Do not have an account?
Already have an account?

தாக்கல் செய்யப்பட்ட படிவங்களைக் காண்க

(நீங்கள் தாக்கல் செய்த படிவங்களை உடனடியாக அணுகுங்கள்)

தாக்கல் செய்யப்பட்ட படிவங்களைக் காண்க

1. நான் தாக்கல் செய்த படிவத்தைப் பதிவிறக்கம் செய்ய முடியுமா?

ஆம். நீங்கள் தாக்கல் செய்த படிவத்தின் PDF - பதிப்பை மின்னணு-தாக்கல் இணைய முகப்பிலிருந்து பதிவிறக்கம் செய்யலாம் மின்னணு-தாக்கல்>வருமான வரிப் படிவங்கள் >தாக்கல் செய்யப்பட்ட படிவங்களைக் காண்க.

2. தாக்கல் செய்யப்பட்ட படிவத்தை யார் பார்க்க முடியும்?

மின்னணு-தாக்கல் இணைய முகப்பில் பதிவு செய்துள்ள எவரும், தாங்களாகவே தாக்கல் செய்த படிவத்தை அல்லது தங்களுக்குப் பதிலாக அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதியால் தாக்கல் செய்யப்பட்ட படிவத்தைப் பார்வையிட முடியும்.

3. முன்பே தாக்கல் செய்யப்பட்ட படிவம் 15CA / 15CB-ஐ ஒரு CA எவ்வாறு பார்க்க முடியும்?

CA உள்நுழைவு அல்லது TAN உள்நுழைவு கொண்ட பயனர்கள், படிவம் 15CA / 15CB-ஐ மின்னணு-தாக்கல் இணைய முகப்பின் மூலம் பார்க்க முடியும் தாக்கல் செய்யப்பட்ட படிவங்களைக் காண்க மின்னணு-தாக்கல் இணைய முகப்பில் உள்ள சேவை.

4. தாக்கல் செய்யப்பட்ட படிவங்களைக் காண்க என்பதின் கீழ் நான் எந்தப் படிவங்களைப் பார்க்க முடியும்?

நீங்கள் தாக்கல் செய்த அனைத்துச் சட்டபூர்வ படிவத்தையும் அல்லது உங்கள் சார்பாக அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதி தாக்கல் செய்த படிவத்தையும் பார்க்க முடியும். உங்கள் சார்பாக CA தாக்கல் செய்த படிவம் உங்களுக்கும் CA-வுக்கும் காட்டப்படும்.

5. நான் முன்பு நேரடியாகத் தாக்கல் செய்த படிவத்தை மின்னணு-தாக்கல் இணைய முகப்பில் பார்க்க முடியுமா?

இல்லை, நீங்கள் முன்பு நேராகத் தாக்கல் செய்த படிவத்தை மின்னணு-தாக்கல் இணைய முகப்பில் பார்க்க முடியாது.

6. நான் தாக்கல் செய்த படிவத்தை எவ்வாறு திருத்தலாம்?

நீங்கள் ஒரு முறை தாக்கல் செய்த படிவத்தைத் திருத்த முடியாது. இருப்பினும், வருமான வரிச் சட்டம் /விதிகளின்படி அதற்கான காலக்கெடு முடிவடையவில்லை என்றால், நீங்கள் புதிய படிவத்தைத் தாக்கல் செய்யலாம்; அப்போது முன்பு தாக்கல் செய்த படிவம் செல்லாததாகக் கருதப்படும்.