Do not have an account?
Already have an account?

சேவைக் கோரிக்கையைச் சரிபார்க்கவும் பயனர் கையேடு

1. மேலோட்டப்பார்வை


மின்னணு-தாக்கல் இணைய முகப்பில் உள்ள அனைத்து பயனர்களுக்கும் ERI-களின் சேவை கோரிக்கையைச் சரிபார்த்தல் வசதி கிடைக்கிறது. இந்தச் சேவையின் மூலம், வருமான வரி அறிக்கை மற்றும் படிவங்களைத் தாக்கல் செய்வது உள்ளிட்ட குறிப்பிட்ட செயல்பாடுகளை மின்னணு-தாக்கல் இணைய முகப்பில் உங்கள் சார்பாக மேற்கொள்ளும்போது, ​​ஒரு ERI சமர்ப்பித்த கோரிக்கையை உங்களால் சரிபார்க்க முடியும்.

ERI-கள் தங்கள் வாடிக்கையாளர்கள் சார்பாகப் பின்வரும் சேவைகளை மேற்கொள்ளலாம்:

  • வாடிக்கையாளரைச் சேர்க்கவும் (பதிவுசெய்யப்பட்ட மற்றும் பதிவுசெய்யப்படாத பயனாளர்)
  • வாடிக்கையாளரைச் செயல்படுத்தவும்
  • வாடிக்கையாளர் சரிபார்த்தலை மேம்படுத்துதல்
  • சேவை சரிபார்த்தலை மேம்படுத்துதல்
  • சேவையைச் சேர்த்தல்
  • ITR-V-ஐச் சமர்ப்பிப்பதில் ஏற்பட்ட தாமதத்தை பொருட்படுத்தாதுவிடல் கோரிக்கை
  • அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதியைச் சேர்க்கவும்
  • சுயமாகச் செயல்பட மற்றொரு நபரை அங்கீகரிக்கவும்
  • மதிப்பீட்டு பிரதிநிதியாகப் பதிவு செய்தல்
  • மற்றொரு நபரின் சார்பாகச் செயல்படப் பதிவு செய்யுங்கள்
  • வருமான வரிப் படிவங்களைத் தாக்கல் செய்யவும்
  • உபரி வரி திரும்பப்பெறுதல் மறுவெளியீட்டிற்கான கோரிக்கை
  • சரிசெய்தல் கோரிக்கை
  • காலக்கெடு முடிந்த பிறகு ITR தாக்கல் செய்வதற்கான காலதாமதத்தை பொருட்படுத்தாதுவிடல் கோரிக்கை
  • வங்கி கணக்கில் சரிபார்க்கப்பட்ட தொடர்பு விவரங்களின்படி, முதன்மைத் தொடர்பு விவரங்களைப் புதுப்பிக்கவும்.
  • டிமேட் கணக்கில் சரிபார்க்கப்பட்ட தொடர்பு விவரங்களின்படி, முதன்மைத் தொடர்பு விவரங்களைப் புதுப்பிக்கவும்

உங்கள் வாடிக்கையாளர் சரிபார்த்த பிறகு மட்டுமே, ERI-ஆல் சமர்ப்பிக்கப்பட்ட கோரிக்கை நிறைவு செய்யப்படும்.

2. இச்சேவையைப் பெறுவதற்கான முன்தேவைகள்

  • செல்லுபடியாகும் மற்றும் செயல்பாட்டில் உள்ள PAN / TAN
  • ஒரு மின்னணு-வருமானவரி அறிக்கை இடைத்தரகர் கோரிக்கையைத் தொடங்கியிருக்க வேண்டும்
  • ERI-ஆல் சமர்ப்பிக்கப்பட்ட கோரிக்கையின் பரிவர்த்தனை ID
  • சமர்ப்பிக்கப்பட்ட கோரிக்கையைச் சரிபார்க்கும் நேரத்தில், அதன் பரிவர்த்தனை ID செல்லுபடியாகும் நிலையில்/செயல்பாட்டில் இருக்க வேண்டும்

3. படிப்படியான வழிகாட்டி


படிநிலை 1: மின்னணு-தாக்கல் இணைய முகபபின் முதன்மை பக்கத்திற்குச் சென்று, சேவை கோரிக்கையை சரிபார்க்கவும் என்பதைக் கிளிக் செய்யவும்.

Data responsive


படிநிலை 2: சேவைக் கோரிக்கையைச் சரிபார்த்தல் பக்கத்தில், மின்னணு-தாக்கல் இணைய முகப்பில் பதிவு செய்யப்பட்ட உங்கள் மின்னஞ்சல் ID மற்றும் அலைபேசி எண்ணுக்குப் பெறப்பட்ட கோரிக்கையின் பரிவர்த்தனை ID மற்றும் PAN / TAN ஆகியவற்றை உள்ளிடவும். பின்னர் சரிபார்என்பதைக் கிளிக் செய்யவும்.

Data responsive


குறிப்பு: நீங்கள் இணையமுகப்பில் பதிவு செய்யவில்லை என்றால், கோரிக்கையைச் சமர்ப்பிக்கும்போது ERI-ஆல் வழங்கப்பட்ட மின்னஞ்சல் ID மற்றும் அலைபேசி எண்ணுக்குப் பெறப்பட்ட பரிவர்த்தனை ID-ஐ உள்ளிடவும்.

படிநிலை 3: சரிபார்ப்பு வெற்றிகரமாக முடிந்த பிறகு, தொடரவும் என்பதைக் கிளிக் செய்யவும்.

Data responsive


படிநிலை 4: சரிபார்ப்பு முறை, EAR-ஆல் சமர்ப்பிக்கப்பட்ட கோரிக்கையின் வகையைப் பொறுத்து அமையும்.

கோரிக்கை சமர்ப்பிக்கப்பட்ட வகை சரிபார்ப்பு முறை
  • வாடிக்கையாளரைச் சேர்க்கவும் (பதிவு செய்யத பயனர்கள்)
  • வாடிக்கையாளரைச் செயல்படுத்துதல்
  • வாடிக்கையாளர் சரிபார்த்தலை மேம்படுத்துதல்
  • சேவை சரிபார்த்தலை மேம்படுத்துதல்
  • சேவையைச் சேர்க்கவும்
  • ITR-V-ஐச் சமர்ப்பிப்பதில் ஏற்பட்ட தாமதத்தை பொருட்படுத்தாதுவிடல் கோரிக்கை
  • அங்கீகரிக்கப்பட்ட முகவரைச் சேர்க்கவும்
  • சுயமாகச் செயல்பட மற்றொரு நபரை அங்கீகரிக்கவும்
  • மதிப்பீட்டுக்குரியவரின் பிரதிநிதியாகப் பதிவு செய்தல்
  • மற்றொரு நபரின் சார்பாகச் செயல்படப் பதிவு செய்யுங்கள்.
  • வங்கி அல்லது டிமேட் கணக்கில் சரிபார்க்கப்பட்ட தொடர்பு விவரங்களின்படி, முதன்மைத் தொடர்பு விவரங்களைப் புதுப்பிக்கவும்.
மின்னணு-தாக்கல் இணைய முகப்பில் பதிவு செய்யப்பட்ட அலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் ID -க்கு 6-இலக்க OTP-கள் பெறப்பட்டன
  • வாடிக்கையாளரைப் பதிவு செய்யவும்
  • வாடிக்கையாளரைச் சேர்க்கவும் (பதிவு செய்யப்படாத பயனர்கள்)
மின்னணு-தாக்கல் இணைய முகப்பில் பதிவு செய்யப்பட்ட அலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் ID -க்கு இரண்டு தனித்தனி 6-இலக்க OTP-கள் பெறப்பட்டன.
  • வருமானவரிப் படிவங்களைத் தாக்கல் செய்யவும்
  • உபரி வரி திரும்பப்பெறுதல் மறுவெளியீட்டிற்கான கோரிக்கை
  • சரிசெய்தல் கோரிக்கை
  • காலக்கெடு முடிந்த பிறகு ITR தாக்கல் செய்ததற்கான பொருட்படுத்தாதுவிடல் கோரிக்கை

மின்னணு-சரிபார்ப்பு

படிநிலை 5a: 6-இலக்க OTP/OTP-களை உள்ளிடவும் (கூடுதல் விவரங்களுக்குப் படிநிலை 4-இல் உள்ள அட்டவணையைப் பார்க்கவும்). தொடரவும் என்பதைக் கிளிக் செய்யவும்.

Data responsive


குறிப்பு:

  • 15 நிமிடங்களுக்கு மட்டுமே OTP -கள் செல்லுபடியாகும்
  • சரியான OTP-ஐ உள்ளிட உங்களுக்கு 3 வாய்ப்புகள் மட்டுமே உள்ளன
  • திரையில் உள்ள OTP காலாவதியாகும் நேரத்தைக் காட்டும் கவுண்டவுன் டைமர், OTP எப்போது காலாவதியாகும் என்பதை உங்களுக்குத் தெரிவிக்கிறது.
  • OTP-ஐ மீண்டும் அனுப்பவும், என்பதைக் கிளிக் செய்யும்போது, ஒரு புதிய OTP உருவாக்கப்பட்டு அனுப்பப்படும்.
  • நீங்கள் பதிவு செய்யாத பயனராக இருந்தால், ஒரு வாடிக்கையாளராக உங்களைச் சேர்க்கும்போது உங்கள் ERI-யால் பதிவு செய்யப்பட்ட உங்கள் மின்னஞ்சல் ID மற்றும் அலைப்பேசி எண்ணுக்கு அனுப்பப்படும் இரண்டு தனித்தனி 6-இலக்க OTP-களை நீங்கள் உள்ளிட வேண்டியிருக்கும்.

படிநிலை 5b: வருமான வரி தாக்கல் செய்யும் படிவங்களைச் சமர்ப்பித்தல், திரும்பப் பெறும் தொகையை மீண்டும் வழங்கக் கோருதல், சரிசெய்தல் கோரிக்கை அல்லது காலக்கெடு முடிந்த பிறகு ITR-ஐச் சமர்ப்பிப்பதற்கான பொருட்படுத்தாதுவிடல் கோரிக்கை போன்ற சேவைகளை உங்கள் சார்பாக மேற்கொள்ள ERI கோரியிருந்தால், கிடைக்கக்கூடிய விருப்பங்களைப் பயன்படுத்தி அந்தக் கோரிக்கையை நீங்கள் மின்னணு-சரிபார்ப்பு செய்ய வேண்டும்.

குறிப்பு: மேலும் அறிய,எவ்வாறு மின்னணு சரிபார்ப்பு செய்வது பயனர் கையேட்டைப் பார்க்கவும்.


வெற்றிகரமாகச் சரிபார்க்கப்பட்டதும், பரிவர்த்தனை ID-உடன் கூடிய வெற்றிச் செய்தி திரையில் தோன்றும். எதிர்காலத் தேவைக்காக அந்தப் பரிவர்த்தனை ID-ஐ குறித்து வைத்துக்கொள்ளவும். மேலும், மின்னணு-தாக்கல் இணைய முகப்பில் பதிவு செய்யப்பட்டுள்ள உங்கள் மின்னஞ்சல் ID மற்றும் அலைபேசி எண்ணுக்கும் உறுதிப்படுத்தல் செய்தி அனுப்பப்படும்.

Data responsive


4.தொடர்புடைய தலைப்புகள்