a)(iii)(D)]-இன் படி, ஒரு ஓய்வூதிய நிதியத்தால் படிவம் 174 தாக்கல் செய்யப்படுகிறது. இந்த நோக்கத்திற்காக மத்திய அரசால் அறிவிக்கப்பட்டு, அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள நிபந்தனைகளைப் பூர்த்திச் செய்யும் மற்றும் பரிந்துரைக்கப்பட்ட இதர நிபந்தனைகளை நிறைவு செய்யும் ஒரு ஓய்வூதிய நிதி இதற்குத் தகுதியுடையதாகும்.

3.3 படிவம் ஒரு பார்வை

படிவம் 174-இல் நான்கு பலகைகள் உள்ளன:

  1. பகுதி A- ஓய்வூதிய நிதியத்தின் விவரங்கள்
  2. பகுதி B - சான்றளித்தல்
  3. இணைப்புகள்
  4. சரிபார்ப்பு
Data responsive

4. படிப்படியான வழிகாட்டி

படிநிலை 1: உங்கள் பயனர் ID மற்றும் கடவுச்சொல்லைப் பயன்படுத்தி மின்னணு-தாக்கல் இணையத்தில் உள்நுழையவும்

Data responsive

படிநிலை 2: பயனர் ID (PAN) மற்றும் கடவுச்சொல்லை உள்ளிடவும்.

Data responsive

படிநிலை 3: மின்னணு- தாக்கல் பகுதிக்குச் செல் > வருமானவரி படிவங்கள் > வருமானவரி படிவங்கள் தாக்கல் செய்யவும்.

Data responsive

படிநிலை 4: மூன்று தாவல்களில், வருமான வரிச்சட்டம் 2025-இன்படி உள்ள படிவங்கள் என்ற தாவலைத் தேர்ந்தெடுக்கவும். பின்னர் படிவம் 174 என்பதைத் தேர்ந்தெடுக்கவும் அல்லது தேடவும். அதன் பிறகு இப்போது தாக்கல் செய்யவும் பட்டனைக் கிளிக் செய்யவும்.

Data responsive

படிநிலை 5: PAN, சமர்ப்பிக்கும் முறை, தாக்கல் செய்யும் வகை ஆகியவற்றைச் சரிபார்த்து, தகுந்த வரி ஆண்டைத் (T.Y) தேர்ந்தெடுத்து தொடரவும் பட்டனைக் கிளிக் செய்யவும்.

Data responsive

படிநிலை 6: தொடங்குவோம் என்பதைக் கிளிக் செய்யவும்.

Data responsive

படிநிலை 7: "தொடங்குவோம்" என்பதை கிளிக் செய்தவுடன், பயனர் பலகை திரைக்கு வழிநடத்தப்படுவார். தொடர்வதற்கு முதல் பலகையான பகுதி A - ஓய்வூதிய நிதியின் விவரங்கள் என்பதைத் தேர்ந்தெடுக்கவும். தேவையான விவரங்களை நிரப்பி, அவற்றை சரிபார்த்து, பின்னர் சேமி பட்டனைக் கிளிக் செய்யவும்.

குறிப்பு: "எனது சுயவிவரம்" பகுதியின் கீழ் முகவரி உள்ளிட்ட அனைத்து கட்டாய விவரங்களும் பூர்த்திச் செய்யப்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளவும். “எனது சுயவிவரம்” என்ற ஹைப்பர்லிங்கைக் கிளிக் செய்வதன் வாயிலாக உங்கள் தொடர்பு மற்றும் முகவரி விவரங்களை நீங்கள் புதுப்பிக்கலாம்.

Data responsive

படிநிலை 8: முதல் பலகையைச் சேமித்த பிறகு, இரண்டாவது பலகையான "பகுதி B – சான்றளிப்பு" என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.

தயவுசெய்து தேர்வுப்பெட்டியை கிளிக் செய்து, 'சேமி' பட்டனைக் கிளிக் செய்யவும்.

Data responsive

படிநிலை 9: இரண்டாவது பலகையைச் சேமித்தப் பிறகு, மூன்றாவது பலகையான இணைப்புகள் என்பதைத் தேர்ந்தெடுக்கவும். தயவுசெய்து இந்த "இணைப்புகள்" பலகையில் தொடர்புடைய ஆவணங்களை இணைத்து, சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.

Data responsive

படிநிலை 10: மூன்றாவது பலகையைச் சேமித்த பிறகு, "சரிபார்ப்பு" பலகையைத் தேர்ந்தெடுக்கவும். சரிபார்ப்புப் பலகையை உறுதிசெய்து, 'சேமி' என்பதைக் கிளிக் செய்யவும்.

Data responsive

படிநிலை 11: சரிபார்ப்புப் பலகையைச் சேமித்த பிறகு, அந்தப் பலகையின் நிலை முடிவடைந்தது எனக் காண்பிக்கப்படும்; அதன்பின் முன்னோட்டம் பட்டன் செயல்பாட்டிற்கு வரும்.

Data responsive

படிநிலை 12: முன்னோட்டப் பக்கத்தில், விவரங்களைச் சரிபார்த்து, மின்னணு-சரிபார்ப்பிற்குச் செல்லவும் என்பதைக் கிளிக் செய்யவும்.

குறிப்பு: பயனர் "பதிவிறக்கவும்" பட்டனைக் கிளிக் செய்வதன் வாயிலாக, முன்னோட்ட PDF-ஐப் பதிவிறக்கம் செய்து, மின்னணு-சரிபார்ப்பிற்குச் செல்வதற்கு முன் விவரங்களைச் சரிபார்த்துக் கொள்ள முடியும்.

Data responsive

படிநிலை 13: மின்னணு-சரிபார்ப்பிற்குச் செல்லவும் பட்டனைக் கிளிக் செய்த பிறகு, நீங்கள் மின்னணு-சரிபார்ப்பிற்குச் செல்ல விரும்புகிறீர்களா என்பதைக் கேட்கும் ஒரு உறுதிப்படுத்தல் பாப்-அப் தோன்றும். அதில் ஆம் என்பதைக் கிளிக் செய்யவும்.

Data responsive

படிநிலை 14: 'ஆம்' என்பதைக் கிளிக் செய்ததும், நீங்கள் மின்னணு-சரிபார்ப்புப் பக்கத்திற்கு அழைத்துச் செல்லப்படுவீர்கள்; அங்கே DSC அல்லது EVC வாயிலாகப் படிவம் 174-ஐ நீங்கள் சரிபார்க்கலாம்.

குறிப்பு: மேலும் அறிய, மின்னணு -சரிபார்ப்பு செய்வது எப்படி என்ற பயனர் கையேட்டைப் பார்க்கவும்.

படிநிலை 15: மின்னணு-சரிபார்ப்பு வெற்றிகரமாக முடிந்ததும், பரிவர்த்தனை ID மற்றும் ஒப்புகை ரசீது எண் ஆகியவற்றுடன் ஒரு வெற்றிச் செய்தி திரையில் தோன்றும். எதிர்காலக் குறிப்பிற்காகப் பரிவர்த்தனை ID மற்றும் ஒப்புகை ரசீது எண் ஆகியவற்றைச் குறித்துக் கொள்ளவும். மின்னணு-தாக்கல் இணைய முகப்பில் பதிவுசெய்யப்பட்ட மின்னஞ்சல் ID(கள்) மற்றும் அலைபெசி எண்(களு)க்கும் உறுதிப்படுத்தல் செய்தி அனுப்பப்படும்.

ஒப்புகை ரசீதைப் பதிவிறக்கம் செய்ய பதிவிறக்கு பட்டனைக் கிளிக் செய்யவும்.

Data responsive

படிவம் 189-ஐ வெற்றிகரமாகச் சமர்ப்பித்த பிறகு, பயனர் பூர்த்திச் செய்யப்பட்ட படிவத்தை இங்கே பார்க்கலாம் - உங்கள் முகப்புப் பலகையில், மின்னணு-தாக்கல் > வருமான வரிப் படிவங்களை தாக்கல் செய்க > தாக்கல் செய்யப்பட்ட படிவங்களைப் பார்க்கவும் > வருமான வரிச் சட்டம் 2025-இன்கீழ் உள்ள தாக்கல் செய்யப்பட்ட படிவத்தைப் பார்க்கவும் தாவலைக் கிளிக் செய்யவும்.

குறிப்பு: மேலும் அறிய, தாக்கல் செய்யப்பட்ட படிவத்தைப் பார்ப்பது எப்படி என்ற பயனர் கையேட்டைப் பார்க்கவும்.

5. தொடர்புடைய தலைப்புகள்

6.சொற்களஞ்சியம்

சுருக்கச்சொல் / சுருக்கம் விளக்கம் / முழு வடிவம்
DSC டிஜிட்டல் கையொப்பச் சான்றிதழ்
EVC மின்னணு சரிபார்ப்பு சான்றிதழ்
ARN ஒப்புகை ரசீது எண்
PY முந்தைய ஆண்டு
FY நிதியாண்டு
TY வரி ஆண்டு