Change Your Password
1. எனது பயனர் அடையாள குறியீடு(user ID) எனக்கு நினைவில் இல்லை. எனது கணக்கில் நான் எவ்வாறு உள்நுழைவது?
மின்னணு-தாக்கல் இணைய முகப்புக்கு உங்கள் PAN தான் உங்கள் பயனர் ID. மின்னணு-தாக்கல் இணைய முகப்பில் உங்கள் PAN உடன் ஆதார் இணைக்கப்பட்டிருந்தால், உங்கள் ஆதார் எண்ணையும் பயனர் ID ஆகப் பயன்படுத்தலாம்.
2. எனது முந்தைய கடவுச்சொற்களில் ஒன்றை புதிய கடவுச்சொல்லாக மாற்ற முடியுமா?
ஆம், உங்களால் முடியும். ஆனால், உங்கள் முந்தைய மூன்று கடவுச்சொற்களைப் போலவே புதிய கடவுச்சொல் இருக்கக் கூடாது.
3. எனது கடவுச்சொல் புதுப்பிக்கப்பட்டுவிட்டது என்று எப்படித் தெரியும்?
உங்களுக்கு பணி முடிவு செய்தி ஒரு பரிவர்த்தனை அடையாள குறியீடுடன் கிடைக்கும் மேலும், மின்னணு-தாக்கல் இணைய முகப்பில் பதிவுசெய்யப்பட்ட மின்னஞ்சல் ID மற்றும் அலைபேசி எண்ணிற்கு உறுதிப்படுத்தல் செய்தியையும் பெறுவீர்கள்.
4. கடவுச்சொல் மாற்றம் தோல்வியுற்றால் நான் என்ன செய்ய வேண்டும்?
பின்வரும் படிகளை பின்பற்றவும்:
- உங்கள் இணைய உலாவியிலிருந்து உங்கள் தற்காலிக கோப்புகளை நீக்கவும்
- உங்கள் மின்னணு-தாக்கல் இணைய முகப்பில் (portal) உள்நுழைந்து, உங்கள் கடவுச்சொல்லை மீண்டும் மாற்ற முயற்சிக்கவும்.
5. கடவுச்சொல்லை மாற்றுதல் என்ற பக்கத்தில் இருக்கும்போது ரத்து செய் பட்டனைக் கிளிக் செய்தால் என்ன ஆகும்?
உங்கள் கடவுச்சொல் புதுப்பிக்கப்படாமல், உங்கள் முகப்புப்பலகையை பார்க்க முடியும்
6. எனது பயனர் ID மற்றும் கடவுச்சொல்லை மறந்துவிட்டேன். நான் அவற்றை எவ்வாறு மீட்டெடுப்பது?
உங்கள் PAN தான் உங்கள் பயனர் ID. (அல்லது, உங்கள் PAN உடன் ஆதார் எண் மின்னணு-தாக்கல் இணைய முகப்பில் இணைக்கப்பட்டிருந்தால்,ஆதார் எண்) உங்கள் கடவுச்சொல்லை மீட்டெடுக்க மின்னணு-தாக்கல் இணைய முகப்பில் கடவுச்சொல் மறந்துவிட்டது என்ற சேவையைப் பயன்படுத்தலாம்
- ஆதார் OTP; அல்லது
- மின்னணு-தாக்கல் இணைய முகப்பில் பதிவு செய்யப்பட்ட உங்கள் அலைபேசி எண்ணுக்கு OTP ஐ பெறுவீர்கள்; அல்லது
- முன் சரிபார்க்கப்பட்ட வங்கி கணக்கு / டீமேட் கணக்கு மூலம் உருவாக்கப்பட்ட ஈ.வி.சி (மின்னணு சரிபார்ப்புக் குறியீடு); அல்லது
- DSC (மின்னணு கையொப்பச் சான்றிதழ்)