Do not have an account?
Already have an account?

1. கண்ணோட்டம்

மின்னணு தாக்கல் இணைய முகப்பில் அனைத்து பயனர்களுக்கும் ஆன்லைனில் பணம் செலுத்துதல் சேவை கிடைக்கிறது.இந்தச் சேவையின் மூலம், பின்வரும் முறைகளைப் பயன்படுத்தி ஆன்லைனில் வரியைச் செலுத்தலாம் (உள்நுழைவுக்கு முன் அல்லது உள்நுழைவுக்குப் பின்):

  • அங்கீகரிக்கப்பட்ட வங்கி பற்று அட்டை, அல்லது
  • அங்கீகரிக்கப்பட்ட வங்கியின் இணையச் சேவை வசதி, அல்லது
  • கட்டண நுழைவுவாயில் (கடன் அட்டை / பற்று அட்டை / அங்கீகரிக்கப்படாத வங்கிகளின் இணையச் சேவை அல்லது UPI)

இந்தச் சேவையைப் பின்வருபவர் பயன்படுத்தலாம்:

  • அனைத்து வரி செலுத்துவோர்
  • வகை-1 மற்றும் வகை-2 மின்னணு வரிப் படிவம் தாக்கல் செய்பவர்(ERI) / பட்டயக் கணக்கர் (CA)
  • வரி செலுதுபவர் பிரதிநிதி

2. இந்தச் சேவையை பெறுவதற்கான முன்நிபந்தனைகள்

நீங்கள் உள்நுழைவிற்கு-முன் (மின்னணு தாக்கல் இணைய முகப்பில் உள்நுழைவதற்கு முன்) அல்லது உள்நுழைவிற்குப் பின் (மின்னணு தாக்கல் இணைய முகப்பில் உள்நுழைந்த பிறகு) இரண்டிலும் ஆன்லைனில் பணம் செலுத்தலாம்.

விருப்பம் முன்தேவைகள்
உள்நுழைவுக்கு-முன்
  • செல்லுபடியாகும் நிரந்தரக் கணக்கு எண் (PAN) / மூலத்தில் வரி பிடிப்பு எண்(TAN)
  • ஏதேனும் அங்கீகரிக்கப்பட்ட வங்கிகளுடனான பற்று அட்டை / வங்கி இணையச் சேவை வசதி அல்லது அங்கீகரிக்கப்படாத வங்கிகளுடனான பற்று / கடன் அட்டை / வங்கி இணையச் சேவை வசதி அல்லது ஒருங்கிணைந்த பணம் செலுத்தும் இடைமுகம் (UPI)
  • முன்னர் உருவாக்கப்பட்ட காலாவதியாகாத செலுத்துச் சீட்டு (சலான்)
உள்நுழைவுக்குப்-பின்
  • மின்னணுத் தாக்கல் இணைய முகப்பில் பதிவு செய்யப்பட்ட பயனர்
  • ஏதேனும் அங்கீகரிக்கப்பட்ட வங்கிகளுடனான பற்று அட்டை / வங்கி இணையச் சேவை வசதி அல்லது அங்கீகரிக்கப்படாத வங்கிகளுடனான பற்று / கடன் அட்டை / வங்கி இணையச் சேவை வசதி அல்லது ஒருங்கிணைந்த பணம் செலுத்தும் இடைமுகம் (UPI)
  • முன்னர் உருவாக்கப்பட்ட காலாவதியாகாத செலுத்துச் சீட்டு (சலான்)

3. படிப்-படியான வழிகாட்டி


3.1. முன்னர் உருவாக்கப்பட்ட செலுத்துச் சீட்டுகளுக்கு வரி செலுத்துதல்

படி 1: உங்கள் பயனர் அடையாளம் (ID) மற்றும் கடவுச்சொல் மூலம் மின்னணுத் தாக்கல் இணைய முகப்பில் உள்நுழையவும். நீங்கள் ஒரு வரி செலுதுபவரின் பிரதிநிதி என்றால், யாரின் சார்பாக நீங்கள் உள்நுழைய விரும்புகிறீர்களோ அந்த வரி செலுத்துவோரின் நிரந்தரக் கணக்கு எண்ணைத் (PAN) தேர்ந்தெடுக்கவும்.

Data responsive


படி 2: உங்கள் முகப்புப் பலகையில் , மின்னணுத் தாக்கல் செய்தல் > மின்னணு முறையில் வரியைச் செலுத்தவும் என்பதைச் சொடுக்கவும்.நீங்கள் வகை-1 அல்லது வகை-2 மின்னணு வரிப் படிவம் தாக்கல் செய்பவர் (ERI) என்றால், யாரின் சார்பாக நீங்கள் ஒரு செலுத்துச் சீட்டை உருவாக்க விரும்புகிறீர்களோ அந்த வரி செலுத்துபவரின் நிரந்தரக் கணக்கு எண்ணைத் (PAN) தேர்ந்தெடுத்துத் தொடரவும் என்பதைச் சொடுக்கவும். நீங்கள் மின்னணு முறையில் வரி செலுத்துதல் பக்கத்திற்கு அழைத்துச் செல்லப்படுவீர்கள், அங்கு சேமித்த வரைவுகள், உருவாக்கப்பட்ட செலுத்துச் சீட்டுகள் மற்றும் கட்டண வரலாறு பற்றிய விவரங்களைக் காணலாம்.

Data responsive


படி 3: மின்னணு முறையில் வரி செலுத்துதல் பக்கத்தில், உருவாக்கப்பட்ட செலுத்துச் சீட்டுகள் என்பதைச் சொடுக்கவும்.

Data responsive


குறிப்பு: இவை ஏற்கனவே செலுத்துச் சீட்டுகள் உருவாக்கப்பட்ட பதிவுகள் (அவற்றின் தனித்துவமான செலுத்துச் சீட்டு குறிப்பு எண் மூலம் அடையாளம் காணப்பட்டுள்ளன), ஆனால் கட்டணம் செலுத்தும் முறையை ( இணைய வங்கிச்சேவை அல்லது பற்று அட்டை அல்லது கட்டண நுழைவாயில் மூலம்) தேர்ந்தெடுத்த பிறகு, பின்னர் பணம் செலுத்தவும் என்பதைத் தேர்ந்தெடுத்துள்ளீர்கள்.


படி 4: மின்னணு முறையில் வரி செலுத்துதல் பக்கத்தில், உருவாக்கப்பட்ட செலுத்துச் சீட்டுகள் தாவலின் கீழ், தேர்ந்தெடுக்கப்பட்ட செலுத்துச் சீட்டுக்கான செயல்கள் நெடுவரிசையின் கீழ் பணம் செலுத்து என்பதைச் சொடுக்கவும்.

Data responsive


படி 5: விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ள தேர்வுப்பெட்டியைத் தேர்ந்தெடுத்து, வங்கிக்குச் சமர்ப்பிக்கவும் என்பதைச் சொடுக்குக.நீங்கள், தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள வங்கியின் வலைத்தளத்திற்கு அழைத்துச் செல்லப்படுவீர்கள், அங்கு நீங்கள் உள்நுழைந்து அல்லது உங்களின் பற்று / கடன் அட்டை / ஒருங்கிணைந்த பணம் செலுத்தும் இடைமுகத்தின்(UPI) விவரங்களை உள்ளிட்டுப் பணம் செலுத்தலாம்.

Data responsive


வெற்றிகரமாக பணம் செலுத்திய பிறகு, வெற்றிச் செய்தி காண்பிக்கப்படும். எதிர்கால குறிப்புக்காக நீங்கள் செலுத்துச் சீட்டைப் பதிவிறக்கம் செய்யலாம். வெற்றிச் செய்தி பக்கத்தில் அல்லது மின்னணு முறையில் வரி செலுத்துதல் பக்கத்தில் உள்ள வரி செலுத்திய வரலாறு தாவலின் கீழ் உள்ள சுருக்கவிவரப் பிரிவில் நீங்கள் விவரங்களைக் காணலாம். மேலும் மின்னணு தாக்கல் முகப்பில் பதிவு செய்யப்பட்டுள்ள உங்கள் மின்னஞ்சல் முகவரி (ID) மற்றும் அலைபேசி எண்ணில் ஒரு உறுதிப்படுத்தல் செய்தியையும் நீங்கள் பெறுவீர்கள்.

Data responsive

 

3.2, முன்னர் சேமிக்கப்பட்ட செலுத்துச் சீட்டு வரைவுகளுக்குப் பணம் செலுத்துதல்

படி 1: உங்கள் பயனர் அடையாளம் (ID) மற்றும் கடவுச்சொல் மூலம் மின்னணுத் தாக்கல் இணைய முகப்பில் உள்நுழையவும். நீங்கள் ஒரு வரி செலுதுபவரின் பிரதிநிதி என்றால், யாரின் சார்பாக நீங்கள் உள்நுழைய விரும்புகிறீர்களோ அந்த வரி செலுத்துவோரின் நிரந்தரக் கணக்கு எண்ணைத் (PAN) தேர்ந்தெடுக்கவும்.

Data responsive


படி 2: உங்கள் முகப்புப் பலகையில் , மின்னணுத் தாக்கல் செய்தல் > மின்னணு முறையில் வரியைச் செலுத்தவும் என்பதைச் சொடுக்கவும்.நீங்கள் வகை-1 அல்லது வகை-2 மின்னணு வரிப் படிவம் தாக்கல் செய்பவர் (ERI) என்றால், நீங்கள் யாரின் சார்பாக செலுத்துச் சீட்டை உருவாக்க விரும்புகிறீர்களோ அந்த வரி செலுத்துபவரின் நிரந்தரக் கணக்கு எண்ணைத் (PAN) தேர்ந்தெடுத்துத் தொடரவும் என்பதைக் கிளிச் சொடுக்கவும்.நீங்கள் மின்னணு முறையில் வரி செலுத்துதல் பக்கத்திற்கு அழைத்துச் செல்லப்படுவீர்கள், அங்கு சேமித்த வரைவுகள், உருவாக்கப்பட்ட செலுத்துச் சீட்டுகள் மற்றும் வரி செலுத்திய வரலாறு பற்றிய விவரங்களைக் காணலாம்.

Data responsive


படி 3 : மின்னணு முறையில் வரி செலுத்துதல் பக்கத்தில், சேமிக்கப்பட்டசெலுத்துச் சீட்டு வரைவுகள் என்பதைச் சொடுக்கவும். தேர்ந்தெடுக்கப்பட்ட செலுத்துச் சீட்டு வரைவுக்கான செயல்கள் நெடுவரிசையின் கீழ் உள்ள திருத்துக என்பதைச் சொடுக்கவும்.

Data responsive


குறிப்பு: இவை செலுத்துச் சீட்டுகளை உருவாக்கும் போது சேமிக்கப்பட்ட செலுத்துச் சீட்டு வரைவுகள் ஆகும்.

படி 4: பிரிவு 3.1 இன் படி, படி 5 முதல் படி 7 வரை உள்ள வழிமுறைகளைப் பின்பற்றவும். செலுத்துச் சீட்டை உருவாக்குக என்ற பயனர் கையேட்டின் படி செலுத்துச் சீட்டை (உள்நுழைவுக்குப் பின்) உருவாக்கவும்

 

3.3. புதிய செலுத்துச் சீட்டை உருவாக்கிய பிறகு பணம் செலுத்துக

படி 1: பிரிவு 3.1 இன் படி, படி 1 முதல் படி 7 வரை உள்ள வழிமுறைகளைப் பின்பற்றவும். செலுத்துச் சீட்டை உருவாக்குக என்ற பயனர் கையேட்டின் படி செலுத்துச் சீட்டை (உள்நுழைவுக்குப் பின்) உருவாக்கவும்

 

3.4. மின்னணு தாக்கல் இணைய முகப்பில் உள்நுழையாமல் பணம் செலுத்துதல்

படி 1: மின்னணு தாக்கல் இணைய முகப்புப் பக்கத்திற்குச் சென்று மின்னணு முறையில் வரி செலுத்தவும் என்பதைச் சொடுக்குக.

Data responsive


படி 2: மின்னணு முறையில் வரி செலுத்துதல் பக்கத்தில், உங்கள் நிரந்தரக் கணக்கு எண் (PAN) / மூலத்தில் வரி பிடிப்பு எண்ணை (TAN) உள்ளிட்டு, நிரந்தரக் கணக்கு எண் (PAN) / மூலத்தில் வரி பிடிப்பு எண்ணை (TAN) உறுதிப்படுத்துக என்ற பெட்டியில் மீண்டும் உள்ளிட்டு உங்களிடம் இருக்கும் உங்களின் அலைபேசி எண்ணை உள்ளிடவும். தொடரவும் என்பதைச் சொடுக்குக.

Data responsive


படி 3: படி 2-ல் உள்ளிட்டுள்ளபடி அலைபேசி எண்ணில் பெறப்பட்ட 6-இலக்க ஒரு முறைக் கடவு எண்ணை (OTP) உள்ளிட்டுத் தொடரவும் என்பதைச் சொடுக்கவும்.

Data responsive


குறிப்பு:

  • ஒரு முறைக் கடவு எண் (OTP) 15 நிமிடங்களுக்கு மட்டுமே செல்லுபடியாகும்.
  • சரியான ஒரு முறைக் கடவு எண்ணை (OTP) உள்ளிட உங்களுக்கு 3 வாய்ப்புகள் உள்ளன.
  • ஒரு முறைக் கடவு எண் (OTP) காலாவதி கவுன்டவுன் டைமர் ஒரு முறைக் கடவு எண் (OTP) எப்போது காலாவதியாகும் என்பதை உங்களுக்குக் கூறுகிறது.
  • ஒரு முறைக் கடவு எண்ணை (OTP) மீண்டும் அனுப்பவும் என்பதைச் சொடுக்கினால், புதிய ஒரு முறைக் கடவு எண் (OTP) உருவாக்கப்பட்டு அனுப்பப்படும்.

படி 4: சரிபார்ப்புக்குப் பிறகு, உங்கள் நிரந்தரக் கணக்கு எண் (PAN) / மூலத்தில் வரி பிடிப்பு எண் (TAN) மற்றும் பெயருடன் ஒரு வெற்றிச் செய்தி காண்பிக்கப்படும். தொடருவதற்கு தொடரவும் என்பதைச் சொடுக்கவும்.

Data responsive


படி 5: மின்னணு முறையில் வரி செலுத்துதல் பக்கத்தில், உங்களுக்குப் பொருந்தும் வரி செலுத்தும் பிரிவில் உள்ள தொடரவும் என்பதைச் சொடுக்குக.

வகைப்பிரிவுகளைப் பொறுத்து, பின்வரும் வரிக் கட்டண வகைப்பிரிவுகளில் இருந்து உங்களால் தேர்ந்தெடுக்க முடியும்:

நிரந்தரக் கணக்கு எண் (PAN) வகையைப் பொறுத்து
  • வருமான வரி
  • வியாபார நிறுவன வரி
  • சமன்பாடு வரி வசூல் / பங்குப் பரிவர்த்தனை வரி (STT) / பண்டங்கள் பரிவர்த்தனை வரி (CTT) / ஈவுத்தொகை விநியோக வரி (DDT)
  • கட்டணம் / பிற வரி செலுத்தல்கள்
மூலத்தில் வரி பிடிப்பு எண் (TAN) கொண்ட மூலத்தில் வரி பிடித்தம் செய்யும் பயனர்கள்
  • மூலத்தில் பிடித்தம் செய்த (TDS) /மூலத்தில் வசூல் செய்த (TCS) வரியைச் செலுத்தவும்
  • கட்டணத்தைச் (மேல்முறையீட்டுக் கட்டணம் அல்லது வேறு ஏதேனும் கட்டணம்) செலுத்தவும்
Data responsive


படி 6: நீங்கள் பணம் செலுத்தலாம்:

முன்னர் உருவாக்கப்பட்ட செலுத்துச் சீட்டுகளுக்கு பிரிவு 3.1 இன் படி, படி-1 முதல் படி-5 வரை உள்ள வழிமுறைகளைப் பின்பற்றவும். ஆன்லைனில் பணம் செலுத்துவதற்கான முன்னர் உருவாக்கப்பட்ட செலுத்துச் சீட்டுகளுக்கு பணம் செலுத்தும் பயனர் கையேடு.
வரைவுகளாக சேமிக்கப்பட்ட செலுத்துச் சீட்டுகளுக்கு பிரிவு 3.2-ன்படி, படி-1 முதல் படி-3 வரை உள்ள வழிமுறைகளைப் பின்பற்றவும் ஆன்லைனில் பணம் செலுத்துவதற்கான முன்னர் சேமிக்கப்பட்ட வரைவு செலுத்துச் சீட்டுகளுக்குப் பணம் செலுத்தும் பயனர் கையேடு.
புதிய செலுத்துச் சீட்டை உருவாக்கிய பிறகு பிரிவு 3.2-ன்படி, படி-1 முதல் படி-6 வரை உள்ள வழிமுறைகளைப் பின்பற்றவும் செலுத்துச் சீட்டை உருவாக்குக என்ற பயனர் கையேட்டின் படி செலுத்துச் சீட்டை (உள்நுழைவுக்கு முன்) உருவாக்கவும்

 

4. தொடர்புடைய தலைப்புகள்