1. கண்ணோட்டம்
இந்த உள்நுழைவுக்கு முன்னான சேவை மின்னணு தாக்கல் முகப்பில் பதிவு செய்து, அணுக விரும்பும் அனைத்து வணிக குழுமங்களுக்கும் (Companies) கிடைக்கிறது.பதிவு செய்தல் சேவையானது வரி தொடர்பான அனைத்து செயல்பாடுகளை அணுகவும் கண்காணிக்கவும் பயனருக்கு உதவுகிறது.
2. இந்தச் சேவையை பெறுவதற்கான முன்நிபந்தனைகள்
- குழுமத்தின் செல்லுபடியாகும் மற்றும் செயலில் உள்ள நிரந்தர கணக்கு எண்(PAN)
- மின்னணு தாக்கல் முகப்பில் முதன்மை தொடர்பாளரின் நிரந்தர கணக்கு எண் (PAN) பதிவு செய்யப்பட வேண்டும்
- குறிப்பிட்ட நிரந்தர கணக்கு எண்ணுக்காக (PAN-க்காக) பதிவு செய்யப்பட்டுள்ள முதன்மை தொடர்பாளரின் இலக்கமுறை கையொப்பச் சான்றிதழ் (DSC)
3. படிப்-படியான வழிகாட்டி
படி 1: மின்னணு தாக்கல் முகப்பின் முதன்மை பக்கத்திற்கு சென்று, பதிவு செய்க என்பதை கிளிக் செய்யவும்.
படி 2: வரி செலுத்துவோர் என பதிவுசெய்தல் என்பதைத் தேர்ந்தெடுத்து குழுமத்தின் நிரந்தர கணக்கு எண் (PAN)ஐ உள்ளிடவும். சரிபார்க்கவும் என்பதை கிளிக் செய்யவும். நிரந்தர கணக்கு எண் (PAN) ஏற்கனவே பதிவு செய்யப்பட்டிருந்தால் அல்லது தவறானதாக இருந்தால், ஒரு பிழைச் செய்தி தோன்றும்.
படி 3: நிறுவனத்தின் பெயர், நிறுவப்பட்ட தேதி (DOI), வணிக குழுமத்தின் வகை மற்றும் குழும அடையாள எண்(CIN)போன்ற அனைத்து கட்டாய விவரங்களையும் அடிப்படை விவரங்கள் பக்கத்தில் உள்ளிட்டு தொடரவும் என்பதைக் கிளிக் செய்யவும்.
படி 4: நிரந்தர கணக்கு எண் (PAN) சரிபார்க்கப்பட்ட பிறகு, முதன்மை தொடர்பு விவரங்கள் பக்கம் தோன்றும். முதன்மை தொடர்பாளரின் முதன்மை அலைபேசி எண், முதன்மை மின்னஞ்சல் முகவரி (ID) மற்றும் அஞ்சல் முகவரி போன்ற கட்டாய விவரங்களை உள்ளிட்டு தொடரவும் என்பதைக் கிளிக் செய்யவும்.
குறிப்பு:
- முதன்மை தொடர்பாளரின் நிரந்தர கணக்கு எண் (PAN) மின்னணு தாக்கல் முகப்பில் பதிவு செய்யப்பட்டுள்ளதா என்பதை கணினி அமைப்பு சரிபார்க்கும், இல்லையென்றால், முதன்மை தொடர்பாளர் முதலில் நிரந்தர கணக்கு எண்ணை (PAN ஐப்) பதிவு செய்ய வேண்டும்.
- கொடுக்கப்பட்ட நிரந்தர கணக்கு எண்ணுக்கு (PAN க்கு) செல்லுபடியாகும் மற்றும் செயலில் உள்ள இலக்கமுறை கையொப்பச் சான்றிதழ் (DSC) பதிவு செய்யப்பட்டுள்ளதா என்பதை கணினி அமைப்பு சரிபார்க்கும். இல்லையென்றால், முதலில் நிரந்தர கணக்கு எண்ணுக்கான (PAN-க்கான) இலக்கமுறை கையொப்பச் சான்றிதழ் (DSC) பதிவு செய்யப்பட வேண்டும் / புதுப்பிக்கப்பட வேண்டும்.
படி 5: படி 4 இல் உள்ளிடப்பட்டுள்ளபடி முதன்மை தொடர்பாளரின் முதன்மை அலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரிக்கு (ID) இரண்டு தனித்தனி ஒற்றை பயன்பாட்டு கடவுச்சொற்கள் (OTP கள்) அனுப்பப்படுகின்றன. அலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி (ID) யில் பெறப்பட்ட இரண்டு தனித்தனி 6-இலக்க ஒற்றை பயன்பாட்டு கடவுச்சொற்களை (OTP களை) உள்ளிட்டு தொடரவும் என்பதைக் கிளிக் செய்யவும்.
குறிப்பு:
- ஒரு முறைக் கடவு எண் (OTP) 15 நிமிடங்களுக்கு மட்டுமே செல்லுபடியாகும்.
- சரியான ஒற்றை பயன்பாட்டு கடவுச்சொல்லை (OTPஐ) உள்ளிட உங்களுக்கு 3முயற்சிகள் உள்ளன.
- ஒரு முறைக் கடவு எண் (OTP) காலாவதி கவுன்டவுன் டைமர் ஒரு முறைக் கடவு எண் (OTP) எப்போது காலாவதியாகும் என்பதை உங்களுக்குக் கூறுகிறது.
- ஒற்றை பயன்பாட்டு கடவுச் சொல்லை (OTPஐ) மீண்டும் அனுப்புக என்பதைக் கிளிக் செய்தவுடன், ஒரு புதிய ஒற்றை பயன்பாட்டு கடவுச் சொல் (OTP) உருவாக்கப்பட்டு அனுப்பப்படும்.
படி 6: விவரங்களைச் சரிபார்த்தல் பக்கத்தில் தேவைப்பட்டால் விவரங்களைத் திருத்தம் செய்து, உறுதிசெய் என்பதைக் கிளிக் செய்யவும்.
படி 7: கடவுச்சொல்லை அமை பக்கத்தில், நீங்கள் விரும்பிய கடவுச்சொல்லை, கடவுச்சொல்லை அமை மற்றும் கடவுச்சொல்லை உறுதிசெய் ஆகிய இரண்டிலும் உள்ளிடவும் உங்களின் தனிப்பயனாக்கப்பட்ட செய்தியை வழங்கி, பதிவு செய்யவும் என்பதைக் கிளிக் செய்யவும்.
குறிப்பு:
- புதுப்பிக்க அல்லது பின்னே செல்க என்பதை க்ளிக் செய்ய வேண்டாம்.
- உங்கள் புதிய கடவுச்சொல்லை உள்ளிடும்போது, கடவுச்சொல் கொள்கை பற்றி கவனமாக இருங்கள்:
- இது குறைந்தபட்சம் 8 எழுத்துகள் மற்றும் அதிகபட்சம் 14 எழுத்துக்களை கொண்டிருக்க வேண்டும்.
- இது பேரெழுத்து சிற்றெழுத்து இரண்டை யும் கொண்டதாக இருக்க வேண்டும்.
- இதில் ஒரு எண் இருக்க வேண்டும்.
- இதில் ஒரு சிறப்பு எழுத்துரு (எ.கா. @#$%) இருக்க வேண்டும்.
படி 8: நீங்கள் வெற்றிகரமாக பதிவுசெய்ததும், உள்நுழைவு செயல்முறையைத் தொடங்க உள்நுழைவைத் தொடரவும் என்பதைக் கிளிக் செய்யவும்.
குறிப்பு: கிடைக்கக்கூடிய அனைத்து சேவைகளையும் அணுக மின்னணு தாக்கல் முகப்பில் உள்நுழைந்து, உங்கள் சுயவிவரத்தைப் புதுப்பிக்கவும்